Search This Blog

19.4.14

சாமியைக் கும்பிட்ட காலம்போய் ஹெலிகாப்டரைக் கும்பிடும் புது மூடநம்பிக்கை -கி.வீரமணி கிண்டல்!


சாமியைக் கும்பிட்ட காலம்போய் ஹெலிகாப்டரைக் கும்பிடும் புது மூடநம்பிக்கை

குடந்தையில் தமிழர் தலைவர் கிண்டல்!

கும்பகோணம், ஏப். 18- கோயிலில் சாமியைக் கும்பிட்டவர்கள் இப்பொழுது ஹெலிகாப்ட ரைக் கும்பிட ஆரம்பித்துள்ளனர். இந்த மூடநம் பிக்கையை எதிர்க்கும் வேலையும் திராவிடர் கழகத்திற்கு வந்துள்ளது என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

கும்பகோணத்தில் நேற்று (17.4.2014) மாலை நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத் தில் அவர் பேசியதாவது:

திராவிடர் கழகத்திற்கு இருக்கின்ற கவலை எல்லாம், பெரியார் தொண்டர்களுக்கு இருக்கின்ற கவலை எல்லாம், இந்த தேர்தல் வெறும் அரசியல் தேர்தல் மட்டுமல்ல. அதைவிட முக்கியமானது. ஒரு சமுதாயத்தில் ஏற்படக்கூடிய புரட்சியை முன்னெடுத்துச் செல்வது? எங்களின் நோக்கம்! அதனால்தான், எங்கள் மீது சுமந்து கொண்டு இந்த பணியை செய்து வருகிறோம். திமுக தலைமை யிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி தான் அனைத்து சமுதாய மக்களுக்காகவும் அமைக்கப் பட்டு இருக்கின்ற கூட்டணி. சிறுபான்மை சமுதாய மக்கள் காலங்காலமாக பெறாத உரிமைகள் எல்லாம் பெற்று, இன்றைக்கு மற்ற சமுதாய மக்களுக்கு இரண்டாம் தரமானவர்கள் அல்ல, மூன்றாம் தரமானவர்கள் அல்ல. அனை வரும் சமம் என்ற நிலையை உருவாக்கியது டாக்டர் கலைஞர் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சாதனை.

முதல் வெற்றி சிறுபான்மை சகோதரர்கள் அனைவரும் இன்றைக்கு ஒரே அணியில் இருக் கிறார்கள். இதுவே திமுக தலைமையிலான ஜன நாயக முற்போக்கு கூட்டணியின் முதல் வெற்றி. தேர்தல் வெற்றி இரண்டாவது. இதுவரை தனித் தனியாக இருந்தவர்கள் எல்லோரையும் ஒன் றாக்கி, கைகோத்து இணைய வைத்திருக்கிறது என்றால் இதுதான் இந்த அணியின் (திமுக) முதல் வெற்றி. அச்சார வெற்றி.

ஹெலிகாப்டர் சாமியா?

அதிமுகவினருக்குக் கும்பிடுவது என்பது கைவந்த கலை. உங்களுக்குத் தெரியும். இப்போது அவர்கள் (அதிமுகவினர்) மனிதர்களைப் பார்த்து கும்பிட்டு, கும்பிட்டு சலித்துப்போய், இப்போது ஹெலிகாப்டரை பார்த்து கும்பிடுகிறார்கள். அதுபோன்ற அற்புதமான நிலையில் இருக்கிறார் கள். செய்திகள் வருகின்றன. பார்க்கின்றோம்.

வெள்ளைக்காரன், அந்த காலத்தில் மைல் கல், பெர்லாங்கல் என்று செல்லும் வழியில் இருப்பது தான் கிலோமீட்டர் இருக்கிறது. வெள்ளைக் காரர்கள் நல்ல வாய்ப்பாக நல்லது செய்துவிட்டுப் போய் இருக்கிறார்கள். இப்பொழுது இந்த மைல்கல், பர்லாங்கல் எல்லாவற்றிலும் வெள்ளை அடித்துவிட்டு நம்பர் போட்டு விட்டார்கள். இல்லையென்றால், இவர்கள் மைலீஸ்வரர், பர்லாங்கீஸ்வரர் என்று கல்லை சாமி என்று கும்பிட்டு வந்துவிடுவார்கள். அதைக் கண்டு பிடித்து விட்டோம். தடுத்து விட்டோம். கோயிலில் சாமியைக் கும்பிடும் நிலைமாறி இப்போது புதிதாக மக்களுக்கு என்ன தோன்றுகிறது என்றால் ஹெலிகாப்டர் சாமி வந்திருக்கிறது. எல்லோரும் (அதிமுகவினர்) ஹெலிகாப்டரைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
கும்பிடு போடுவது சாதாரணம். ஆனால், புதிது, புதிதாக ஹெலிகாப்டர் சாமி போன்று உரு வாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். எங்களுக்கு வேலை கொடுக்க உள்ளார்கள்.

1992இல் பாபர் மசூதி இடிப்பு கலவரம் எப்படி நடந்ததோ, அதே போன்று 2002இல் குஜராத் கலவ ரம். எப்படி நடந்தது? இதைப்பற்றி உலக அறிஞர் கள் எல்லாம் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

