Search This Blog

9.4.14

பி.ஜே.பி.யில் இருக்கும் பார்ப்பனர் அல்லாதார் சிந்தனைக்கு!

பதவியா - கொள்கையா? 


பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை - அதன் குணம் - மணம் மாறாது என்பதற்கு எடுத்துக்காட்டு. ஹிந்துத்துவா அஜண்டாவை அப்பட்டமாக வெளிப்படுத்திக் கொண்டு விட்டது.

மக்களைப் பிறவியின் அடிப்படையில் பேதப்படுத்தும் வருணாசிரமம் என்பது ஹிந்துத்துவாவின் குருதியோட்டமாகும்.

21 ஆம் நூற்றாண்டிலும் ஆரியம் தன் நஞ்சை தன் விஷப் பையில் அடக்கி வைத்துக்கொண்டு, அதற்குத் தேவைப்படும்பொழுது கக்கும். அதன் வெளிப்பாடுதான் இந்தத் தேர்தல் அறிக்கை.

பி.ஜே.பி.யில் இருக்கும் பார்ப்பனர் அல்லாதார் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். இதில் இந்தக் கால கட்டத்தில் நாம் எழுப்பவேண்டிய வினாக்கள் இருக்கின்றன.

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் நேற்றைய அறிக்கையில் எழுப்பிய வினாக்கள்தான் அவை: தமிழ்நாட்டில் அரசியலால் மாறுபட்டுக் கிடந்தாலும் - சில வித்தியாசமான மண்ணின் மணம் நமக்கென்று உண்டு. அந்த மணம் தந்தை பெரியார் அவர்களால் விதைக்கப்பட்டுப் பயிர் செய்யப்பட்ட உணர்வு அது.

எந்த வகையிலும் பி.ஜே.பி.யோடு கைகோக்க முடியாத உணர்வு அது. 

பி.ஜே.பி.யின் இந்தத் தேர்தல் அறிக்கையை வைத்தே அதனை எளிதில் அடையாளம் காண முடியும். குறிப்பாக, 1. ராமன் கோவில் கட்டுவது 2. பொது சிவில் சட்டம் 3. காஷ்மீர் மாநிலத்திற்கான தனி அந்தஸ்து தரும் இந்திய அரசமைப்புச் சட்டம் 370 ஆவது பிரிவு நீக்கம் - இவற்றோடு ராமன் பெயரைச் சொல்லி சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கும் நிலை. இவைபற்றி பி.ஜே.பி.யோடு கூட்டுச் சேர்ந்த தமிழகக் கட்சிகள் தங்கள் நிலையை கண்டிப்பாக வெளிப்படுத்தியே தீரவேண்டும். மன மாற்றம் அடையவேண்டும்.

அப்படி வெளிப்படுத்தத் தயங்கினால், அது ஒரு கடைந்தெடுத்த கோழைத்தனமும் - அறிவு நாணயமற்ற தன்மையும் கொண்டதாகவே கருதப்படும். இது வரலாற்றில் என்றென்றைக்கும் துரத்திக் கொண்டேதான் இருக்கும்.  இந்தக் கசப்பான உண்மையைச் சுட்டிக்காட்ட வேண்டியது திராவிடர் கழகத்தின் முக்கிய கடமை யாகும்.

குறிப்பாக திராவிட பெயரைக் கட்சியில் வைத்துக் கொண்டு இருக்கிற பெரியார், அண்ணா பெயர்களை உச்சரித்துக்கொண்டு இருக்கிற ம.தி.மு.க. தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவேண்டிய அவசியம் வந்துவிட்டது. 

சாமர்த்தியமாகப் பேசுவது என்பது வேறு - மனச்சான்றுக்குப் பதில் அளிப்பது என்பது வேறு - இரண்டும் ஒன்றல்ல. 1992 டிசம்பர் 6 இல் பாபர் மசூதியை இடித்தபோது ஏற்பட்ட சத்தம், காந்தியடிகளின் மெல்லிய உடலின்மீது பாய்ந்த துப்பாக்கிச் சத்தத்தை நினைவூட் டியது என்ற கருத்தைப் பதிவு செய்துள்ள வைகோ அவர்கள், அப்படி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோவிலைக் கட்டுவோம் என்று சொல்லும்போது - கண்டுகொள்ளாமல் இருக்க முடியாதே! அந்தச் சத்தம் குயிலின் ஓசை என்றும் மாற்றிக் கூற முடியாதே!

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் கல்விக் கடன், தொழில்நுட்பக் கல்வி, புத்தகச் சுமை என்றெல்லாம் சுற்றிச் சுற்றிப் பேசினாலும், இட ஒதுக்கீடு என்ற ஒன்று இந்த நாட்டில் இருக்கிறது; அது ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கானது - மேம்பாட்டுக்கானது என்ற எண்ணம் அறவேயற்றவர்கள் பி.ஜே.பி.யினர் என்பதை அவர் களின் தேர்தல் அறிக்கை காட்டிக் கொடுத்துவிட்டதே! சமூகநீதி என்பது திராவிடர் இயக்கத்தின் அடிநாதம் அல்லவா? அது பி.ஜே.பி. அறிக்கையில் காணவில் லையே! எப்படி இடம்பெறும்? பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிய வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் ஆயிற்றே! இந்தியாவுக்கே வெளிச்சம் பாய்ச்சியவர்கள் நாம் அல்லவா!

