Search This Blog

31.3.14

மரணப் பதிவு நிலையம் தொடங்கப்படும்! ஏன்?எதற்கு? -- கி.வீரமணி

மரணப் பதிவு நிலையம் டாக்டர் பூ.பழனியப்பன் அவர்களின் படத்திறப்பில் உருவான பகுத்தறிவுக் கொள்கை முடிவு
சென்னை பெரியார் திடல் - நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள் நடைபெறுவதுண்டு.

ஆனால், கடந்த 28ஆம் தேதி மாலை நடைபெற்ற நிகழ்ச்சி அதில் பங்கேற்றோர் எடுத்து வைத்த கருத்துகள், தகவல்கள் பல வரலாற்று மகரந்தங்களை உள்ளடக்கிக் கொண்டனவாக மணம் வீசின!

இரு நூல்கள் வெளியீட்டு விழா, திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி  அவர்கள் எழுதிய தன் வரலாற்று நூலான அய்யாவின் அடிச்சுவட்டில் (பாகம் 4) சூழியம் சூழ்வலர் பெரியார் பேருரையாளர் பேராசிரியர் புலவர் மா. நன்னன் அவர்கள் வெளியிட்டார்.

மகப்பேறு துறையில் உலகப் புகழ் பெற்ற மருத்துவ நிபுணரும் பி.சி. ராய் விருது பெற்றவருமான டாக்டர் பூ. பழனியப்பன் - ப. சுமங்கலி ஆகியோர்களால் எழுதப்பட்ட அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய நோய்கள் எனும் நூலை பிரபல சிறுநீரகவியல் துறை அறுவைச் சிகிச்சை மருத்துவர் அ. இராசசேகரன் வெளியிட்டார்.

இந்த விழாவில் கலந்து கொண்டு நம்மிடையே மகிழ்ச்சியோடு உறவாட இருந்த டாக்டர் பூ. பழனியப்பன் அவர் கள் எதிர்பாராத விதமாக மறைவுற்ற காரணத்தால் அவர்தம் நூல் வெளியீட்டு விழாவோடு அவரின் படத்திறப்பும் இணைக்கப்பட்டது.

அவரது இணையரும், மகன், மகள் உள்ளிட் டோர் இவ்விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

டாக்டர் பூ. பழனியப்பன் அவர்கள் சுய மரியாதை இயக்க - திராவிடர் கழகக் குடும்ப வழி வந்த பெருமகன் ஆவார்; பகுத்தறிவாளராக வாழ்ந்து காட்டியவர் - தம் குடும்பத்தவர்களை அந்தப் பாட்டையில் பீடு நடைபோடச் செய்தவர்.
அவருடைய இறுதி நிகழ்ச்சிகளை மதச் சடங்கின் அடிப்படையில் நடத்திட உற்றார் உறவினர் துடிதுடித்ததையும், அவற்றை டாக்டர் பூ. பழனியப்பன் அவர்களின் மகன் பொறியாளர் ப. சேரலாதன் அவர்களும், குடும்பத்தினரும் எதிர் கொண்டு புறந்தள்ளிய புரட்சியையும் சேரலாதன் அவர்கள் எடுத்துக் கூறியபோது பார்வையாளர்கள் பகுதியில் நிசப்தம் தன் ஆளுமையைச் செலுத்தியது.

இது போன்ற துக்க நிகழ்வுகளில், குடும்பத்தார் துயரத்தின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ள சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, மூடநம்பிக்கையாளர்கள், மதவழிச் சிந்தனை யாளர்கள் தலைக்குத் தலை நாட்டாண்மை செய்யும் நிலைமையெல்லாம் உண்டு.
அந்த நேரத்திலும் அயராமல் தம் வாழ்வில் வரித்துக் கொண்ட கொள்கையை நிலை நாட்டுவதுதான் நிலைத்த கொள்கையுடைய சீரிய மாந்தரின் கடமையாக இருக்க முடியும்.
அதனைத் தம் குடும்பத்தில் நிகழ்த்திக் காட்டிய சாதனையைப் பெருமிதத்தோடு குறிப்பிட்ட பொறியாளர் சேரலாதன் கழகத் தலைவரிடம் வேண்டுகோள் ஒன்றினை வைத்தார். கண்கொடை (Eye Bank) குருதிக் கொடை (Blood Bank) என்று வைத்திருப்பது போல மரணம் அடையும் சுயமரியாதைக்காரர் களை - பகுத்தறிவாளர்களை அடக்கம் செய்ய வழிமுறை ஒன்றை நமது கழகம் ஏற்படுத்திட வேண்டும். முன்கூட்டியே தோழர்கள் பதிவும் செய்து கொள்ளலாம் கட்டணம் கூட வைக் கலாம். மரண சாசனம் - மரண ஒப்பந்தம் என்ற ஒரு முறையை உண்டாக்கலாம்.

சுயமரியாதைக்காரர் மரணம் அடைந்தால் அந்த உடலை திராவிடர் கழகத்தினர் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, பகுத்தறிவுத் தன்மையில் இறுதி நிகழ்ச்சியை நடத்துவதற்கு நமது தமிழர் தலைவர் அவர்கள் ஒரு வழியைக் கண்டால் அது சிறப்பானதாக இருக்கும் என்ற ஓர் அரிய கருத்தினை எடுத்து வைத்த சேரலாதன் அவர்கள், நான் என்றும் இந்தக் கொள்கை வழியைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறவன். நமது தலைவர் அவர்கள் வழிகாட்டுதல்படி என் இயக்கப் பணி தொடரும்! என்று முத்துக்கோத் ததுபோல கருத்துக்களை எடுத்து வைத்த பாங்கு அனைவரையும் கவர்ந்தது.
ஏற்கெனவே பல கருஞ்சட்டைத் தோழர்கள் மரண சாசனம் என்ற ஒன்றை உயிரோடு இருக் கும் பொழுதே எழுதி அதனை தம்தம் வீட்டி லேயே கண்ணாடி சட்டம் போட்டு மாட்டியும் வைத்து விடுகிறார்கள்.

அண்மைக் காலமாக மரணத்திற்குப் பின் கண் கொடை என்பது சர்வ சாதாரணமாக ஆக விட்டது; அதையும் தாண்டி மருத்துவமனை களுக்கு உடற்கொடை அளிக்கும் போக்கு புதிய வேகத்தில் தொடர ஆரம்பித்துள்ளது. இதற்காக பெரியார் உடற்கொடை இயக்கம் ஒன்றையே கழகம் நடத்தியும் வருகிறது.

தென் மாவட்டங்களில் முதன் முதலாக உடற்கொடை அளித்த பெருமைக்குரியவர் கழக வீராங்கனை மானமிகு சண்முகம் வடிவு (நெல்லை மாவட்டக் கழகத் தலைவர் மானமிகு காசி அவர்களின் இணையர்) அவர்கள் ஆவார்கள்.

மனிதன் செத்தாலும் அவன் உடல் உறுப்புகள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பது எவ்வளவுப் பெரிய வாய்ப்பு! செத்த பின்பு செய்யப்படும் சடங்குகளால் அவர் சொர்க்கத் திற்கும் போவார் என்ற கட்டுக் கதைகளால் மக்களைக் கட்டிப் போட்டு, மக்களின் பொரு ளைச் சுரண்டும் புரோகிதத் தொழிலின் தந்திரம் இதன் பின்னணியில் உள்ளது.
பார்ப்பான் வயிறு பரலோகத்துக்குத் தபால் பெட்டியோ என்று தன்மான இயக்கத் தோழர் கள் முழங்கியதுதான் நினைவிற்கு வருகிறது.
பொறியாளர் சேரலாதன் அவர்கள் சொன்ன இன்னொரு தகவல்:
தமது தந்தையார் மறைவுச் செய்தியை இந்து ஆங்கில ஏட்டில் விளம்பரமாக வெளியிடப்பட்டு, தொடர்புக்குத் தொலைப்பேசி எண்ணும் அதில் கொடுக்கப்பட்டு இருந்தது.

அதனைப் படித்தறிந்த மயிலாப்பூரைச் சேர்ந்த புரோகிதத்தை ஒரு தொழிலாக பணம் பறிக்கும் ஏற்பாடாகக் கொண்டிருக்கும் அமைப் பினர் பொறியாளர் சேரலாதன் அவர்களோடு தொடர்பு கொண்டு, தங்கள் தந்தையாரின் ஈமச் சடங்குகளைச் செய்ய நாங்கள் காத்திருக்கிறோம். எங்கள் குழுவில் இத்தனைப் பேர்கள் இருக்கி றோம் - எங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தொலைப்பேசியில் தொடர்பு கொண் டதைக் குறிப்பிட்டார்.

மனிதன் செத்தாலும் பார்ப்பனீயத்தின் சுரண்டல் தொழில் மட்டும் விடாது துரத்திக் கொண்டே இருக்கிறது என்பதை இதன் மூலம் அறியலாம்.

கறந்தபால் முலைப்புகா  கடைந்த வெண்ணெய் மோர்ப்புகா விரிந்த பூ உதிர்ந்த காய் மீண்டும் போய் மரம் புகா
உடைந்து போன சங்கின் ஓசை
உயிர்களும் உடற்புகா
இறந்தவர் பிறப்பதில்லை
இல்லை இல்லை இல்லை! என்று
சில வாக்கியச் சித்தர் பாடிச் சென்றார்.

ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு, பிதிர் லோகம் இவற்றைக் கற்பித்தவன் அயோக்கியன், நம்புகிறவன் மடையன், இவற்றால் பலன் அனுபவிக்கிறவனை மகா மகா அயோக்கியன் என்ற விஞ்ஞான உண்மையை சமுதாய விஞ் ஞானியாம் தந்தை பெரியார் கூறியதை ஆசாபாசமின்றிச் சிந்தித்தால் இதற்குள் இதழ் விரிக்கும் உண்மையின் விரிவு புலப்படும்.

மக்களின் மடமை சார்ந்த நம்பிக்கைகளை ஊதிப் பெரிதாக்கி, அதனை இலாவகமாக தமது வருவாய்க்குரிய சாதனமாக ஆக்கிக் கொள்ளும் பித்தலாட்டத்தை என்ன சொல்ல!

உத்தர கிரியை எனும் பெயரால் செத்துப் போனவர்களுக்காகக் கருமாதி செய்யவரும் புரோகிதப் பார்ப்பான் கொடுக்கும் ஜாபிதா (பட்டியல்) இதோ:

மஞ்சள் தூள் 50 கிராம், குங்குமம் 50 கிராம், புஷ்பம் 10 முழம்; சந்தனம் 20 கிராம்; ஊதுபத்தி 1 பாக்கெட், கற்பூரம் - 20 கிராம், கதம்பப் பொடித்தூள் 50 கிராம், வெல்லம் 100 கிராம், வாழைப்பழம் 1 டஜன், வாழை இலை 15, வெற்றிலை 2 கவுளி, களிப் பாக்கு 100 கிராம், தேங்காய் 6, கொட்டைப் பாக்கு 11, எலும்பிச்சை பழம் 11, நல்லெண்ணெய் 100 கிராம், சீயக்காய்த் தூள் 1 பாக்கெட், பால், தயிர் 1 பாக்கெட், தேன் பாட்டில் 1, நெய் 100 கிராம், நெல் பொரி 5 ரூபாய், நவதானியம் 5 ரூபாய், கலசக் குடுவை 5, கலசத்துண்டு அரை மீட்டர், சோறு குடுவை நூல் உருண்டை - 2  சில்லை பனம் இலை 101, பஞ்ச வர்ணத்தூள் 2 ரூபாய், பச்சரிசி  மாவு 1 ஆழாக்கு, தீப்பெட்டி 2, வரட்டி ரூ.10, எள்ளு 50 கிராம் அய்யர் வேஷ்டி துண்டு 8 முழம் ஜதை அய்யர் கட்டணம் ரூ.1500 (ரேஷன் அரிசி வாங்கக் கூடாது)  பாய் அல்லது ஜமக்காளம், தாம்பாளத் தட்டு - 4, வீட்டில் போட்ட நவதானியம் செடி, சொம்பு 4, டம்ளர் (ஸ்டீல்) 4, மனை 2, குடம் அல்லது பக்கெட், காமாட்சி விளக்கு 1.

மேற்கண்ட பட்டியலை பார்ப்பனப் புரோகிதர் கேட்டுப் பெற்றுக் கொள்வதில் ஏதாவது பொருள் இருக்கிறதா? உண்மையைச் சொல்லப் போனால் பொருள் - புரோகித பார்ப்பானுக்குப் போய்ச் சேருவதுதான்.

இந்தப் பொருள்களுக்கும் செத்துப் போன வருக்கும் என்ன தொடர்பு - அவருக்குப் போய்ச் சேரப் போகிறதா? போய்ச் சேர போவதோ புரோகிதப் பார்ப்பான் வீட்டுக்குத்தான்! இந்தச் சூட்சுமத்தைப் புரிந்து கொள்ள வேண்டாமா?

ஒன்றைக் கவனிக்கத் தவறக் கூடாது - அரிசி என்கிறபோது - ரேஷன் அரிசி கூடாது என்று சர்வ ஜாக்கிரதையாக சொல்லப்பட்டு இருப்பதை நினைத்தால் சிரிப்பு வரலாம் - ஆனால் சீரியசாகச் சிந்தித்தால் அதில் உள்ள பார்ப்பனத் தந்திரம் புலப்படாமல் போகாது.

இவற்றைப்பற்றியெல்லாம் திராவிடர் கழகத்தைத் தவிர, கவனம் செலுத்தப் போவோர் யார் இருக்கிறார்கள்? கேட்டால் இது ஓர் அற்ப விஷயம் என்று சொல்லக் கூடிய அதிமே(ல்) தாவிகள் நாட்டில் இருக்கத்தான் செய்வார்கள்.

அற்ப விஷயமல்ல! மக்களைச் சுரண்டும் மகத்தான மோசடி - பொருள் மட்டுமல்ல - மனிதனின் விலை மதிப்பில்லாத அறிவும்தான் மொட்டை அடிக்கப்படுகிறது.

எனவே இதில் கவனமும் கருத்தும் செலுத்த வேண்டியது மிக மிக அவசியமே!

நிகழ்ச்சியில் நிறைவுரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்  ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார் இயக்க வரலாற்றில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்ட முக்கிய அறிவிப்பாக இது கருதப்படும்.

மரணப் பதிவு நிலையம் ஒன்று பெரியார் திடலில் தொடங்கப்படும். மரணத்திற்குப் பிறகு தங்கள் இறுதி நிகழ்ச்சி மூடநம்பிக்கைகளுக்கு, சடங்குகளுக்கு இடமின்றி எளிதாக நடைபெற வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த நிலை யத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அதற்குரிய நடைமுறைகள் உருவாக்கப்படும் என்று அறி வித்தார்.

திருமணத்தில் புதிய வழிமுறையை தந்தை பெரியார் உருவாக்கிக் கொடுத்தார். அது போலவே வாழ்க்கையின் மிக முக்கிய நிகழ்வான மரணத்தின் போதும் ஒரு சரியான தெளிவான பகுத்தறிவுக் கொத்த வழிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் சிந்தனை - கோரிக்கை சுயமரியாதைச் சிந்தனையாளர் டாக்டர் பூ. பழனியப்பன் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சியில் உருப்பெற்றது - சரித்திரத்தில் ஒரு முக்கியமான நிகழ்வாகவே கருதப்படும் - பேசப்படும் என்பதில் அய்யமில்லை.

