Search This Blog

28.4.14

பெரியார் பாதையில் செல்லுங்கள்! - புரட்சிக்கவிஞர்


13 ஆண்டுகளுக்கு முன், 1957 ஆம் ஆண்டு பிராமணாள் உணவு விடுதி களுக்கு எதிராக தந்தை பெரியார் அவர்கள் நடத்திய சாதி ஒழிப்புப் போராட்டத் தீ  தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம், பட்டி தொட்டியெல்லாம் கொழுந்து விட்டு எரிந்த நேரம். இந்தப் பின்ன ணியில் 23.6.57 அன்று குடந்தையில் நடை பெற்ற திராவிடர் மாணவர் மாநாட்டில் புரட்சிக்கவிஞர் ஆற்றிய வீர உரையின் பகுதிகள் இவை:

இப்போது பார்ப்பனர் உணவு விடுதிகளில் உண்ணக்கூடாது என்று பெரியார் அவர்கள் சொல்லுகிறார்கள் என்றால் இதில் மாணவர்கள் முற்றிலும் கலந்து கொள்ளலாம். இதில் பங்கேற்கலாம். அரசியலாரை எதிர்த்து நடத்தும் போராட்டத்தில் மக்கள் மட்டுமே கலக்க வேண்டும். எந்தப் பகுதியில் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று பெரியார் அவர்கள் கூறுகிறார்களோ அதில் கலந்து கொள்ளக்கூடாது. நம் முடைய சீர்திருத்தப் போராட்டத்திற்கு வேண்டிய கிளர்ச்சிகள் உங்களிடமே உள்ளன. எத்தனை முயற்சிகள், எந்தெந்த முயற்சிகள் உண்டோ அத்தனை முயற்சிகளையும் கையாள வேண்டும்.

இரண்டு தண்ணீர்ப் பானைகள் வைக்கப்பட்டு ஒன்று நமக்கென்றும், மற்றொன்று பார்ப்பானுக்கு என்றும் கூறப்பட்டால் சும்மா விடலாமா? இது போன்ற சின்ன தகராறுக்கெல்லாம்கூட பெரியாரிடம் செல்லலாமா? நாமே இதற்கு முடிவு கட்ட வேண்டும்.

பெரியார் பாதையில் செல்லுங்கள்: ஆகையினால் தோழர்களே! அரசியல் பகுதி எது, சமூகப்பகுதி எது என்பதை நீங்கள் நன்கு அலசிப் பார்த்துப் போராட வேண்டும். இப்படிப்பட்ட சமுதாயத் துறையில் பெரியாருக்கு முப் பது ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உண்டு. நீங்கள் அவர் வழி நிற்க வேண் டும். அவர் பாதையில் செல்ல வேண்டும்.

தியாகத்தால் வளர்ந்த இயக்கம்: சிதம்பரம் பக்கம் பாதூர் என்ற ஊரில் ராஜன் என்ற வாலிபர் இருந்தார். இந்த இயக்கத்தில் ஆழ்ந்த பற்றுள்ளவர். அந்த ஊரிலே நம் இயக்கத்தின் கூட்டம் ஒன்றைப் போட்டார். அதற்கு அந்த ஊரில் உள்ளவர்கள் என்ன பரிசு கொடுத்தார்கள் தெரியுமா? நீங்கள் சற்றுக் கவனமாகக் கேளுங்கள். அவருடைய மனைவியைத் தூக்கிச் சென்றனர். அவரையும் அடித்து ஊரை விட்டு விரட்டினர். அவருடைய வீட்டைப் பிடுங்கிக் கொண்டு அவரு டையது அல்ல என்று சொல்லிவிட்டனர். தாய், பாட்டி முதலியோரை ஊருக்கு அனுப்பிவிட்டனர். கடைசியிலே மானத் திற்கு இழுக்கு வந்ததை எண்ணி எண்ணி ஏங்கிய அந்தத் தமிழன், தஞ்சைக்கருகில் உள்ள கல்லூரிக்குப் பக்கத்தில் தூக்கு போட்டுக் கொண்டு மாண்டார். அதைப் போல பல உத்தமர்கள் தியாகம் செய்து வளர்த்த இயக்கம் இது.

எதிரியின் பெரும் சதி: சிதம்பரத்தில் சகஜானந்தாவின் பள்ளியில் ஒரு சமயம் ஆண்டு விழா. சகஜானந்தாவுக்கும் சிதம்பரம் தீட்சதர்களுக்கும் பகை நிறைய உண்டு. சிதம்பரம் தண்டபாணி பிள்ளை பெரியார் வந்து ஆண்டு விழாவில் கலந்து கொள்ள பெரிதும் விரும்பினார்கள். பெரியார் அவர்களும் வர ஒப்புக் கொண்டார். ஆனால் சனாதனிகளும் தீட்சதர்களும் எதிர்ப்பை பலமாக ஆரம்பித்துவிட்டார்கள்.

அன்றைய தினம் கலகம் செய்ய ஆயிரக்கணக்கில் திரண்டு விட்டனர். ஒவ்வொருவனிடமும் கல், தடி, கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தன. அன்று பெரியாரை ஒழித்துவிடுவது என்றே திட்டமிட்டுவிட்டனர். நிலைமை மிகமிக பயங்கரமாக இருந்தது.

நாங்கள் பத்துப்பேர்கள் போயிருந்தோம். இந்நிலையைப் பார்த்துவிட்டு பயந்தே போனோம். உடனே நாங்கள் ரயிலடிக்குப் போய் பெரியார் வந்ததும் திரும்பப் போகச் சொல்லி விடுவது என்று முடிவு கட்டிக்கொண்டு ரயிலடிக்குப் போனோம். பெரியார் வராமலேயே இருந்தால் நல்லது என்று எண்ணினோம்.
பெரியாரின் ஆண்மையும் வீரமும்: ஆனால் வருகிறேன் என்று கூறியிருந்த வண்டியில் வந்திறங்கினார். உள்ள நிலைமையைக் கூறினோம். 

கேட்டுக்கொண்டே விடு, விடு என்று ஊருக்குள் போனார். போக வேண்டாம். ஆபத்து, ஆபத்து என்று நாங்கள் கூறியதைக் கேட்டுக் கொண்டே போனார். எந்த வழியில் போகக்கூடாது என்று நினைத்தோமோ அந்த வழியில் போனார். போய் டக் என்று நின்றார். அதுவும் எந்த இடம்? எந்த இடத்தில் நிற்கக்கூடாது என்று பயந்தோமோ அதே இடம். போலிகளின் கூட்டம் எதிர்ப்பை ஆரம் பித்துவிட்டது. போலீஸ்காரர்களின் ஆயுதம் தாங்கிய கரங்கள் உயர்ந்து விட் டன. இன்று என்ன செய்யப் போகிறோம்? என்று எங்கள் கூட்டில் உயிர் இல்லை.

எதிரிகளின் மனத்தையும் ஈர்த்த பேச்சு: இந்த நிலையில் பேசவும் ஆரம் பித்துவிட்டார்.

எப்படிப்பட்ட பேச்சு? பாமரர் முதல் அனைவருக்கும் புரியும் முறையில் அழகாக - உள்ளம் கவரும் விதத்தில் பேசினார்.

உங்கப் பையன் ஒருவன் படித்திருக்கிறான். பார்ப்பனரின் பையன் ஒருவன் படித்திருக்கிறான். நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? உங்கள் பையனுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று தானே? ஆனால் இன்றைய பார்ப்பன ஆதிக்கத்தில் யாருக்குக் கிடைக்கும்? இதைத்தானே கூறுகிறேன் என்றார். உயர்ந்த கரங்கள் தாழ்ந்தன. அனைவரின் மனமும் சிந்திக்க ஆரம்பித்தன. 

கடைசியில் மூடநம்பிக்கையின் பிறப்பிடமான இந்த ஊர் ஆலயத்திலே உள்ள நடராசன் சிலையைக் கொண்டு வந்து திருப்பிப் போட்டு வேட்டி துவைப்பேன் என்றார். எதிர்த்த கரங்கள் திருப்பி தட்டுதலின் மூலம் ஓசையைக் கிளப்பின.
அன்று சாகடிக்கப்படவிருந்த பெரி யார், நடராசன் கோவில் துவம்சமாக்கப் பட வேண்டும் என்று பெரியார் அன்று கட்டளையிட்டிருப்பாரேயானால் நொடியிலே ஆகியிருக்கும். அப்படிப் பெரியார் அவர்கள் பாடுபட்டு முன்னுக்குக் கொண்டு வந்த இயக்கம் நிலையானது. இயக்கம் மக்களுக்கு உண்மையாகப்பாடுபடுவது - எந்த இயக்கம், சமுதாயம் முன்னேற உண் மையாக உழைக்கிறது என்பதை உணர்ந்து நீங்கள் சேரவேண்டும்.

தமிழ் மாணவர்கள் எல்லோரும் ஒள்றுமையாக  இருக்க வேண்டும். பார்ப் பனரிடம் ஏமாந்துவிடக்கூடாது. எஞ் ஞான்றும் விழிப்போடு இருக்கவேண் டும். பெரியார் சொல்லுகின்ற அறிவுரை களை அன்றாடம் கடைப்பிடிக்க வேண் டும்.

---------------------------- "விடுதலை" இதழ்: 21.4.1970

25 comments:

தமிழ் ஓவியா said...


தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்வி வழங்கியது நீதிக்கட்சியே



சுமார் 200 ஆண்டுகளுக்குமுன்பு நமது நாடு ஆங்கில ஆட்சிக்கு உட்பட்டு இருந் தது அப்போது நம் மக்களுக்கு கல்வி வழங்கச் செய்தார்கள் அப்போது பார்ப் பன ஜாதி மேலாதிக்கம் இருந்தது அவர் கள் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஜாதிகளுக்கு ஜென்ம விரோதிகளாகவே இருந்தனர். 1821, 1855, ஆகிய ஆண்டுகளில் கல்வி வழங்க உத்தரவிட்டனர். ஆனால் பல்கலைக் கழக மேலாண்மைக் கழக உறுப்பினர் பதவிகளை விலக இதற்காக எதிர்ப்புத் தெரிவித்தும் தாழ்த்தப்பட்டவர் களுக்கு கல்வி வழங்கக் கூடாது என்று தடுத்து விட்டனர்.

1923ஆம் வருடம் வரை சுமார் 100 ஆண்டுகள் தடுத்துவிட்டார்கள்.

சுமார் 102 ஆண்டுகளுக்கு முன்பு நம் மக்கள் கல்வி பெற மிகவும் தொல்லைப் பட்டார்கள் தங்கும் வசதி உணவு வசதி முறையாகக் கிடைக்கவில்லை. சென்னை யில் டாக்டர் சி. நடேசனார் அவர்கள் நிறைந்த மனதுடன் வெளியூரில் இருந்து வந்து படிக்கும் நம் மாணவர்களுக்கு பெரிதும் முயன்று சென்னை அக்பர் சாயபு தெருவில் பங்களா போன்ற பெரிய வீடு வாடகைக்குப் பிடித்து பல பெரிய மனிதர்கள் நன்கொடை உதவியுடனும் படிக்கும் வசதியை தொடர்ந்து செய்தார்.

10.11.1912இல் சென்னையில் 500 மாணவர்கள் உறுப்பினர்களாகக் கொண்ட திராவிடர் சங்கம் அமைத்தார் டாக்டர் சி. நடேசனார் அவருக்கு உதவியாக டாக்டர் டி.எம். நாயர் சர்.பி. தியாகராயர் போன்ற பல வள்ளல்கள் பெரும் வணிகர்கள் லட்சக்கணக்கில் உதவினார்கள்.

20.11.1916இல் தென் இந்திய நல உரிமைச் சங்கம் தொடங்கினார் சர்.பி. தியாகராயர்.