குஜராத் 2002இல் இனப்படுகொலை, போக் ராம் (றிளிநிஸிளிவி) என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறார்கள். இலங்கையில் ஈழத் தமிழர்களை எப்படி இராஜபக்சே அழித்தாரோ. அதே போன்று, காந்தி பிறந்த நாட்டிலே, குஜராத்தில் இனப்படுகொலை. அதனுடைய எதிரொலி இன்றளவும் காதில் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. அதற்குச் சிறிதுகூட வருத்தம் காட்டாமல், மன்னிப்பு கேட்காமல் அதுதான் என் சாதனை என்று செய்து காட்டியதன் விளைவாகத் தான் அவருக்கு (மோடிக்கு), மற்ற மாநிலங்களின் மத்திய பிரதேசம், சட்டிஸ்கர் மாநில முதலமைச்சர், இராஜஸ்தான் முதலமைச்சர் போன்றவர்களை பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்காமல் மோடி சிறுபான்மையினருக்கு எதிராக தீவிரமாக செயல்படக்கூடியவர் என்ற காரணத்தினால்தான் அவரை பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுத்து உள்ளார்கள். இடதுசாரி தோழர்கள் அம்மையா ரைப் பார்த்து நீங்கள் ஏன் பாஜகவை, மோடியைப் பற்றி விமர்சனம் செய்வதில்லை? பாஜகவுடன் இரகசிய ஒப்பந்தமா? என்று கேட்டவுடன், கடைசியாக நான்கு நாட்களுக்குப் பிறகு, அம்மையார் இப்போது தந்திரமாக, காவிரிப் பிரச்சினையில் மக்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ், பாஜகவினரை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லி இருக்கிறார். அதில் அம்மையாரின் தந்திரம் என்னவென்றால், ஒட்டு மொத்தமாக பாஜகவை, மோடியை எதிர்க் காமல், காவிரிப் பிரச்சினையில் கண்டு கொள்ளாத கர்நாடக பாஜகவை மட்டும் விமர்சிக்கிறார்.

மோடியைப் பற்றியோ, பாஜகவை பற்றியோ நேரடியாக பேசவில்லை. எதிர்க்கவில்லை. இதி லிருந்து தெரிகிறதல்லவா? அம்மையாரின் இரக சிய ஒப்பந்தம் பாஜகவுடன்தான் என்பது புரிகிறது அல்லவா?

முதலமைச்சர் பதில் சொல்வாரா?

பாஜகவின் தேர்தல் அறிக்கை 7ஆம் தேதிக்கு பிறகுதான் கொடுத்து இருக்கிறார்கள். அதிலே, குறிப்பிட்டுள்ள மூன்றுக்கு (கேள்விக்கு) மட்டும் பதில் சொல்வாரா அம்மையார்?

1. பாஜக தேர்தல் அறிக்கையில் இராமன் கோவில் அயோத்தியில் கட்டப்படும் என்று அறிக்கையில் கூறி இருக்கிறார்களே! இதில் அம்மையாரின் நிலைப்பாடு என்ன?

2. யூனிபார்ம் சிவில் கோடு - இதில் அம்மை யாரின் நிலைப்பாடு என்ன?

3. காஷ்மீர் 370 (தனி அதிகாரத்தை) ரத்து செய்ய வேண்டும் என்கிறார்களே, இதில் அம்மையாரின் நிலைப்பாடு என்ன?

குஜராத்தை எதிர்க்கிறோம். பாஜகவை எதிர்க் கிறோம் என்று உதட்டளவில் பேசும் அம்மையார். இதில் அவர்களின் நிலைப்பாடு என்ன?

இங்குள்ள பாஜக கூட்டணியில் உள்ளவர்கள், நடிகர் எல்லாம், மோடி பிரதமர் ஆனால், தண்ணீர் வரும், மின்சாரம் வரும் என்று பேசுகிறார்களே! மோடி பேசியுள்ளார் கேளுங்கள்! நான் உங்கள் குடிநீர் கஷ்டத்தை தீர்ப்பேன். கங்கையும், மற்ற எல்லா நதிகளையும் இணைப்பேன் என்று பேசி இருக்கிறார்.
நாம் கேட்கிறோம், அவர் எப்போது கங்கையை இணைப்பது? நம்ம ஊர் குப்பம்மா, சுப்பம்மா, முத்தன், முனியன் தண்ணீர் தாகம் எப்போது தீருவது? எண்ணிப் பார்க்க வேண் டாமா?

வேடிக்கையான கதை ஒன்று

ஒருவன் கடன் வாங்கிவிட்டு, கொடுக்காமல் இருந்திருக்கிறான். கடன் கொடுத்தவன் எப்போது தருகிறாய்? என்று கேட்டுக் கொண்டு இருக் கிறான். கடன் வாங்கியவன் சொல்கிறான். இந்தா பாரு அய்யா, நீ தேவை இல்லாமல் பேசாதே! இது புளியங்கொட்டை. இதைப் போட்டு, புளிய மரமாக வரும். அப்புறம் புளியம் பழமும் வரும். புளியம்பழத்தை விற்று உனக்குக் காசு தருகிறேன் என்றானாம். அதே போன்று உள்ளது மோடியின் தண்ணீர் கொடுக்கும் திட்டம். கங்கை நதியை இணைக்கும் திட்டம். சிந்தித்துப் பாருங்கள் மக்களே!

மோடி வந்தால் மின்சாரம் வருமா? அவர் என்ன மோடி மஸ்தான் மந்திரவாதியா? மின்சாரம் வேண்டும் என்றால், திட்டம் போட்டு, அதை செயல்படுத்த 3 ஆண்டுகள் தேவைப்படும் என்கிறார்கள். இங்கு உள்ள நடிகர்கள் மோடி வந்தால் மின்சாரம் வரும் என்கிறார்களே, அவர்களைக் கேட்கிறோம்.

குஜராத்தில் வளர்ச்சி, வளர்ச்சி என்கிறார்களே! அங்கே இலவச மின்சாரம் உண்டா? 67 சதவிகிதம் மின்சாரத்தை டாடா, முகேஷ் அம்மானி, கவுதம் அடானி போன்ற பண முதலைகளுக்குத் தாரை வார்த்து கொடுத்துள்ளார். ஏழை எளிய மக்களுக்கு வீட்டுக்கு வீடு வெளிச்சம் இல்லை. மோடி ஆளும் குஜராத்தில் மின்சாரம் இல்லை. அவர் இங்கு வந்து மின்சாரம் தருகிறாராம்! என்ன வேடிக்கை இது?

மோடிக்குத் தேவை - தீவிர சிகிச்சை

1. மோடி அலை விசுகிறது என்றால், ஏன்? அவர் குஜராத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வர வேண்டும் - மற்ற மாநிலங்களுக்கு செல்ல வேண் டும்?
2. மற்ற கட்சிகளில் பிரதம வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில், மோடி பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்து இருக்கிறார்களே! இவர் அலை வீசுகிறது என்றால் ஏன்? தமிழ்நாட்டிற்கு வந்து, மூத்த நடிகர், இளைய நடிகர் வீட்டுக்குச் சென்று பார்த்து வருகிறார்.