                     ---------------------------------- ”விடுதலை” 30-03-2014

30.3.14

ஹிட்லரும்-மோடியும்!நரோடா பாட்டியா நினைவிருக்கிறதா?

நரோடா பாட்டியா நினைவிருக்கிறதா?
பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் மோடியை நோக்கி குஜராத் கலவரம் - சிறு பான்மையினர் 2000 பேர் படு கொலைக்குப் பதில் என்ன என்ற வினாக்கள் வெடித்துக் கிளம்பிக் கொண்டுதான் இருக்கிறது - இந்தத் தேர்தலில் அந்தக் கணை மோடியின் கனவைப் பொய்த் துப் போகத்தான் செய்யும்!

பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட் பாளரான நரேந்திர மோடி - மக்கள் மன் றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். நாலாத் திசை களிலிருந்தும் அவரை நோக்கிக் குற்றம் சாட்டும் கணைகள் கிளம்பி வருகின்றன.

2002 குஜராத் மதக் கலவரத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ் லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 1,70,000 வீடுகள் தரை மட்டமாக்கப்பட்டன. 203 தர்காக்கள், 205 மசூதிகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. மூன்று கிறித்துவ வழிபாட்டுத்தலங்களும் தப்பவில்லை. 4000 கார்கள், 20 ஆயிரம் இரு சக்கர வாகனங் களை நெருப்பு தின்று முடித்தது.
காவல்துறையினரே தங்களின் வாகனங்களிலிருந்து பெட்ரோலை எடுத் துக் கொடுத்துக் கொளுத்துவதற்குத் துணை நின்றனர்.

இழப்பு 1800 கோடி ரூபாய். 61 ஆயிரம் அப்பாவி மக்கள் வீடுகளை விட்டு வெளி யேறினர். 70 ஆயிரம் முஸ்லீம் மக்கள் சொந்த மண்ணிலேயே முகாம்களில் இருந்தனர்.

மோடி ஆட்சியில்  பொடா சட்டத்தின் கீழ் 287 பேர்கள் கைது செய்யப்பட்டனர்; 286 பேர்கள் முஸ்லீம்கள் மற்றொருவர் சீக்கியர்.

காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையில் அசோக்பட்,, ஜடேஜா ஆகிய இரு குஜராத் அமைச்சர்கள் இருந்து கலவரங்களை ந;டத்தக் கட்டளையிட்டனர் என்று காவல் துறை அதிகாரி இராகவன் தலைமையில் அமைந்த விசாரணைக் குழு அளித்த அறிக்கையில் 12ஆம் பக்கத்தில் காணப் படுகிறது.
நரோடா பாட்டியா - என்னும் ஊரில் மட்டும் 97 முஸ்லீம்கள் கொன்று குவிக்கப் பட்டனர். கர்ப்பிணிப் பெண்ணின் குடலைக் கிழித்து, சிசுவை எடுத்து நெருப்பில் போட்டுக் கூத்தாடினர்.

பட்டப் பகலிலே திறந்த வீதிகளிலே பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்தக் கொடுமைகளையெல்லாம் முன்னின்று நடத்தியவர் யார் தெரியுமா? முதல் அமைச்சராகவிருக்கும் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சரே அதுவும் ஒரு பெண் - அதுவும் மகப்பேறு மருத்துவர் - பெயர் மாயா கோட்னானி (55)

ஒரு கேவலத்தை இந்த இடத்தில் சொல்ல வேண்டும் தாய், தந்தையார் முன்னிலையிலே ஒரு முஸ்லீம் பெண் நிர்வாணப்படுத்தப்படுகிறார்.
தன் மகளின் மானத்தை மறைப்ப தற்காகப் பக்கத்தில் கிடந்த ஒரு செய்தித் தாளை   எடுத்துக் கொடுக்கிறார் தாய். கொலை பாதகர்கள் அந்தத் தாயையும் கொன்றனர்.

கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் தீர்ப்பும் வந்தது. படுகொலையை முன்னின்று நடத்திய பெண் அமைச்சருக்கு 28 ஆண்டுகள் சிறை - பஜ்ரங்தள் அமைப் பின் குஜராத் மாநிலத் தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

குற்றஞ் சாட்டப்பட்ட 61 பேர்களில் 32 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக் கப்பட்டது. 7பேர்களுக்கு 21 ஆண்டுத் தண்டனை! எஞ்சியவர்களுக்கு 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனை!

மோடி முதல்வராக இருந்த ராஜ் ஜியத்தில்தான் நடந்திருக்கிறது. காவல் துறையும் முதல்வர் மோடியிடம் தானி ருந்தது. இதில் முதல் அமைச்சருக்குப் பொறுப்பு இல்லையா? இல்லை என்கிறது ஹிந்துத்துவா கும்பலும் சோ போன்ற பேர்வழிகளும்.

தெகல்கா புலனாய்வு நிறுவனம் பி.ஜே.பி.யைச் சேர்ந்த சட்டமன்ற உறுப் பினர்களிடமே பேட்டி கண்டு உண்மை களை அம்பலப்படுத்தியது.
நாளை நடக்கும் கொலை, கொள்ளை, தீ வைப்பு, சூறையாடல் சம்பவங்களின் போது காவல்துறை கண்டு கொள்ளக் கூடாது, தலையிடக் கூடாது என்று ஆணையிட்டார் முதல் அமைச்சர் மோடி என்று அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட காவல்துறை அதிகாரிகள்  சிறீகுமார், ஷர்மா, சஞ்சீவ்பட் ஆகியோர் உறுதிப் படுத்தினார்களே!

மோடியின் ஹிந்துத்வா வெறியர்களால் குரூரமான முறையில் படுகொலை செய் யப்பட்ட காங்கிரஸ் கட்சியின்  எம்.பி. சிஹ்சான் ஜாப்ரியின் மனைவி தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் காவல்துறை அதிகாரி சஞ்சீவ்பட் பிரமாணப் பத்திரமே கொடுத்துள்ளாரே!

வதோதரா எனும் - நகரில் பெஸ்ட் பேக்கரியில் சங்பரிவார்க் கும்பல் வெறி யாட்டத்தில் உச்சக் கட்டமாக 14 முஸ்லீம் களை பேக்கரி அடுப்பில் வைத்து எரித்துக் கொன்ற வழக்கில் 21 பேர்களையும் ஒட்டு மொத்தமாக விடுதலை செய்த நீதிபதி எச்.யு. மகிதா என்பவருக்கு மோடி அரசு கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

குஜராத் மாநில மின் வாரியத்தில் ஆலோசகர் பதவி மாத சம்பளம் ரூ.30 ஆயிரம் கார், பங்களா, தொலைப்பேசி வசதிகள் - இத்தியாதி இத்தியாதி இந்த வழக்கு மேல் முறையீடு செய் யப்பட்டு உச்சநீதிமன்றத்திற்கும் சென்றது.  நீதிபதிகள் துரைசாமி ராஜு, (தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்) அரிஜித் பசாயத் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியை நீரோ மன்னன் என்று விமர்சனம் செய்தனரே!

இதற்குப் பிறகாவது நாகரிகமான முறையில் மோடி பதவி விலகி இருக்க வேண்டாமா?

இவ்வளவு நடந்ததற்குப் பிறகும் - திருவாளர் சோ ராமசாமி கல்கி இதழுக்கு (30.3.2014) அளித்த பேட்டியில் என்ன கூறியுள்ளார்? இந்தக் கலவரம் குறித்து பல்வேறு நீதிமன்ற மட்டங்களில் ஏகப்பட்ட விசா ரணைகள் நடந்துவருகின்றன. எதிர்க் கட்சிகள் தங்கள் அரசியல் லாபத்துக் காகவும் தொடர்ந்து இதுகுறித்து மோடியை விமர்சித்து வருகிறார்கள் என்று குறிப் பிட்டுள்ளார் என்றால் இவர்கள் நர வேட்டை நரேந்திர மோடியை விடக் கொடியவர்கள் அல்லவா!

ஒரு மாநிலத்தில் இவ்வளவுப் பெரிய கலவரம் நடைபெற்று  இருக்கும்போது அதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர் ஒரு முதல் அமைச்சர்தானே!
உத்தரப்பிரதேசம் முசாபர் நகரில் நடைபெற்ற மதக் கலவரத்துக்கு மாநில அரசே காரணம் என்று உச்சநீதிமன்றம் சொல்லியது என்றவுடன் உத்தரப்பிரதேச முதல் அமைச்சர் உடனே பதவி விலக வேண்டும் என்று இதே பி.ஜே.பி.யினர் குரல் கொடுக்கிறார்கள்.

அதைவிட மிகப் பெரிய கொடுமை மோடியின் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. அதற்காக முதல் அமைச்சர் மோடி பதவி விலக மாட்டாராம். இதுவரை மன்னிப்புக் கேட்கவில்லை வருத்தம்தான்; ஆனால் அதற்கு நான் பொறுப்பல்ல என்கிறாரே

காரில் செல்லும்போது ஒரு நாய் அடிபட்டால் வருந்துவதில்லையா? அது போலத்தான் குஜராத்தில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்கு எனக்கும் - அனுதாபம் இருக்கிறது என்று சொன்னால் கொடியவன் ஹிட்லர்கூட உயிரோடு இருந்தால் மோடிக்குச் சலாம் வைத்திருப் பான்!
அரியலூரில் ரயில் கவிழ்ந்து பல நூறு பேர்கள் பலியானபோது, ரயில்வே அமைச்சர் லால் பகதூர் பதவி விலகினார்; தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர் ஓ.வி. அளகேசனும் பதவி விலகினார். அதற்குப் பெயர்தான் அரசியல் நாகரிகம் தார்மீகப் பொறுப்பு என்பது.

ஆனால் ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் இந்த மனுதர்ம வாதி குஜராத் கலவரத்துக்கும் மோடிக்கும் சம்பந்தம் இல்லை  என்று மெழுகு ஒத்தடம் கொடுக்கிறார்.

என்னதான் சோ போன்றவர்கள் வக்காலத்து வாங்கினாலும், மோடிமீது படிந்த ரத்தக் கறையை கழுவவே முடி யாது. அமெரிக்கா போன்ற நாடுகள்கூட விசா கொடுக்காத தன்காரணத்தை ஒரு முறை நினைத்துப் பார்த்தாலே போதுமே!

2002 குஜராத் கலவரத்துக்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம் மோடி வெற்றி பெற்று இருக்கிறாரே - என்று பல நேரங்களிலும் சமாதானம் சொல்லுகிறார் சோ ராமசாமி.

நரோடாபாட்டியாவி 97 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 28 ஆண்டுகள் சிறையில் இருக்கிறாரே மோடி அமைச்சரவையின் சக அமைச்சர் - அந்தச் சம்பவத்துக்குப் பிறகு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 1,85,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார் என்பதற்காக அந்தப் படுகொலைகளை நியாயப்படுத்திட முடியுமா? அந்தப் படுகொலைகளை மக்கள்அங்கீகரித்து விட்டனர் என்றுதான் பொருளா?

---------------------- மின்சாரம்  அவர்கள்29-03-2014 “விடுதலை”யில் எழுதிய கட்டுரை

29.3.14

ஈழத்தமிழர்களுக்கு மற்றொருமுறை துரோகம்!காங்கிரஸ் தன் முடிவுரையை எழுத முந்துகிறது!!


  • ஈழத் தமிழர்களுக்கு மற்றொரு முறை துரோகம்!
  • ஜெனிவாவில் அமெரிக்கத் தீர்மானத்தைப் புறக்கணித்தது இந்திய அரசு!
தமிழ்நாட்டில் காங்கிரஸ் தன் முடிவுரையை எழுத முந்துகிறது போலும்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

மத்திய கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு  தி.மு.க.வின் மகத்தான சாதனைதானே!
ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தைப் புறக்கணித்ததன் மூலம் காங்கிரஸ் தன் முடிவுரையை எழுத முந்துகிறது போலும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

2009இல் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான அரச பயங்கரவாதமாக பல்லாயிரக்கணக்கான தமிழர் களைக் கொன்று குவித்தது.  இலங்கை அரசு! உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை மாத்திரம் அல்ல; மனிதநேயம் உள்ளவர்களை, மனித உரிமை பேணுப வர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

சொந்த நாட்டு மக்கள்மீதே யுத்தம்!

சொந்த நாட்டு மக்கள்மீதே யுத்தத்தை நடத்திய கொடுமை! யுத்தம் நடத்தி முடிக்கப்பட்ட பிறகும்கூட பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் முள்வேலி முகாமுக்குள்.

உலகம் முழுவதும் இதனை எதிர்த்துக் கடுமையாக குரல்கள் வெடித்துக் கிளம்பின. தமிழ்நாட்டிலும் மக்கள் கொந்தளித்து எழுந்தனர். பல்வேறு அமைப்புகளும் அவரவர்களுக்குத் தோன்றிய முறைகளில் போராட்டங் களை நடத்தின என்றாலும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையில் டெசோ அமைப்பு மீண்டும் முகிழ்த் தெழுந்து இந்தப் பிரச்சினையில் உலகத் தமிழர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது.

டெசோ மாநாட்டின் பெரும் தாக்கம்!

குறிப்பாக சென்னையில் டெசோ அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் காப்பு மாநாடு (12.8.2012) ஏற்படுத்திய உணர்ச்சி, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இந்தப் பிரச்சினையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தின.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் உலகின் பல்வேறு  நாடுகளிலிருந்தும் பேராளர்கள் பங்கு கொண்டு ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காகக் குரல் கொடுத்தனர் அம்மாநாட்டில்.

டெசோ தீர்மானங்கள் அய்.நா.வில்

அம்மாநாட்டுத் தீர்மானங்கள் பிரதமரிடம் நேரில் அளிக்கப்பட்டன. அய்.நா.வுக்கும், ஜெனிவாவில் உள்ள மனித உரிமை அமைப்பிற்கும் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், திமுக நாடாளுமன்றக் குழு உறுப்பினர் டி.ஆர். பாலு ஆகியோர் நேரில் சென்று தீர்மானங்களின் நோக்கத்தை விளக்கினர்.
இந்தியாவின் தலைநகரமான டில்லியில் உள்ள அனைத்து நாடுகளின் தூதர்களையும் சந்தித்து டெசோ மாநாட்டு முடிவுகள் தெரிவிக்கப்பட்டு ஆதரவு கோரினோம்.

ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா இலங்கை அரசுக்கு எதிராகக் கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவும் பட்டது

டெசோ தீர்மானங்கள்

டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களுள் முக்கியமானவை:
2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் தமிழர்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு வளையங்கள்  (Safety Zones)  என அறிவிக்கப்பட்ட பகுதிகளிலும், மருத்துவமனைகளிலும்கூட குண்டுகள் வீசப்பட்ட குரூரம், கொடூரம் உலகில் வேறெந்தப் போரிலும் நடைபெற்றிராத அரச பயங்கரவாதம் என்றே கூற வேண்டும். அந்தப் போர்க் குற்றங்கள் வெளியு லகுக்குத் தெரிந்து விடாமல் தடயங்கள் அனைத்தையும் அழிக்கும் முயற்சிகளும் நடைபெற்றுள்ளன. இத்தகவல்கள் அனைத்தையும் அய்.நா. அவைப் பொதுச் செயலாளர் பான் கீமூன் அவர்களால் அமைக்கப் பெற்ற இந்தோனேசி யாவைச் சேர்ந்த தரூஸ்மான் தலைமையிலான மூவர் குழு தன் அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. 2011 ஏப்ரலில் பான்கீமூன் அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கை வெளியாகி ஓராண்டு கடந்த பின்னரும் அங்கு நடந்த போர்க் குற்றங்களை ஆராய்வதற்கும் சுயேச்சையான சர்வதேசக் குழு அமைக்கப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்து நிற்கும் உலகத் தமிழனம் உரத்த குரலில் நீதிகோரும் கட்டத்திற்கு இன்று வந்துள்ளது.