17.12.1916இல் நீதிக்கட்சி பிராமணரல் லாதார் அறிக்கை வெளியிட்டார். அது பற்றி பல மாநடுகள் நடத்தினார். நாடெங் கும் ஆதரவு பெருகும் சுமார் 4 ஆண்டு களில் நீதிக்கட்சிக்கு ஆதரவு பெருகியது.

17.12.1920இல் நடைபெற்ற மாகாண தேர்தலில் சென்னை நீதிக்கட்சி வெற்றி பெற்றது கடலூர் சுப்பராயர் பெரியார் அவர்களை கவர்னரிடம் பரிந்துரை செய்து பிரதமர் பதவியில் சர்.பி. தியாக ராயர் நியமித்தார்.

12.01.1921 சென்னை சட்டசபை நீதிக் கட்சி மந்திரி சபை கூடியது. இந்தியாவி லேயே முதல் முதல் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கும் சட்டம் நிறை வேறியது.

இடஒதுக்கீடு பதவி உயர்விலும் வழங்க சட்டம் நிறைவேறியது. ஆனால் பார்ப்பனர் சூழ்ச்சியால் 7 ஆண்டுகள் கவர்னரிடம் சொல்லி நிறுத்தி வைக்கப் பட் டது. பின்பு 744 13.9.1928இல் சர் முத் தைய்யா முதலியார் பெரு முயற்சியில் இடஒதுக்கீடு சட்டம் வந்தது. நீதிக்கட்சி ஆட்சியில் அடுத்து வந்த பிரதமர் பனகல் அரசர் பல நல்ல சட்டங்களை மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றினார். அதிலே ஒன்று தாழ்த்தப்பட்டோருக்கு கட்டாயமாக பள்ளியில் சேர்த்து கல்வி வழங்கும் சட்டம் நீதிக்கட்சி ஆட்சியில் மிகவும் பெரு முயற்சியுடன் அரசாணை எண் 376 9.3.1923இல் சுமார் 100 ஆண்டு களுக்குப்பிறகு தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது வரலாற்றில் சிறப்புடையது.

28.7.1929 அன்று சென்னை சட்ட சபையின் டாக்டர் சுப்பராயன் அவர்கள் நீதிக்கட்சி மந்திரி சபையில் கே.வி. சாமி அவர்கள் உறுப்பினர் கேள்வி பள்ளி கள் 1921 முதல் 1928 வரை இந்த அரசு புதிதாகத் தொடங்கிய பள்ளிகள் எத்தனை 19095 என்று கூறப்பட்டுள்ளது. நீதிக்கட்சி ஆட்சியில்லாதிருந்தால் நமக்கு படிப்பேது? அ. இனியன், பத்மநாதன், ஈரோடு

Read more: http://viduthalai.in/page7/79281.html#ixzz30B0Pi0iC

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் பிஜேபி கூட்டணியில் பெண் வேட்பாளர் இடம் பெறாதது ஏன்?


கேள்வி: எந்தத் தேர்தலுக்கும் இல்லாத வித்தியாசம் இந்தத் தேர்தலில் என்ன? - கு. வைஜெயந்தி, குன்னூர்

பதில்: (1) அகில இந்திய அளவில் பச்சையான வகையில் மதவெறிப் பேச்சு.
2) மாநில வகையில், ஆளுங் கட்சியால் பகிரங்கமாகவே பணப்பட்டுவாடா வாக்காளர்களுக்கு நடந்தது.

கேள்வி : மின்வெட்டுக்குக் காரணம் சதி என்கிறாரே முதல் அமைச்சர்? - மு.வே. ராசன், கே.கே. நகர் சென்னை

பதில்: சதி என்றால் கண்டுபிடிக்க வேண்டிய கடமை அவருடையதுதானே! சொல்லி பல நாள்கள் ஆகி விட்டதே! இதுவரை கண்டுபிடிக்காதது - ஏன்?

கேள்வி: வளர்ச்சி என்ற பெயரால் இந்துத்துவாவை அரங்கேற்றுவதுதான் பிஜேபியின் திட்டமா? - ம. சுரேஷ்குமார்,

பதில்: ஆமென்! ஆம் என்க!!

கேள்வி: கும்பகர்ணன் சதா தூங்கிக்கொண்டே இருப்பான் என்பதெல்லாம் அறிவுக்குப் பொருந்தக் கூடியதுதானா? - வா. மணிமாறன், வேடந்தாங்கல்

பதில்: தமிழர்களை - திராவிடர்களை இழிவுபடுத்த இப்படியெல்லாம் புராண, இதிகாசப் பாத்திரங்கள் பலவற்றிலும் செய்துள்ளார்கள்!

கேள்வி: வாசகர்களைக் குழப்புகிறேன் என்று சொல்லி திருவாளர் சோ ராமசாமி தலையங்கத்தில் குறிப்பிடுகிறாரே?

பதில்: குழப்பத்தின் மறுபெயர் தான் நண்பர் சோ என்ற ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர்!

கேள்வி: அய்.நா. விசாரணைக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று ராஜபக்சே கூறியுள்ளதுபற்றி... - க. தமிழழகன், திட்டச்சேரி

பதில்: அய்.நா.வின் மூலம் அமெரிக்கா போனற நாடுகள் உலக நாடுகளில் இனப்படுகொலையை எதிர்த்து பொருளாதாரத் தடையை உருவாக்கிட முன் வர வேண்டும்; உலக நாடுகளை அலட்சியப்படுத்தி விட்டு சுண்டைக்காய் இலங்கை, சீனா, பாகிஸ்தானை நம்பியே வாழ்ந்துவிட முடியாது என்பதை உணர்த்த சர்வதேச நாடுகளும் அய்.நா.வும் உலகறியச் செய்ய வேண்டும்!

கேள்வி : தாங்கள் தேர்தல் பரப்புரையில் சொன்ன கி டீம் ஙி டீம் எல்லோர் வாயிலும் புகுந்து புறப்பட்டு வந்தது தங்களுக்குத் தெரியுமா? - அ.கோ. முகிலன், அடையாறு சென்னை-20

பதில்: மிக்க நன்றி; இரண்டும் இரண்டும் நான்கு என்பது யார் கூட்டினாலும் ஒரே விடை தானே! அதுபோலத்தான்!

கேள்வி : மூன்றாவது அணி என்ற ஒன்று இல்லாதபோது மதச்சார்பற்ற தன்மை என்று வருகிறபோது காங்கிரஸ்தானே அகில இந்திய ரீதியில் தலைமை தாங்க முடியும்? - அ. முபாரக், நீடூர்

பதில்: பொறுத்திருந்து பார்ப்போம்!

கேள்வி: பி.ஜே.பி. தலைமையில் தமிழ்நாட்டில் போட்டியிடும் கட்சிகள் பெண்களை வேட்பாளராக நிறுத்தவில்லையே? (சிதம்பரம் தொகுதி ஒரு விபத்து) - சீனு. வளர்மதி, திண்டிவனம்

பதில்: ஆர்.எஸ்.எஸ். தத்துவத்தை அமுலாக்க முனைந்துள்ளது என்பதே உண்மை!

கேள்வி: மின்சாரம், குடிநீர் என்பவை அரசியல் பிரச்சினையாக்கப்படுவது சரியா? - வி. முரளி, சென்னை-40

பதில்: அரசியல் என்பது மக்களின் தேவை அத்தனையையும் உள்ளடக்கியது தானே! இவை இரண்டும் முக்கிய வாழ்வாதாரம் அல்லவா?

Read more: http://viduthalai.in/page8/79283.html#ixzz30B0flqFH

தமிழ் ஓவியா said...


உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் மொழிபெயர்ப்பு


கீழ் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்ட மாணவர்கள் வசதிக்காக, உச்சநீதிமன்றத் தின் முக்கிய தீர்ப்பு விவரங்கள், பொது மக்கள், மாண வர்கள் படிப்பதற்கு வசதிக் காக, தமிழில் மொழி பெயர்த்து வெளியிட, அம்பேத்கர் சட்ட பல்கலை. முடி வெடுத்துள்ளது.

புதிய தீர்ப்புகள்: சென்னையில் செயல்பட்டு வரும், அம்பேத்கர் சட்ட பல்கலை.யின் கீழ், தமிழகம் முழுவ தும், ஏழு, அரசு சட்ட கல்லூரிகள் உள்ளன. உச்ச நீதிமன்றம், தினசரி புதிய தீர்ப்புகளை வழங்கி வருகிறது. அவற்றை, சட்டக் கல்லூரி மாணவர்கள் முதல், கீழ் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் என, அனைத்துத் தரப்பினரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. நீதிமன்றங்களில், காணொலி காட்சி வசதி வந் துள்ள நிலையில், கல்லூரி களிலும், பல வசதிகளை ஏற்படுத்த, சட்ட பல்கலை. நிர்வாகம் முடிவெடுத்துள் ளது.

இதுகுறித்து, அம்பேத்கர் சட்ட பல்கலை. துணைவேந்தர் வணங்காமுடி கூறிய தாவது: தமிழகம் முழுவ தும், 10 ஆயிரம் மாணவர்கள், சட்டக் கல்லூரி, சட்ட பல்கலை.யில் இளங்கலை, முது கலை, முனைவர் படிப்புகளில் சேர்ந் துள்ளனர். குறிப்பாக, பி.காம்., - பி.எல்., படிப்பிற்கு வரவேற்பு உள்ளது. பல்கலை. யில் படிக்கும் முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கு, அவ்வப் போது, உச்சநீதிமன்றம் மற்றும் பிற நீதிமன்றங்களின் நீதிபதிகள், சிறப்பு வகுப்பு எடுக்கின்றனர்.

இதை, சட்டக் கல்லூரி மாணவர்களும் பார்க்க, காணொலி காட்சி வசதி செய்யப் பட உள்ளது. இது தவிர, இணைய தள, டிவி வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது.

நாட்டிலேயே, முதல் முறையாக, தமிழகத்தில், இவ்வசதி ஏற்படுத்தப்படு கிறது.திருச்சி, சிறீரங்கத்தில் உள்ள, தமிழ்நாடு சட்ட பள்ளியுடன் இணைந்து, தமிழகத்தில், சட்ட கல்வியின் தரம் உயர்த் தப்படும். சட் டம் படிக்கும் மாணவர்கள், யு.ஜி.சி., - நெட் - சிவில் நீதிபதி தேர்வுகளில் பங்கேற்க, சிறப்பு பயிற்சி அளிக்கப் படும். பொதுமக்களுக்காக, முக்கியமான, 20 சட்டப் பிரிவுகள், ஆங்கிலத்தில் இருப் பதை, தமிழில் மொழி பெயர்த்து, பல் கலை. இணையதளத்தில் வெளியிடப் படும். சட்டம் படிக்கும் மாணவர்களுக் காக, 27 மிக முக்கிய சட்ட நூல்கள், தமிழில் மொழிபெயர்க்கப் படுகின்றன.

கீழ் நீதிமன்ற நீதிபதி களுக்கு, உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்பு களின் ஆங்கில வரையறைகள், தமிழில் மொழிபெயர்க்கப் படுகின்றன. முதல் கட்டமாக, 2,000 ஆம் ஆண்டுக்கு பின் அளிக் கப்பட்ட, 30 ஆயிரம் தீர்ப்பு களில், 2,100 தீர்ப்புகளின் வரையறைகள், ஆங் கிலத்திலிருந்து, தமிழில் மொழி பெயர்க் கப்படுகின்றன. மீதமுள்ளவை, மூன்றாண் டுகளுக்குள், தமிழில் மொழி பெயர்க்கப் படும். இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/page8/79284.html#ixzz30B12smfF

தமிழ் ஓவியா said...


கட்டப்பட்டிருக்கின்றன



உலகில் உள்ள மதங்கள் எல்லாம், குருட்டு நம்பிக்கை என்ற பூமியின்மீதே கட்டப்பட்டிருக்கின்றன.
_ (விடுதலை, 12.10.1962)

Read more: http://viduthalai.in/page-2/79423.html#ixzz30EPlm9E5

தமிழ் ஓவியா said...