 ஈழத் தமிழர் வாழ்வில் மலர்ச்சி ஏற்படும் - தமிழக மீனவர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்ற உத்தர வாதமும் அறவேயில்லையே! இவை எல்லாம்,  மோடி அதிகாரத்திற்கு வந்தால் கிடைக்கும் என்று தமிழ் மக்களை நம்பச் சொன்னவர்கள் பொறுப்பேற்கவேண் டாமா? ஆக, பி.ஜே.பி.யினர் அவர்களின் நிலைப்பாட்டில் அவர்கள் கண்ணோட்டத்தில் தெளிவாக - உறுதியாகவே இருக்கிறார்கள். இதில் வெளிறிப் போனவர்கள், பதவிக்காக கொள்கைகளைக் கோட்டை விட்டவர்கள்; எதிர்க்கொள்கைகளுக்கு வெண்சாமரம் வீசுபவர்கள் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சில அரசியல் கட்சிக்காரர்களாக இருக்கிறார்கள் என்ற பழிக்குச் சொந்தக்காரர்களாக ஆகப் போகிறார்களா என்பதுதான் இப்பொழுது வெடித்துக் கிளம்பியுள்ள வினாவாகும். 

கூட்டணியை வைத்துக்கொள்வதற்கு முன்பாக வாவது இதுபற்றிப் பேசி இருக்கவேண்டும். முரளி மனோகர் ஜோஷியும், அருண்ஜெட்லியும் எங்கள் தேர்தல் அறிக்கையில் எவை எல்லாம் இடம்பெறும் என்று அண்மைக்காலமாகச் சொல்லி வந்தார்களோ, அவற்றை அட்சரப் பிசகின்றி தங்கள் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு விட்டார்கள்; இதனைத் திராவிடர் கழகத் தலைவரும் தொடர்ந்து எச்சரித்தும் வந்தார் - இவற்றிற்குப் பிறகும்,  இப்படி நடந்துகொள் கிறார்கள் என்றால், அவர்கள் கொள்கைகளைவிட பதவி அரசியலில் அதிக நாட்டம் கொண்டவர்கள் என்பது தான் வெளிப்படும் - என்ன செய்யப் போகிறார்கள்? பார்ப்போமே!

                      ----------------------------”விடுதலை” த்லையங்கம் 9-4-2014

11 comments:

தமிழ் ஓவியா said...


வாக்குச் சாவடிக்குள் ஆர்.எஸ்.எஸ்.: எச்சரிக்கை! எச்சரிக்கை!! டெக்கான் கிரானிக்கல் அபாய அறிவிப்பு



புதுடில்லி.ஏப்.9- வாக்குப் பதிவன்று வாக்குச் சாவடி களில் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் செலுத்தும் திட்டம் குறித்து டெக்கான் கிரானிக்கல் அபாய அறிவிப்பினை வெளி யிட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்சின் முன்னாள் பிரச்சாரக் ஹிந்துத்து வாவின் அடையாளமாக உள்ள மோடி தேசத்தின் மிக உயரிய பதவியை அடைய துடித்துக்கொண்டு செயல் பட்டு வருகின்றார். ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம் செயலில் குதித்துள்ளது.

அன்றாட அரசியலிலிருந்து விலகி இருப்பதாக கருதப்பட்டுவந்த ஆர்.எஸ்.எஸ். தற்போது மோடிக்காகப் பிரச்சாரம் செய்துவருவதோடு, முதன்முதலாக நேரிடை யாக வாக்குச்சாவடிகளில் நுழைந்து செயல்பட உள்ளது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

டில்லி பாஜக தலைவர் ஹர்ஷ்வர்தன், டில்லி சாந்தினி சவுக் தொகுதி வேட்பாளருமாவார். டில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் கட்சியின் வெற்றியை உறுதி செய்ய கொஞ்சம்கூட வெற்றியிலிருந்து நழுவ விடா மல் இருப்பதை உறுதிசெய்ய மூத்த ஆர்.எஸ்.எஸ். தலை வர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். 2009 இல் டில்லியில் ஒரு இடம்கூட பாஜக வெற்றிபெற வில்லை. அனைத்துமே காங்கிரசுக்கே சென்றது.

அதேபோல், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் குறிப்பாக சுயம்சேவக்குகள் உத்தரப்பிரதேசத்தில் பாஜகவினருடன் தோள்கொடுத்து எல்லா செயல்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். வாக்குச்சாவடிகளிலும் நுழைந்து நெருக்கடியான நேரத்திலும் முக்கியப் பங் காற்றிட உள்ளனர். அண்மையில் ஆர்.எஸ்.எஸ்சில் நடை பெற்ற பிரதிநிதி சபா பயிற்சியில் சுயம்சேவக்குகளான ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கு முக்கியமான பயிற்சி களை அளித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/78389.html#ixzz2yRJerz6T

தமிழ் ஓவியா said...


உரிமையைப் பெறும் வழி


நாம் நம்முடைய உரிமைகளைப் பெறுவது என்றாலே என்ன அர்த்தம் என்றால், நம்முடைய உரிமைகளைப் பறித்து வருகிற எதிரிகளின் ஆதிக்கம் அழிவு என்றுதான் அர்த்தம் ஆகும். அவர்களுடைய அழிவின்மீதுதான் நாம் நம் உரிமைகளைப் பெற முடியும்.