அன்றைய டெசோ தீர்மானம் - இன்றைய அமெரிக்கத் தீர்மானம்

அய்.நா. அவையிலும் மனித உரிமைக் குழுவின் சார்பில் சர்வதேசக் குழு ஒன்று அமைக்கப்பட்டு அங்கு நடைபெற்ற போர்க் குற்றங்கள் கண்டறியப்பட்டு, போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு அய்.நா. அவையை வலியுறுத்துகிறது என்னும் 2012 ஆகஸ்டு 12இல் சென்னையில் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானம் வேறு சொற்களில்  இப்பொழுது அமெரிக்காவால் ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்பட்டது. (25.3.2014).

மனித உரிமையின் ஆணையர் நவநீதம்பிள்ளை அவர்களும் கடந்த 26ஆம் தேதி தனது அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளார்.

வாக்கெடுப்பில் 35 நாடுகள் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் 23 நாடுகள் அந்தத் தீர்மானத்தை ஆதரித் துள்ளன. 12 நாடுகள் எதிர்த்துள்ளன. 

தீர்மானத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த 12 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்று என்பது வெட்கப்படத்தக்கது -கண்டிக்கத்தக்கதுமாகும்.
புறக்கணித்தது என்று சொல்லப்பட்டாலும், இது இலங் கையின் போர்க் குற்றங்களுக்குத் துணை போனதாகவே பொருள்படும்.

தி.மு.க.வின் அழுத்தத்தால்..

2013ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தொடர் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. தி.மு.க. சார்பில் டி.ஆர். பாலு அவர்களால் கொண்டு வரப்பட்ட (7.2.2013) தீர்மானத்தின்மீது பல மணி நேரம் விவாதம் நடத்தப்பட்டது. வெளியுறவு அமைச்சரின் பதில் திருப்தி இல்லாத நிலையில் வெளி நடப்புச் செய்தார்கள் திமுக தோழர்கள்.

கலைஞரைத் தேடி வந்த அமைச்சர்கள்

தி.மு.க. முக்கிய முடிவை எடுக்கும் நிலை ஏற்பட்டது. மத்திய அமைச்சர்கள் குலாம் நபி ஆசாத், ஏ.கே. அந்தோணி, ப. சிதம்பரம்  ஆகியோர் கலைஞரைச் சந்திக்க ஓடோடி வந்தார்கள்.  டெசோவின் நிலைப்பாடு உறுதி யாகத் தெரிவிக்கப்பட்டது -

இவ்வளவு முயற்சிக்குப் பிறகு இந்தியா, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்கும்படி செய்யத்தான் முடிந்தது. ஆனாலும் அந்தத் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ததில் இந்தியாவின் கை இருந்தது என்பதுதான் வருத்தத்திற்குரியது!

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து திமுக விலகியது

முக்கியமான முடிவை எடுத்து தி.மு.க.   தலைவர் கலைஞர் அவர்கள் கீழ்க்கண்ட அறிக்கையினை வெளி யிட்டார்கள்.

அய்.நா. மன்றத்திலும், அய்.நா.மனித உரிமைகள் ஆணையத்திலும், நீதிநெறியோடு ஆராய்ந்து பார்த்து - அனைத்து நாட்டு மக்களின் இதயத்தையும் குளிர வைக்கும் முடிவுகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அதற்கு மாறாக இழப்பின் உச்சத்திற்கே தள்ளப்பட்டு இலங்கையும், அந்த இலங்கையின் தொப்புள் கொடி உறவு கொண்ட தமிழகம் இடம் பெற்றுள்ள இந்தியாவும், இந்த ஜனநாயக விரோத செயல்களுக்கு கதவுகளைத் திறந்து விட்டிருப்பதை இனவுணர்வுள்ள எந்த ஒரு தமிழனும் ஏற்றுக் கொள்ள இயலாது

எனவே குதிரை குப்புறத் தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதையாக அமெரிக்காவின்  வரைவுத் தீர்மானத்தை பெருமளவுக்கு நீர்த்துப் போகவிட்டதோடு; திராவிட முன்னேற்றக் கழகம் முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனை செய்ய வில்லை. எனவே, ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப்பட்ட நிலையில், இதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் நீடிப்பது தமிழினத்திற்கே இழைக் கப்படும் பெரும் தீமை என்பதால், திராவிட முன்னேற்றக் கழகம், மத்திய அமைச்சரவையிலிருந்தும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் விலகிக் கொள்கிறது - என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்தார் (19.3.2013).

அன்று வங்காள தேசத்தில் தலையிடவில்லையா?

இலங்கை விஷயத்தில் சர்வதேச விசாரணையைக் கோருவது இன்னொரு நாட்டு உள்விவகாரத்தில் தலை யிடுவதாகும் என்று இப்பொழுது இதோபதேசம் செய்யும் இந்தியா - அன்று பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சி னையில்  தலையிட்டு தானே ஒரு வங்கதேசத்தை உரு வாக்கிக் கொடுத்தது என்பதை வசதியாக மறந்து விட்டார்களா?

பிரதமர் இந்திராகாந்தி என்ன சொன்னார்?

2011 ஜூலை 25 ஒரு முக்கியமான நாள்! முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் மருமகளும், இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான திருமதி சோனியா காந்தி அவர்கள் வங்கதேசத்துக்கு தலைநகர மான டாக்காவுக்குச் சென்றார் - எதற்காகத் தெரியுமா?

ஸ்வதீனாடா சம்மனோனா (Swadhinata Samanona)  என்ற வங்கதேசத்தின் மிகப் பெரிய விருதினைப் பெறுவதற்குத்தான் சென்றார்.

அந்த விருது எதற்காக அளிக்கப்பட்டது? வங்க தேசத்தைப் பெறுவதற்கு அன்றைய இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி பேருதவி புரிந்ததற்காக அவரின் சார்பில் சோனியா பெற்று வந்தாரே!
இன்னொரு ந;டான பாகிஸ்தான் நாட்டின் பிரச்சினையில் மூக்கை நுழைத்தபோது - அது இன்னொரு நாட்டு உள்விவகாரமாகத் தெரியவில்லையோ? இலங்கை யில் தமிழினம் அழிக்கப்படுவதில் (Genocide) தலையிட் டால் மட்டும் இன்னொரு நாட்டு உள் விவகாரத்தில் தலை யிட்டதாகுமா? இது என்ன சந்தர்ப்பவாத ஞானோதயம்!

இனப்படுகொலை எங்கு நடந்தாலும் இன்னொரு நாடு தலையிடலாம் என்று அய்.நா.வின் ஜெனோசைடு கன்வென்சன் 1949 கூறவில்லையா? இலங்கையில் நடப்பது இனப் படுகொலையே என்று நாடாளுமன்றத்தில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி சொன்னதை (16.8.1983) நினைவுபடுத்திக் கொண்டால், இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிடலாமா கூடாதா என்பதற்கான விடை கிடைக்கும்.

அந்தோ காங்கிரசே!

1967இல் தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் இனி எக்காலத்திலும் ஆட்சிக்கு வருவதில்லை, அடிச் சுவடே இல்லாமல் போய் விடுவது  என்று முடிவுரையை எழுதிக் கொண்டு விட்டதே!

தமிழ், தமிழன், தமிழ்நாடு என்று சொன்னாலே தேசீயத்திற்கு விரோதம் என்று காங்கிரஸ் நினைக்குமட்டும் - அக்கட்சி தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் விரோதமானது என்று தனக்குத்தானே அறிவித்துக் கொண்டு விட்டதே! இது கல்லின் மேல் எழுத்தே!

---------------------  கி.வீரமணி  தலைவர், திராவிடர் கழகம் சென்னை 28.3.2014

28.3.14

கருப்பு காங்கிரஸ்வாதிக்கும் வெள்ளை காங்கிரஸ்வாதிக்கும் சம்பாஷணை




கருப்பு காங்கிரஸ்வாதி: என்னப்பா முதலியார் பட்டத்தை விட வில்லையாமே?

வெள்ளை காங்கிரஸ்வாதி: விடாவிட்டால் உனக்கென்ன இத்தனை ஆத்திரம்?

க.கா.வா: இல்லை தேசாபிமானம் வேண்டாமா?

வெ.கா.வா: என்ன தேசாபிமானம்? பட்டத்தைவிட்டால்தானா தேசாபிமானம்? பட்டத்தை விடவேண்டியது தேசாபிமான சின்னமா? இன்று காங்கிரசில் பட்டதாரிகள் யாருமில்லையா? சென்னைபட்டணத்தில் ராவ்பகதூர் பட்டம்விட்ட தோழர் ஒ. கந்தசாமி செட்டியார் இருக்கிறாரே அது போதாதா? C.I.E. பட்டம் விட்ட தோழர் கு. சீனிவாசய்யங்கார் இருக்கிறாரே அது போதாதா? இவர்கள் தேசாபிமானத்துக்கு இன்று எவ்வளவு மதிப்பு இருக்கிறது பார்! இது உனக்கு தெரியாதா?

க.கா.வா: சரி, பழய கதை பேசாதே, முதலியார் டைடிலை விட்டுவிடுகிறேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டு இப்போது விடவில்லையே அதற்காகத்தான் சொன்னேன்.

வெ.கா.வா: எதற்காக முதலியார் டைடில் விடுகிறேன் என்று சொன்னார்? தேசாபிமானத்துக்காகவா? 4 அணா மெம்பர் பிளெஜ்ஜில் டைடிலை விடவேண்டும் என்று ஏதாவது இருக்கிறதா?

க.கா.வா: 4 அணா பாரத்தில் இல்லாவிட்டால் என்ன? சட்ட சபைக்கு நிற்கிறவர்கள் டைடிலை விட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தீர்மானித்திருக்கிறதல்லவா?

வெ.கா.வா: ஆம், சட்டசபைக்கு நின்றால்தானே! அதுவும் காங்கிரஸ் கேண்டிடேட்டாய் நின்றால் தானே!! "நான் சேற்றில் இறங்கவுமில்லை செருப்பைக் கழட்டவும் இல்லை" என்று ஒருவன் சொன்னால் அவன் தேசத்துரோகியா? முதலியார் காங்கிரஸ் சார்பாய் சட்டசபைக்கு நிற்கா விட்டால் பட்டம் எதற்காக விடவேண்டும்? அவர்தான் "என்னை காங்கிரஸ் சார்பாய் நிறுத்தாதீர்கள்" என்று காங்கிரஸ் கமிட்டிக்கு கடிதம் எழுதி விட்டாரே? பிறகு ஏன் அதைப்பற்றி பேசுகிறாய்?

க.கா.வா: இல்லையப்பா, அவர் பட்டம் விட்டால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு எவ்வளவு கௌரவம் ஏற்படும் பார்.

வெ.கா.வா: உங்கள் கௌரவம் போதுமே, ஒ. கந்தசாமி செட்டியார் விட்டதில் எவ்வளவு கௌரவம் வந்தது? இப்பொழுது அவர் எங்கிருக்கிறார், அவர் விலாசம் என்ன உனக்கு தெரியுமா? அப்படிமீறி வருகிற கௌரவம் ராமலிங்கம் செட்டியாரால் கமிட்டிக்கு வரட்டுமே. ஒரு ஜில்லாவில் இரண்டு பேர் பட்டம் விட்டு விட்டு ஒரு மந்திரி வேலைக்கு சண்டை பிடித்துக் கொள்ளுவானேன்?

க.கா.வா: மந்திரி வேலைக்கா பட்டம் விடுவது?

வெ.கா.வா: பின்னை எதற்கப்பா? சட்டசபை மெம்பர் வேலைக்கென்றே வைத்துக்கொள்ளேன்.

க.கா.வா: என்னப்பா அப்படி சொல்லரே?

வெ.கா.வா: பின்னை எதற்கு அப்பா? தேசாபிமானத்துக்கு பட்டம் விட வேண்டும் என்று இருந்தால் 4 அணா பாரத்திலேயே அந்த நிபந்தனை இருக்கும், இல்லாவிட்டாலும் காங்கிரஸ் தீர்மானத்திலாவது இருக்கும், அப்படி இல்லாமல் சட்டசபை அபேட்சகர்கள் பாரத்தில் மாத்திரம் அதுவும் நுழை வரியாய் எழுதி வாங்குகிறார்களே அது ஏன் உனக்குத் தெரியாதா?

க.கா.வா: என்ன இருந்தாலும்...

வெ.கா.வா: என்ன இருந்தாலும் என்கின்றது ஏனப்பா? ஒருத்தர் ஏமாறமாட்டேன் என்றால் அதற்குஆக கோபமா? இத்தனை ஆத்திரமா? காங்கிரஸ்காரர்கள் முதலியாருக்கு தொகுதி இன்னது என்றும் சொல்ல முடியாது; நேமிக்கிறார்களா இல்லையா என்றும் சொல்ல முடியாது. இந்த நிலையில் முதலியார் அனாவசியமாய் பட்டத்தை மாத்திரம் விட்டுப்போட்டு வாலறுந்த நரிமாதிரி நிரந்தரமான மூளி சின்னத்தோடு இருக்க வேணுமாக்கும். அதைப்பார்த்து நீங்கள் சிரிக்கவேணுமாக்கும். வேண்டாம் வேண்டாம். உங்களையே பார்த்து நீங்கள் சிரித்துக்கொள்ளுங்கள். சிரிப்பு வரவில்லை யானால் அழுது கொள்ளுங்கள். அவர் தலையில் கை வைக்காதீர்கள்.

க.கா.வா: அதே நிபந்தனையில் ராமலிங்கம் செட்டியார் பட்டங்கள் விடவில்லையா?

வெ.கா.வா: ராமலிங்கம் செட்டியார் சங்கதி நமக்குத்தெரியாதா? அவர் எதையும் விடுவார் சந்தையும் அவருடையது, கொள்ளையும் அவருடையது. கேட்கிறவர்கள் யார்?

க.கா.வா: அப்படி சொன்னால் எனக்கு விளங்கவில்லையே!

வெ.கா.வா: காங்கிரஸ் என்றால் என்ன? யார்? அவனாசிலிங்கம் செட்டியார் தான் கோயமுத்தூருக்கு காங்கிரசு தலைவர்; அவர் ராமலிங்கம் செட்டியாருக்கு தம்பி. இருவரும் முதலியாருக்கு ஜென்மவிரோதிகள்; முதலியாரை "முண்டச்சி" ஆக்கவே பட்டம் சங்கதி உற்பத்தி பண்ணப்பட்டது; ஆதலால் செட்டியாருக்கு எப்படியும் ஒரு ஸ்தானம் ஒதுக்குவது உறுதி. அதுவும் அவர் எது கேட்கிறாறோ அது ஒதுக்கப்படும்; (ஆனால் கிடைக்குமோ இல்லையோ அது வேறு சங்கதி.)