இன்று தியாகராயர் நினைவு நாள்!

- முனைவர் மகா பாண்டியன்

நமது தியாகராயர் சென்னை மாநகரவைக்கு 1882 முதல் 1925 ஆம் ஆண்டு வரை சுமார் 42 ஆண்டுகளுக்கு மேல் உறுப்பினராக, தலைவராக இருந்து தொண்டாற்றியவர். இக்காலத்தில் மெட்ரோ டிரெயின் போல் அக்காலத்தில் டிராம் வண்டி மின் ஆற்றலில் சாலையில் செல்லும் ஊர்தி இருந்தது. இதனை பல்வேறு பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்தார். 1912 இல் தான் சென்னை நகருக்கு மின் விளக்கு வசதி வந்தது. அதைப் பெரிதும் விரிவாக்கம் செய்தார். பல மாநகரவை மகப்பேறு இல்லங்களைத் தோற்றுவித்தார்.

தன்னலம் கருதாது பிறர் நலம் பேணு கின்ற தியாக உணர்வோடு சமுதாயத்தில் மாற்றங்கள் உருவாக்கப் பாடுபடுகின்ற பெரியோர்களுள் தலை சிறந்தவர் நம் சர்.பிட்டி.தியாகராயர் அவர்கள்.

நீர் உயர வரப்புயரும்; வரப்புயர நெல் உயரும்; நெல் உயர குடி உயரும்; குடி உயர கோன் உயரும். ஆக நீர்தான் உலகுக்கு இன்றியமையாதது. அதுபோல சமுதாயப் பயிர் செழித்து வளரத் தன்னை நீராக்கிக் கொண்டு சமநிலைச் சமுதா யத்தை வளர்க் கப் பாடுபட்டவர்கள் இந்த திராவிடத் திருநாட்டில் ஏராளமானவர் கள்; அவர்கட் கெல்லாம் முதன்மையர் நமது சர்.பிட்டி. தியாகராயர் அவர்கள்.

வள்ளலார் வடசென்னையில் வாழ்ந் தார். வள்ளலாருக்கு 25 வயது இருக் கும்போது அப்பகுதியில் பிறந்ததா லென்னவோ, தியாகராயர் வாரி வாரி வழங்கும் தியாகரானார்கள். அவர் வட சென்னையில் வடபகுதியான கொருக்குப் பேட்டையில் 27.4.1852 அன்று தோன் றினார்.

தோன்றிற் புகழொடு தோன்றுக என்றார் திருவள்ளுவர். அக்குறளுக் கொப்ப கடையெழு வள்ளல்களும் ஒன்று கூடி ஓர் உரு ஆனதுபோல் தோன்றியவர் நம் தியாகராயர். பிட்டி என்னும் பெயருடைய தேவாங்க குலச்செம்மலான இவர் சமநிலைச் சமுதாயம் படைக்கப் பிறந்தார்.

ஒத்தாரும் தாழ்ந்தாரும் உயர்ந்தாரும்
ஒருமை யுளராதல் வேண்டும்

என்னும் வள்ளலாரின் வாக்குக்கேற்ப 20.11.1916 இல் சென்னை வேப்பேரி வழக்கறிஞர் திரு.டி.எத்திராஜூலு முதலி யார் என்பவர் இல்லத்தில் நீதிக்கட்சி உதய மானது.

இதன் முப்பெரும் தலைவர்கள் டாக்டர் நடேச முதலியார், டி.எம்.நாயர், சர்.பிட்டி தியாகராயர் ஆகியோராவர். கல்வியைப் பெறுவதிலும், அரசுப் பணி களில் தொழில் பெறுவதிலும் சாதிக் கொடுமை அக்காலத்தில் தலை விரித் தாடியது. இக்கொடுமைகள் ஒழிய திரா விட மக்களிடையே பகுத்தறிவை யும் சுயமரியாதையையும் வளர்க்கும் பணியை நீதிக்கட்சி செய்தது. இப் பணியைத் திறம்படச் செய்வதற்காக

1) ஜஸ்டிஸ் என்ற ஆங்கில நாளிதழும்

2) திராவிடன் என்ற தமிழ் நாளிதழும்

3) ஆந்திர பிரகாசிகா என்ற தெலுங்கு நாளிதழும் வெளியிடப்பட்டன. இவை திராவிடர்களின் கல்வி, அரசியல், சமு தாயம், பொருளாதார முன்னேற்றத் திற்கும், வளர்ச்சிக்கும், பாடுபடுவதைத் தன் கடமையெனக் கருதி இந்த இதழ்கள் செயலாற்றி வந்தன. தற்போது தகர்க்கப் பட்ட நிலையில் உள்ள மேலாதிக்க நிலைக்குக் காரணம் இவையே.

மேலும் நமது தியாகராயர் சென்னை மாநகரவைக்கு 1882 முதல் 1925 ஆம் ஆண்டு வரை சுமார் 42 ஆண்டுகளுக்கு மேல் உறுப்பினராக, தலைவராக இருந்து தொண்டாற்றியவர்.

இக்காலத்தில் மெட்ரோ டிரெயின் போல் அக்காலத்தில் டிராம் வண்டி மின் ஆற்றலில் சாலையில் செல்லும் ஊர்தி இருந்தது. இதனை பல்வேறு பகுதி களுக்கு விரிவாக்கம் செய்தார். 1912 இல் தான் சென்னை நகருக்கு மின் விளக்கு வசதி வந்தது. அதைப் பெரிதும் விரி வாக்கம் செய்தார். பல மாநகரவை மகப்பேறு இல்லங்களைத் தோற்று வித்தார். கூவம் ஆற்றில் நன்னீர் வருட முழுவதும் ஓடிடக் கனவு கண்டார். இனி அது நிறைவேற வேண்டும் நீதிக் கட்சியின் தலைவரான சர்.பிட்டி தியாகராயர் 17.12.1920 மற்றும் 13.11.1923 என இரு முறை அமைச்சரவை முதல்வர் பொறுப்பு. கிட்டிய போதும் மறுத் துரைத்தார் பதவி ஏற்றாரில்லை. பதவியை ஏற்காத பண்பாளர்.

அன்றைய கவர்னர் வெலிங்டன் பிரபு பெரும் வியப்பில் ஆழ்ந்தார். பெயருக் கேற்ப தியாக சீலரானார் நம் தியாகராயர்.

பெரியோர் தம் பாராட்டுரைகள்

1) தந்தை பெரியார் அவர்கள்: சென்னை நகர பரிபாலன சபையில் 40 ஆண்டுகள் அருந்தொண்டாற்றிய தியாக ராயர் யாவரா லும் மறக்கற்பாலரல்லர். தமிழ்நாட்டில் கைத்தறி நெசவுச் சங்கம் கண்டு அதில் முதல் முதலாக விசைத்தறி உபயோகிக்க முயற்சி செய்தவர்.

2) திரு.வி.கலியாண சுந்தரம் அவர்கள் (திரு.வி.க) தியாகத்திற்கு ராஜா - தியாக ராய செட்டியார்

3) திரு.நெ.து.சுந்தர வடிவேல் அவர்கள்: ஒப்பற்ற தமிழருக்கு நன்றி செலுத்துகிறேன். தியாராயர் இல்லை என்றால் நாங்கள் இல்லை. திரு.வி.க வின் எதிரி ஆவார். திரு.வி.க.வை ஆங்கில அரசு நாடு கடத்தத் திட்டமிட்டபோது அதை எதிர்த்தவர். என அனைவராலும் பாராட்டப்பட்ட நம் தியாகராயரின் நினைவு நாளான இன்று (28.4.2014) அவரை நினைவு கூர்ந்து அவர் வழி நடப்போமாக.

Read more: http://viduthalai.in/page-2/79425.html#ixzz30EQOjkCU

தமிழ் ஓவியா said...

பிட்டி தியாகராயர்

ஏப்.27 பிட்டி தியாகராயர் அவர்களின் பிறந்த நாள் (1852). செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவர். அந்தக் காலத்திலேயே பி.ஏ.படித்தவர். 1882 முதல் 1923 வரை நாற்பத்தொன்றரை ஆண்டுகள் சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்து சாதனை புரிந்தார். சென்னை மாநகரத்துக்கு அவர் ஆற்றிய அருந்தொண்டு பொன்னெழுத்துக்களால் பொறிக்கத் தக்கவையாகும். துவக்கத்தில் காங்கிரஸ்காரராக இருந்த அவர். பார்ப்பன ஆதிக்கத்தின் கொட்டத்தைச் சகிக்க முடியாத நிலையில் பார்ப்பனர் அல்லாதாருக்கு ஓர் அமைப்புத் தேவை என்று உறுதியான முடிவுக்கு வந்தார். டாக்டர் சி.நடேசனாரும், டாக்டர் டி.எம்.நாயரும் இதற்கு இரு கை நீட்டினார்கள். அதன் தொடக்கம் தான் 1916 டிசம்பர் 20-இல் அவர் வெளியிட்ட பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கையாகும். பார்ப்பனர் அல்லாதார் மத்தியிலே எழுச்சியையும், உரிமை உணர்வையும் தட்டி எழுப்பிட ஜஸ்டிஸ் என்ற ஆங்கில இதழும், திராவிடன் என்ற தமிழ் இதழும், ஆந்திர பிரகாசிகா என்னும் தெலுங்கு இதழும் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டன.

1920-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டை ஆட்சி முறையில் மொத்தம் உள்ள 65 பொதுத் தொகுதிகளில் 28 இடங்கள் பார்ப்பனரல்லாதா ருக்குப் போராடிப் பெறப்பட்டன. முதல் பொதுத்தேர்தலிலேயே நீதிக்கட்சி வெற்றி பெற்றது. இரண்டாவது முறையும் அக்கட்சியே வெற்றி பெற்றது. இரு முறையும் கேட்டுக்கொள்ளப்பட்டும், பிட்டி தியாகராயர் முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது அவர் எவ்வளவு பதவி ஆசையைத் துறந்த மாமனிதர் என்பதற்கான எடுத்துக்காட்டாகும். அதேநேரத்தில் வெளியில் இருந்து நீதிக்கட்சி ஆட்சியை வெகு சிறப்பாக வழி நடத்தினார் என்பது தான் முக்கியமாகும். வெள்ளை உடை உடுத்தியதால் மட்டும் அவர் வெள்ளுடை வேந்தர் அல்லர். உயர்ந்த உள்ளமும், ஒழுக்கமுள்ள அவரின் கண்ணிய மான பொதுவாழ்வும் கூடத்தான் அது காரணப் பெயராக அமைந்து விட்டதோ!

- விடுதலை 27.4.2003

Read more: http://viduthalai.in/page-2/79425.html#ixzz30EQVUgTm

தமிழ் ஓவியா said...



கல்கிகளின் வக்காலத்து!

கேள்வி: மோடியைச் செங்கோட்டைக்கு அனுப் பினால் பெற்ற சுதந்திரம் வீணாகி விடும் என்கிறாரே தா. பாண்டியன்?