சாதாரணமானவர்கள் உடல் நிலை சரியில்லா தவர்கள் மருத்துவமனைக்குச் சென்றால், பொது அறைக்கு செல்லாமல், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு சென்றால் என்ன அர்த்தம்? ரொம்ப முக்கியமான சிகிச்சை தேவைப்படுகிறது என்றுதானே. அதனால் தான் மோடி நடிகர்களைத் தேடி தீவிரமாக அலைந்து வருகிறார் என்றால், மோடிக்கு இப்போது தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. தோற்றுவிடுவோமோ? என்ற கவலை வந்து விட்டது.

எனவே, நாட்டில் உண்மையான அமைதி, வளம், வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால் திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு ஓட்டுப்போடுவதன் மூலம் நீங்கள் பெறலாம். மற்றபடி இந்த மோடி மஸ்தான், நடிகர் போன்றோர் பேச்சை கேட்க வேண்டியதில்லை. மறவாதீர் உதயசூரியன்! வாக்களிக்க வேண்டிய சின்னம் உதயசூரியன் இவ்வாறு தமிழர் தலைவர் பேசினார்.

                   -------------------------”விடுதலை” 18-04-2014

38 comments:

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


பெண்?

செய்தி: மோடி பிரதமரா னால் மகளிர் நலத் திட் டங்கள் நிறைவேற்றப்படும்.
- இல. கணேசன் (பிஜேபி)

சிந்தனை: மகளிர் நலத் திட் டங்களை நிறைவேற்றுவது இருக்கட்டும். முதலில் உங்கள் கட்சி சார்பில் ஒரு பெண்ணுக்காவது தேர்த லில் நிற்க வாய்ப்புக் கொடுத் தீர்களா?

சாடுகிறார் மோடி

மீனவர் பிரச்சினைக்கு காரணம் ஜெயலலிதாவும் சோனியாவும்தான். - குமரியில் மோடி

மோடிக்குப் பதிலடி!

குஜராத் மாநிலத்தைவிட தமிழகம் பல்வேறு துறைகளில் முதலிடத்தில் உள்ளது.

- கிருஷ்ணகிரியில் முதல் அமைச்சர் ஜெயலலிதா


பாஜக - தெலுகு தேசம் கூட்டணி சிக்கல்

சீமாந்திராவில் பாஜக கூட்டணியிலிருந்து விலகி தெலுகு தேசம் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படு வார்கள் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

சீமாந்திராவில் அறிவிக்கப் பட்டுள்ள பாஜக வேட்பாளர் கள் பலவீனமாக உள்ளதால், வெற்றி வாய்ப்பு இருக்காது எனவே, சீமாந்திராவில் பாஜக கூட்டணியிலிருந்து விலகி உள்ளதாக தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/78855.html#ixzz2zHroKDKJ

தமிழ் ஓவியா said...


வாக்குப்பதிவு இயந்திரத்தை வாஸ்துப்படி திசை மாற்றி வைக்கச் சொன்ன அமைச்சர்


கோலார், ஏப்.18- கருநாடக மாநிலம் கோலார் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி யில் மத்திய அமைச்சர் முனியப்பாவின் வேண்டு கோளை ஏற்று, வாஸ்து சாஸ்திரப்படி வாக்குப் பதிவு இயந்திரத்தை திசை மாற்றி வைத்தார்'' என்ற புகாரின் பேரில் தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில், கர்நாடக மாநிலம் கோலார் தொகுதியில் மத்திய அமைச்சர் முனியப்பா போட்டி யிடுகிறார்.

கோலார் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஹரோஹள்ளி வாக்குச் சாவடிக்கு வியாழக்கிழமை காலை முனியப்பா வாக் களிக்க வந்தபோது, வாக் குப்பதிவு இயந்திரம் தெற்கு நோக்கி இருந்ததை கண்டு அவர் அதிருப்தி அடைந்ததாக கூறப்படு கிறது.

இதனையடுத்து வாஸ் துப்படி அந்த எந்திரத்தை வடகிழக்கு திசையை நோக்கி மாற்றி வைக்கும் படி அவர் கேட்டுக் கொண் டார். அவரின் வேண்டு கோளை ஏற்று, வாக்குப் பதிவு இயந்திரத்தை தேர் தல் அதிகாரியும், முனியப் பாவின் ஆதரவாளர்களும் திருப்பி வைத்துள் ளனர். இதுகுறித்து புகார் தெரி விக்கப்பட்டதை அடுத்து, வாக்குப்பதிவு இயந்தி ரத்தை திசை மாற்றி வைத் ததாக தேர்தல் அதிகாரியை ஹரோஹள்ளி வாக்குச் சாவடியில் இருந்து தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்துவிட்டது.

இந்த தகவலை கோலார் துணை ஆணை யரும், தேர்தல் அதிகாரியு மான டி.கே. ரவி செய்தியா ளர்களிடம் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/78857.html#ixzz2zHs2Udh7

தமிழ் ஓவியா said...


மக்களையும், அம்பேத்கரையும், மோடி பரிவாரிடமிருந்து காப்பாற்றுவோம்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- குடந்தை கருணா

அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ல், மோடிக்கு அம்பேத்கர் ஞாபகம் வந்து விட்டது. அம்பேத்கர் படத்திற்கு மாலை இடுகிறார். வணங்குகிறார். அடுத்து மோடி சொல்கிறார். பாஜக ஆட்சியில் இருந்தபோதுதான், அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது என வழக்கம் போல், புளுகு மூட் டையை அவிழ்த்து விட்டுள்ளார்.

பாஜக ஆட்சியில் இருந்தது 1998 முதல் மே 2004 வரை. ஆனால், 1990-இல் வி.பி.சிங் பிரதமராக இருந்த போது, அவரது ஆட்சியில் அம்பேத் கருக்கு பாரத ரத்னா விருது வழங் கப்பட்டது. அண்மைக்கால நிகழ்வு களைக்கூட, பொய்யாகப் பேசும் திறமை, மோடிக்கு மட்டும் தான் உள்ளது.