முதலியார் விஷயத்தில் அப்படி இல்லையே? எதுகொடுத்தாலும் முதலியாருக்கு கிடைத்துவிடலாம். அதனாலே காங்கிரசில் ஒதுக்குவதையே அல்லவா நாமம் போடப்பார்த்தார்கள். நல்ல வேளையாய் தப்பித்துக் கொண்டார். அவர் சட்டசபை மெம்பர் ஆனாலும் சரி ஆகாவிட்டாலும் சரி, சாகும் வரைக்கும் சொட்டு இருக்கும்படியான ஏமாற்றத்தில் இருந்து தப்பி கொண்டார்.

க.கா.வா: அப்படியா சங்கதி நல்ல வேளை எந்த சாமி புண்ணியமோ தப்பித்துக்கொண்டார். போகட்டும் போ. எனக்கு இந்தச் சூது தெரியாது.

வெ.கா.வா: எந்த சாமி புண்ணியம், எல்லாம் நம்ப சாமி புண்ணியம் தான்.

மற்ற சங்கதி ஒன்றும் கேட்க வேண்டாம். எல்லாம் தானாக வெளி வரும்; கொஞ்சம்பொறு. முதலியார் தப்பித்துக்கொண்டாரே என்கின்ற ஆத்திரத்தில் கண்டபடி உளறப்போகிறார்கள். அதிலிருந்து அநேக சங்கதி தெரிந்து கொள்ளலாம்.

அரசியல் பிழைப்பில் நாணயம் பேச யாருக்கு உரிமை உண்டு? தோழர் சுப்பராயனை சேர்த்துக்கொள்ளவில்லையா? அரசியல்வாத நாணயம், வக்கீல் வாத நாணயம், வியாபாரி வாத நாணயம், தாசிவாத நாணயம் இவைகளுக்கு விலக்குவிதி உண்டு உனக்குத் தெரியாதா?

அப்படியும் முதலியார் விஷயத்தில் விலக்கு விதி ஒன்றும் வேண்டியதில்லை; அவர் பொது வாழ்வில் பொதுநல காரியம் பார்த்ததில் எவ்வளவோ பணம் நட்டப்பட்டு கடன்பட்டு தனது சொத்தை விற்று கடன் கட்டினார். ஜில்லா போர்டு பிரசிடெண்டு வேலை போனபிறகே கடன் இல்லாமல் சாப்பிடுகிறார். ஏதோ லக்ஷம் ஐம்பது ஆயிரம் சம்பாதித்தார்.

காந்தியை கைது செய்யச் செய்த சீனிவாச சாஸ்திரி இன்னம் பெரிய மனிதராக இல்லையா? காந்தியை முட்டாள் என்ற சத்தியமூர்த்தி அதாவது ஆனைமலை பேச்சுக்காரர் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இல்லையா? முதலியார் என்ன துரோகம் பண்ணினார்? டாக்டர் ராஜனாட்டவா? சாஸ்திரியாட்டவா வேலூர் காங்கிரஸ்காரராட்டவா தென் ஆற்காடு காங்கிரஸ்காரராட்டவா? அல்லது திருநெல்வேலிகாரராட்டவா? இன்னும் பேசப்போனால் காந்தி முதல் சத்தியமூர்த்தி வரையிலுமாட்டவா என்றுகூட கேட்பேன்.

காங்கிரசில் சேர்ந்தார். காங்கிரசில் இருக்கிறார். நீ என்னை சட்ட சபைக்கு நியமிக்க வேண்டாம் நான் பட்டம் விடவில்லை என்றார். இதில் என்ன ஓட்டை சொல்லே பார்ப்போம்.

--------------------- சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய உரையாடல் --”குடி அரசு” 15.11.1936

27.3.14

காசி விசுவநாதன் ஆதரவு யாருக்கு?நரேந்திர மோடிக்கா?ஆம் ஆத்மியின் கெஜ்ரிவாலுக்கா?


பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளராக அறி விக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி வாரணாசி என்ற காசிக்குச் சென்றார். காசி விசுவநாதர் கோவிலுக்குச் சென்றார். கருவறைமுன் அமர்ந்தார். அவர் நெற்றியில் கோவில் அர்ச்சகர் சிறீகாந்த் மிஸ்ரா சந்தனத்தை மூன்று முறை அப்பினார். பிரதமராக ஆகவேண்டும் என்று சங்கல்பம் எடுக்கச் சொன்னாராம் அர்ச்சகர் பார்ப்பனர் - அவ்வாறே மோடியும் எடுத்துக்கொண்டார் என்பது செய்தி.

மோடியை எதிர்த்து நிற்கவிருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரான கெஜ்ரிவாலும் வாரணாசிக்குச் சென்றுள்ளார். கங்கையில் குளித்தெழுந்துள்ளார். அங்குள்ள பைரவர் கோவிலுக்குச் சென்றார். அங்கு சாமி கும்பிட்டார்.

எந்தக் காரியத்தைச் செய்தாலும் பைரவரை வணங்கித் தொடங்கவேண்டும்; பைரவர்தான் காவல் தெய்வம் என்னும் கெஜ்ரிவால், அதோடு விடவில்லை, காசி விசுவநாதர் கோவிலுக்குச் சென்றார். அவருக்கும் பிரசாதம் அளிக்கப்பட்டது. திருநீறும் பூசிக்கொண்டார். இதே காசி விசுவநாதர் கோவிலுக்குத்தான் மோடியும் சென்றார். அவருக்கும் பிரசாதம் அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஜெயலலிதா பிரதமராக ஆகவேண்டும் என்பதற்காக சிறப்புப் பூஜைகள் என்ன, யாகங்கள் என்ன, அன்னதானங்கள் என்ன என்று ஒரே களேபரம்தான்.

சென்னையைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் ஆயுத பேர புகழ் சாமியார் சந்திராசாமியாரின் ஆலோசனைப்படி ராஜராஜேஸ்வரி யாகம் ஒன்றை நடத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் பி.ஜே.பி.யை உள்ளடக்கிய கூட்டணிக் காக வரிந்து கட்டிக் கொண்டு பேரம் பேசிய மணியன் என்பவர் மதுரை மீனாட்சி அருள்பாலித்து விட்டார் என்று சொல்லித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளாராம்.
இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது தேர்தலில் ஈடுபடும் இவர்கள் கொள்கைக் கோட்பாடுகளையோ, திட்டங்களையோ, சாதனைகளையோ நம்பாமல், கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் தேர்தலில் குதித்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

உண்மையிலேயே அவர்களுக்குக் கடவுள்களின்மீது, கோவில்களின்மீது நம்பிக்கை இருக்குமேயானால், பாரத்தைக் கடவுள் தலையின்மீது போட்டுவிட்டு, அக்கடா என்று இருக்கவேண்டியதுதானே! எதற்காகத் தேர்தல் சுற்றுப்பயணங்கள்?

எதற்காக மணிக்கணக்கில் தொண்டைத் தண்ணீர் வற்ற வற்றப் பேசித் தொலைக்க வேண்டும்? கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டியழ வேண்டும்? தொண்டர்களைக் கொளுத்தும் வெயிலில் அலையவிட வேண்டும்?

இவையெல்லாம் நியாயமான, நேர்மையான கேள்வி கள் அல்லவா! உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், இந்தப் போக்குகள் எதைக் காட்டுகின்றன.

தங்கள்மீது நம்பிக்கை வைக்கவில்லை; நம்பிக்கை வைக்கும் அளவுக்கு அவர்களிடம் சரக்குகளும், சாதனைகளும் இல்லை. மக்கள் மத்தியில் படர்ந்திருக்கும் பக்தியைப் பகடைக் காயாகப் பயன்படுத்தலாம் என்ற அசாத்திய நம்பிக்கைதான் இதற்கு முக்கிய காரணமாகும்.

இதில் வேடிக்கை என்னவென்றால், அதே காசி விசுவநாதன் கோவிலில் தான் நரேந்திர மோடியும் சென்று சாமி கும்பிட்டார்; பிரசாதமும் வழங்கப்பட்டது.
ஆம் ஆத்மியின் கெஜ்ரிவாலும் அதே காசி விசுவநாதன் கோவிலுக்கும் சென்றார். சாமி கும்பிட்டார்! அவருக்கும் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.
அப்படியென்றால், காசி விசுவநாதன் யாருக்கு ஆதரவளிப்பான் என்ற கேள்வி எழுகிறது அல்லவா! வெற்றி பெறப் போகிறவர் காசி விசுவநாதனின் அருளே அருள்! சக்தியே சக்தி! என்று புகழ்வாரேயானால், தேர்தலில் தோற்றவர் அந்தக் காசி விசுவநாதனைப்பற்றி அக்கடவுளின் சக்திபற்றி என்ன சொல்லவேண்டும்?

கடவுளாவது - புடலங்காயாவது - வெறும் கல்லு என்று சொல்லுவார்களா? கடவுள் பக்தி என்பது முறையான சிந்தனைக்கும், செயல்பாட்டுக்கும் வழிவகுக்கிறதா என்பதைச் சிந்திக்கவேண்டும்.

தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் அவர்கள் சார்ந்த மதத்தின் கடவுள்களைத்தானே கும்பிடுகிறார்கள்? அந்த மதத்தில் உள்ளவர்கள் மட்டும் வாக்களித்தால் போதுமா?

வேறு மதத்தவர்களின் நிலைப்பாடு என்னாவது? குறைந்தபட்சம் தேர்தல் நேரத்திலாவது மதச்சார்பற்ற தன்மையில் நடந்துகொள்ளவேண்டாமா?
சரி, மத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பகுத்தறிவுவாதிகள் கோவிலுக்குச் செல்லமாட்டார்களே - அவர்கள் தேர்தலில் நிற்கக்கூடாதா? அப்படியே நின்றா லும், அவர்கள் கோவிலுக்குச் செல்லாததால் வாக்களிக்க மாட்டார்களா?

மதத்தின் பெயரால் மக்களுடைய சிந்தனை எப்படி யெல்லாம் சிதற அடிக்கப்படுகிறது!

தேர்தல் என்பது எதைப் பொறுத்தது? சம்பந்தப்பட்ட கட்சிகள் முன்வைக்கும் தேர்தல் அறிக்கை என்ன? அதில் குறிப்பிடப்பட்டு இருப்பதென்ன?

அந்தக் கட்சியின் கடந்தகால செயல்பாடுகள் என்ன? நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ன? என்று பார்ப்பதற்குப் பதிலாக மக்களின் மதம் சார்ந்த சிந்தனையைத் தங்கள் பக்கம் ஈர்க்கும் வகையில் நடந்துகொள்வது மக்களை ஏமாற்றும் மோசடியேயாகும்!

மத சாயலைக் காட்டும் வேட்பாளர்களிடம் எச்சரிக்கை யாக இருக்குமாறு வாக்காளர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

-------------------------------” விடுதலை” தலையங்கம் 26-03-2014

26.3.14

பெண்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி வந்திருந்தால் அருத்தெறியட்டும் தாலியை!

விருதுநகரில், உண்மைச் சுயமரியாதை திருமணம்

தலைவரவர்களே! மணமக்களே! அவர்களது பெற்றோர்களே! மற்றும் சகோதரி, சகோதரர்களே! இந்தக் கூட்டத்தில் எனக்குப் பேச மிக்க ஆசையா யிருக்கிறது. ஆனால் நான் ஆசீர்வாதம் செய்யவோ வாழ்த்துக் கூறவோ எழுந்திருக்கவில்லை. மேல்கண்ட இரண்டும் முறையே புரட்டும் மூட நம்பிக்கையுடையதுமாகும்.

நமது நாட்டில் ஆசீர்வாதம் அனேகமாய் ஒரு ஜாதிக்கே உரிய தென்றும், அதுவும் அவர்களிடமிருந்து பணத்திற்கு விலைக்கு கிடைக்கக் கூடியதென்றும் கருதி இருக்கிறோம். அனேகமாக ஆசீர்வாத ஜாதி பிச்சை யெடுப்பதற்கு இந்த ஆசீர்வாதத்தை உபயோகப்படுத்துவதையும் பார்க்கின்றோம்.

நம்மை மகாராஜனாகவும் ஷேமமாகவும் இருக்கும்படி ஆசீர்வாதம் செய்து பணம் வாங்குகிறவனுடைய ஆசீர்வாதம் யோக்கிய முடையதும் உண்மை யுடையதுமானால் தன்னையே ஆசீர்வாதம் செய்து கொண்டு செல்வவானாய் சீமானாய் இருக்கும்படி செய்து கொள்ளலாமல்லவா? நம்மி டம் பிச்சைக்கு வருவானேன்? தவிர வாழ்த்துவதும் அர்த்த மற்றதேயாகும். ஒருவன் வாழ்த்துதலினாலேயே ஒரு காரியமும் ஆகி விடாது. வேண்டு மானால் மணமக்கள் இன்பமாய் வாழ ஆசைப்படலாம். ஆனால் அவ்வித ஆசைப்படுகின்றவர்களுக்கு ஆசைக்கேற்ற கடமை உண்டு. அக்கடமை என்னவென்றால் ஆசைப்படுகின்றவனது ஆசை நிறைவேற உதவியாய் இருப்பதுதான்.

அவ்விதம் நான் ஆசைப்பட்டாலும் அவ்வாசை நிறைவேற நான் எவ்வளவு தூரம் உதவியாய் இருக்கமுடியும் என்பது எனக்கே தெரிய வில்லை. ஆனால் எனது நரைத்த தலையைப் பார்த்து என்னை முதலில் கூப்பிட்டு விட்டார்கள் என்றே நினைக்கின்றேன்.

ஆகையால் இந்த சமையத்தை நிறைவேற்றிவைக்க சக்தி இல்லாது ஆசைப்படுவதை விட மணமக்களையும் மணமக்கள் வீட்டாரையும் பாராட்டி மணமக்களுக்கு ஏதாவது இரண்டொரு யோசனை சொல்ல உபயோகித்துக் கொள்ளுகின்றேன்.

சகோதரர்களே! தென்னாட்டில் இதுவரை நடந்த சுயமரியாதை கல்யாணங்களுக்குள் இதுவே முதன்மையானது என்று சொல்லுவேன். என்னவெனில் இந்த கல்யாணத்தில் பெண்ணின் கழுத்தில் கயிறு (தாலி) கட்டவில்லை. மணமக்களைப் பெற்றவர்கள் இருவரும் மிக்க துணிச்சலான சுயமரியாதை வீரர்கள் என்பது அவர்களது உபந்நியாசத்திலிருந்தே பார்க் கலாம். தாலி கட்டுவது ஒழிந்தாலல்லது நமது பெண்கள் சமூகம் சுதந்திரம் பெற முடியவே முடியாது. பெண்கள் மனிதத் தன்மை அற்றதற்கும் அவர் களது சுயமரியாதை அற்ற தன்மைக்கும் இந்தப் பாழும் தாலியே அறிகுறி யாகும். புருஷர்களின் மிருக சுபாவத்திற்கும் இந்தத் தாலி கட்டுவதே அறிகுறியாகும். ஆனால் தங்களை ஈனப்பிறவி என்று நினைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த வார்த்தை பிடிக்காதுதான். இப்போது தாலி கட்டிக் கொண்டிருக்கும் பெண்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி வந்திருந்தால் அருத்தெறியட்டும். இல்லாவிட்டால் புருஷர்கள் கழுத்திலும் ஒரு கயிறு கட்ட வேண்டும். தங்களை தாங்களே அடிமை என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற சமூகம் என்றும் உருப்படியாகாது.