பதில்: சுதந்திரம் பறி போய் விடும் என்பதெல்லாம் தேவையற்ற பயம். இந்திய மக்களிடையே இன்று ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வும் அரசியல் தெளிவும் அபரிதமானது. அவ்வளவு சீக்கிரத்தில் நம் சுதந்திர வேட்கையும், உணர்வும் மழுங்கி விடாது. பா.ஜ.க.வே ஆட்சிக்கு வந்தாலும் எந்தவிதமான அதீத நடவடிக்கையும் எடுத்து விட முடியாது. அதற்கு அரசியல் சாசனம் இடம் தராது; மக்களும் அனுமதிக்க மாட்டார்கள். தேர்தல் ஆதாயத்துக்காகச் சொல்லப்படும் இதுபோன்ற அச்சுறுத்தல்களில் அர்த்தமில்லை. குழந்தைகளுக்கு பூச்சாண்டி காட்டி மிரட்டலாம். வாக்காளர்களை அல்ல! - கல்கி. 27.4.2014

பி.ஜே.பி.யைப் பற்றி தெரிந்தவர்களுக்கு தோழர் தா. பாண்டியன் தெரிவித்துள்ள கருத்து சரியானதே என்பது விளங்கும். மோடி முதல் அமைச்சராக இருந்த போது தானே இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறு பான்மை மக்கள் கொல்லப்பட்டார்கள். முதல் அமைச்சர் மோடிக்கு சம்பந்தமேயில்லாது அது நடந்துவிட்டது என்றால், இதை விட மோடியின் நிர்வாகப் பலகீனத்துக்கு வேறு சான்று தேவையேயில்லை!

மக்கள் விழிப்புணர்ச்சி அடைந்து விட்டார்கள் - ஏமாந்துவிட மாட்டார்கள் என்கிறது கல்கி, குஜ்ராத் கலவரத்துக்குப் பிறகு மோடி இருமுறை ஆட்சியைப் பிடித்தது என்பது மக்களின் விழிப்புணர்ச்சியாலா?

பிஜேபியின் உயர் மட்டத் தலைவர்கள் தலைமையில் தானே பாபர் மசூதி இடிக்கப்பட்டது!

கடப்பாறையைக் கொண்டு இடித்தபோது இது சட்ட விரோதம், நியாய விரோதம் என்று அந்தப் பெரும் தலைவர்களுக்குத் தெரியாதா?

சட்டத்துக்கு உட்பட்டு ராமர் கோயில் கட்டுவதாகச் சொல் லுகிறார்களே - இது என்ன கிச்சுக் கிச்சு விளையாட்டா?

கல்கிகளின் கபடம் நமக்குப் புரிகிறது! அனேகமாக ஒவ்வொரு பார்ப்பனரும் (சிறப்புப் புலனாய்வு காவல் துறை அதிகாரி இராகவன் உட்பட) மோடி தலைமையில் இங்கு ஒரு மனுதர்ம ராஜ்ஜியம் வர வேண்டும் என்பதிலே குறியாக இருக்கிறார்கள் என்பதை இன்னொரு முறை கல்கி அறிவித்திருக்கிறது -அவ்வளவுதான்!

Read more: http://viduthalai.in/e-paper/79422.html#ixzz30EQvZ0Eq

தமிழ் ஓவியா said...

சட்டம் ஒழுங்கு?

மயிலாடுதுறையிலிருந்து மைசூருக்கு சேலம் வழியே மைசூர் செல்லும் விரைவு இரயில் வண்டியில் இரவு ஒரு மணி அளவில் (சனியன்று நடைபெற்று இருக்கிற கொள்ளை அதிர்ச்சியையூட்டுகிறது.

பெண்களிடம் இருந்து நகைகளைப் பறித்துச் சென்றுள்ளனர். முன் பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்த பெண்களுக்கே இந்தக் கதியா என்று கேட்கத் தோன்றுகிறது.

ஓர் இரயிலுக்கு இரண்டு காவலர்கள் பாதுகாப்புக்காம்; இது ஏதோ சடங்காச்சாரமாக இருக்கிறதே தவிர, நடை முறையில் பயன் விளைவிக்கக் கூடியதாக இல்லையே!
சாலையில் பயணம் செய்தாலும் சரி, இரயிலில் பயணம் செய்தாலும் சரி பாதுகாப்பு குடி மக்களுக்கு - குறிப்பாகப் பெண்களுக்கு இல்லை - இல்லை என்பதில் இரண்டு கருத்துகளுக்கு இடம் இல்லை!

இதற்கிடையே இன்னொரு செய்தி - சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

இலஞ்சம் வாங்கினால் குண்டு வைப்போம் என்று இராயபுரம், ஆர்.கே. நகர், மயிலாப்பூர், இராயப்பேட்டை காவல் நிலையங்களுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாம்.

இலஞ்சம் உள்ளிட்ட குற்றங்களை ஒழிப்பதற்காக உள்ள காவல்துறைக்கே குண்டு வைப்போம் என்ற மிரட்டல் கடிதம் என்றால் இதில் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? காவல் நிலையங்களில் இலஞ்சம் வாங்கப் படுகிறதா என்ற கேள்வி ஒரு பக்கம் - காவல்துறையையே மிரட்டும் அளவுக்கு நாட்டு நிலைமை மோசமாகி விட்டதா என்பது இன்னொரு பக்கம்! போகிற போக்கை பார்த்தால் தற்காப்பு இல்லா விட்டால் நடமாட முடியாது போலும்!

Read more: http://viduthalai.in/e-paper/79422.html#ixzz30ERCaUW1

தமிழ் ஓவியா said...

கூலி வேலை செய்கிறார் பாரத ரத்னா டெண்டுல்கர் - நம்புங்கள்!

நாட்டில் ஊழல்கள் கலர் கலராக நடக்க ஆரம்பித்து விட்டன. கோவாவில் பிஜேபி ஆட்சிதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள்கள் வேலை வழங்கப்படுகிறது. இதில் வேலை செய்பவர்களுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.150. உள்ளூர்க் கட்சிக்காரர்கள் இதில் உள் குத்து வேலையில் ஈடுபட்டுகின்றனர். 150 ரூபாயைக் கொடுப்பதில்லை. 150 ரூபாய் கொடுத்ததாக கையொப்பம் வாங்கிக் கொள்கிறார்கள் என்று அவ்வப்போது செய்திகள் வெளி வருவதுண்டு.

ஆனால், பிஜேபி ஆளும் கோவாவில் நடந்துள்ளது கற்பனைக்கும் எட்டாத படுநாசமாக அல்லவா இருக்கிறது.

நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்து நாள் ஒன்றுக்கு ரூ.150 கூலி வாங்கும் தொழிலாளிகள் யார் யார் தெரியுமா?

இந்தி திரைப்பட உலகில் கொடி கட்டி ஆளும் நடிகர் அமிர்தாபச்சன், பாரத ரத்னா விருது பெற்ற கிரிக்கெட்டுக் காரர் சச்சின் டெண்டுல்கர் எம்.பி. டெண்டுல்கரின் மனைவி உள்ளிட்டோராம்.

நாடு எந்த யோக்கியதையில், தராதரத்தில் இருக்கிறது என்பதற்கு இது ஒன்று போதாதா? பிஜேபி ஆட்சியின் இலட்சணத்தையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

Read more: http://viduthalai.in/e-paper/79422.html#ixzz30ERMekOx

தமிழ் ஓவியா said...


லாலுவின் நறுக்குப் பேட்டி பீகாரில் பிஜேபி களத்தில் இல்லை


மக்களவைத் தேர்தலில் உங்களுடைய கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

இங்கே போட்டி எங்கே இருக்கிறது? பொதுக்கூட்ட மைதானங்களில் என்னு டைய பேச்சைக் கேட்கத் திரளும் கூட்டத்தின் முழு அளவையும் தொலைக் காட் சிகள் காட்டுவதே இல்லை. நரேந்திர மோடி சளைத்து விட்டார் என்றே நினைக்கி றேன். அவருடைய கூட்டங் களுக்கு மக்கள் இப்போது வருவதே இல்லை கூட்டம் குறைந்துகொண்டே வரு கிறது. அவருடைய கூட்டத் துக்குப் போகிறவர்கள் கூட ஒரு கலவரக்காரர் எப்படி இருப்பார் என்று நேரில் பார்க்கத்தான் போகின் றனர்.

உங்களுடைய முக்கிய அரசியல் எதிராளி யார் - மோடியா, நிதீஷ்குமாரா?

அட... இங்கே போட் டியே இல்லை என்கிறேன். ஒருதரப்புதான் கை ஓங்கிய நிலையில் இருக்கிறது. அந்தத் தரப்பு நாங்கள் தான். பிஹாரில் உள்ள எல்லாத் தொகுதிகளுக்கும் செல்லுங்கள், மக்கள் என்னோடு இருப்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.

முதல் இரண்டு சுற்று வாக்குப் பதிவு எப்படி இருந்தது?

பாட்னாவில் இருக்கும் இரண்டு தொகுதிகளிலும் வென்றுவிட்டதாக பாஜக நினைக்கிறது. அவர்களு டைய கனவெல்லாம் பலூன் போலக் காற்றில் உயரப் பறந்து கொண்டிருக்கிறது. அது பட்டென்று வெடித்தது தான் உண்மை, அவர்க ளுக்கு உறைக்கும். களத்தில் என்ன நடக்கிறது என்று செய்தி ஊடகங்களுக்கு எதுவும் தெரியாது. நான் மட் டும்தான் இந்தப் பிரதேசத் தைச் சேர்ந்தவன். பேச்சைக் கேட்க மக்கள் வராதபோது கூட்டங்களை நடத்தி என்ன பயன்? பிஹாரில் இதுதான் நிலைமை மற்ற மாநிலங் களில் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியாது.

மீண்டும் முஸ்லிம் - யாதவ் ஆதரவாளர்களை உங்கள் பக்கம் ஈர்த்துவிட்டதாக நினைக்கிறீர்களா?

முஸ்லிம்கள், யாதவர் கள் மட்டுமல்ல, மகா தலித் துகள், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், முற்பட்ட வகுப்பினர் கூடப் பெரும் எண்ணிக்கையில் வந்து என்னை ஆதரிக்கின்றனர், முற்பட்ட வகுப்பில் முற் போக்கானவர்கள் பலர், இருக்கின்றனர். அவர்கள் மோடி பித்துப்பிடித்து அலையவில்லை.

இந்தத் தேர்தலில் பிரச்சினை கள் என்ன? அடுத்துவரும் சுற்றுகளிலும் இப்படியேதான் இருக்குமா?

பாஜக ஏற்கெனவே நம் பிக்கையை இழந்துவிட் டது. கிரிராஜ் சிங்கும் நிதின் கட்காரியும் விரக்தி காரண மாக வசைபாடத் தொடங்கி விட்டனர். மோடியைச் சகித் துக் கொள்ள முடியாதவர் கள் பாகிஸ்தானுக்குப் போங் கள் என்கிறார் கிரிராஜ் சிங். பிஹாரிகளுக்கு ஜாதி உணர்வு ரத்தத்திலேயே ஊறியது என்கிறார் நிதின் கட்காரி. என்ன அரசியல் சிந்தனை இது? அவர்கள் தான் பாசிஸ்ட்டுகள், மத வாதிகள், இதைத் தெரிந்தே தான் சொல்கிறார்கள்; கடும் ஆட்சேபனைகள் வந்த பிறகு சொன்னதைத் திரும் பப் பெறுகின்றனர். இது தான் மோடியின் வேலைத் திட்டமா? அவர்களுக்கு மூளை வறண்டுவிட்டது.

காங்கிரசுடனான கூட்டணி உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதா?

மதச்சார்பற்றவர்களின் வாக்குகள் சிதறாமல் இருக்க கூட்டணி அவசியம். இந்தக்கூட்டு நாட்டைக் காப்பதற்காக, அதன் மதச் சார்பற்ற அடித்தளத்தைக் காப்பதற்காக நாங்கள் திறந்த மனதுடன் செயல் படுகிறோம்.

1990-இல் அத்வானியின் ரத யாத்திரையைத் தடுத்து நிறுத் தினீர்கள்; உங்களு டைய

அடுத்த லட்சியம் மோடியின் முயற்சியை...