- (விடுதலை, 30.5.1951)

Read more: http://viduthalai.in/page-2/78390.html#ixzz2yRJtkzfw

தமிழ் ஓவியா said...


வெள்ளக் கோவிலில் அரசு இடங்களை ஆக்கிரமிக்கும் கோயில்கள் பொதுநல வழக்குத் தொடரப் போவதாக சமூக ஆர்வலர்கள் முடிவு


வெள்ளக்கோவில், ஏப். 9- வெள்ளக் கோவில் பகுதியில் அரசுக்குச் சொந்த மான இடங்களை ஆக்கிரமித்து புற்றீச லென பெருகி வரும் கோயில்களை அப்புறப்படுத்த பொதுநல வழக்குத் தொடரப்போவதாக சமூக ஆர்வலர்கள் முடிவு செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வெள்ளக்கோவில் இரண்டாம் நிலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளி லுள்ள அரசு இடங்களைக் கையகப் படுத்தி மதவழிபாட்டுத் தலங்களை அமைக்கும் சட்ட விரோதச் செயல்கள் சமீபகாலமாக வேரூன்றி வருகின்றன.
வெள்ளக்கோவிலுக்கு அருகிலுள்ள தீத்தாம்பாளையம் என்னுமிடத்தில் அரசு நிலத்தில் கட்டப்பட்ட கோயில் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் உயர்நீதி மன்ற உத்தரவின் மூலம் அகற்றப் பட்டது. மேலும், சாலையின் குறுக்கே கட்டப்பட்ட இரண்டு கோயில்களை அப்புறப்படுத்த வேண்டுமென்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை அரசு அதிகாரிகள் இப்பகுதியில் இன்று வரை அமலாக்கவில்லை.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டு களுக்கு முன் வெள்ளக்கோவில் இரண் டாம் நிலை நகராட்சிக்குட்பட்ட வி.பி.எம்.எஸ் நகரில் சுப்பிரமணியம் என்பவரை மிரட்டி தற்போதைய ஆளும் கட்சியின் காங்கேயம் சட்ட மன்ற உறுப்பினர் உள்ளிட்ட வெள்ளக் கோவில் நகராட்சி தலைவர் மற்றும் ஆளும் கட்சி வகையறாக்கள் குறைந்த விலைக்கு காலியிடத்தை விற்பனைக்குக் கேட்டுள்ளனர். அவர் தர மறுத்ததால் அவருடைய வீடு மற்றும் காலியிடங் களுக்கு வழிப்பிரச்சினையை உண்டாக் கும் நோக்கோடு அவர் வீட்டின் முன் உள்ள அரசுக்குச் சொந்தமான சாலை யோர நிலத்தில் கோயில் கட்டுவதற்காக ஒரு ஆக்கிரமிப்பை ஏற்படுத்தினார்கள். இது குறித்து திராவிடர் கழகத்தின் சார்பில் சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையாளர், வருவாய்க் கோட்டாட் சியர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகி யோருக்கு புகார் மனு அளிக்கப்பட் டுள்ளது (புகார் மனு தேதி: 26.7.2012). மேலும் இது சம்பந்தமாக பாதிக்கப் பட்ட நில உரிமையாளர் கொடுத்த புகாரின் மீதும் அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அரசியல்வாதிகளை அனுசரித்ததால் சிறிய ஆக்கிரமிப்பு அரசு நிலத்தில் பெரிய கோயிலாகக் கட்டப்பட்டது. இது குறித்து சுப்பிரமணியம் காங்கே யம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந் துள்ளார் (வழக்கு எண்: 218.2012). இந்த சட்ட விரோத கோயிலை அகற்ற விரை வில் நீதிமன்ற ஆணை கிடைக்கப் பெறும் சூழ்நிலை உள்ளது.


தமிழ் ஓவியா said...

இதைத்தொடர்ந்து தற்போது வெள்ளக்கோயில் இரண்டாம் நிலை நகராட்சிக்குட்பட்ட 8 ஆவது வார்டு பகுதியான இந்திராகாந்தி நகரில் வினா யகர், கருப்பணசாமி, கன்னிமார்கள் ஆகிய கடவுள் என்று சொல்லப்படு கின்ற கற்சிலைகளுக்கு கோயில் கட்ட அரசு நிலம் மீண்டும் கையகப்படுத்தப் பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் இக்கோயில் கட்டுவதற்கு பணம் பட்டுவாடா செய்வதன் மூலம் இப்பகுதி மக்களின் வாக்குகளைப் பெற முடியும் என்ற நோக்கோடு வழக்கம் போல் தற்போதைய ஆளும் கட்சியினர் சந்தர்ப்பத்தை சாதகமாக்க களமிறங்கி யுள்ளனர். இந்த யுக்தியை தேர்தல் ஆணையம் எவ்வாறு கண்டுபிடிக்கும் என்று மார்தட்டியும் வருகின்றனர்.