திடீரென அம்பேத்கர் மீது மரி யாதை; தலித் மக்கள் மீது பாசம், மோடிக்கும், பாஜகவிற்கும் வந்திருக் கிறது. ஆனால், தலித் மக்களைப்பற்றி மோடியின் கருத்து என்ன?

கர்மயோக் எனும் நூல் நவம் பர் 2007-இல் மோடியால் எழுதப் பட்ட நூல். குஜராத் மாநில பெட் ரோலிய கூட்டு நிறுவனம் மூலம் அச்சிடப்பட்டது. அந்த நூலின் சாத்னா பார்வா என்ற பகுதியில், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களான வால்மீகி சமுதாயத்தினர், மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளதை இந்து மத அடிப்படையில் ஆதரித்து நரேந்திர மோடி எழுதியுள்ளார்.

வால்மீகி (ஒரு தலித் இனக் குழு) மக்கள் மலம் அள்ளும் பணியை தங்களின் வாழ்வாதாரமாக மட்டும் நினைத்து செய்கிறார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அது தான் காரணம் என்றால், அந்தப் பணியை அவர்கள் தொடர்ந்து பல தலைமுறைகளாக செய்திட வாய்ப் பில்லை. அவர்களில் யாருக்காவது ஏதோ ஒரு நேரத்தில் கடவுளுக்கும், சமுதாயத்திற்கும் மகிழ்ச்சி தருவது தங்கள் கடமை என்கிற ஞானம் தோன்றியிருக்கும்; கடவுளின் கருணையால் தங்களுக்கு அளிக்கப் பட்ட இந்த மலம் அள்ளும் பணியை செய்திட வேண்டும்; இத்தகைய சுத்தப்படுத்தும் பணியை பல நூற்றாண்டுகளாக எந்தவித உள் நோக்கமின்றி ஓர் ஆத்மிகமான பணியாக அவர்கள் செய்திருக்க வேண்டும்; இது தொடர்ந்து பல தலைமுறைகளாக நடைபெற்றிருக்க வேண்டும். அவர்களது மூதாதையர் களுக்கு வேறு எந்தப் பணியும் செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் இந்த மலம் அள்ளும் பணியை செய்தார்கள் என நம்புவது இயலாது என எழுதி உள்ளார்.

அடுத்தவர் மலத்தை, தலையில் சுமக்கும் அவல நிலை, இன்னொரு மனிதனுக்கு இருக்கக்கூடாது என நாகரிக எண்ணம் கொண்டவர்கள் கருதவும், அதற்கு, நீதி மன்றங்களும் தீர்ப்பு தந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில், அதனை புனித செயலாகக் கருதி, தலித் மக்கள் செயல்பட, மோடி விருப்பம் தெரிவிக்கிறார் என் றால், மோடியை நாகரிக மனிதராக எப்படிக் கருத முடியும்?

நான் இந்து தேசியவாதி; ஆர்.எஸ். எஸ்-இல் இருப்பதை பெருமை யாகக் கருதுகிறேன் என பகிரங்கமாக கூறியவர் மோடி. அத்தகைய மோடி, மனிதனை பிறப்பால் பேதம் காட்டும் இந்து மதத்தில் பிறந்தேன்; ஆனால் இந்துவாக சாக மாட்டேன் என உறுதி பூண்டு, புத்த நெறியை ஏற்றுக் கொண்ட அம்பேத்கரை வணங்குவதும், மாலை இடுவதும், அம்பேத்கரை இழிவுபடுத்துவதா கும். அதேபோல், அம்பேத்கர், தன் வாழ்நாள் முழுவதும் எந்த மக்களின் இழிவைப் போக்க வேண்டும் என்று போராடினாரோ, அந்த தலித் மக் களை, மேலும் இழிவு படுத்தும் விதமாக மோடி நூல் எழுதுவதும், மோடியின் சிந்தனையும், செயலும் எவ்வாறு இருக்கும் என்பதற்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எத்தகைய ஆபத்து உள்ளது என்பதையும் எடுத் துக்காட்டுகிறது

Read more: http://viduthalai.in/page-2/78868.html#ixzz2zHsJ1oLU

தமிழ் ஓவியா said...


மூட மக்கள்


ஒவ்வொருவனும் தன்னை அன்னியன், கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதைச் சகித்துக் கொண்டுதான் மற்றவனைக் கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதில் திருப்தியும், பெருமையும் அடைகிறான். அதுதான் மூட மக்கள் என்பதற்கு அடையாளம்.

(விடுதலை, 24.9.1950)

Read more: http://viduthalai.in/page-2/78862.html#ixzz2zHsn9KRr

தமிழ் ஓவியா said...


இவர்களை அடையாளம் காண்பீர்! காண்பீர்!!

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினை, காவிரி நீர்ப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை களான தமிழ்நாட்டு மக்கள் பிரச்சினைகள்பற்றி ஒரு வரிகூடச் சொல்லப்படவில்லையே என்ற குற்றச்சாற்று வலுவாக எழுந்து விட்டது.

முதலில் அகில இந்திய ரீதியில் கடந்த 7ஆம் தேதி தேர்தல் அறிக்கையை அது வெளியிட்டு இருந்தது. அதில் தமிழ்நாட்டுப் பிரச்சினைகள் இடம் பெற வில்லையே என்ற கோபக் குரல் தமிழ்நாட்டில் வெடித்த நேரத்தில், பிஜேபி தென் சென்னை வேட் பாளரும், பிஜேபியின் தேசியக் குழு உறுப்பினருமான திருவாளர் இல. கணேசன் என்ன சொன்னார்? அவசரப்படாதீர்கள் அடுத்து ஒரு துணைத் தேர்தல் அறிக்கை வெளிவரும்; அதில் இவையெல்லாம் இடம் பெறும் என்று சமாதானம் சொன்னார்.

தமிழ்நாட்டுக்கென்று தமிழில் ஒரு தேர்தல் அறிக்கையை பி.ஜே.பி. வெளியிட்டது. இல. கணேசன் அவர்கள் சொன்னதுபோல தமிழ்நாட்டுப் பிரச்சினை அறவே இடம் பெறவில்லை. அகில இந்திய அளவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.ஜே.பி.யினருக்கு எந்த அளவு முக்கியத்துவமும், மதிப்பும் கைகோத்துள்ளன என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.

பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் இவை எல்லாம் காணாமல் போய் விட்டன என்பது ஒருபுறம் இருக்கட்டும்!

பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் தங்கள் வாய்களை கோணி ஊசியை வைத்துத் தைத்துக் கொண்டுள்ளன! பதவிப் பசி எடுத்தால் பத்தும் பறந்துபோகும் என்ற பழமொழிக்கு, ஒட்டு மொத்தக் குத்தகைத்தாரர் ஆகி விட்டதையே இது பறைசாற்றும்.

இதன் பொருள் என்ன? பிஜேபி ஆட்சிக்கு வந்தால் (?) இந்தப் பிரச்சினைகள்மீது அக்கறை செலுத்தப்பட மாட்டாது என்பது இப்பொழுதே விளங்கி விட்டது.

பி.ஜே.பி..யைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு இதில் எதுவும் ஆச்சரியமாகவே இருக்காது; காரணம் அவர்கள் இந்துத்துவாவாதிகள் - பார்ப்பன மேலாண்மை என்பது அதற்குள் ஓடும் ரத்தம் ஆகும்.

தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள், ஊடகங்கள், ஈழத் தமிழர் பிரச்சினையில் எப்படியெல்லாம் நடந்து கொண்டு வந்துள்ளனர் என்பது நம் மக்களுக்குத் தெரியாதா?

சோ ராமசாமியைவிட, குருமூர்த்திகளைவிட ஆர்.எஸ்.எசுக்கோ, பி.ஜே.பி.க்கோ, நெருக்கமான வர்கள், ஆலோசகர்கள் யார்? ஈழத் தமிழர் பிரச்சினையில் இவர்களின் நிலைப்பாடு என்ன? சு. சாமியின் உணர்வென்ன? இவற்றின் பிரதிபலிப்புதான் பிஜேபியின் தேர்தல் அறிக்கை.

இவ்வளவும் தெரிந்திருந்தும் ம.திமுகவும், பா.ம.க.வும், பிஜேபியோடு கூட்டணி வைத்துள்ளன என்றால் இதன் பொருள் என்ன?

இந்தப் பிரச்சினையில் இவர்கள் இதுவரை சொல்லி வந்த - வெளிப்படுத்தி வந்த உணர்வுகளேகூட சந்தேகத்துக்கு உரியன ஆகிவிடவில்லையா?

2000 ஏப்ரலில் ஆணையிரவை விடுதலைப்புலிகள் கைப்பற்றிய நேரத்தில் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா துடிதுடித்து போகவில்லையா?

உதவி! உதவி!! என்று உலக நாடுகளிடம் மடிப் பிச்சை கேட்ட நேரத்தில், வாஜ்பேயி தலைமையிலான பி.ஜே.பி. அரசு, இலங்கைக்கு உதவிக்கரம் நீட்ட வில்லையா? சுகன்யா எனும் மிக முக்கியமான போர்க்கப்பலைக் கொடுத்து உதவிடவில்லையா?

அந்த நேரத்தில் விடுதலைப்புலிகளுக்கு எச்சரிக்கை கொடுத்ததும் வாஜ்பேயி அரசு தானே! அந்த நேரத்தில் பத்து கோடி அமெரிக்க டாலரை (ரூ.450 கோடி) இலங்கை சிங்கள அரசுக்கு வாரி வழங்கியதும் அதே அரசுதானே! விடுதலைப்புலிகள் அமைப்பையும் அப்பொழுது அது தடை செய்யவில்லையா?

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையே என்ற ஒரு தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்ட நிலையில், அதற்காக இந்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது - எதிர்க்கட்சித் தலைவரான - பி.ஜே.பி. யைச் சேர்ந்த சுஷ்மா சுவராஜ்தானே, மறுக்க முடியுமா?

இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால்தான் தேர்தல் அறிக்கையில் பிஜேபி ஈழத் தமிழர்ப் பிரச்சினையை அறவே புறக்கணித்ததன் இரகசியம் என்னவென்று புரியும்.
நியாயமாக தமிழ்நாட்டு வாக்காளர்களின் சினத்தீ - இந்தக் கண்ணோட்டம் உடைய பி.ஜே.பி., அதனோடு இணைந்து கைகோத்து வரும் தமிழ்நாட்டுக் கட்சிகள் மீதுதான் சீறிட வேண்டும்; இவர்களை அடையாளம் காண இதுதான் சரியான சந்தர்ப்பம்! சந்தர்ப்பம்!!

Read more: http://viduthalai.in/page-2/78863.html#ixzz2zHswVEPu

தமிழ் ஓவியா said...

ஜனநாயகத்துக்கே கேடான சர்வே

என்டிடிவியின் சர்வே முறைகேடு வெளுத்துவாங்கும் டில்லி இணைய ஊடகம்

டில்லி. ஏப்.18- என்டிடிவி அளித்துள்ள புதிய சர்வே முடிவுகள் அப்படியே எடுத்துக் கொண்டால், நடைபெற்றுவரும் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 275 இடங்களைப் பெறும் என்று முன்கூட்டியே சொல்லி உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி மற்றும் காங்கிரசு இதற்குமுன் பெற்ற எண்ணிக்கைகளை மொத்தமாக இழந்து நிற்பதாகவும், அவர் களைக்காட்டிலும், மோடி அலையால் உபியில் மொத்தமாக 51 இடங்களை வாரிச் சுழற்றிக் கொள்வதாகவும் சர்வே கூறுகிறது.

காங்கிரசு அனைத்துத் தேர்தலிலும் தனியே குறைந்தபட்சமாக 92 இடங்களை வென்றுள்ளது. சர்வேபடி அய்க்கிய முற் போக்கு கூட்டணியில் வெறும் 111 இடங் கள் மட்டுமே பெறும் என்று கூறியுள்ளது.

ஆம்ஆத்மி டில்லியில் வெடித்துக் கிளம்பியது. சர்வேபடி, மிகச் சொற்ப மாகவே அக்கட்சி பெறும் என்கிறது.