விரட்டிவிட்டேன். ஒரே உதைதான், மோடி எங்கி ருந்து வந்தாரோ அங்கேயே ஓடிவிட்டார். ஆம் அவர் கதை முடிந்தது. இது மதச் சார்பற்ற நாடு. வகுப்புவாத சக்திகள் இங்கு வெற்றி பெறவே முடியாது. பெருந் தொழில் நிறுவனங்கள் என்ன செய்கின்றன என்று பாருங்கள்; அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள்? இளைஞர்கள்தான் பாழாய்ப் போவார்கள்.

யார் அடுத்த பிரதம அமைச்சராக வருவார்கள்? அடுத்த பிரதமரை நீங்கள் தான் தீர்மானிப்பீர்களா? தேர்தலுக்குப் பிறகு அர சியல் கட்சிகளிடையே புதிய அணி சேர்க்கை ஏற்படுமா?

இது எதுவும் என்னுடைய செயல் திட்டத்தில் இப்போ தைக்கு இல்லை. நான் இப் போது போர்க்களத்தில் இருக் கிறேன்.

Read more: http://viduthalai.in/page-3/79437.html#ixzz30ERnau9u

தமிழ் ஓவியா said...

உடற்பயிற்சி மூலம்
எடையை குறைக்க முடியுமா?




எடையைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். ஏற்கெனவே மூட்டுவலி இருப்பதால் நடைப் பயிற்சி செல்வதும், உடற்பயிற்சி கூடத்திற்குச் செல்வதும் சாத்தியமில்லாமல் இருக்கிறது. சின்னச் சின்ன உடற்பயிற்சி மூலம் எடையைக் குறைக்க முடியுமா?

இதுகுறித்து பொது மருத்துவர் சுந்தர்ராமன் கூறியதாவது:- முதலில் உங்கள் உயரம் மற்றும் வயதுக்கேற்ற எடையில் இருக்கிறீர்களா என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சென்டிமீட்டரில் உள்ள உங்கள் உயரத்துடன் 100அய்க் கழித்தால் வருவது உங்கள் எடையின் தோராய அளவு. இதிலிருந்து கூடுதலாக அல்லது குறைவாக 5 கிலோ இருக்கலாம். அந்த அளவைத் தாண்டும்போது மட்டுமே எடையைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை நீக்கும் சிகிச்சைகள் நிறைய இருக்கின்றன. மருத்துவர் ஆலோசனையுடன் பின்பற்றலாம். நடைப்பயிற்சி, ஜிம் உடற்பயிற்சி, சின்னச் சின்ன உடற்பயிற்சி ஆகியவை மட்டுமே பருமனைக் கட்டுப்படுத்திவிடாது. உணவுப் பழக்கம், வாழ்வியல் நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும்.

காலையில் தேவையான அளவு உணவு, மதியம் அளவான உணவு, இரவு வேளையில் பாதி வயிறு உணவு என எடுத்துக் கொள்ளுங்கள். மூட்டுவலி இருப்பதால் உங்களால் கடினமான உடற்பயிற்சி செய்ய முடியாது. பதிலாக வீட்டு வேலைகளை குனிந்து, நிமிர்ந்து செய்து பாருங்கள். எடை தானாகவே குறையும்.

Read more: http://viduthalai.in/page-7/79395.html#ixzz30ET4binV

தமிழ் ஓவியா said...

ரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்தும் கொய்யா



கொய்யாக்கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கொய்யா வீட்டுத் தோட்டங்களிலும், வயல் வரப்புகளிலும் வளர்க்கப்படும் மரவகையாகும். இது இந்தியா, இலங்கை, மியான்மா நாடுகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது. இதற்கு ஜாம்பலா, கோவா, பலாம்பர் என்ற பெயர்களும் உண்டு. கொய்யா முக்கனியான மா, பலா, வாழை இவற்றிற்கு இணையாக வர்ணிக்கப்படும் பழமாகும். மிகக் குறைந்த விலையில் அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்ட பழம் இது. இதில் அதிகளவு வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக நெல்லிக்கனிக்கு அடுத்த நிலையில் வைட்டமின் சி சத்து கொண்ட பழம் கொய்யாதான்.

மருத்துவப் பயன்கள்: மலச்சிக்கல் தீரும்: நோயின் ஆரம்பமே மலச்சிக்கல்தான். அனைத்து நோய்களின் தாக்கமும் மலச்சிக்கலில் இருந்துதான் ஆரம்பிக்கும். மலச்சிக்கலைப் போக்கினாலே நோயில்லா நல்வாழ்வு வாழ லாம் என்பது சித்தர்களின் கூற்று. நன்கு கனிந்த கொய்யாப் பழத்தை இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். குடலின் செரிமான சக்தி அதிகரிக்கும்.

வயிற்றுப்புண் ஆறும்: தற்போதைய உணவுகளில் அதிகம் வேதிப் பொருட்கள் கலந்திருப்பதால் அவை செரிமானத்தை உண்டாக்கி வயிற்றுப் புண்ணை ஏற் படுத்துகின்றன. இதனைப் போக்க உணவுக்குப்பின் கொய் யாப்பழம் சாப்பிடுவது மிக நல்லது. மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் இப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் மூல நோயிலிருந்து விடுபடலாம்.

கல்லீரல் பலப்படும்: உடலின் சேமிப்புக் கிடங்கான கல்லீரல் பாதிக்கப்பட்டால், உடலின் பித்தத்தின் தன்மை மாறுபடும். இதனால் உடல் பல பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும். இதை தவிர்த்து கல்லீரலை பலப்படுத்த கொய்யாப்பழத்தை அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.

நீரிழிவு நோயாளிகளுக்கு: நீரிழிவு நோயின் தாக்கம் கண்டாலே அதை சாப்பிடக் கூடாது இதை சாப்பிடக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் பாடாய்ப்படுத்தும். ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகும் பாதிப்புகளை குறைக்க கொய்யாப்பழம் உகந்தது. மேலும் ரத்தத்தில் சர்க் கரையின் அளவை கட்டுப்படுத்தும் தன்மையும் உண்டு.

Read more: http://viduthalai.in/page-7/79395.html#ixzz30ETcoFqr

தமிழ் ஓவியா said...


இந்தியா இந்து நாடானால் காஷ்மீர் இணைந்திருக்காது பரூக் அப்துல்லா போர்க்கோலம்!



சிறீநகர், ஏப்.28-காஷ்மீரின் கோடைக்கால தலைநகரான சிறீநகர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங் கேற்பதற்காக நேற்று சிறீ நகருக்கு வந்தார்.

காலை 11.45 மணி அளவில் அந்த இடத்தில் 2 குண்டுகள் வெடித்தன. அதில் 10 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். அதன் பிறகு திட்டமிட்டப்படி பொதுக்கூட்டம் நடை பெற்றது.

இதைப்போன்ற தாகுதல்களுக்கு எல்லாம் நான் பயந்துவிட மாட் டேன். இதைப்போல் இன் னும் ஆயிரம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி னாலும் பயந்து பின்வாங்கி ஓட மாட்டேன் என்று ஆவேசமாக கூறிய பரூக் அப்துல்லா இந்த கூட்டத் தில் பேசியதாவது:-

மதவாத சக்திகளிடம் இருந்து நாட்டைக் காப் பாற்றி, முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல் லும்படி கடவுளை வேண் டிக் கொள்ளுங்கள். இந்தியா மதச்சார்பாகி விட முடி யாது. அது மதச்சார்பான நாடானால் இந்தியாவுடன் காஷ்மீர் நீடித்து இருக்காது. காஷ்மீர் மக்கள் மதவா தத்தை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.


மோடிக்கு ஓட்டு போடாத வர்கள் பாகிஸ்தானுக்கு போக வேண்டும் என்று அவர்கள் (பா.ஜ.க.) சொல் கிறார்கள். ஆனால், மோடிக்கு ஓட்டு போடுபவர்கள் கட லில் மூழ்கடிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/79407.html#ixzz30ETsFmMd

தமிழ் ஓவியா said...


இந்து அறநிலையத்துறையின் வேலை மூடத்தனத்தைப் பரப்புவது தானா?


இந்து அறநிலையத்துறையின் வேலை
மூடத்தனத்தைப் பரப்புவது தானா?
மழை வேண்டி யாகம் நடத்த வேண்டுமாம்!

சென்னை, ஏப்.29- தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் முக்கிய கோயில் களில் மழை வேண்டி வருண ஜெப பூஜையை இந்து சமய அறநிலையத் துறை நடத்தியது.
கடந்த ஆண்டு தென் மேற்கு, வட கிழக்கு பருவ மழை பொய்த்ததால் அணைகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், அணைகளின் நீர்மட்டம் வெகுவாக பாதிக் கப்பட்டுள்ளது. இது மட்டு மின்றி, ஏரி கண்மாய், குளங்களும் தண்ணீரின்றி வறண்டுள்ளது.

கோடைக் காலங்களில் பெய்யும் மழை கூட பொய்த்ததால் பல இடங் களில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். இந் நிலை யில் மழை வேண்டி தமி ழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் சிறப்பு வருண ஜெபம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்தது. அதன்படி தமிழகம் முழுவதும் முக்கிய கோயில்களில் ஒரே நேரத் தில் இந்த பூஜை நடந்தது. இதில், சென்னையில் திரு வல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில், வடபழனி முருகன் கோயில் உட்பட 28 முக்கிய கோயில்களில் வருண ஜெபம் நடந்ததாம்.

நேற்று காலை 5.05 மணியளவில் கணபதி ஹோ மத்துடன் வருண ஜெபம் தொடங்கியதாம். தொடர்ந்து சுவாமிக்கு சீதாள ரூபன ஏகாதச ருத்ரஜப பாரா யணம், வருண ஜெபம், வருண சூக்த பாராயணம், தீபாராதனை உட்பட பல் வேறு அபிஷேகங்கள் நடந் தன. மேலும், இசைக் கல் லூரி மாணவர்களும், மழை வேண்டி அமிர்தவர்ஷிணி, மேகவர்ஷிணி, கேதாரம், ஆனந்த பைரவி, ரூப கல்யாணி உள்ளிட்ட இசை ஆராதணை நடத்தினராம். இதில், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியிடம் மழைபொழிய வேண்டி வழிபாடு செய்தனராம். ரகசிய ஏற்பாட்டால் பக்தர் கள் கூட்டம் இல்லை.

இந்துசமய அறநிலை யத்துறை சார்பில் மழை வேண்டி வழிபாட்டு நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்தானாம். இதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி எந்தவித அறிவிப்பும் இல்லாமல் ரகசியமாக இந்த நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதனால், தமிழகத்தில் மழை வேண்டி வழிபாடு நடத்தப்பட்ட கோயில்களில் குறைவான பக்தர்களே கலந்து கொண் டனராம்.

Read more: http://viduthalai.in/e-paper/79451.html#ixzz30KN2KmWZ

தமிழ் ஓவியா said...


சிக்கினார் நரேந்திரமோடி ஹவாலா ஏஜெண்டுடன் நரேந்திரமோடி: குறுந்தகடை வெளியிட்டது காங்கிரஸ்


புதுடில்லி, ஏப்.29- ரூ.1000 கோடி அன்னிய செலவாணி பணத்துடன் பிடிப்பட்ட அப்ரோஸ் பட்டா, மோடியுடன் உள்ள புகைப்படம் அடங்கிய சிடியை காங்கிரஸ் வெளி யிட்டு பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது. காங் கிரஸ் தலைவர் சோனியா காந் தியின் மருமகன் ராபர்ட் வதேரா நில பேரம் நடத் தியது தொடர்பான சிடியை பாஜ நேற்று முன்தினம் வெளியிட்டது. இது அரசியல் வட் டாரத்தில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாஜக பிர தமர் வேட்பாளர் மோடியு டன், ரூ.1000 கோடி ஹவாலா பணத்துடன் சிக்கிய பிரபல ஹவாலா ஏஜென்ட் அப் ரோஸ் உள்ள ஒளிப்படம் அடங்கிய சிடியை காங் கிரஸ் நேற்று வெளியிட்டது. இதனால், தேசிய அரசி யலில் பரபரப்பு ஏற்பட் டுள்ளது.