ஆகவே தனிப்பட்ட விருப்பு, வெறுப்பிற்காக கடவுள் என்ற பெயரால் அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள ஆக் கிரமிப்புகளை அகற்றவும், அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப் புகளை அகற்றவும், அரசு நிலத்தில் மத சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புக்கள் பெரு குவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கோடும், இது போன்ற அத்து மீறல்களை தடுக்க எவ்வித நடவடிக் கையும் எடுக்காமல் மதச்சார்பின்மை யைக் குழிதோண்டிப் புதைத்துக் கொண்டு, சட்டவிரோதச் செயல்கள் புரியும் அரசியல்வாதிகளுக்கு உடந்தை யாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது சட்ட ரீதியிலான, நீதிமன்ற நடவடிக் கைகள் மேற்கொள்ள விருப்பதாக வெள்ளக்கோயில் பகுதிவாழ் மதச்சார் பின்மையாளர்களும், சமூக ஆர்வலர் களும் தெரிவிக்கின்றனர்.

- ச.மணிகண்டன்,
திருப்பூர் மாவட்டச் செய்தியாளர்

Read more: http://viduthalai.in/page-2/78392.html#ixzz2yRK32G2I

தமிழ் ஓவியா said...


சமமற்ற சமுதாயத்தில் சம வாய்ப்பு என்ற முழக்கம்?


பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லை; அ

தற்கு மாற்றாக, கல்வி, மருத்துவம், பிழைப்பு அனைத்திலும் சூழ் நிலைக்கு ஏற்ற சம வாய்ப்பை உருவாக்குவார் களாம்.

இது நாள் வரை, மற்றவர்கள் செய்த இட ஒதுக்கீடு முறை வெறும் சம்பிரதாயமான ஒரு முறையாகத் தான் இருந்ததாம்.

அதனால், இந்த சம வாய்ப்பு முறையை அறிவிக்கிறது பாஜக.

சென்ற 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது, இதே பாஜக இட ஒதுக்கீடு குறித்து தனது 2009 தேர்தல் அறிக்கையில் என்ன கூறியது?

கல்வி, வேலை வாய்ப்பில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மற்றும் பழங்குடியினர்க்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் தற்போதுள்ள இட ஒதுக்கீடு தொடரும்; அத்துடன் இல்லாமல், பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என கூறியிருந்தது.

2009 இல் இட ஒதுக்கீடு தொடரும் என்று சொன்ன பாஜக, 2014 தேர்தல் அறிக்கையில் அதற்கு முற்றிலும் மாறாக, சம வாய்ப்பு தருவோம் என பார்ப்பன குரலை எதிரொலிக்க என்ன காரணம்?

ஒரு பக்கம் மோடி பிற்படுத்தப்பட்டவர்; முதன் முதலாக ஒரு பிற்படுத்தப்பட்டவரை பிரதமராக பாஜக முயன்றுள்ளது என்று சொல்லிக் கொண்டே, இன்னொரு பக்கம், இட ஒதுக்கீட்டின் அடித்தளத்தையே தகர்க்கும் வகையில், தேர்தல் அறிக்கையில் பாஜக அறிவித்துள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான ஒரு பிரச்சினையை, பெரும்பான்மை மக்களை இழிவு படுத்தி, சூத்திரர் என்றும், பஞ்சமர் என்றும் கூறி, அவர்களுக்கு கல்வி மறுத்து, அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த சமுதாயத்திற்கு, ஓரளவு முன்னேறிட வாய்ப்பாக அமைந்த இட ஒதுக்கீட் டில் கை வைக்க முயல்கிறது பாஜக.

அம்பேத்கரும், பெரியாரும் போராடிப் பெற்றுத் தந்த உரிமைகளை, சம வாய்ப்பு என்கிற பெயரில் பறித்திட தூண்டில் வீசுகிறது பாஜக.

இன்றைக்கு பாஜகவிற்கு தமிழ் நாட்டில் ஆலவட்டம் போடும் சீட்டணி கட்சியினர் இதற் கும் மவுனம் காப்பார்களா?

மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படை யில் சமூக நீதி காவலர் வி.பி.சிங், பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு வழங்கிய இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த பார்ப்பன கூட்டத்திற்கு கன்னத்தில் அறைந்தாற் போல், அன்றைய உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தின வேல் பாண்டியன் சொன்னாரே; சமமற்ற சமுதா யத்தில் சம வாய்ப்பு என்பது தவறு என தீர்ப்பில் கூறியுள்ளாரே;

சிறுபான்மை மக்களுக்கு எதிரான விஷயங்களை, பாஜக தேர்தல் அறிக்கையில் தெளிவாக கூறி உள்ளது; சமூக நீதி விஷயத்திலும், பாஜக, அரசியல் சட்டத்திற்கு எதிரான நிலையை எடுத்துள்ளது.

பின் எந்த விஷயத்திற்காக மோடி பிரதமராக வேண்டும்; பாஜகவை ஆட்சியில் அமர்த்த வேண் டும் என இங்குள்ள பாஜக சீட்டணியில் உள்ள வர்கள் மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். பல ஊர் களில், தற்போது தமிழகத்தில் ஆளும் கட்சி யினரும், வேட்பாளர்களும், பொதுமக்களால் விரட்டி அடிக்கப்படுவதாக ஊடகச் செய்திகள் வருகின்றன.