பாஜக, அதன் ஆதரவாளர்களுக்கு அல்லது சர்வே எடுத்ததாக சொல்பவ ருக்கு கிறிஸ்துமஸ் ஆண்டின் தொடக்கத் திலேயே வந்துவிடுகிறது என்பதுபோல் சர்வே முடிவு உள்ளது.

சர்வேயில் எடுக்கப்பட்ட முடிவுகள் உண்மையாகவே வாக்காளர்களின் கருத்துகளைக் கொண்டதுதானா?

எப்படிப் பார்த்தாலும், தேர்தல் நேரத்தில் என்டிடிவி எடுத்துள்ள இந்த சர்வே, போதுமான ஆதாரங்கள் இல்லா மல், பரப்பப்பட்டுள்ளது. அவர்களின் பிழைப்புக்காகவும் எடுக்கப்பட்டிருக் கிறது. சர்வே முடிவு என்பது ஊடகங்களின் கருத்துத்திணிப்புதானோ என்று எல்லோ ருடைய மனதிலும் எழுந்துள்ள கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும்.

பிரச்சினையே தேர்தல் ஆணை யத்தின் முடிவால் அல்ல. அது வரை யறுத்துள்ள கெடுபிடியான நேரம்தான். ஒரு மாதம்வரையிலான தேர்தலின் மத்தியில் சர்வே எடுக்கும் உரிமை மறுக் கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளால் நிலைமை மோசமாகி விட்டது. தேர்தல் ஆணையத்தின் அவசரகோலத்தில் எடுக்கப்பட்டுள்ள திடீர் முடிவுகளால், தற்போது என்டிடிவி சர்வே முடிவுகளை உறுதிப்படுத்தவோ, சர்வே முடிவுகளுக்கு மாறான நிலையிலிருப்பதை எடுத்துக்காட்டவோ வழி இல்லை. சர்வே முடிவால் பாதிக்கப் பட்டவர்கள் கருத்து தெரிவிக்க இயலா மலும் உள்ளது. என்டிடிவி சர்வே ஆணை யத்தின் விதிமுறைகளை கடைப்பிடித் துள்ளதாகக் கூறினாலும், உள்ளார்ந்த உணர்வுகளுக்கு இடம் கொடுக்கவில்லை.

ஆணையத்தின் இறுதிக்கெடுவாகிய ஏப்ரல் நான்காம் தேதிக்குப்பிறகு கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டதை மன்னித்து, சாதகமான காரணங்களைக் கூறி வெளியிட அனுமதித்துள்ளது.

தமிழ் ஓவியா said...

வாக்களிப்பவர்கள் தாமாக முடி வெடுப்பதற்கு வாய்ப்பாக, போதிய கால இடைவெளி இருக்கவேண்டும் என்கிறது. இதனாலேயே, தேர்தலுக்குப்பின் கருத்துக்கணிப்பு என்கிற பெயரில் வாக்களித்தவர்கள் யாருக்கு வாக்களித் தார்கள் என்பதை வெளியிடும்போது, வாக்களிக்கக் காத்திருப்போரையும், அதைப்போலவே வாக்களிக்க வலியுறுத் துவதாகிவிடும். எனவே, ஆணையம் அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு முடியும்வரை கருத்துக்கணிப்பை வெளி யிடுவதைத் தடை செய்துள்ளது.

என்டிடிவி சட்டத்தின் ஓட்டைகளில் நுழைந்து, ஆணையம் விதித்த கெடு வுக்குமுன்பாக எடுத்து முடிக்கப்பட்டது போல் இருப்பது முற்றிலும் தவறானது. ஏப்ரல் நான்காம் தேதிக்கு முன்னதாக எடுத்துள்ளதாகக் கூறி தற்போதைய நிலவரங்களையும் இணைத்தே சர்வே முடிவை வெளியிட்டுள்ளது.

இந்த முடிவு மக்களிடையே ஒருசார் பான ஆதரவுநிலையை அதிகப்படுத்தும் நோக்கமேயாகும். மேலும், உச்சகட்ட தேர்தல் காய்ச்சலில் இருக்கும்போது, வாக்காளர்களின் முடிவு என்னவென்றே ஊகிக்க முடியாத நேரத்தில் தேர்தலின் ஒரு பகுதியாக சர்வே முடிவை ஒரு சார்பாக வெளியிட்டுள்ளது.

ஊடகங்களிடையே உள்ள கடும் போட்டியில் பார்வையாளர்கள் மத்தியில் சர்வே எடுத்தது அந்த ஊடகத்தின் பெரிய வெற்றியாகும். ஆனால், அதன் விலை என்ன?

ஒரு குறிப்பிட்ட கட்சிமட்டும் மிகப் பெரிய வெற்றி பெறும் என்று வெளியிட்டு வாக்காளர்களைத் திசை திருப்புவதை என்டிடிவி செய்துள்ள நோக்கம் தெரி கிறது. தவிர்க்கவே முடியாதவகையில் திரும்பதிரும்ப அவர்களிடையே வெற்றிபெறுவது இன்னார்தான் என்று கருத்து வெளியிடும்போது, அவர்களும் தங்கள் கருத்தை மாற்றிக்கொண்டு வெற்றிபெறுவதாக சித்தரிக்கப்பட்டதன் பக்கம் சாய்வதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் யார் வெல்வதாக கருது கிறார்களோ அவர்களை ஆதரிக்கும் மனோநிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

மூத்த செய்தி ஆசிரியர் ஒருவர் கூறும்போது, ஒரு பெண்ணுக்கு மோடியைப்பற்றி ஒன்றுமே தெரியாது, அவர் நாட்டுக்கு நல்லது செய்வார் என்பதைவிட, வெற்றிபெறுவார் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது கேள்விப் பட்டாராம். அதனால் வாக்களிக்க திட்டமிட்டுள்ளாராம். இப்படித்தான் அனைத்து அரசியல்வாதிகளும் உண்மை வேறாக இருந்தாலும், அதற்கும் மேலாக தொடர்ந்தாற்போல் மிகப்பெரிய வெற்றி பெறுவதாகக் கூறிவருகின்றனர். இப்படித்தான் மோடி வெற்றிபெறுவதாக, அடுத்த பிரதமர் என்று தொடர்ந்து கூறி, வாக்காளர்களை திசை திருப்பி வருகின்றனர்.