சிடியை வெளியிட்ட காங்கிரஸ் செய்தி தொடர் பாளர் சந்தீப் சுர்ஜிவாலா அளித்த பேட்டியில், அகம தாபாத், சூரத் நகரத்திலி ருந்து ஹவாலா பணத்தை கொண்டு செல்ல முயன்ற வழக்கில் பிடிப்பட்டவர் அப்ரோஸ் பட்டா. இவர் ரூ.1000 கோடி முதல் ரூ.5000 கோடி வரை ஹவாலா மோசடி செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. இப் பணம் நிழல் உலக தாதாக்களின் பணமாக இருக்கலாம் எனவும் சந் தேகிக்கப்படுகிறது. இப் படிப்பட்ட நபர், பாஜகவின் தீவிர ஆதரவாளர் ஆவார். இவர் மோடியின் சீடரும் கூட. இவருக்கும் குஜராத் முதல்வருக்கும் என்ன தொடர்பு? அரசு நிகழ்ச் சிகளில் ஹவாலா ஏஜென்ட் எப்படி கலந்து கொண்டார் என்பதை பாஜக தெளிவு படுத்துமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து சுதந்திரமான விசா ரணைக்கு மோடி உத்தர விடுவாரா? தனக்கும் ஹவாலா ஏஜெண்ட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை தெளிவுபடுத்துவரா என்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கேட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/79452.html#ixzz30KNHZ29k

தமிழ் ஓவியா said...


முக்கியம்


தைரியம் இருந்தால் நல்ல காரியங்கள் செய்யலாம். நல்ல காரியங்களைச் செய்யும்போது எத்தகைய எதிர்ப் பிருந்தாலும் பயப்படத் தேவையில்லை. தைரியமே முக்கியம். - (விடுதலை, 22.11.1964)

Read more: http://viduthalai.in/page-2/79443.html#ixzz30KONLc3v

தமிழ் ஓவியா said...


கடவுள் பெயரை சொல்லி தப்பிக்காதீர் ஆய்வு கூட்டத்தில் ஆட்சியர் எச்சரிக்கை


நாமக்கல், ஏப்.29- மாவட்டத்தில் மழை பெய் யவில்லை என்பதற்காக, கடவுள் பெயரை சொல்லி அதிகாரிகள் தப்பிக்காதீர்கள், என மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தி எச்சரித்தார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட் டரங்கில், நேற்று, கோடை வறட்சியில் குடிநீர் பிரச் சினை தீர்ப்பது தொடர்பான, பல்துறை அலுவலர்களுக் கான ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்து, நகராட்சி, நகர பஞ்சாயத்து, பஞ்சாயத்து பகுதியைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரிகளிடம், குடிநீர் ஆதாரங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன, எனக் கேட்டார். அப்போது, கொல்லிமலை யூனியன் அதிகாரிகள், கொல்லிமலை மக்களுக்கு குடிநீர் தேவை யை பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளது. நீரா தாரங்கள் வறண்டு கிடப்ப தால், ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் பிரச்சினை தீர்க்க, மலை மேல் வாய்ப் புகள் குறைவாக உள்ளது. எனவே, கடவுள் பார்த்து மழை பெய்ய வைத்தால், பிரச்சினையை தீர்க்க முடியும் என தெரிவித்தனர். அதே போல், ஒவ்வொரு அதிகாரிகளும் மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் உள்ள பிரச்சினை, நிதி, புதிய போர் வெல் அமைத்தல், நீர்த்தேக்க தொட்டி அமைத்தல் உள்ளிட் டவை குறித்து பேசினர்.

அப்போது, ஆட்சியர் தட்சிணாமூர்த்தி பேசியதா வது:

அதிகாரிகள், குடிநீர் பிரச்சினை தீர்ப்பதற்கான வழிமுறைகளை கூறுவதை விட்டு விட்டு, கடவுள் பெய ரை சொல்லி தப்பிக்க வேண் டாம். குடிநீர் ஆதாரங்களை கண்டறிந்து, மக்களிடம் இருந்து, குடிநீர் பிரச்சினை தொடர்பாக புகார் வராமல் பார்த்துக் கொள்ள வேண் டும். இன்னும், இரண்டு மாதங்களுக்கு, வாரம் ஒருநாள் குடிநீர் பிரச்சினை தொடர்பான ஆய்வு கூட்டம் நடத்தப்படும். அதில், முந் தைய கூட்டத்தில் தெரிவிக் கப்பட்ட புகார்கள் மீது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத அதிகாரி மற்றும் அலுவலர்கள் மீது, கூட்ட ரங்கிலேயே சார்ஜ் மெமோ வழங்கப்படும். பழுதான போர்வெல்களை பழுது நீக்கி வைத்துக் கொள்ள வேண் டும். குடிநீர் பிரச்னை தீர்ப்ப தற்காக, பல்வேறு திட்டங் களில் இருந்தும் நிதி எடுத்துக் கொள்ள வாய்ப்புகள் வழங் கப்பட்டுள்ளது. நிதி இல்லை என்றால், என்னிடம் அணுகி பெற்றுக் கொள்ளலாம்.
பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு நேரில் சென்று, குடிநீர் பிரச்னையை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தான், பஞ்சாயத்து அளவில் இருந்தே, பிரச்சி னைகளை களைய முடியும். புதிய போர்வெல் அமைப் பது தேவையென்றால், உட னடி அனுமதி பெற்று, மக்களுக்கு குடிநீர் பிரச்சி னையை தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Read more: http://viduthalai.in/page-3/79495.html#ixzz30KOsTFNu

தமிழ் ஓவியா said...


உலகை உலுக்கிய பெண்களின் புத்தகங்கள்


காலந்தோறும் பெண்களின் எழுத்து, ஒட்டுமொத்த உலகுக்கும் புத்துயிர் ஊட்டி வந்துள்ளது. பல புத்தகங்கள் உலகையே புரட்டிப் போட்டுள்ளன. உலகப் புத்தக நாள் (ஏப்ரல் 23) கடைபிடிக்கப்படும் இந்த நேரத்தில், பெண்கள் எழுதி உலகை உலுக்கியதாகக் கருதப்படும் நூல்கள் இங்கே நினைவுகூரப்படுகின்றன.

டேல்ஸ் ஆஃப் கெஞ்சி, 1021:

உலகின் முதல் நவீன நாவல் என்று கருதப்படும் இதை எழுதியவர் ஜப்பானியச் சீமாட்டி முரசாகி. ஒரு பேரரசனின் மகனுடைய வாழ்க்கை, காதலைப் பற்றிய கதை. அதேநேரம் வீழ்ச்சியடைந்துவரும் அரசாட்சியையும் இது பதிவு செய்துள்ளது. இந்தக் கதை ஆயிரம் ஆண்டு பழமையானதாக இருந்தாலும், வரலாற்றை அறிந்துகொள்வதற்கான சிறந்த ஆதாரமாகத் திகழ்கிறது.

எ விண்டிகேஷன் ஆஃப் தி ரைட்ஸ் ஆஃப் உமன், 1792

நவீனப் பெண் உரிமைச் சிந்தனைகளை முதலில் வெளிப்படுத்திய இந்த நூலை எழுதியவர் மேரி வோல்ஸ்டன்கிராஃப்ட். பெண்ணுக்கு உரிய சுதந்திரத் தையும், பெண்ணியத்தையும் உலகுக்கு உணர்த்திய நூல். பெண் என்பவள் முதலில் ஒரு சொத்து அல்ல, அவளும் மனுஷிதான்.

அவளுக்குக் கல்வி பெறவும், பொது வாழ்க் கைக்கு வரவும் உரிமை உண்டு என்று உரத்த குரலில் சொல்லி, ஆணாதிக்கச் சமூகத்துக்கு எழுத்து ரீதியில் சவால் விடுத்தது இந்தப் புத்தகம். இதனால் எரிச்சலடைந்த சிலர், மேரியைக் கழுதைப் புலி என்றெல்லாம் திட்டியிருக்கிறார்கள்.

அங்கிள் டாம்ஸ் காபின், 1852:

உலகுக்கெல்லாம் நீதி சொல்லும் அமெரிக்காவில் பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த மனிதனை மனிதன் அடிமைப்படுத்தி வைத்திருந்த இனவெறி வன்கொடுமை பற்றி முதலில் பேசிய இந்த நாவலை எழுதியவர் ஹாரியட் பீச்சர் ஸ்டோவ்.

முதலில் அமெரிக்காவையும் பிறகு உலகின் கண்களையும் இது திறந்தது. கறுப்பின அடிமை முறையை ஒழிக்க அமெரிக்காவில் நடந்த உள்நாட்டுப் போருக்கு இந்தப் புத்தகமும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது

Read more: http://viduthalai.in/page-7/79489.html#ixzz30KQ80WLH

தமிழ் ஓவியா said...


பல துறைகளில் சிறந்து விளங்கும் சாதனைப் பெண்கள்


உறவுகளுக்கு உயிர் கொடுப்பது மட்டுமின்றி தாயாக, சகோதரியாக, தோழியாக, மனைவியாக, மகளாக... என பன்முக பந்தமாக நம்முள் கலந்திருக்கும் பெண்களை சிறப் பிக்கும் மகளிர் தினம். இந்த வேளையில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களை பற்றி அறிந்துகொள்வோம்.

தொழில்துறை: இந்திரா நூயி

சென்னையில் பிறந்த இந்திரா நூயி ஹோலி ஏஞ்சல் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த அவர் பின்னர் எம்.பி.ஏ. படிப்பையும் முடித்தார்.

முதன் முதலில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளராக பணியில் சேர்ந்த அவர், பின்னர் படிப்படியாக உயர்ந்து தற்போது பெப்சிகோ நிறுவனத்தின் தலைவராக உயர்ந்திருக்கிறார். உலக அளவில் அதிக சக்தி வாயந்த பெண்ணாகவும் நூயி கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

மல்லிகா சீனிவாசன்

தமிழகத்தை சேர்ந்த மல்லிகா சீனிவாசன், தற்போது டாஃபே அமைப்பின் இயக்குநராக பொறுப்பு வகித்து வருகிறார்.

கல்லூரிப் படிப்பை சென்னையில் முடித்த அவர் பின்னர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பயின்றார். கடந்த 25 ஆண்டுகளாக தரமான டிராக்டர் களை உற்பத்தி செய்து வரும் டாஃபே நிறுவனத்தில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவதிலும், வடிவமைப்பதிலும் மல்லிகா மிகுந்த அக்கறை செலுத்தி வந்துள்ளார்.

இதோடு மட்டுமல்லாமல் கல்வி மற்றும் சுகாதார வளர்ச்சிக்கு உதவும் நோக்கில் பிரபல கண் மருத்துவமனை அமைப்பான சங்கர நேத்ரால யாவுடனும், சென்னை புற்றுநோய் மருத்துவ மனையுடனும் இணைந்து செயலாற்றி வருகிறார்.

விவசாயம்: சின்னப்பிள்ளை

மதுரை மாவட்டத்தில் உள்ள புலிச்சேரி கிராமத்தில் பிறந்த அவர் விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் நில உரிமையாளர்களுக்கும் இடையே பாலமாக விளங்கி விவசாயம் செழித்து விளங்க நடவடிக்கை எடுத்தார்.

பின்னர் தன் பவுண்டேஷன் அமைப்பின் களஞ்சியம் என்ற இயக்கத்தில் இணைந்து செயல்படத் துவங்கினார். இந்திய நாட்டில் உள்ள பெண்களுக்கு இவர் முன்னுதாரணமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-7/79486.html#ixzz30KQGtGEg

தமிழ் ஓவியா said...


அப்படியே மின் தடையைப் போக்க யாகம் ஒன்றையும் நடத்தலாமே!