சமூக நீதி விஷயத்தில், பாஜகவின் நிலைப் பாட்டை ஆதரிக்கும் கட்சிகளுக்கும், தமிழ் நாட்டில் அந்த நிலைமை கட்டாயம் வரும்.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/78396.html#ixzz2yRKQUyzH

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க. தேர்தல் அறிக்கை:

ராமர் பாலத்தை பாதுகாப்போம் என்று கூறுவது வளர்ச்சிக்கு எதிரானது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தகவல்

சென்னை, ஏப். 9- பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் ராமர் கட்டிய பாலத்தை பாதுகாப்போம் என்று கூறுவது அறிவியலுக் கும், பகுத்தறிவுக்கும், வளர்ச்சிக்கும் எதிரானது என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறி உள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ் ணன் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:-

பாரதீய ஜனதா கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை புதிய மொந்தை யில் பழைய கள் என்பதாகக் கூட இல்லை. பழைய மொந் தையில் பழைய கள் என்ப தாகவே அமைந்துள்ளது. மோடி ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்களால் சிறுபான்மை மக்கள் கூட கவரப்பட்டுள் ளதாகவும், அவர்கள் கூட பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க தயாராக இருப் பதாகவும் ஒரு பொய்த் தோற்றத்தை ஏற்படுத்த பார தீய ஜனதா கட்சி தலைமை முயற்சித்து வந்தது.

ஆனால் அவர்களது தேர் தல் அறிக்கை வகுப்புவா தத்தை முன்வைப்பதோடு, தாராளமய பொருளாதார கொள்கையை வலியுறுத் தும் கட்சிதான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக் குரிய இடத்தில் கோவில் கட்டுவோம், ஜம்மு-காஷ் மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதியை அளிக்கும் அரசி யல் சட்டப்பிரிவு 370அய் ரத்து செய்வோம். பொது சிவில் சட்டம் கொண்டு வரு வோம், தமிழக மக்களுக்கு பயனளிக்கும் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம் என்ற ஆர். எஸ்.எஸ். அமைப்பின் அனைத்து செயல்திட்டங்க ளையும் உள்ளடக்கியதா கவே பாரதீய ஜனதா கட்சி யின் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது.

தமிழக மக்களின் 150 ஆண்டு கால கனவான சேது சமுத்திர திட்டத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முற்றாக முடக்குவோம் என்று கூறு வதும், ராமர் கட்டிய பாலத்தை பாதுகாப்போம் என்று கூறுவதும் முற்றிலும் அறிவியலுக்கும், பகுத்தறி வுக்கும், வளர்ச்சிக்கும் எதி ரானது.

காங்கிரசுக்கு மாற்று நாங்கள் தான் என்று கூறும் பாரதீய ஜனதா கட்சி பொரு ளாதாரத்துறையில் அதே காங்கிரசின் தாராள மயமாக் கல் கொள்கையைத்தான் தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. பாரதீய ஜனதா கட்சி ஒருபோதும் மாறாது, மாறவும் முடியாது என் பதை அவர்களது தேர்தல் அறிக்கையே தெளிவாக உணர்த்துகிறது.
இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/78400.html#ixzz2yRLQ07RM

தமிழ் ஓவியா said...


குற்றவியல் நீதிமன்றமா அல்லது ஒத்தி வைப்பு நீதிமன்றமா?


இது குற்றவியல் நீதி மன்றமா அல்லது ஒத்தி வைப்பு நீதிமன்றமா? என்று முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பியிருக்கிறார். மேலும் நீதிபதி அவர்கள், இந்த வழக்கு விசாரணை கடந்த பதினைந்து ஆண்டு களாக நடந்து வருகிறது. விசாரணை நடந்த நாள்களைக் காட்டிலும், ஒத்தி வைக்கப்பட்ட நாள்கள் தான் அதிகம் இருந்துள்ளது. தனி நீதிமன்றம் மற்றும் தனி நீதிபதி நியமனம் செய்ததின் நோக்கம், விசாரணை தினமும் நடந்து விரைவில் முடிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. இனியாவது வழக்கு தடை இல்லாமல் நடக்க வேண்டும் என்றெல்லாம் சிறப்பு நீதிமன்ற குன்ஹா கருத்து தெரிவித்திருக்கிறார்.

- கலைஞர் கடிதத்திலிருந்து முரசொலி (10.4.2014)

Read more: http://viduthalai.in/e-paper/78487.html#ixzz2yXDZdG6n

தமிழ் ஓவியா said...


நடுநிலை தவறும் மோடி இந்தியாவின் பிரதமருக்குத் தகுதியானவர் அல்ல!


அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் தலையங்கம்

வாஷிங்டன் ஏப்.10- இந் தியா போன்ற பல மொழி, பல இனம், பல மதம் கொண்ட ஒரு நாட்டிற்கு ஒரு சார்புப் போக்குடைய நரேந் திரமோடி பிரதமருக்கான தகுதியான ஒருவராக இருக்க முடியாது ன்று அமெரிக் காவிலிருந்து வெளிவரும் வாசிங்டன் போஸ்ட் ஏடு தலையங்கம் தீட்டியுள்ளது. முக்கிய விவரங்கள் வருமாறு:

உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா வின் தேர்தல் திருவிழா தொடங்கி விட்டது. உல கமே இதை எதிர்பார்த்துக் காத்து இருக்கிறது, காரணம் இந்தியாவில் ஏற்படும் அரசியல் மாற்றம் உலக அரங்கில் பொருளாதாரம், அரசியல் மற்றும் வெளியுற வுத்துறையில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் காரணியாக திகழும். ஆகையால் இந்தியா வின் தலைமைப்பதவிக்கு நடுநிலையான உலக நாட் டின் போக்குகளை நன்கு அறிந்து ஈடுகொடுப்பவராக இருக்கவேண்டும், அதே நேரத்தில் பொருளாதார ஏற்ற இறக்கங்களை சமன் செய்யும் நோக்கோடு உறுதி யான திட்டங்களை வகிப் பவராக இருக்கவேண்டும் என அய்ரோப்பிய யூனியன் நாடுகளும், அமெரிக்க மற்றும் கீழை நாடுகளும் ஆர்வம் கொண்டு கவனித்து வருகின்றன. தற்போதைய அரசியல்களத்தில் இருக்கும் நரேந்திரமோடிதான் இந்தி யாவின் பிரதமர் என்ற ஒரு மாயையை ஊடகங்கள் மூலம் மக்களிடையே ஏற் படுத்திவிட்டார்கள்.

வாஷிங்டன் போஸ்ட் தலையங்கம்

இது குறித்து வாஷிங் டன் போஸ்ட் தனது தலை யங்கத்தில் குறிப்பிட்டுள் ளதாவது: நரேந்திர மோடியை பிரதமராக முன் னிறுத்தும் பாரதீய ஜனதா கட்சி மூன்றில் ஒரு பங்கு இடத்தை பிடித்து ஆட்சிக்கு வரும் என்று இந்திய ஊட கங்கள் கூறிக்கொண்டு இருக் கின்றன. இது உண்மையா பொய்யா என்று இன்னும் 5 வாரங்களில் தெரிந்துவிடும். பிரதமராக முன்னிறுத் தப்படும் நரேந்திரமோடி தற்போது ஆட்சியில் இருக் கும் குஜராத மாடல் குறித்து பேசிவருகிறார். இதை மாதிரியாகக் கொண்டு இந் தியா முழுவதும் செயல் படுவேன் என்று கூறுகிறார். தன்னுடைய பேச்சால் மக்களைக் கவருகிறார். ஆனால் முதலீட்டாளர்களை எந்த அளவு ஈர்ப்பார் என்று தெரியவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக குஜராத்தின் மாநிலத்தின் வளர்ச்சி ஒரு சதவீதமே வளர்ந்திருக் கிறது. இது அந்த அரசாங் கத்தின் புள்ளி விவரங்களில் இருந்தே தெரிகிறது, குஜ ராத்தை சர்வதேச சந்தை களுக்கு நிகரான ஒரு மாநி லமாக மாற்றியதாக கூறி வருகிறார். இது இந்தி யாவில் உள்ள சுமார் 80 கோடி வாக்களர்களை எப் படி சென்றடையும் என்று தெரியவில்லை.

குஜராத்தோடு ஒப்பிடுவது சரியல்ல!

இந்தியா போன்ற பல கலாச்சாரங்களைக் கொண்ட மாநிலங்களில் அனைத்து மாநிலத்திலும் வெவ்வேறு பிரச்சனைகள்; இவற்றை குஜராத்தின் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப்பேசுவது எந்த அளவிற்கு மக்களிடம் சென்று சேரும்? மோடியின் மீதான மதச்சாயத்தை முதலில் நீக்க வேண்டும், இந்தியாவின் பெருவாரியான வணிகம் சார்ந்த இஸ்லாமியர்களின் மன நிலையில் மாற்றம் ஏறப்பட்டால் அங்கு மோடி போன்றோர் ஆட்சிக்கு வரமுடியும்.ஆனால் மோடி பெரும்பான்மையான இந்துக்களை கணக்கில் கொண்டு பல்லாயிரக்கணக் கான இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட காரணமாக இருந்த 2002 மதக்கலவரம் பற்றி இன்று வரை தெளிவான ஒரு நிலையை மக்களிடம் வைக்கவில்லை. இது குறித்து பத்திரி கையாளர்களிடமோ அல் லது தனது மேடைப் பேச்சுக்களில் கூட எந்த ஒரு கருத்தும் கூறவில்லை. மோடி தலைமையில் ஆட்சி நடந்த போது தான் குஜராத் இனக்கலவரம் நடந்தது. குஜராத்தில் நடந்த கலவரத் தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சரியான அளவில் நிவாரணங்கள் சென்று சேர்ந்ததா என்று கூட அவ ரால் பதிலளிக்க முடிய வில்லை.

மோடியின் ஒரு பக்கச் சார்பு!

1998-ஆம் ஆண்டு முதல் முதலாக பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது பல நடுநிலையாளர்கள் கவலை கொண்டனர். ஆனால் அதை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. அப்போதைய தலைமை யும் மென்மையான போக்கை கடைபிடித்தது. ஆனால் தற்போது நிலைமை அப்படி அல்ல, பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சில் ஒரு பக்கச்சார்பு நடவடிக்கைகள் போன்று தான் தெரிகிறதே தவிர, பொதுவான ஒரு முற் போக்குத் திட்டம் என்று ஒன்றும் தெரியவில்லை, இந்தியா போன்ற நாட்டிற்கு தலைமைப்பதவி வகிப் பவர் பொருளாதாரம், நாட் டின் வளர்ச்சி, தொழில் துறை பெருக்கம், எல்லை நாடுகளுக்குள்ளான அமைதிப்போக்கு மற்றும் உலக நாடுகளுக்குள்ளான நல்ல நட்பான சூழல் கொண்ட திட்டமொன் றைத்தான் தனது நிலைப் பாடாக கொள்ளவேண்டும். நரேந்திரமோடியின் வெற்றி இதில் தான் இருக்கிறது, ஆனால் தற்போது அவர் அதிகமாக நடுநிலை தவறிய பேச்சுக்களையே (Prejudicial rhetoric) பேசிக் கொண்டு வருகிறார். இது இந்தியா போன்ற நாடு களுக்கு நல்லதாக அமை யாது.