என்டிடிவி சர்வே பாஜகவுக்கு உதவுகிறது. அதேநேரத்தில் காங்கிரசை ஒரு பொருட்டாகக் கூட கருதவில்லை. ஆம்ஆத்மி கட்சி, தன்னைக்காத்துக் கொள்ள போராடும் தேவை உள்ளதாகும். அந்த அமைப்புகள், அதன் கொள்கைகள் ஆகியவற்றைத் தாக்குவதுபோல் சர்வே முடிவு உள்ளது. மற்ற இடங்களைக் காட்டிலும், வாக்காளர்கள் மத்தியில் டில்லியில் இதன்பாதிப்பு அதிகமாகும்

எல்லாவற்றையும் கடந்து, இந்த கசப்பான தேர்தல் பிரச்சாரக் காலத்தில் இதுபோன்ற வாதங்கள் பங்குதாரர்களால், சர்வே முடிவை பாராட்டுபவர்கள், வரவேற்பவர்களுக்கு கொள்கை ஏதும் கிடையாது. பிரச்சாரக் களத்தில் இந்த சர்வே முடிவைச் சொல்லி கிடைக்காத இடத்திலும் ஆதரவைத் தேட முயல் வார்கள். அநேகமாக மாபெரும் தேர் தலின் முடிவு என்பது சர்வே முடிவுக்கு தொடர்பின்றியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-ஃபர்ஸ்ட் போஸ்ட், 15-4-2014, டில்லி

தமிழ் ஓவியா said...


ஒரு லட்சம் விதவை தாய்மார்களை ஏமாற்றிய ஜெயலலிதா


குடும்ப ஓய்வூதியதாரர்களாகிய விதவை தாய்மார்களை ஏமாற்றிவிட்ட தற்போதைய அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதாவால் சுமார் ஒரு லட்சம் குடும்ப ஓய்வூதியம் பெறும் விதவை தாய்மார்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் எப்படி என்றால் 1.6.1988 முதல் 31.12.1995 முடிந்த காலத்தில் தமிழ்நாடு அரசு ஊழியராக வேலை பார்த்துஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப் பட்டதில் அகவிலைப்படி முழுமையாக சேர்த்து வழங்காமல் 13 சதவீதம் மட்டும் சேர்த்து வழங்கியது தவறு என உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதில் கடந்த 17.1.2013 இல் உச்சநீதிமன்றம் ஓய்வூ தியதாரர்களின் மேல்முறையீடு மனுவை ஏற்று அகவிலைப்படியை முழுமையாக வழங்க வேண்டுமென தீர்ப்பு வழங்கியது.

இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு 23.8.2013 தேதியிட்டு அரசாணை எண் 363அய் வெளியிட்டது. இதில் என்ன வேதனை என்றால் மேற்படி அரசாணை எண். 363 இன் பாரா 15 இன் வரிசை எண். 3,4,5 இல் மேற்படி அரசானை வெளியிடப்பட்ட தேதியான 23.8.2013 இல் யார், யார் உயிருடன் இருக்கிறார்களே, அவர்களுக்குத் தான் இந்த ஆணை பொருந்தும். 23.8.2013 தேதிக்கு முன்பே இறந்த ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய பலன் கிடையாது என்பது தான் சரத்து இதனால் முற்றிலும் பாதிக்கப்பட்டவர்கள் குடும்ப ஓய்வூதியம் பெறும் விதவை தாய்மார்கள் என்பது தான் விதவை தாய்மார்களுக்கு ஜெயலலிதா செய்த துரோகம் என்றால் மிகையாகாது.

வயது முதிர்ந்த (Senior Citizen) விதவை குடும்ப ஓய்வூதியம் பெற்று வருப வர்களின் வயிற்றெரிச்சலை விளக்க வேண்டும். நமது தேர்தல் பிரச்சாரத்தின் போது விளா வரியாக அதாவது பெண்களுக்கு அதிலும் விதவை தாய்மார்களுக்கு துரோ கம் செய்த ஜெயலலிதாவுக்கா? உங்கள் ஓட்டு.

குறிப்பு: தீர்ப்பின்படி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் எந்த தேதியில் இறந்தாரோ, அந்த தேதியில் பணப்பயன் கொடுக்க வேண்டும் - அ.அப்துல் ஜப்பார், கூட்டுறவு சார்பதிவாளர், பிள்ளையார் பட்டி, தஞ்சாவூர்.

Read more: http://viduthalai.in/page-2/78867.html#ixzz2zHtkRmCA

தமிழ் ஓவியா said...

மதம்

மதத்தின் உண்மையான உருவம் யாது? மனித ஜாதியின் குழந்தைப் பருவ மனோ பலவீனமும், அதனால் தோன்றிய மூடநம்பிக்கைகளும் சேர்ந்தது தான் மதம். மதத்தில் இதைவிட வேறேதேனுமிருக்கிறதென்றால் அது புரோகிதர்களும், அதிகாரிகளும் ஆடுகள் தங்கள் கிடையை விட்டு வெளியே போகாமல் இருப்பதற்காகச் செய்யும் ஏமாற்று வஞ்சனைகளும் தான்.

மனிதர்களின் மனோ வளர்ச்சியோடு கூடவே மதமும் எத்தனையோ மாற்றம் அடைந்திருக்கிறது. பெயரில் எத்தனையோ மாற்றம் பெற்றிருக்கிறது. ஆயினும், அந்த மாற்றத்தால் அதன் உள் உருவத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

அது 5000 ஆண்டுகளுக்கு முன் போலவே இன்றும் ஆயிரக்கணக்கான மூடநம்பிக்கைகளையும், மனிதர்களின் மனோ அடிமைத்தனத்தையும் ஆதரிக் கிறது. மூலம் பழையதுதான். உறை மட்டும்தான் மாற்றப்பட்டிருக்கிறது. நமது படித்த சகோதரர்கள் பிசாசு, பூதம், மந்திரம், இவைகளைக் கண்டு முகத்தைச் சுளித்துக் கொள்கிறார்கள்.