அண்ணாவுக்கு நாமம் போடும் அ.தி.மு.க அரசாங்கம், தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் முக்கிய கோயில்களில் மழை வேண்டி வருண ஜெப பூஜையை இந்து அறநிலையத்துறை நேற்று நடத்தியுள்ளது.

சரி, அப்படியே மின்சாரம் வேண்டியும் ஒரு பூஜை போடுங்க. மழை வேண்டும் என்று யாகம் செய்தால் பூணூல் காட்டில்தான் நல்ல மழை. வட இந்திய மாநிலங்களான உத்தரகாண்டு மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளம் வந்து மக்கள் மாண்ட பொழுது அங்கு மழையை நிறுத்த இந்த பூணூல் விஞ்ஞானிகள் யாகம் செய்ய வேண்டியதுதானே!

மழையை உண்டாக்க முடியும் என்றால் மழையை நிறுத்தவும் முடியும் தானே! ஆனால் உண்மை என்னவென்றால் இதில் எதுவும் நடக்காது. யாகம் என்பதே பூணூல் கூட்டம் வயிறு வளர்க்கத்தானே. என்ன சொல்லுறது. சரிதானே?

Read more: http://viduthalai.in/page-8/79470.html#ixzz30KQWvxPd

தமிழ் ஓவியா said...


அரசுக்கு இப்படி மதம் பிடிக்கலாமா?

தமிழக அரசின் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை என்பது, நீதிக்கட்சி ஆட்சியினால், பனகல் அரசர் முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்டு, பலத்த எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் படி அமைக்கப்பட்டதாகும்.

மடங்கள், கோவில் பெருச்சாளிகள், சொத்தை, வரு மானத்தை கொள்ளையடிப்பதைத் தடுத்து, ஒழுங்கு முறையாக அதன் வரவு - செலவுகள் தணிக்கைக்குட் படுத்தும் நிலையை உருவாக்கவே ஏற்படுத்தப்பட்ட துறைதானே தவிர, ஹிந்து மதப் பக்தியையோ, மூட நம்பிக்கைகளையோ பிரச்சாரம் செய்யும் சனாதன சவுண்டி வேலை செய்வதற்காக ஏற்பட்டதல்ல.

அதுபற்றிய முழு விவரம் தமிழில் தேவையெனில், மறைந்த டாக்டர் நம்பி ஆரூரான் அவர்களது நூலை (அது அவரது முனைவர் பட்ட ஆய்வுக்கானது) படித் தாலே விவாதங்கள் சட்டமன்றத்தில் எப்படியெல்லாம் நடந்தன என்பது எவருக்கும் புரியும்.

அப்படிப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை, கோவில்களில் மழை வேண்டி யாகம், பூஜை, புனஸ்காரம் நடத்த ஆணை யிட்டிருப்பது மிகவும் கேலிக்குரியதான செயல் அல்லவா!

இந்தத் துறை ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரியின்கீழ் இயங்கும் நிலையில், அரசின் மதச்சார்பற்ற தன்மைக்கு முற்றிலும் வேட்டு வைத்து, அரசின் துறை இப்படி நகைப்பிற்குரிய வகையில் நடந்துகொள்வது வன்மையான கண்டனத்திற்குரியது ஆகும்.

மேலும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை (திஸீபீணீனீமீஸீணீறீ ஞிவீமீ) என்ற இந்திய அரசியல் சட்டத்தின் 51 ஆவது பிரிவின்கீழ், அறிவியல் மனப்பான் மையை வளர்த்தல், ஏன்? எதற்கென்று கேள்வி மூலம் அறிவைப் பெருக்குதல், மனிதநேயம், சீர்திருத்தம் செய்தல் என்பவை வற்புறுத்தப்பட்டுள்ள நிலையில்,

யாகம் செய்தால், ஜெபம், பிரார்த்தனை செய்தால் மழை வரும் என்று கூறிடுவதும், இந்தப் பச்சை மூட நம்பிக் கைகளை தமிழக அரசின் ஒரு துறையே பரப்பிடுவதும் எவ்வகையில் ஏற்கத்தக்கது? அரசியல் சட்ட விரோத நடவடிக்கை அல்லவா?

யாகம் செய்தால் மழை வரும் என்றால், யாகம் செய்யும் எவரும் ஏன் குடையோடு செல்வதில்லை?

மழையை வரவழைக்க யாகம் - பூஜையால் முடியும் என்றால்,

அதிக மழை பெய்து வெள்ளம் வருவதைத் தடுக்க, நிறுத்த எந்த யாகம், எந்த ஜெபம் செய்யவேண்டும்?

எந்த அறிவாளியாவது, இந்து அறநிலையத் துறையில் ஆணையிட்ட அதிகாரிகளான அறிவுக் கொழுந்து களாவது கூறுவரா?

மரங்களை வெட்டுவது, காடுகளை அழித்து மொட் டையடித்தல் இவைகளைத் தடுத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்காமல் இப்படியா உலகம் கைகொட்டி நகைக்கும் அவமான அறியாமை ஆட்டங்கள் ஆடுவது?

கலைஞர் முன்பு முதல்வராக இருந்தபோது, செயற்கை மழையையே விஞ்ஞானம்மூலம் வர வழைத்துக் காட்டினார்களே, (செலவு அதிகம் என்பதால் அதை செய்வது எளிதல்ல என்றாலும், அப்படிப்பட்ட அறிவியல்பூர்வமான முறைகள் அல்லவா முக்கியம்).

முன்பு சோவியத் ரஷ்யாவாக இருந்தபோது, மாஸ்கோ பல்கலைக் கழக வளாகத்தில், இந்திரா காந்தி சிலை திறக்க, இந்தியப் பிரதமராக இராஜீவ் காந்தியை அழைத்திருந்தனர். அந்நிகழ்ச்சி நடைபெற இரண்டு நாள் இருக்கும்பொழுது, அங்கு கடும் மழை பெய்த நிலை.
சோவியத் அரசு, விஞ்ஞானிகளை அழைத்து யோசனை கேட்டது,

உடனே விஞ்ஞானிகள், அது ஒரு பிரச்சினை அல்ல; மேகங்களைக் கலைத்துவிடுவோம்; நிகழ்ச்சி மழையின்றி நடைபெறும் என்று உறுதி கூறி, நடத்திக் காட்டினர். அவ்வளவு அறிவியல் முன்னேற்றம், வளர்ச்சி.

இங்கோ, முழங்கால் அளவில் நின்று அமிர்தவர்ஷினி ராகம் - குன்னக்குடி அய்யர் வயலின்மூலம் என்றெல் லாம் செய்தனரே, பலன் என்ன? மழை பெய்ய வில்லையே!

தனியார் மூடத்தனத்திற்குப் பதிலாக, தமிழக அரசின் துறையே இப்படி அறியாமை நோயைப் பரப்பலாமா?

இந்து மதக் கிறுக்குத்தனத்திற்கு ஓர் எல்லையே இல்லையா?

- ஊசி மிளகாய்

Read more: http://viduthalai.in/e-paper/79500.html#ixzz30QGoVcWS

தமிழ் ஓவியா said...


மோடியின் குஜராத் மாநிலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் குமுறல்


மோடியின் குஜராத் மாநிலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் குமுறல்
ஆயிரக்கணக்கானோர் ரத்தத்தால் கைரேகைப் பதிவு

அகமதாபாத்.ஏப்.30- குஜராத் அரசின் முன்மாதிரி வளர்ச்சித் திட்டம் என்று விளம்பரப்படுத்தி வரு வதை எதிர்த்து, குஜராத் மாநிலத்தின் பல பகுதி களிலிருந்தும் தாழ்த்தப்பட் டவர்கள் அகமதாபாத் நக ரில் திரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இரத் தத்தால் கை ரேகைகளைப் பதிவு செய்துள்ளனர். ஏக் ஆவாஸ், ஆக் மோர்ச்சா என்கிற அமைப் பின் தீர்மானத்தின்படி குஜ ராத் அரசின் கொள்கை களால் தாழ்த்தப்பட்ட சமூ கமே வருத்தத்தில் ஆழ்ந் துள்ளது. வளர்ச்சித்திட்டம் என்கிற பெயரில் ஒரு சார் பாகவும், ஒடுக்கப்பட்டவர் களுக்கு எதிராகவும் இருப் பதாக குற்றம் சாட்டியுள் ளது.

தாழ்த்தப்பட்டவர்களுக் கான சமூக சேவகர் ஜிக் னேஷ் மெவானி, குஜராத் அரசு தாழ்த்தப்பட்டவர் களின் வாழ்க்கையில் மாற் றம் ஏற்படுத்தும் திட்டங் களைப் புறக்கணித்துள்ள தாக குற்றம் சாட்டி உள் ளார்.

மாநில முதல்வர் நரேந் திர மோடி கூறிவரும் மாதிரி வளர்ச்சியில் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளைப் பெரிதும் புறக்கணித்துள்ளார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலங்களை தொழிலதிபர் களுக்கு அரசு வழங்கி உள்ளது. எங்கள் தீர்மானங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும்,. பழங்குடி இனத்தவர் களுக்கும் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் நில உச்சவரம்பு சட்டப்படி நிலங்களை வழங்குமாறு கோரி உள்ளோம். மனித மலங்களை சுமப்பதைத் தடை செய்யவேண்டும் என்றும், அப்பணிக்கான ஒப்பந்தங் களைப் போட்டு பணிகள் மேற்கொள்வதையும் அரசு முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்றும் கோரி உள்ளோம் என்று மெவானி கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, வன்முறைச் சம்பவங்களுக்கான வழக்குகளில் தண்டனை அளிக்கப் பட்டது வெறும் நான்கு விழுக்காடு மட்டுமே. ஆகவே, மாவட்டம்தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வாய்ப்பிருந்தும், குஜராத் அரசு அதுபோன்ற நீதிமன்றங் களை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி அமைக்கப்பட்டால் நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகளும் முடிவுக்குவரும் என்று கூறினார்.

-டைம்ஸ் ஆஃப் இந்தியா, 15-4-20

Read more: http://viduthalai.in/e-paper/79498.html#ixzz30QGxsoCc

தமிழ் ஓவியா said...


மோசடிக்காரர்கள்




மனித சக்திகளுக்கு மேற்பட்ட சக்தி தன்னிடம் இருப்பதாக எவன் கூறினாலும், அவன் எவ்வளவுதான் உயர்நிலையிலிருந்தாலும் சரி அது பித்தலாட்டம், மோச வார்த்தை என்பதை மனத்தில் உறுதியாக வைத்துக்கொள்ளுங்கள்.

- (விடுதலை, 20.5.1948)

Read more: http://viduthalai.in/page-2/79502.html#ixzz30QH9psMU

தமிழ் ஓவியா said...


சித்திரையில் மழையைத் தேடி...


பிற இதழிலிருந்து....
சித்திரையில் மழையைத் தேடி...

சித்திரை மாதம் 15 ஆம் நாள் தமிழ் நாடு முழுவதும்உள்ள முக்கிய கோவில் களில் மழை பெய்ய வேண்டிவருண ஜெப பூஜையை இந்து சமய அற நிலையத் துறை ஒரே நேரத்தில் நடத்தியுள்ளது. பூஜை, புனஸ்காரங்கள் செய்தது மட்டு மின்றி இசைக்கல்லூரி மாணவர்கள் அமிர்தவர்ஷினி, மேக வர்ஷினி ராகங்களைப் பாடி இசை ஆராதனை நடத் தினர் என்றும் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் தண்ணீரில் ஒரு மணி நேரம் நின்று சிவாச்சாரியார்கள் வருணபூஜை செய் தனர் என்றும் செய்திகள் கூறுகின்றன. இதுஒருபுறம், குடி தண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்களும் ஆண்களும் ஆங்காங்கே சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் ஒரு குடம் தண்ணீர் 12 ரூபாய்க்கு வாங்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் மறுபுறம். பருவகால மழை யின் அளவு ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது. சராசரி மழை யளவான 912 செ.மீ. கடந்த ஆண்டு 30 சதவீதம் குறைந்துவிட்டது.