நம்மை நாம் சூத்திரர்கள் இந்துக்கள் என்று நினைத்துக் கொண்டி ருக்கும் கீழ்மைக் குணமே நம் நாடு அடிமையாய் இருப்பதற்குக் காரண மாயிருப்பது என்பது போலவே பெண்கள் புருஷனுக்குக் கட்டுப்பட்டி ருக்க வேண்டும். அதிலும் தாலி கட்டின புருஷனுக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என்னும் உணர்ச்சிகள் பெண்களை மிருகமாக்கி இருக்கின் றன. ஆதலால் அப்பேர்பட்ட மிருக உணர்ச்சியையும் அடிமை உணர்ச்சியையும் ஒழிக்க முயற்சித்த இந்த மணமக்களையும் அதற்கு உதவியாயிருந்த பெற் றோர்களையும் நான் மிகப் போற்றுகிறேன், பாராட்டுகிறேன். பெண்கள் முன்னேற்றத்தில் கவலை உள்ளவர்கள் பெண்களைப் படிக்க வைக்கும் முன் இந்தக் கழுத்துக் கயிற்றைத் (தாலியை) அருத்தெறியும் வேலையையே முக்கியமாய் செய்யவேண்டுமென்று சொல்லுவேன். 

நிற்க, இதுவரை மணமக்களுக்கு ஆசீர்வாதமோ வாழ்த்தோ என்பது மணமக்கள் நிறைய அதாவது 16 - பிள்ளைகள் பெற்க வேண்டுமென்று சொல்லுவார்கள். ஆனால் நான் மணமக்களுக்குச் சொல்லுவதென்னவென்றால் அவர்கள் தயவுசெய்து பிள்ளைகள் பெறக்கூடாது என்பதும், மிக்க அவசியமென்று தோன்றினால் ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் கூடாது என்றும் அதுவும் இன்னும் ஐந்து ஆறு வருடம் பொறுத்துத்தான் பெறவேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகின்றேன். அன்றியும் அப்படிப் பெறும் குழந்தைகளை யும் தாய்மார்கள் குரங்குக் குட்டிகள்போல் சதா தூக்கிக் கொண்டு திரிந்து போகின்ற இடங்களுக்கெல்லாம் அழைத்துப் போய் அழ வைத்துக் கொண்டு கூட்டமும் நடவாமல் தங்களுக்கும் திருப்தியில்லாமல் சபை யோருக்கும் வெறுப்புத் தோன்றும்படியாய் செய்யாமல் குழந்தைகளை ஆயம்மாள் வைத்து வளர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவை களுக்கு ஒழுங்கும் அவசியமான கட்டுப்பாடும் பழக்கிக் கொடுக்க வேண்டும்.

இந்தக் கூட்டத்தில் நான் பேசமுடியாதபடி எத்தனை குழந்தைகள் அழுகின்றது பாருங்கள். அவற்றின் தாயார் முகங்கள் எவ்வளவு வாட்டத் துடன் வெட்கப்படுகின்றது பாருங்கள். அந்தத் தாய்மாரும் தகப்பன் மாரும் இந்தக் கூட்டத்தில் ஒருவரையொருவர் பார்த்து வெறுப்பதைத் தவிர அவர் களுக்கு இங்கு வேறு வேலையே இல்லாமல் இருக்கின்றது. இன்பமும் அன்பும் என்பது சுதந்திரத்தோடு இருக்க வேண்டுமே அல்லாது நிபந்தனை யோடும் தனக்கு இஷ்டமில்லாத சௌகரியமில்லாத கஷ்டத் தைச் சகித்துக் கொண்டு இருப்பதாய் இருக்கவே முடியாது. ஆகவே இப் போதைய குழந்தை இன்பம் என்பது ஒருக்காலமும் உண்மையான இன்பமாகாது. ஆகையால் அவைகளை மாற்றிவிட வேண்டும்.

தவிர அதிக நகை போடாமலும் தாலி கட்டாமலும் மூடச் சடங்குகள் இல்லாமலும் மாத்திரம் நடைபெற்ற திருமணம் சுயமரியாதைத் திருமண மாகி விடாது.பெண்ணின் பெற்றோர் இப்பெண்ணுக்கு தங்கள் சொத்தில் ஒரு பாகம் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். புருஷர்களைப் போ லவே பெண் களுக்கும் சொத்துரிமை உண்டு, தொழில் உரிமை உண்டு என்கின்ற கொள்கை ஏற்படாவிட்டால் எப்படி அவர்கள் சுயமரியாதை உடையவர் களாவார்கள்? ஆகையால் அவர்களுக்கு சொத்துரிமையும் அவசியமான தாகும். தவிர பெண்களுக்கு இப்போது பொது நல சேவை என்னவென்றால் எப்படியாவது ஒவ்வொரு விதவையையும் ஒவ்வொரு புருஷனுடன் வாழச் செய்ய வேண்டும். அதுவே அவர்கள் இப்போது செய்ய வேண்டியது.

தவிர பெண்களும் புருஷர்களைப் போலவே தினமுமோ அல்லது வாரத்திற்கு ஒன்று இரண்டு நாளோ ஒரு பொது இடத்தில் கூடி மகிழ்ச்சியாய் பேசி விளையாட வேண்டும். பத்திரிகைகளைப் படிக்க வேண்டும். படிக்காத பெண்களுக்குப் படித்தவர்கள் படித்துக் காட்ட வேண்டும்.

வீட்டு வேலை செய்வதுதான் தங்கள் கடமை என்பதை மறந்து விட வேண்டும். புருஷனுக்கு தலைவியாய் இருப்பதும் குடும்பத்திற்கு எஜமானி யாய் இருப்பதும் தங்கள் கடமை என்று நினைத்து அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும். இந்த உணர்ச்சியோடேயே பெண்மக்களை வளர்த்தி அவர்களுக்கு தக்க பயிர்ச்சி கொடுக்க வேண்டும்.
---------------------------------------10.07.1930 இல் விருதுநகர் வன்னிய நாடார் இல்லத் திருமணத்தில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு-”குடி அரசு” - சொற்பொழிவு - 13.07.1930

25.3.14

மதச்சார்பின்மை என்றால் என்ன?அரசுக்கு மதம் உண்டா?

அரசுக்கு மதம் உண்டா?

    கேள்வி: மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளுடன்தான் கூட்டுச் சேர்வோம் என்று சில அரசியல் கட்சிகள் கூறுகின்றன. அப்படி ஒரு அரசியல் கட்சி உள்ளதா? அதன் பெயர் என்ன?
    பதில்: இருக்கிறதே என் கற்பனையில்! அதன் பெயர் உன்னத இந்தியர் கட்சி! எல்லா மதங்களையும் சார்ந்த மக்களை அரவணைத்து மதிப்பளிக்கும் பண்பைத்தான் மதச்சார்பற்ற என்கிறோம். அப்படி தாங்கள் ---இருப்பதாகத்தான் எல்லாக் கட்சிகளும் சொல்கின்றன. ஆனால் வோட்டு வங்கி அரசியல் இதைப் பொய்யாக்கிவிடுகிறது. பலவித நாடகங்கள் அரங்கேறுகின்றன. அதில் ஒன்றுதான் உங்கள் கவனத்தைக் கவர்ந்துள்ள அறிக்கை.

                                          ---------------------------------------- (கல்கி 16.2.2014 பக்கம் 44)

    எல்லா மதங்களையும் சார்ந்த மக்களை அரவணைத்து மதிப்பளிக்கும் பண்புதான் மதச்சார்பின்மை - என்று கூறும் விளக்கமே தவறானது.
    மதச்சார்பின்மை என்றால் அரசுக்கு மதம் கிடையாது என்பதுதான். செக்குலர் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைக்குத்தான் தமிழில் மதச்சார்பின்மை என்று கூறப்படுகிறது.
    செக்குலர் என்ற சொல் ஆங்கில மொழியிலிருந்து வந்ததுதானே _ அப்படி இருக்கும் ஆங்கில மூலச் சொல்லின் பொருளை அந்த ஆங்கில மொழியில்தானே காண வேண்டும், தேட வேண்டும்.
    இதுகுறித்துத் தந்தை பெரியார் கூறும் கருத்து விவேகமானது.
    செக்குலர் _ மதச்சார்பற்ற என்ற சொல்லுக்கு என்ன வியாக்கியானம் கூறுகிறார்கள் என்றால் ஒரு பெண் கன்னியாய் இருக்க வேண்டுமென்றால் அதற்கு ஆண் சம்பந்தமே இருக்கக் கூடாது என்பது பொருள் அல்ல; எல்லா ஆண்களையும் சமமாகக் கருதி, கூப்பிட்டவனிடமெல்லாம் கலவி செய்ய வேண்டும் என்பதுதான் கன்னி என்பதற்குப் பொருள் என்பதுபோல் பொருள் சொல்கிறார்கள். எல்லா மதங்களையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்கின்ற கொள்கை மத விஷயத்தில் காலம் காணாததற்கு முன்பு இருந்தே இருந்து வருகிறபோது, அதைப் புதிதாக வலியுறுத்த வேண்டிய அவசியம் ஏன் வரும்?
    செக்குலர் என்ற சொல்லை ஆங்கிலச் சொல்லாகத்தான் சட்டத்தில் புகுத்தினார்களே ஒழிய, வேறு மொழிச் சொல்லாகப் புகுத்தவில்லை. ஆங்கிலச் சொல்லுக்கு வியாக்யானம் அந்தச் சொல்லை உற்பத்தி செய்தவர்கள் சொல்லுவதைப் பொறுத்ததே ஒழிய, அதன் கருத்துக்கு விரோதிகளான பார்ப்பனர்களும் காங்கிரஸ்காரர்களும் சொல்லுவது பொருத்தமாக முடியுமா?
    அந்தச் சொல்லும்கூட அரசாங்கக் காரியத்திற்குத்தான் பொருந்தும் என்று இன்றைய ஆட்சியாளர்கள் சொல்லுகிறார்களே ஒழிய அது எல்லா மக்களுக்கும் வலியுறுத்தும் பொருள் என்று சொல்லவில்லையே! என்றார் தந்தை பெரியார்.
    செக்குலரிசம் குறித்த தந்தை பெரியார் அவர்களின் இந்தக் கருத்து தனித்தன்மையானது. உண்மையின் தன்மையை ஆராதிப்பதாகும்.
    அரசுக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை என்பதுதான் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பாகும்.
    ஒரு மதத்தைப் பற்றியோ அல்லது மதக் கிளைகள் பற்றியோ ஆட்சியின் கண்ணோட்டம் எப்படி இருந்தாலும் அரசின் மதச்சார்பற்ற நடவடிக்கைகளில் மதத்தைக் கலக்கக் கூடாது. அரசுப் பிரச்சினையில் மதத்துக்கு இடம் இல்லை.
    எந்த ஒரு மாநில அரசும் மதச்சார்பின்மைக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருப்பதோ மதச்சார்பின்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதோ அரசியல் சட்டத்துக்கு எதிரானது. அத்தகைய மாநில ஆட்சிகளை அரசியல் சட்டத்தின் 356ஆவது பிரிவின்கீழ் கலைக்க _ குடியரசுத் தலைவருக்கு உரிமை உண்டு.
    ஆறு நீதிபதிகள் தனித்தனியே அளித்துள்ள தீர்ப்புகளில்  அரசியலமைப்புச்  சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை எடுத்துக்காட்டியுள்ளனர்.
    ஓர் ஆட்சி  மதச் சகிப்புத்தன்மையை மேற்கொள்வதாலோ  ஒரு குடிமகனுக்கு மதத்தைப் பின்பற்றவோ அல்லது பிரச்சாரம் செய்யவோ அனுமதிப்பதாலோ அந்த அரசு மதச்சார்பு ஆகிவிட முடியாது. அரசின் மதத்தோடு தொடர்பில்லாத மற்றும் மதச்சார்பின்மை தொடர்புடைய எந்த ஒரு செயலிலும் மதத்தின் குறுக்கீட்டுக்கு இடமே கிடையாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். நீதிபதி பி.பி.ஜீவன் (ரெட்டி) தெரிவித்துள்ள கீழ்க்கண்ட கருத்தை ஏனைய நீதிபதிகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
    அரசியல் கட்சிகள் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கோ அல்லது அதிகாரத்தில் பங்கு கொள்வதற்கோதான் உருவாகின்றன. அதுதான் அக்கட்சிகளின் நோக்கம்.
    சில தனி மனிதர்களைக் கொண்ட அமைப்பு மதப் பிரச்சாரத்தில் ஈடுபடலாம். அப்படியானால் அது ஒரு மத அமைப்பு. மற்றொரு அமைப்பு _ கலாச்சார மேம்பாட்டுக்குப் பிரச்சாரம் செய்யலாம்.
    அப்படியானால் அது ஒரு கலாச்சார அமைப்பு. இந்த அமைப்புகளின் நோக்கம் _ அரசின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதல்ல. ஆனால் அரசியல் கட்சிகளின் நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான். ஒரு ஜனநாயக ஆட்சி அமைப்பு _ அரசியல் கட்சிகள் இல்லாமல் செயல்பட்டுவிட முடியாது.
    அரசியல் கட்சிகள் என்பவை அரசியல் சட்டத்தின் அங்கங்கள்; அரசியல் சட்டம் மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கும்போது அரசியல் கட்சிகளுக்கும் அதுவே அடிப்படை அம்சமாகிவிடுகிறது.
    அரசியல் சட்டம் மதத்தையும் அரசியலையும் ஒன்றாகக் கலப்பதை அனுமதிக்கவில்லை. இரண்டும் தனித்தனியாக பிரிக்கப்பட வேண்டும். இந்திய அரசியல் சட்டம் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் காலம் வரை_ இதை யாரும் மாற்றிவிட முடியாது _ இவ்வாறு ஆறு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு திட்டவட்டமாக, தெளிவாக தீர்ப்பாகவே கூறிவிட்டது. (14.3.1994)
    உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறிய கருத்தை தீக்கதிர் தமிழில் வெளியிட்டு இருந்தது. (7.10.2012)
    மதச்சார்பின்மை என்பதன் பொருள் ஒருவர் தன் மதத்தைப் பின்பற்றக் கூடாது என்பதல்ல. மதச்சார்பின்மை என்பதன் பொருள், மதம் ஒருவரின் தனிப்பட்ட விவகாரம். இதற்கும் அரசுக்கும் சம்பந்தம் கிடையாது. அரசுக்கு மதம் கிடையாது என்று கூறினாரே.
    மதத்துக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை என்பதுதான் மதச்சார்பின்மை என்பதன் பொருள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதியின் அறிக்கை தெரிவித்துள்ளது.
    கல்கி கூட்டங்கள், சங்பரிவார் கூட்டங்கள் அரசு என்பது எல்லா மதங்களையும் அரவணைத்துச் செல்வது என்று பாடப் பேதம் செய்வதன் விஷமத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
    பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் மதச்சார்பின்மைக்குப் புது விளக்கத்தையே அருள்வாக்காகக் கூறியுள்ளார்.
    என்னைப் பொறுத்தவரை அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதுதான் மதச்சார்பின்மை என்று விளக்கம் கொடுத்தாரே பார்க்கலாம். (சென்னை காமராசர் அரங்கில் நடைபெற்ற துக்ளக் ஆண்டுவிழாவில் மோடி) _ இது மோடியின் அறியாமைக்கான முகவரியே!
    மோடியை விட்டுத் தள்ளுவோம். ஜென்டில்மேன் வாஜ்பேயி இருக்கிறாரே _ அவர் மட்டும் என்ன வாழுகிறதாம்?
    பூனாவில் நடைபெற்ற சத்ரபதி சிவாஜியின் 325ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் வாஜ்பேயி என்ன பேசினார்?
    MR. VAJPAYEE SAID, CHATRAPATHI WAS SECULAR TO THE TRUE SENSE AS AGAINST TODAY’S “DISTORTED SECULARISM” FOR HE PAID EQUAL RESPECT TO ALL RELIGIONS AND NEVER DISCRIMINATED ON THE GROUND OF RELIGION. - (The Hindu 27.6.1998 page 8)
    சத்ரபதி சிவாஜி இப்போதுள்ள உருக்குலைக்கப்பட்ட மதச்சார்பின்மைக் கொள்கையைப் போன்ற ஒன்றைக் கடைப்பிடிக்கவில்லை, எல்லா மதத்தினரையும் மரியாதையாக நடத்தினார் என்றவர்தானே வாஜ்பேயி. உண்மை என்னவென்றால், பார்ப்பனர்களுக்குப் பாதம் பணிந்து சொத்தையெல்லாம் இழந்து பரதேசி ஆனவர்தான் சிவாஜி. அதனால்தான் சிவாஜியை மதச்சார்பற்றவர் என்று தூக்கி உச்சி மோந்துள்ளார் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.
    இப்பொழுது கூறப்பட்டு வரும் மதச் சார்பின்மை என்பது உருக்குலைக்கப்பட்ட (DISTORTED) ஒன்றாம். (இந்தச் சட்டத்துக்கு உண்மையாக நடந்து கொள்வேன் என்று சத்தியம் செய்துதான் பதவிப் பிரமாணம் எடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.) பிரதமராக இருக்கக்கூடியவர் உள்ளத்தில் அரசமைப்புச் சட்டத்துக்குப் பதிலாக மனுதர்ம வேர் அல்லவா குடிகொண்டு இருக்கிறது.
    காரணம், வாஜ்பேயியாக இருந்தாலும் அவர் இந்துத்துவ மத அடிப்படைவாதி என்பதுதான்.
    மும்பையில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி.ஜே.பி உறுப்பினர் ராம் கட்சே.
    1991 மே 21 அன்று விசுவ ஹிந்து பரிசத் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பி.ஜே.பி.யைச் சேர்ந்த மகாஜன், விசுவஹிந்து பரிஷத் என்ற அமைப்பைச் சேர்ந்த சாத்வி ரித்தாம்ப்ரா ஆகியோர் இந்துமத அடிப்படையில் வாக்குக் கேட்டனர். அந்த மேடையில் பி.ஜே.பி. வேட்பாளர் ராம் கட்சே இருந்தார் என்பதால் அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. (15.4.1994). அத்தீர்ப்பை வழங்கியவர் அகர்வால் ஆவார்.
    2004இல் நடைபெற்ற கேரள மாநிலம் மூவாட்டுபுழா மக்களவைத் தேர்தலில் இந்தியப் பெடரல் ஜனநாயகக் கட்சி (அய்.எஃப்.டி.பி.) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி.சி.தாமஸ். பின்னர் இவர் காங்கிரஸ் (ஜே)உடன் தம் கட்சியை இணைத்துக் கொண்டவர். இவர் முன்னாள் மத்திய சட்டத்துறை இணை அமைச்சரும்கூட. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினர் பி.எம்.இஸ்மாயிலைவிட வெறும் 529 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றவர்.
    இவரது வெற்றியை எதிர்த்து சி.பி.எம். வேட்பாளர் பி.எம்.இஸ்மாயில், ஜோஸ் கே.மணி உள்ளிட்ட சிலர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தனர்.
    மக்களவைத் தேர்தலில் கத்தோலிக்கக் கிறித்தவ மக்களின் வாக்குகளைக் கவருவதற்காக போப் மற்றும் தெரசா ஆகியோரின் படங்களுடன் தன்னுடைய படத்தையும் இணைத்து காலண்டர் அச்சிட்டு மக்களிடம் வழங்கினார்.
    இந்த வழக்கில் நீதிபதி சி.என்.இராமச்சந்திரன் தீர்ப்பை அளித்தார். (31.10.2006) அந்தத் தீர்ப்பில், மதத்தின் அடிப்படையில் வாக்குகளைக் கோரியதால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 123(3)இன்படி தவறானது. இந்த முறைகேடுகள் இல்லாவிட்டால் தோல்வி அடைந்த வேட்பாளர் வெற்றி பெற்று இருப்பார்; எனவே நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்த மனுதாரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தேர்தலில்கூட போட்டியிடும் வேட்பாளர்கள் மதச் சார்பின்மையைக் கடைபிடிக்க வேண்டியவர்கள். எந்த மதத்தைச் சார்ந்ததாகவும் கூறிப் பிரச்சாரம் செய்யக்கூடாது என்றுள்ள நிலையில், மதச்சார்பின்மைக்கு கல்கிகளும், பி.ஜே.பி., சங்பரிவார்க் கூட்டமும் கூறும் விளக்கம் தவறானது - தந்தை பெரியார் கூறும் கருத்தே சரியானது என்பதும் விளங்கவில்லையா?



    அரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக்கூடாது அரசின் நடவடிக்கையை அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் (மதுரை கிளை) ஆணை

    ரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக்கூடாது என்ற அரசின் நடவடிக்கையை அமல்படுத்த வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் (கிளை) உத்தரவிட்டுள்ளது.
    நெல்லை மாவட்டம் தாழையூத்து சங்கர் நகரைச் சேர்ந்தவர் முத்துராமன். இவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். அதில் கூறி இருந்ததாவது:
    நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை மற்றும் வட்டார அலுவலகங்களில் இந்துக் கோவில்கள் இருக்கின்றன.
    இந்தக் கோவில்களில் தினமும் பூஜையும் நடத்தப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் பிரதோஷம் போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு பூஜையும் நடத்தப்படுகிறது. அரசு அலுவலகங்களில் எல்லா மதத்தினரும் பணியாற்றுகின்றனர். எல்லா மதத்தினரும் தங்களது பணிகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர்.
    இதுபோன்ற சூழ்நிலையில் அரசு அலுவலகங்களில் இந்துக் கோவில்கள் மட்டும் அமைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது பிற மதத்தினரைப் புண்படுத்துவது போன்றதாகும். அரசு அலுவலக வளாகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக்கூடாது என்று அரசு ஏற்கெனவே ஆணை பிறப்பித்துள்ளது.
    இந்த ஆணை அரசு அலுவலகங்களில் அமல்படுத்தப்படுவது இல்லை. எனவே, இந்த ஆணையை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இந்த ஆணை பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க மாவட்ட அளவில் குழு அமைக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
    இந்த மனு நீதிபதிகள் எஃப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா, கே.பி.கே. வாசுகி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:
    அரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக்கூடாது என்று ஏற்கெனவே அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை. ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அதை அமல்படுத்த அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு அலுவலக வளாகங்களில் மத நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர். - (தீர்ப்பு 17.3.2010)
    -----------------------------------------------------------------------------------------------------------------------------

    ---------------------------- கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்  மார்ச் 01-15 - 2014 “உண்மை” இதழில் எழுதிய கட்டுரை

    24.3.14

    பகவத் சிங், ராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்டபோது பெரியார் எழுதியது என்ன?

    இன்று பகவத் சிங், ராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்ட நாள் அன்று குடிஅரசில் தந்தை பெரியார் எழுதியது என்ன? இதோ!

    திரு. பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைப் பற்றி அனுதாபங்காட்டாதவர்கள் யாருமே இல்லை.  அவரைத் தூக்கிலிட்ட காரியத் திற்காக சர்க்காரைத் தண்டிக்காதவர்களும் யாரும் இல்லை.  அதோடு மாத்திரம் அல்லாமல் இந்தக் காரியம் நடந்து விட்டதற்காக திரு. காந்தியவர்களைவும் அநேக தேசபக்தர்கள் என்பவர்களும், தேசிய வீரர்கள் என்பவர்களும் இப்போது வைகின்றதையும் பார்க்கின்றோம்.

    இவை ஒரு புறம் நடக்க, இதே கூட்டத்தாரால் மற்றொரு புறத்தில் என்ன நடக்கின்றது என்று பார்ப்போமானால் சர்க்கார் தலைவரான ராஜபிரதிநிதி திரு.இர்வின் பிரபுவை பாராட்டுவதும், அவ ரிடம் ராஜி பேசி முடிவு செய்து கொண்ட திரு.காந்தியவர்களைப் புகழ்வதும் பகத்சிங்கை தூக்கிலிடக் கூடாது என்கின்ற நிபந்தனையில்லாத ராஜி ஒப்பந்தத்தைப் பற்றி மிக்க திருப்தியடைந்திருப்பதோடு அல்லாமல் அதை ஒரு பெரிய வெற்றி யாய்க் கருதி வெற்றிக் கொண்டாட்டங்கள் கொண்டாடுவதுமான காரியங்கள் நடை பெறுகின்றன.

    இவ்வளவோடு மாத்திரம் அல்லாமல் திரு. காந்தியவர்கள்  திரு. இர்வின் பிரபுவை மகாத்மா என்று கூறி அந்தப்படியே அழைக்கும்படியாக தேச மகா ஜனங்களுக்கும் கட்டளையிடுவதும் திரு. இர்வின் பிரபு அவர்கள் திரு. காந்தி அவர்களை ஒரு பெரிய மகான் என்றும் தெய்வத்தன்மை பொருந்தியவர் என்றும் வெள்ளைக்காரர் அறிய விளம்பரம் செய் வதுமான காரியங்களும் நடைபெற்றன.

    ஆனால், இப்போது வெகுசீக்கிரத்தில் அதே மக்களால் காந்தியம் வீழ்க, காங் கிரஸ் அழிக, காந்தி ஒழிக என்கின்ற கூச்சல் களும், திரு. காந்தி அவர்கள் செல்லுகின்ற பக்கம் கருப்புக் கொடிகளும், அவர் பேசும் கூட்டங்களில் குழப்பங்களும் ஏற்படுவதும் சகஜமாகிவிட்டன.

    இவைகளையெல்லாம் பார்க்கும்போது அரசியல், விஷயமாய் பொது ஜனங் களுடைய அபிப்பிராயம் என்ன? கொள்கை என்ன? என்பதைக் கண்டு பிடிக்கவே முடியாமல் இருப்பதோடு அப்படி ஏதாவதொரு கொள்கை யாருக் காவது உண்டா? என்று சந்தேகிக்க வேண் டியதாகவும் இருக்கின்றது.  எது எப்படி யிருந்த போதிலும் திரு. காந்தி அவர்களின் உப்புச்சத்தியாக்கிரக கிளர்ச்சி ஆரம்பித்த காலத்திலேயே இக்கிளர்ச்சி மக்களுக்கோ. தேசத்திற்கோ சிறிதும் பயன்படாது என்றும், பயன்படாமல் போவதோடு அல்லாமல்.
    தேசத்தின் முற்போக்குக்கும் கஷ்டப்படும் மக்களின் விடுதலைக்கும் விரோதமானது என்றும், எவ்வளவோ தூரம் எடுத்துச் சொன்னோம்.  நாம் மாத்திரம் அல்லாமல் திரு. காந்தி அவர்களே இக்கிளர்ச்சி ஆரம் பிப்பதற்குக் காரணமே பதக்சிங் போன்ற வர்கள் காரியங்களை கெடுப்பதற்கும் ஒழிப்பதற்குமே என்று கருத்துப்பட நன்றாய் வெளிப்படையாக எடுத்துச் சொல்லியும் இருக்கின்றார்.

    போதாக்குறைக்கு அக்கம் பக்கத்து தேசத்தவர்களின் உண்மையான சமதர்மக் கொள்கையுடைய தேசத்தார் களும் திரு. காந்தி அவர்கள் ஏழைகளை வஞ்சித்துவிட்டார். சமதர்மக் கொள்கைகள் ஒழிக்கவே இக்காரியங்களை செய்கின்றார்.  திரு. காந்தி ஒழிய வேண்டும், காங்கிரஸ் அழிய வேண்டும் என்று ஆகாயம் முட்ட கூப்பாடு போட்டுக் கொண்டே இருந்தார் கள்.
    ஆனால், நமது தேசிய வீரர்கள் தேசபக்தர்கள் என்பவர்கள் ஒன்றையும் கவனியாமல் பலா பலனையும் உணராமல் விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் விழுவது போலவும், பந்தயம் கூறிக் கொண்டு பாறையில்  முட்டிக் கொள்வது போலவும். தலை கிறுகிறுத்து கண் தெரியாமல் கூத்தாடினார்கள்.  அதன் பயனாய்ச் சிறை சென்று வீரர்களாய் வாகைமாலை சூடி திரும்பி வந்தார்கள். அதன் பெருமைகளையும் அடைந்து கொண்டார்கள்.

    பிறகு இப்போது பகத்சிங் தூக்கிலிடப்படுவதைப் பார்த்து விட்டு காந்தியம் வீழ்க காங்கிரஸ் அழிக காந்தி ஒழிக என்று கூப்பாடு போடுகின்றார்கள். இதனால் என்ன பயன் ஏற்பட்டு விடும் நமக்கு விளங்கவில்லை.
    நிற்க, நம்மைப் பொறுத்தவரை நாம் உண்மையைச் சொல்ல வேண்டுமானால் பகத்சிங் அவர்கள் இந்தமாதிரி பொறுப்பும், கவலையும் அற்ற மூடமக்களும், மட மக்களும், பலாபலனை எதிர்பாராமல் எப்படியாவது தங்களுக்குக் கவுரவம் கிடைத்தால் போதும் என்கின்ற சுயநலமக் களும் உள்ள நாட்டில் வெகுகாலம் உயிருடன் இருந்து கொண்டு இவர்களது நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டு விநாடி தோறும் வேதனைப்பட்டு இவர் களது முட்டுக்கட்டைகளை அனுபவித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிலும் அவர்தம் உயிரைவிட்டு மறைய நேர்ந்தது. பகத்சிங் கிற்கு மெத்த சாந்தி என்றும், நன்மை என்றுமே கருதுகின்றோம். அந்தப் பேற்றை நாம் அடையமுடியவில்லையே என்றுதான் கவலைப்படுகின்றோம்.