(அமெரிக்காவின் வாசிங்டன் போஸ்ட் (9.4.2014) தலையங்கம்)

Read more: http://viduthalai.in/e-paper/78484.html#ixzz2yXDu1rEa

தமிழ் ஓவியா said...


ஆதரிப்பது...

எந்த முறையிலாவது புராணப் பண்டிதர்களைப் பொது மக்கள் ஆதரிப்பது, கொள்ளியை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வது போலாகும்.
(குடிஅரசு, 18.5.1930)

Read more: http://viduthalai.in/page-2/78473.html#ixzz2yXEK2BXL

தமிழ் ஓவியா said...


நம்பும்படியாக நீங்கள் ஏதாவது சொல்லுங்கள் மோடி ஜி.

பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில், நரேந்திர மோடி தன்னை முன்னிலைப்படுத்தி சில உறுதிகளைத் தந்துள்ளார். ஒன்று. தனக்காக எதுவும் செய்யமாட்டேன்; எந்த கெட்ட எண்ணத்திலும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன் என கூறியுள்ளார்.

குஜராத்தில் மூன்றாவது முறை யாக தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி, இந்த வாக்குறுதிகளை காப்பாற்றும் விதமாக அங்கே நடந்து கொண்டாரா?

மோடியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த அமீத் ஷா மீது போலி கொலை வழக்கு குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் தான் தற்போது உ.பி.யின் பாஜக தேர்தல் பொறுப்பாளர்; அவர் பொறுப் பேற்றதும்தான், உ.பி.யில் முசாபர் நகரில் கலவரம் வெடித்து, இஸ்லாமி யர்கள் இன்றும் முகாம்களில் இருக் கும் சூழ் நிலை ஏற்பட்டது. அண்மை யில், ஜாட் மக்களிடம், நீங்கள் பழிவாங்கும் நேரம் வந்து விட்டது என வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியவர் அமீத் ஷா, இவர் மோடியின் வலது கரம்.

குஜராத்தில், மோடியின் அமைச் சரவையில் பாபு போகாரியா, புரு ஷோத்தம் சோலங்கி என்ற இரண்டு அமைச்சர்கள் மீதும், சுரங்கம் மற்றும் மீன் துறையில் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. போகாரியா மீது ரூ.54 கோடி ஊழல் குற்றச்சாட்டில் மூன்றாண்டு தண்டனை விதித்தது போர்பந்தர் நீதி மன்றம். இன்றும் அவர்கள் அமைச் சர்களாகத் தான் இருக்கிறார்கள்.

மாயா கோட்னானி. இவரும் மோடியின் அமைச்சரவையில் இருந் தவர்; 2002 குஜராத் கலவரத்தில் நேரடி யாக ஈடுபட்டு 29 ஆண்டுகளுக்கு தண்டனை பெற்றதனால், அமைச்சர் பதவி இழந்தவர்;

மத்திய அரசின் தணிக்கை அலு வலக அறிக்கையின்படி, அதானி, எஸ்ஸார், ரிலையன்ஸ், லார்சன் டோப்ரோ போன்ற மிகப் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு தவறான முறையில் சலுகைகள் தந்து அரசுக்கு ரூ.1275 கோடி இழப்பு 2011-12-ல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

ஏழை விவசாயிகளின் நிலங்களை, அச்சுறுத்தி, குறைந்த விலையில் அதானி போன்ற பெரும் நிறுவனங் களுக்கு, தாரை வார்த்துக் கொடுத் துள்ளது.

அதானி, அம்பானி நிறுவனங்கள், மோடிக்கு ஆதரவாக இருப்பதற்கு, அவர் இத்தகைய சலுகைகளை அள்ளி வீசுவதால் தான் என கேஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு இதுவரை மோடியோ, அவரது பாஜகவோ, பதில் ஏதும் சொல்லவில்லை.

மோடியை முன்னிலைப்படுத்தும் பிரச்சாரத்திற்கு, இதுவரை ரூ.10000 கோடி கருப்புப்பணம் செலவிட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா கூறிய குற்றச்சாட் டுக்கும் பதில் இல்லை.

இத்தகைய குற்றச்சாட்டுகள் கொண்ட மோடி சொல்கிறார்; எனக் காக நான் எதையும் செய்து கொள்ள மாட்டேன் என்று.