வெப்பமயமாக்கல் அதிகரித்துக் கொண்டே வருவதால் வானிலை மாற்றம் மழையளவை கடுமையாகப் பாதிக்கிறது. தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப்பருவமழை சரியாகப் பெய்யாமல் பொய்த்துவிட்டது.மழை பெய்வதற்கு ஆதாரமான மரங்கள், காடுகள், வனங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் கவனிப் பதில்லை. அவற்றை அழிக்கும் தீய சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுப் பதில்லை. ரியல் எஸ்டேட் என்ற பெய ரிலும் அரசு அலுவலகங்கள் கட்டுதல் என்ற பெயரிலும்வயல்களும் நீர் நிலைகளும் அழிக்கப்படுகின்றன. காடு களை அழித்து கழனியாக்கினான்; குளங்களை வெட்டினான்; ஏரிகள் அமைத்தான்; அணைகள் கட்டினான் என்று அரசர்கள் வரலாற்றில் படித்தவை எல்லாம் மறந்து போய் விடுகின்றன. இருக்கின்ற கண்மாய்கள், ஏரிகள், குளங் கள், வாய்க்கால்கள், இதர நீர்நிலைகளை தூர்வாருதல், ஆழப்படுத்துதல், கரை களை உயர்த்துதல், மழைநீர் வீணாக் காமல் சேகரித்தல் என்ற ஆக்கப்பூர்வ பணிகளில் அரசாங்கம் கவனம் செலுத்துவதில்லை.

வைகையின் கரையை உயர்த்துவ தற்காக நடந்த வேலையில் ஈடுபட்ட இறைவன் சொக்கநாதன் சரியாக வேலை செய்யவில்லை என்பதற்காக மன்னனிடம் பிரம்படிபட்டான் என்பது திருவிளையாடல் புராணம். ஆனால் இன்றைய ஆட்சியாளர்களோ ஏனோ தானோவென்று தூர்வாருதல் உள் ளிட்ட மராமத்துப்பணிகளை செய்வ தால் ஒப்பந்ததாரர்களுக்குப் பயன் கிடைக்கலாம்; மக்களுக்குப் பயன் கிடைப்பதில்லை. மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்; விண்ணின் மழைத் துளி மண்ணின் உயிர்த்துளி என்றெல் லாம் அரசாங்கம் விளம்பரப்படுத்துகிறது நல்ல செயல்தான். ஆனால் காலத்தே செய்ய வேண்டிய மரம் வளர்ப்பு, மழை நீர் சேகரிப்பு, நீர் நிலைகள் பராமரிப்பு போன்றவற்றை உரிய காலத்தில் நிறைவேற்றாமல் இருந்துவிட்டு கடைசி காலத்தில் யாகம் நடத்துகிறோம்.

ஜெபம் செய்கிறோம் என்று கோடிக் கணக்கில் வீணடிப்பதால் என்ன பயன்? மழைக்கஞ்சி காய்ச்சுதல், கழுதை களுக்கு கல்யாணம் செய்தல் என்று பாமர மக்கள் செய்வதற்கும் அரசின் நிர்வாகத்துக்குட்பட்ட அறநிலையத் துறை வருண ஜெபம் செய்வதற்கும் என்ன வித்தியாசம்? சூழும் மழை மேகங்கள் மீது வெள்ளிப்பொடி உள் ளிட்ட ரசாயனப் பொருட்களைத் தூவி மழையைப் பொழிய வைத்ததும் அதே போல தேவையில்லை என்று நினைத்த போது விமானங்கள் மூலம் மேகங் களைக் கலைத்து மழை பெய் யாமல் நிறுத்தியதும் முந்தைய சோவியத் நாட்டில் நிகழ்த்தப்பட்டது என்பது வரலாறு. கோடையில் மழைவர வாடை யிலேயே பணிகளை துவக்கிட வேண் டும். அவ்வாறு வருமுன் காக்கும் வகை யில் செயல்படுவதே சிறந்த அரசாகும்.

நன்றி: தீக்கதிர், 30.4.2014

Read more: http://viduthalai.in/page-2/79504.html#ixzz30QHI3g6h

தமிழ் ஓவியா said...


மோடிக்கு பெருந்தலைவலியாக மாறும் கெஜ்ரிவால்


மோடிக்கு பெருந்தலைவலியாக மாறும் கெஜ்ரிவால்

வாரணாசி, ஏப். 30- மோடி வாரணாசி தொகுதியில் நிற்கப்போகிறேன் என் றதும் கெஜ்ரிவால் அவரை எதிர்த்து நிற்கிறேன் என்று அறிக்கை விட்டார். அறிக்கை விட்டதும் இல்லாமல், டில்லி தேர்தல் முடிந்த கையோடு தனது பரி வாரங்களோடு வாரணாசி சென்றுவிட் டார். நாடு முழுவதும் பல தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிட்டாலும், போட்டியிடும் பெரும்பாலானோர் பிரபலமாக இருப்பதால் கெஜ்ரிவால் வந்து பிரச்சாரம் செய்யவேண்டாம்; நீங்கள் வாரணாசியில் இருந்து முழுவது மாக மோடிக்கு எதிராக திட்டமிட்டு பிரச்சாரம் செய்யுங்கள் என்று அனை வரும் கூறிவிட, கெஜ்ரிவால் எந்த ஒரு தயக்கமும் இன்றி முழுமையாக பிரச் சாரத்தில் இறங்கிவிட்டார். இதுவரை 13 ஜனசபா என்ற மக்கள் அரங்க உரையை நிகழ்த்தியுள்ளார், இங்கு மக்கள் கேள்வி கேட்க இவர் பதில் அளிப்பார். இந்த 13 ஜனசபா மாத்திரமில்லாமல் பல்வேறு சாலைப் பிரச்சாரம் (ரோட் ஷோ) நடத்தியுள்ளார். இந்த அனைத்து நிகழ்ச்சியிலும் லட்சக்கணக்கானோர் பங்குகொண்டனர். இந்தச் செய்தி யாருக்குப் பயம் உண்டாக்குகிறதோ, இல்லையோ- பாஜகவிற்கு பெரும் கிலியை உண்டாக்கிவிட்டது. காரணம் இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகள் மிகவும் பிற்படுத்தபட்டவர் கள் இவர்களின் ஓட்டுக்கள் தான் வெற் றியைத் தீர்மானிக்கும். இதுநாள்வரை நடந்த தேர்தல்களில் சரியான எதிரி வேட்பாளர் நிறுத்தப்படாததின் காரண மாகத்தான் சொற்ப வாக்குகளில் முரளி மனோகர் ஜோஷி வெற்றிபெற்று வந்தார். ஜோஷிக்குப் பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை முரளிமனோகர் ஜோஷி பெற்ற வாக்குகளின் விழுக்காடு ஒன்றும் மிகப்பெரிய அளவில் இல்லை.

இம்முறை காங்கிரசும் நேரிடையாக இல்லாமல், மறைமுகமாக கெஜ்ரி வாலை ஆதரிப்பதுபோல் தொகுதிக்கு அதிகமாக அறிமுகமில்லாத வேட் பாளரை நிறுத்தியுள்ளது. மேலும் காங் கிரசின் பிரபல தலைவர்கள் யாரும் வாரணாசிக்கு சென்று பிரச்சாரம் செய்யவில்லை. ஆகையால் காங்கிரஸ் பெரிய அளவில் வாக்குகளைப் பிரிக் கும் என்று சொல்லமுடியாது. இந்த நிலையில் வெற்றிக்குக் காரண மான அனைத்து வாக்குகளும் கெஜ்ரி வாலுக்குச் செல்லும் சூழல் உருவாகி வருகிறது. அதே நேரத்தில் வாரணாசி மக்களிடம் பாஜக கொஞ்சம் அதிக மாகவே கெட்டபெயர் வாங்கிக் கொண்டு வருகிறது, கெஜ்ரிவாலுக்கு ஆதரவானவர்களைத் தாக்குவது, பேனர்களை கிழிப்பது, பொது இடங் களில் கெஜ்ரிவாலுக்கு எதிராக அசிங்க மான சொற்களை உபயோகப்படுத்துவது போன்றவைகளால் வாரணாசி மக்களி டையே பாஜகமீது வெறுப்பு ஏற் பட்டுள்ளது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்துவதுபோல் கெஜ்ரிவால் தன்னை, யாரும் தரக்குறைவாகப் பேசினால் அவர்களுக்கு பூச்செண்டு களைப் பரிசாக அளியுங்கள் என்று கூற, வாரணாசியில் பல இடங்களில் பூச் செண்டுகளின் வியாபாரம் பெருகியுள் ளது. அதாவது பாஜகவினருக்கு எதிரான நிலை மக்களிடையே உருவாகி விட்டது. இன்னும் தேர்தலுக்கு சில நாள்களே இருக்கும் பட்சத்தில் கெஜ்ரிவாலின் ரோட் ஷோ மிகவும் பிரபலமாகி வருவ தால், தங்களுக்கு விழும் வெற்றிக்கான வாக்குகளை கெஜ்ரிவால் பறித்துவிடு வாரோ என பயம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்துள்ளது. இறுதியாக மோடி ஒருமுறை வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று வாரணாசி பாஜக பிரமுகர்கள் வேண்டுகோள் விடுத்துள் ளனர். மே 12 ஆம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் வாரணாசியில் நடைபெற உள்ளதால் மோடி எப்படியும் இரண்டு முறையாவது வாரணாசியில் பிரச்சாரம் செய்யவேண்டும் என்றும், அதற்கு முன்பு கெஜ்ரிவாலில் பிரச்சாரத்தில் குழப்பம் உண்டாக்கிவிடவேண்டும் என்றும் வாரணாசி பாஜக பிரமுகர்கள் முடிவு செய்துள்ளனர். மோடியின் ஊர்வலத்தில் உள்ளூர் மக்கள் இல்லை கடந்த 24 ஆம் தேதி மோடி தனது வேட்பு மனு தாக்கலின் போது பெரிய ஊர்வலம் ஒன்றை நடத்திக் காண் பித்தார். இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள வாரணாசி மக்கள் பலர் மறுப்பு தெரிவித்துவிட்ட நிலையில் இந்தியா வெங்கும் பலரை கொண்டுவந்து இறக்கியுள்ளனர். முக்கியமாக மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் போன்ற பாஜக ஆட்சியாளும் மாநிலத்தில் இருந்து பெருவாரியான மக்கள் ரயில் மூலம் வாரணாசி வந்து இறங்கியுள்ளனர். ஊர்வலத்திற்காக இறக்குமதி செய்யப்பட்டவர்கள் இது குறித்து வாரணாசிப்பதிப்பான ஹிந்துஸ்தான் என்ற இந்தி நாளிதழில் மோடியின் வேட்பு மனுத்தாக்கலுக்கு முதல் நாள் வாரணாசி ரயில் நிலையம் கும்பமேளாவிற்கு வரும் கூட்டம் போல் நிறைந்துவிட்டது, நாடு முழுவதிலும் இருந்து பல ரயில்களில் பாஜக கட்சி யினர் வந்துகொண்டு இருந்தனர். வாரணாசி மக்கள் மோடியின் ஊர்வலத்திற்கு ஆதரவு அளிக்க வில்லை என்பது வாரணாசி ரயில் நிலையத்தில் வந்திரங்கிய பாஜகவி னரைப் பார்த்தாலே தெரியும் என்று எழுதியுள்ளது.
(ஹிந்துஸ்தான் இந்தி நாளிதழ், வாரணாசி)

Read more: http://viduthalai.in/page-2/79506.html#ixzz30QHPptlc