    ஏனெனில் ஒரு மனிதன் தன் கட மையைச் செய்தானா? இல்லையா? என்பது தான் கேள்வியே தவிர, பலன் என்ன ஆச்சுது என்பது இங்கு நமது கேள்வி அல்ல.  ஆனாலும் காலமறிந்து, இடமறிந்து கடமையைச் செலுத்தவேண்டும் என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோமாயினும்  பகத்சிங் கொள்கைக்குக் காலமும், இடமும் நடப்பும் விரோதமாயில்லை என்றேச் சொல்லுவோம்.  ஆனால் அவர் தனது கொள்கையை நிறைவேற்றக் கைக் கொண்ட முறைகளில் சிறிது தவறு நேர்ந்து விட்டது என்பதாக நம் புத்திக்குத் தோன்றிய போதிலும் அவரது கொள்கை குற்ற முடையது என்று சொல்ல நாம் ஒருக்காலும் துணியவே மாட்டோம்.  அதுவேதான் உலகத்தின் சாந்த நிலைக் கொள்கையாகும்.

    நிற்க, உண்மையிலேயே பகத்சிங் அவர் கள் தனது கொள்கைகள் முழுவதையும் சரி என்று மனப்பூர்த்தியாய் நிச்சயித்துக் கொண்டு அதை நிறைவேற்ற அவர் நடந்து கொண்ட மாதிரிகள் தான் சரியான மார்க்கம் என்று அவர் முடிவும் செய்துகொண்டு இருப்பாரேயானால் கண்டிப்பாக அவர் நடந்து கொண்ட படியேதான் நடந்து இருக்க வேண்டிய தென்று நாம் சொல்லு வதோடு அந்தப்படி அவர் நடக்காமல் இருந்திருந்தால் அவர் யோக்கியமான மனிதரென்று சொல்லமுடி யாது என்றும் சொல்லுவோம்.

    ஆதலால் இப்போது நாம் அவரை ஓர் உண்மையான மனிதர் என்று சொல்லுவோம். இந்தியா வுக்கு பகத்சிங் கொள்கைதான் உண்மை யாக வேண்டியது என்பது நமது பலமான அபிப்பிராயமாகும்.  ஏனெனில் நாமறிந்த வரை திரு. பகத்சிங் கிற்கு சமதர்மமும், பொது உடைமையும் தான் அவரது கொள்கையென்று கருதி இருக்கின்றோம். இதற்கு உதாரணம் என்னவென்றால் திரு. பகத்சிங் பஞ்சாப் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க் கண்ட வாக்கியம் காணப்படுகிறது.

    அதாவது : பொது உடைமைகட்சி அதிகாரம் பெற்று ஜனங்களுக்குள் வித்தியாசமான அந்தஸ்துகள் இல்லாமல் இருக்கும்வரை எங்கள் யுத்தம் நடந்து கொண்டுத னிருக்கும்; எங்களைக் கொல்வதோடு இந்த யுத்தம் முடிந்து விடாது, அது பகிரங்கமாகவும் ரகசியமாகவும் நடந்துதான் தீரும் என்று குறிப்பிட்டிருக் கிறார்.  அன்றியும் அவர் கடவுள் விஷயத் திலோ எல்லாம் கடவுள் செயல் என்ப திலோ நம்பிக்கை இல்லாத தன்னம்பிக் கையுடைவர்  என்றும் கருதிக் கொண்டி ருக்கின்றோம்.

    ஆகவே இந்தக் கொள்கை யானது எந்தச் சட்டத்தின்படியும் குற்ற மாக்கக் கூடியது அல்லவென்றும் ஆவதா யிருந்தாலும் கூட யாரும் பயப்பட வேண் டியதில்லையென்றும் சொல்லுவோம்.  ஏனென்றால் அதனால் பொது மக்களுக்கு எவ்வித நஷ்டமோ, கஷ்டமோ ஏற்பட்டு விடாது என்று உறுதி கொண்டிருக்கின் றோம்.

    அந்தப்படி ஒரு சமயம் ஏதாவது ஏற்படுவதாயிருந்தாலும் நாம் நம் மனப் பூர்வமாய் யாதொரு தனி மனிதனிடமாவது, தனி வகுப்பினிடமாவது தனி தேசத்தானிட மாவது துவேஷம் இல்லாமலும், எந்த தனி மனிதனுடைய திரேகத்திற்கும், துன்பம் உண்டு பண்ணாமலும் நம்மை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் கஷ்டப்படுத்திக் கொள்ளவும் சம்மதிக்கின்றதான தியாகத் தன்மையுடன் இருந்துகொண்டு அக்கொள் கையை நிறைவேற்ற முயற்சிக்கின்றோம்.

    ஆதலால் நாம் எதற்கும் கவலைப்படவோ. பயப்படவோ வேண்டியதில்லை என்று சொல்லுகிறோம்.  இன்னும் விளக்கமாகச் சொல்லவேண்டுமானால் சாதாரணமாக நாம் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சொல்லுவதில் என்ன தத்துவம் அடங்கியி ருக்கின்றதோ அதுதான் மக்களின் ஏழ்மைத் தன்மை ஒழிய வேண்டுமென்பதிலும் அடங்கியிருகின்றது. தீண்டாமை ஒழிவதாய் இருந்தால் எப்படி மேல்ஜாதி, கீழ்ஜாதி தத்துவம் அழிந்துதான் ஆக வேண்டுமோ.  அதுபோலவேத்தான் ஏழ்மைத்தன்மை ஒழிவதாய் இருந்தால் முதலாளித்தன்மை, கூலிக்காரத்தன்மை ஒழிந்துதான் ஆக வேண்டும்.

    ஆகவே இந்த தன்மைகள் மறைபடுவதுதான் சமதர்மத் தன்மை பொது உடைமைத்தன்மை என்பவைகளே ஒழிய வேறில்லை. இந்த கொள்கைகள் தான் திரு. பகத்சிங் போன்றவர்களின் கொள்கைகள் ஆதலால் இக்கொள்கைகளை நியாய மானவை என்றும் அவசியமானவை என் றும் கருதுகின்ற ஒருவன் காங்கிரஸ் ஒழிக! காந்தியம் அழிக!! என்று சொல்லுவதில் நமக்கு ஆச்சரியமோ, குற்றமோ ஒன்றுமே யில்லை.  ஆனால் அந்தக் கொள்கைக் காரர்கள் காங்கிரசுக்கு ஜே. காந்திக்கு ஜே. என்று சொல்லுவதுதான் நமக்கு மிக ஆச்சரியமாய் இருக்கின்றது.

    திரு. காந்தி அவர்கள் என்றையதினம் கடவுள்தான் தன்னை நடத்துகின்றார் என்றும், வருணா சிரமந்தான் உலக நடப்புக்கு மேலான தென்றும், எல்லாம் கடவுள் செயல் என்றும் சொன்னாரோ அன்றே பார்ப்பனியத் திற்கும், காந்தியத்திற்கும் வித்தியாசமில்லை என்று கருதியதுடன் அத்தத்துவம் கொண்ட காங்கிரசு ஒழிந்தாலொழிய நாட்டுக்கு நன்மை இல்லையென்றும் கருதிவிட்டோம்.  ஆனால், அந்த உண்மை இன்றுதான் மக் களில் சிலராவது கண்டுபிடித்து காந்தியம் அழிக என்று சொல்லத்தக்க அறிவையும், துணிவையும் அடைந்திருக்கின்றார்கள்.  இது நமது கொள்கைகளுக்கு ஒரு பெரிய வெற்றியேயாகும்.

    திரு. பகத்சிங் தூக்கி லிடப்பட்டு உயிர் துறந்திருக்காவிட்டால் இந்த வெற்றி இவ்வளவு பிரபலத்தில் ஏற்படுத்துவதற்கு ஆதாரமே இருந் திருக்காது. அன்றியும் பகத்சிங்கைத் தூக்கிலிடாமல் இருந்திருந்தால் காந்தியத் திற்கும், இன்னமும் ஆக்கம் ஏற்பட்டு இருக்கும் என்று கூடச் சொல்லுவோம். சும்மா தானாகவோ நோய்கொண்டு அவஸ்தைப்பட்டு செத்துச் சாம்பலாகி இருக்கவேண்டிய பகத்சிங்குக்கு இந்திய மக்களுக்கு ஏன் உலக மக்களுக்கே உண்மையான சமத்துவமும், சாந்தியும் அளிக்கத்தக்க பாதையைக் காட்டுவதற்குப் பயன்படத் தக்கதாய் தனது உயிரை விட நேர்ந்தது.

    சாதாரணத்தில் வேறு யாரும் அடைய முடியாத பெரும்பேறு என்றே சொல்லி பகத்சிங்கை மனமார, வாயார, கையார பாராட்டுகின்றோம்!  பாராட்டு கின்றோம்!! பாராட்டுகின்றோம்!!!  இதே சமயத்தில் நமது அரசாங்கத்தாரையும் இனியும் இப்படிப்பட்ட உண்மையான எண்ணமுடைய வர்களாகப் பார்த்து மாகா ணத்திற்கு 4-பேர் வீதமாவது தூக்கி லிட வேண்டுமென்று மனமார வேண்டுகிறோம்.

    -------------------- தந்தை பெரியார் -"குடிஅரசு" - தலையங்கம் - 29.03.1931

    23.3.14

    ஹிந்துத்துவா: பி.ஜே.பி.யும் - அதிமுகவும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளே!

    ஹிந்துத்துவா: பி.ஜே.பி.யும் - அதிமுகவும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளே!

    ஹிந்து ராஜ்ஜியத்தை அமைத்தே தீருவோம் - இது பி.ஜே.பி.யின் குரல்! ராம ராஜ்ஜியத்தை உண்டாக்குவோம்- இதுவும் சங்பரிவார்களின் குரல்தான்!
    இது ஊருக்கும் உலகத்திற்கும் தெரிந்த ஒன்றே! இத்தகைய சக்தியை ஆட்சியில் அமர வைத்தால் நாடு என்னாவது? அதிகாரத்தை இந்தக் குரங்குகளின் கை களில் கொடுத்தால் சிறுபான்மை மக்களான பூமாலைகளின் கெதி என்னாவது? தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலைதான் என்ன?

    கூடாது  - கூடாது - இந்தியா மதச் சார் பற்ற ஆட்சியாயிற்றே! இந்திய அரசமைப் புச் சட்டத்தின் தொடக்கமே (Preamble) )  மதச் சார்பின்மையை (Secular) உறுதி படுத்துகிறது. அப்படி இருக்கும்போது இந்தப் பிஜேபி வகையறாக்கள் ஹிந்து ராஜ்ஜியம் பேசுகிறார்களே என்ற கேள்விக் கணைகள்  வெடித்துக் கிளம்புகின்றன.

    தேர்தல் நேரத்தில் அவர்கள் சமாளிக்கப் பார்த்தாலும் அவர்களின் ஆசான குரு பீடமான ஆர்.எஸ்.எஸோ ஆமாம் - ஹிந்துத்துவா தான் எங்கள் உயிர், உணர்வு - ஓட்டம் எல்லாமே! இதிலென்ன சந்தேகம் என்று சத்தம் போட்டே சொல்லுகிறது!

    அதன் விளைவு தான் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பயங்கரம்! அதைக் குற்றம் என்றோ தவறு என்றோ இன்று வரை அவர்கள் சொல்லத் தயாராக இல்லை.
    இன்னும் சொல்லப் போனால் அது இடிக்கப்பட்ட பொழுது எல்லோருக்கும் இனிப்பு வழங்கினார் அத்வானி என்று பிசினஸ் இந்தியா ஏட்டின் பிரபல பெண் செய்தியாளர் ருச்சிராகுப்தா லிபரான் ஆணையத்தின்முன் சாட்சியமே கூறினார்.

    அவர்கள் அப்பட்டமான ஆரிய குலத் தத்துவமான ஹிந்துத்துவாவில் கட்டுண்டு போனவர்கள் - அவர்கள் கண் விழிப்பது முதல் கடைசி நிமிடம் தூங்கும் வரை அதே நினைப்புதான் - அதே காரியம்தான்.

    அந்த அமைப்புடன் மறைமுகக் கூட்டு மறைமுகக் கூட்டு என்ற ஒரு கருத்து உலா வருகின்றதே - அந்த மறைமுகக் கூட்டு என்பது அ.இ.அ.தி.மு.க., தான் - அம்மை யார் ஜெயலலிதாதான்!

    அ.தி.மு.க.வுடன் வைத்திருப்பது தான் இயல்பான கூட்டு என்றுகூட வால்கிஷன் அத்வானி சொன்ன துண்டே! 2009 மக் களவைத் தேர்தலின்போது அப்பொழுது பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் எல்.கே. அத்வானி டில்லியில் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில் தேர்த லுக்குப் பிறகு அதிமுக எங்களை ஆதரிக்கும் என்றார். (தினகரன் 13.4.2009 பக்.1) அதே நிலைதானே இன்றும்!

    அதிலென்ன சந்தேகம்?  அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெய லலிதா அவர்களின் நெஞ்சில் நிறைந்து புனலாக பாய்ந்தோடுவதெல்லாம் அந்த ஹிந்துத்துவாதான் ஆம் ஹிந்துத்துவா தான்! சட்டப் பேரவையில் நான் பாப்பாத்தி! பாப்பாத்திதான்!! என்று பரப்புரை செய்தவராயிற்றே!

    அப்பொழுது அவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர்; இந்தியாவின் தலைநகர மான புதுடில்லியில் தேசிய ஒருமைப்பாடு மாநாடு - ஆட்சியோ வாஜ்பேயி தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி!

    அக்கூட்டத்தில் (23.11.1992) கலந்து கொண்ட தமிழக முதல் அமைச்சர் மாண்பு மிகு ஜெ, ஜெயலலிதா என்ன பேசினார்?

    விடுதலை சொன்னால் வேறுவிதமாக விமர்சிப்பார்கள்! அவாளின் தினமணி ஏடே (24.11.1992) முதல்வர் ஜெயலலிதாவின் உரையை வெளியிட்டதே! கரசேவையை ஜெய லலிதா வற்புறுத்துவார் என்று தலைப்பிட்டு தினமணி வெளியிட்ட செய்தி இதோ:

    அரசியல் சட்டத்தின்படி, பெரும் பான்மையினருக்குக் கிடைக்கும் சாதாரண உரிமைகளையும், சிறப்புரிமைகளையும் பாதிக்கும் வகையில் அரசியல் சரித்திர, சமூகஅமைப்புகளின் பின்னணியில் தங்கள் நலன்களை முன்னிறுத்திச் செயல்படுவது சிறுபான்மையினருக்கு ஏற்றது அல்ல. பெரும்பான்மையினரும், அவர்களுடைய உரிமைகளை சிறுபான் மையினரைப் போல் அனுபவிக்க அனும திக்க வேண்டும்.  அயோத்திப் பிரச் சினையில் இதனைத் தொடர்புபடுத்தி குறிப்பாகக் கூற வேண்டுமென்றால், உத்தரப் பிரதேச அரசு கையகப்படுத்திய இடத்தில் இந்துக்கள் விரும்பியபடி, கட்டுமானப் பணியை நிறைவேற்ற அனுமதிப்பதாகும்.   உத்தரப் பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித் துள்ளஆணைகளும்,  உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளும் ஒருவித மான சட்டச் சூழலை உருவாக்கியிருப்பதை நான் அறிவேன்.  இந்தச் சூழலில் உத்தரப் பிரதேச அரசு கையகப்படுத்திய இடத்தில், கரசேவையோ அல்லது வேறுவித நடவடிக் கையோ மேற்கொள்வது கடினமாக்கப்பட் டுள்ளது.  அந்த இடத்தில் கட்டுமானத்துக் குத் தடை இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொண்டால், கட்டுமானப் பணிக்குத் தடையாக உள்ளசட்டச் சிக்கல் களை அகற்றத் தேவையான நடவடிக் கைகளை மத்திய அரசும் உத்தரப்பிரதேச அரசும் மேற்கொண்டாக வேண்டும். கரசேவை நடைபெறுவதற்கு பொருத்த மான சூழ்நிலையை உருவாக்கத் தேவை யான முடிவை இந்த தேசிய ஒருமைப்பாட் டுக்குழு  எடுக்க வேண்டியுள்ளது.  கர சேவையை அனுமதிக்கும்படி நீதிமன்றங் களைஅணுகத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.   மிகவும் சுருக்கமாக என்னுடைய வேண்டு கோளைத் தெரிவிக்கிறேன்.  உத்தரப் பிரதேச அரசு கையகப்படுத்திய இடத்தில் கரசேவை நடைபெறத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் என்பது தினமணி வெளியிட்ட செய்தி. இது தமிழ் நாளேடு.