மோடி அவர்களே! நீங்கள் கூறிய வசனத்தை நாங்கள் தமிழ் நாட்டில் ஏற்கெனவே கேட்டிருக்கிறோம். எனக்கு என்று எந்த தேவையும் இல்லை; நான் மாதம் ஒரு ரூபாய் சம்பளம் மட்டுமே பெறுகிறேன் என்று சொன்னவர் மீது தான், இன் றைக்கு பெங்களூர் நீதி மன்றத்தில் அரசு வழக்கறிஞர், வரிசையாக பட்டிய லிட்டு, எந்தெந்த ஊர்களில் எத்தனை ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள் ளது; அவற்றின் இன்றைய மதிப்பு ரூ.5000 கோடிக்கு மேல் என கூறி யுள்ளார். தமிழ் நாட்டில் ஓர் வழக்கு மொழி உள்ளது. யோக்கியர் வருகிறார்; சொம்பை எடுத்து உள்ளே வை என்று

நம்பும்படியாக நீங்கள் ஏதாவது சொல்லுங்கள் மோடி ஜி.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/78482.html#ixzz2yXEUQEK9

தமிழ் ஓவியா said...


தேர்தல் களம்!


தன் மனைவிபற்றி முதன்முதலாக மோடி

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட் பாளர் நரேந்திர மோடி தன்னை திருமண மானவர். தனது மனைவி பெயர் ஜஷோ டபென் என வேட்புமனுவில் முதல்முறையாக அறிவித் துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜன தாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி குஜராத்தின் வதோதரா தொகுதியிலும் உ.பி.யில் வாரணாசி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

வதோதராவில் அவர் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில் தாம் திரு மணமானவர் என்றும் மனைவியின் பெயர் ஜஷோ டபென் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் மனைவியின் சொத்து விவரம், வருமானம் பற்றிய தகவல்கள் தனக்குத் தெரியாது என மோடி தெரிவித்துள்ளார்.

மோடி தமக்குத் திருமணமானதாக குறிப் பிடுவது இதுவே முதல் முறையாகும். இதுவரை வேட்பு மனு தாக்கலின்போது இணைக்கப்படும் பிரமாணப் பத்திரத்தில் வாழ்க்கைத் துணை குறித்து எதுவும் எழுதாமல் வெற்றிடமாகவே விட்டு வந்தார் மோடி. 2001, 2002, 2007 மற்றும் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் மாநில சட்டசபை தேர்தல்களில் மோடி தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் தனது திருமணம் பற்றி குறிப்பிடாமலே வந்தார் மோடி.

இதனால் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுவில் மோடி தனது திருமண நிலை குறித்து குறிப்பிட வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. மோடியின் மனைவி ஜஷோட பென், ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். அவர் மோடியின் சொந்த ஊரான வாத்நகரில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள பிரமன்வதா என்ற கிராமத்தில் வசித்து வருகிறார்.

இது தனி நபர் பிரச்சினை என்றாலும், ஒரு பிரதமருக்கான வேட்பாளர் தன் குடும்ப வாழ்க் கையில் பெண்ணை எந்த அளவுக்கு ஒதுக்கு கிறார் - ஒடுக்குகிறார் - நடத்துகிறார் என்பதை யும் அலட்சியப்படுத்த முடியாதே!

வாக்காளர்களாகிய பெண்கள்தான் இதனைப் பற்றிச் சிந்திக்கவேண்டும்; முடிவு செய்யவேண்டும்.

வேட்பாளர்கள்

தமிழ்நாட்டில் தேர்தல் களத்தில் 845 பேர் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக தென் சென்னை தொகுதியில் 42 பேர்களும், குறைந்த பட்சமாக நாகப்பட்டினத்தில் 9 பேர்களும் போட்டியிடுகின்றனர். ஆலந்தூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 14 பேர் போட்டியிடுகின் றனர்.

வேட்பாளர்கள் ஏப்ரல் 24 ஆம் தேதிக் குள் மூன்றுமுறை தேர்தல் செலவுக் கணக்கைத் தாக்கல் செய்யவேண்டும். வரும் 12 ஆம் தேதி தேர்தல் ஆணையம் தேர்தலில் ஈடுபடும் கட்சி களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த வுள்ளது.

வாக்காளர் பட்டியல்

2014 ஜனவரிக்குப் பிறகு புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்திட விண்ணப்பித்தோர் உள்ளிட்ட புதிய வாக்காளர் பட்டியல் இன்றும், நாளையும் அந்தந்த மாவட்டங்களில் வெளி யிடப்படுகிறது. அதன்படி இப்போது தமிழ் நாட்டில் வாக்காளர்கள் எண்ணிக்கை அய்ந்த ரைக் கோடியாகும்.

ஏ.பி.பரதன்

எங்கள் கட்சிக்கு மட்டுமல்ல; இந்தியா வுக்கே முக்கியமான தேர்தல் இது. இந்தத் தேர்தலில் காங்கிரசுக்கு 100-க்கும் குறைவாகவும், பி.ஜே.பி.,க்கு 170-க்கு மிகாமலும் இடம் கிடைக் கும். இந்த நிலையில், காங்கிரஸ், பி.ஜே.பி. அல்லாத கட்சிகளின் பங்களிப்பு முக்கியமான தாக இருக்கும் என்கிறார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன்.

விசித்திர அரியானா

அரியானா மாநிலத்தில் 1000 ஆண்களுக்கு 879 பெண்கள் என்ற பாலின விகிதம் உள்ளது. இந்த நிலையில், எங்களுக்குத் திருமணத்திற்குப் பெண் பார்த்துக் கொடுத்தால், உங்களுக்கு வாக்குகள் என்று இளைஞர்கள் கூறு கின்றார்களாம்.

Read more: http://viduthalai.in/page-8/78453.html#ixzz2yXJTsmyl