    இன்னொன்று ஆங்கில இதழ் - அது வும் அவாள் இதழே  - இந்துக் குடும்பத்துப் பிள்ளைதான் அது.

    ஃப்ரண்ட் லைன் (1.1.1993) வெளியிட் டது என்ன?

    “I am aware that the Supreme Court directions to the Uttar Pradesh Government and the pendency of the cases in the High Court  have created  a legal situation  making it difficult for the KarSewa”  v‹W«;  “This august body will, therefore, have to take a decision on creating a congenial atmosphere  for the conduct of the KarSewa.   All steps will have to be taken to move the Courts  to permit KarSewa”

    டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டிற்கு (3.12.1992) உத்தரப்பிரதேச மாநில விசுவ ஹிந்து பரிஷத் செயலாளர் குலாப்சிங் பரிகார் அளித்த பேட்டி இதோ!

    முதற் கட்டமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அ.இ.அ.தி.மு.க. வினரை தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுப்பி வைத்தார். மேலும் கரசேவைக்குரிய பல உதவிகளை செய்வதாக உறுதியும் அளித்தார் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா சொன்னதாக தெரிவிக்கப்பட்டுள்ளதே!

    இப்பொழுது இந்தப் பிரச்சினை பொது மேடைகளில் வெடித்துக் கிளம்பும் போது, பிரச்சினை பேருரு எடுக்கும் நிலையில் பூனைபோல ஞாவ்! ஞாவ் என்று கீச்சிடுவதால் பயன் இல்லை.

    அது உண்மையில்லையென்றால் அப்பொழுதேயல்லவா மறுத்திருக்க வேண் டும்? ஏன் மறுக்கவில்லை? சொன்னது உண்மை - அதுவும் உள்ளத்தின் வேரிலி ருந்து வெளிப்பட்ட உவப்பான கருத்தா யிற்றே - இப்பொழுது அது வலி கொடுக் கிறது என்றவுடன் சமாளிக்கப் பார்க்கிறார்! அதற்கான வாய்ப்பே இல்லை - காரணம் கெட்டியாக சான்றுகள் அல்லவா கட்டிப் பிடிக்கின்றன.

    அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் அம்மையார் அளித்த பேட்டி (29.7.2003) என்ன தெரியுமா?

    கேள்வி; அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை ஆதரிக்கிறீர்களா?

    முதல் அமைச்சர் ஜெயலலிதா: ஆமாம் ஆதரிக்கிறேன். இந்தியாவில் ஒரு ராமர் கோயிலைக் கட்ட முடியவில்லை யென்றால் வேறு எங்கே கட்ட முடியும்? என்றாரே - இத்தகையவர் ஹிந்துத்துவா வாதியல்லாமல் வேறு என்னவாம்?

    சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் 150 ஆண்டுகளாகத் தமிழ் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் கனவுத் திட்டம்! திராவிட இயக்கம் தீவிரமாகக் குரல் கொடுத்து வந் திருக்கிறது அய்யா, அண்ணா, எம்.ஜி.ஆர். மட்டுமல்ல காங்கிரஸ்காரரான கோசல்ராம் போன்றவர்கள் குரல் கொடுத்த பெருந்திட்டம்.

    அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் வாராது வந்த மாமணியாக வந்த தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு அவர்கள். கப்பல்துறை அமைச்சராக வந்த நிலையில் ரூ.2427 கோடியில் திட்டம் உருவாக்கப்பட்டது.

    1999 செப்டம்பர் நாடாளுமன்ற தேர்தல், 2001 மே 10இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல், 2004 மே 10 நாடாளுமன்ற தேர்தல்களில் அண்ணா திமுகவின் மூன்று தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திரத் திட்டம் வந்தே தீர வேண்டும் என்று வாய் நீளம் காட்டியவர் இப்பொழுது கவிழ்த்து விட்டாரே!
    எல்லா மதத்தினரையும் சமமாக நடத்துவதுதான் உண்மையான மதச் சார்பின்மை; ராமர் பாலம் குறித்து மத்திய அரசு முரண்பாடான தகவல்களைத் தருகிறது. ராமர் பாலத்தைத் தகர்த்து மதக் கலவரங்கள் ஏற்படுத்த மத்திய அரசு எடுக்கும் முயற்சியைக் கழகம் தடுக்கும்

    (Dr. நமது எம்.ஜி.ஆர். நாள்; 23.10.2008) என்று தட்டைத் திருப்பிப் போட்டாரே!
    மதச் சார்பின்மை என்றால் அரசுக்கும் மதத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று தானே பொருளே தவிர, எல்லா மதத்தினரையும் சமமாக நடத்தும் அரசியல் பூசாரி வேலை அல்ல!

    முதலில் ராமர் பாலத்தை இடிக்க லாமா? இந்துக்களின் மனதை  புண்படுத்த லாமா? (அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடான Dr. நமது எம்.ஜி.ஆர். 26.7.2008) என்று கூறி உச்சநீதிமன்றம் சென்று தமிழ்நாட்டை வளப்படுத்தும் திட்டத்தை முடக்கிய துரோகத்தை என்ன சொல்ல! ராமன் பாலத்தைத் தேசிய நினைவுச் சின்ன மாக அறிவிக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம் எழுதினார் (28.3.2012).

    ராமன் பாலம் என்று பிஜேபி சொல்லு வதையே எதிரொலிக்கும் இவர் பிஜேபி என்னும் ஹிந்துத்துவாவின் இன்னொரு குழல் துப்பாக்கி தானே!
    தலையை சுவரில் முட்டிக் கொள்ள வேண்டிய கொடுமை என்னவென்றால் கட்சியின் பெயரிலும், கொடியிலும் இடம் பெற்றுள்ள காலமெல்லாம் இராமனையும், இராமாயணத்தையும் தோலுரித்துத் தொங்க விட்ட தூய இனவுணர்வுத் தலைவரான அண்ணாவை இதைவிட வேறு வகையில் எப்படி கொச்சைப்படுத்த முடியும்?

    அ.தி.மு.க.வின் கட்சிக் கொடியில் பொறிக்கப்பட்டுள்ள அண்ணாவின் உருவம் காற்றில் பறப்பது வெறும் உருவமல்ல - அண்ணாவின் கொள்கை காற்றில் பறப்பதாகத் தான் பொருள்!

    ஆர்.எஸ்.எஸ். காரர்கள் எப்படி எப்படியெல்லாம் வாதாடுவார்களோ அதே சொற்கள் சுத்தமாக, அட்சரம் பிறழாமல் பேசும் பிரபல பெண் பிரசாரகர் ஆகி விட்டார் ஜெயலலிதா.

    தான் உருவாக்கிய ராமர் பாலத்தை ராமபிரான் தானே தகர்த்தார் என்று ராமாயணத்தில் எங்கும் கூறப்படவில்லை. ராமபிரானைப் பற்றிய அனைத்து அம்சங் களையும் மக்கள் நம்பலாம். ஆனால் ராமர் பாலம் மட்டும் நம்பிக்கைகளுக்கு அப்பாற் பட்டதா? (கம்பராமாயணம் யுத்தகண்டம் 171ஆவது பாடல் மரக்கல என்று தொடங் கும் பாடலில் ராமன் பாலத்தை இடித்தான் என்று உள்ளதே!)

    காஷ்மீரில் ஹஸ்ரத்பால் திருத்தலத்தில் திருடப்பட்ட புனிதப் பொருள் மீட்கப்பட் டது போன்றும், வின்ஸ்கோட் திரைப்படம் கிறிஸ்துவர்களின் மனதைப் புண்படுத்து கிறது எனத் தடை செய்யப்பட்டது போன் றும், ராமர் பாலம் நம்பிக்கையையும், நம்ப வேண்டும்.

    இறைத் தூதர் முகம்மது நபிகளின் புனித பொருள் மதிப்புக்குரியது என்றும், கிறிஸ் துவப் பெரு மக்களின் விசுவாச விஷயங் களை மதித்துப் போற்றுவது போன்றே இந்துக்களின் இறை நம்பிக்கையையும், புராதனச் சின்னங்களையும் மதிக்கிறேன்.

    ராமர் பாலம் குறித்து மத்திய அரசு முரண்பாடான தகவல்களைத் தருகின்றது. ராமர் பாலத்தைத் தகர்த்து மதக் கலவரங் கள் ஏற்படுத்த மத்திய அரசு எடுக்கும் முயற்சியைக் கழகம் தடுக்கும்  (ஞிக்ஷீ. நமது எம்.ஜி.ஆர். நாள்: 26.7.2008).
    இப்படி சொல்லுவது இந்து முன்னணி ராம. கோபாலனோ, விசுவ ஹிந்து பரிஷத் பிரவின் தொகாடியாவோ அல்ல! சாட்சாத் அண்ணா பெயரை சொல்லும் அ.இ.அ.தி. மு.க.வின் பொதுச் செயலாளர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதாதான்!

    அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டு திராவிட தத்துவ இனச்சுட்டு முகமூடியையும் அணிந்து கொண்டு ஆரியம் உள்ளே புகுந்து விட்டதன் உறுமல் சத்தம் இங்கு கேட்கவில்லையா?

    அண்ணா திமுகவின் அதிகாரப் பூர்வ நாளேட்டில் பூணூலின் தத்துவம் பற்றி பூரிப்புடன் எழுதப்படுகிறதே! -  மனு தர்மத்தின் மாண்பு குறித்து மார் தட்டப் படுகிறதே!  (நமது எம்.ஜி.ஆர். 13.3.2012 பக்.7) அதுவும் பார்ப்பன வாலிபன் ஒருவன் பூணூலைக் கையில் ஆணவத்துடன் பிடிப்பது போல காட்டிக் கொக்கரிக்கிறதே அந்த அண்ணா திமுக ஏடு!

    கருணாநிதியின் ஆட்சியை அகற்ற சித்ரா பவுர்ணமி அன்று தீபம் ஏற்றுங்கள் என்று தம் கட்சியினருக்கு தோழர்களுக்கு அறிக்கை வெளியிடுவது (ஞிக்ஷீ. நமது எம்.ஜி.ஆர். 9.11.2008) அரசியலா - அரசியலின் பெயரில் ஊடுருவிய ஆரியமா - ஹிந்துத்துவமா?

    குஜராத்தில் பி.ஜே.பி. மோடி முதல் அமைச்சர் பதவி பிரமாணம் எடுத்தால் இங்கிருந்து ஜெயலலிதா அம்மையார் தனி விமானம் மூலம் பறந்து செல்கிறார் - இங்கே ஜெயலலிதா பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டால் நரேந்திரபாய் தாமோதர தாஸ் மோடி தனி விமானத்தில் பறந்து வருகிறாரே - அது எப்படி?

    போயஸ் தோட்டத்துக்கு மோடியை அழைத்து நாற்பது வகை உணவால் உபசரிக்கிறார் - உங்கள் வெற்றி ஹிந்து இந்தியாவின் வெற்றி! என்று (உணர்வு 25.6.2008) பேரிகைகொட்டி அழைக்கிறாரே - இந்த உணர்வுக்கு என்ன பெயர்? இப்பொழுது கட்டுரையின் தலைப்பைப் பாருங்கள் - அர்த்தம் புரியும்!


    முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு:
    ஜெயலலிதாவின் கருத்தென்ன?
    இஸ்லாமியர்களுக்கு ஆந்திர மாநிலத்தில் ஆட்சி செய்கிற காங்கிரஸ் முஸ்லிம்கள் மட்டும் சிறுபான்மையினர் மட்டுமல்ல; கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்; பார்சிகள் இருக்கிறார்கள்; புத்த மதத்தினர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் சமமாக இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு தனி ஒதுக்கீடு அளித்தால் நாளை கிறிஸ்தவர்களும் இடஒதுக்கீடு கேட்பார்கள். அப்புறம் மற்ற சிறுபான்மையினரும் கேட்பார்கள். எனவே இவ்வாறு இடஒதுக்கீடு அளிப்பது இயலாத ஒன்றாகும். அரசியல் சட்டத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் ஏற்கெனவே பல சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள். பெரும்பான்மை சமுகத்தினர் அந்த சலுகைகளை யெல்லாம் அனுபவிக்கவில்லை என்று பதில் கூறி சிறுபான்மை மக்களான இஸ் லாமிய சமுதாயத்துக்கு எதிரான தனது நச்சுக் கருத்தை வெளியிட்டார் ஜெயலலிதா. (தீக்கதிர் 23.7.2004). இது ஆர்.எஸ். எஸின் அப்பட்டமான குரல் அல்லவா!

    சோ  அடையாளம் காட்டுகிறார்
    திராவிடப் பாரம்பரியம் என்றால் என்ன பொருள் என்பது அந்தப் பாரம்பரியத்தினர் வெளிப்படையாக நம்பாத தெய்வத்திற்குத்தான் வெளிச்சம். அப்படி ஒரு விளக்க முடியாத பாரம்பரியமுள்ள இரண்டு அரசியல் கட்சிகளில், ஒன்றுக்குத் தலைமையேற்ற ஜெயலலிதா யார்? அந்தப் பொருளற்ற பாரம்பரியத்திற்குச் சற்றும் சம்பந்தம் இல்லாதவர். அந்த ஒரு பாரம்பரியத்தினால் எந்த ஒரு சமூகம் மிகக் கடுமையாகவும், கேவலமாகவும் எதிர்க்கப்பட்டதோ அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர். கோயில், அர்ச்சனை, பிரசாதம் இவற்றில் நம்பிக்கையானவர் (துக்ளக் 21.9.2005)
    இதன் மூலம் தெரிவது என்ன? ஜெயலலிதா திராவிடர் இயக்கத்துக்குச் சம்பந்தமற்றவர் அதற்கு நேர் எதிரான பார்ப்பன சமூகச் சிந்தனையும் நம்பிக்கையும் உள்ளவர் என்று இன்னொரு பார்ப்பனரான திருவாளர் சோ ராமசாமி நற்சான்று கூறுகிறார். சுருக்கமாகக் கூற வேண்டுமானால் பி.ஜே.பி. என்னும் ஹிந்துத்துவாவுக்குப் பொருத்தமானவர் என்று சொல்லாமல் சொல்லுகிறாரா இல்லையா?
    -----------------------------------------------------------------------------------------------------------------------------
    ------------------------------ மின்சாரம் அவர்கள் 22-03-2014 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
    Read more: http://viduthalai.in/page-1/77354.html#ixzz2wjvggbP7