ஆனால், அதே விஷயத்தைப் புதிய உருவத்தில் தியாசபி போன்ற சுவராஸ்யமான சொற்களில் விஞ்ஞானத் தோடு கலந்து கொடுத்தால் பெரிய பெரிய அறிவாளிகளும் தங்கள் அறிவை விற்றுவிடத் தயாராகி விடுகிறார்கள்.

நீங்கள் மதத்தின் சரித்திரத்தையும், அதன் இறந்த கால நிகழ்காலத் தலைவர்களின் வாழ்க்கை விவரங்களையும் கவனத்தோடு படித்தீர்களானால், மதத்தில் முதல்தரமான பக்கா அயோக்கியர்களும், பைத்தியங்களும்தான் நிறைந்திருப்பதைக் காண்பீர்கள்.
பொது உடைமைதான் என்ன? என்னும் நூலில் ராகுல சாங்கிருத்தியாயன்.

தகவல்: இரா.நாச்சிமுத்து, கோவை

Read more: http://viduthalai.in/page-7/78881.html#ixzz2zHuGIjyU

தமிழ் ஓவியா said...


நாத்திகக் கருத்துகள்

நாத்திகன்

நாத்திகன் வாழ்க்கையை நடத்த குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் தெரியாதவன். கண்ணுக்குப் புலப்படாத வருவாய் இல்லாதவன்.

- ஜான் புச்சன் (ஸ்காட்லாந்து வரலாற்று ஆசிரியர்)

நான் ஒரு நாத்திகன். பல அறிவிலிகள் கண்மூடித் தனமாக நம்புவதை நானும் நம்புவதாக நடிக்கமாட்டேன்.
- க்ளாரென்ஸ்டாரோ, (அமெரிக்க வழக்குரைஞர்)

கடவுள்

ஆண்களைக் கவரும் அழகை இழந்த பெண் முதுமையில் கடவுள் பக்கம் திரும்புகிறாள்.
- பால்சாக் (ஃப்ரெஞ்சு நாவலாசிரியர்)

தோல்வி ஏற்படும் போது கடவுள் பெயரைச் சொல்லாதே. வெற்றி ஏற்படும் நேரம் பார்த்துச் செயலாற்று.
- ஆம்ப்ரோஸ் பியர்ஸ் (அமெரிக்க எழுத்தாளர்)

கல்லினாலும் மரத்தினாலும் ஆண், பெண் கடவுள்களைப் படைப்பதால் எந்தப் பயனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
- ஜான் பில்லிங்ஸ் என்ற புனைப்பெயர் கொண்ட என்றிவீலர்ஷா என்னும் அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர்

கடவுள் என்பது அகராதியில் கடவு (வழி) என்னும் சொல்லுக்கு அடுத்து உள்ளது.
-சாமுவேல் பட்லர் (ஆங்கில நாவலாசிரியர்)

மருத்துவர் நோயை குணப்படுத்துகிறார். நன்றி ஆண்டவனைச் சேருகிறது!
- ஃப்ராங்ளின் (அமெரிக்க விஞ்ஞானி)

ஆண்கள் கடவுள்களைப் படைக்கிறார்கள். பெண்கள் அவற்றை வணங்குகிறார்கள்.
- ஜேம்ஸ் ஜார்ஜ் ஃப்ரேசர் (அமெரிக்க மனித இன நூல் ஆசிரியர்)

இருப்பவையெல்லாம் கடவுள் அல்ல; இல்லாத ஒன்றே கடவுள்.
- கூர்மான்ட் (ஃப்ரெஞ்சு தத்துவ நூலாசிரியர்)

Read more: http://viduthalai.in/page-7/78880.html#ixzz2zHuUbI7c

தமிழ் ஓவியா said...

கண்டு முட்டு - கேட்டு முட்டு!

வைணவர்களில் இருக்கின்ற இருபிரிவாளர்களான வடகலை நாமக்காரர்களும், தென்கலை நாமக்காரர்களும் ஒருவரையொருவர் பார்த்துவிட்டாலே - அதாவது தென்கலை நாமம் போட்டிருப்பவரை வடகலை நாமம் போட்டிருப்பவர் நேரிடையாகக் கண்டுவிட்டாலும், வடகலை நாமம் போட்டிருப்பவரை தென்கலை நாமம் போட்டிருப்பவர் நேரிடையாகக் கண்டுவிட்டாலும் - அந்த பாவத்தைப் போக்க சுவற்றிலே போய் முட்டிக் கொள்வார்களாம் - இவர்கள் கண்டு முட்டுகள் ஆவார்கள்!

சைவர்களும், வைணவர்களும் ஒருவரையொருவர் எதிர்ப்பாகக் கருதி வந்தனர் அந்தக் காலத்தில் - அப்படி இருக்கும்போது சைவர்கள் செல்லும் வழியில் - செல்லும் போது வைஷ்ணவக் கடவுளைப் பற்றி பெருமையாகவோ, புகழ்ந்தோ பேசுவதைக் காதாலோ கேட்டுவிட்டாலும், அதே போன்று வைஷ்ணவர்கள் காதில் படும்படி சைவர்கள் தங்கள் கடவுளைப்பற்றி பெருமையாகவோ, புகழ்ந்தோ பேசுவதைக் கேட்டுவிட்டாலும் அந்தைப் பாவத்தைப் போக்குவதற்கு சுவற்றிலே போய் முட்டிக் கொள்வார்களாம் - இப்படி செய்வதை கேட்டு - முட்டு என்பர்.

இப்படி கண்டு முட்டு, கேட்டு முட்டுகளைப் போன்று இன்றைய அரசியல் கட்சிக்காரர்கள் எதிர்ப்பாக நடந்து கொள்கின்றனர்.
(10.10.1977 அன்று கடலூர் திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி உரையிலிருந்து)

தகவல்: துரை.சந்திரசேகரன்

Read more: http://viduthalai.in/page-7/78880.html#ixzz2zHudTgpt

தமிழ் ஓவியா said...

விஞ்ஞான முடிவுக்கு எதிரானவை

அறிவாளிகள் ஒரு விஷயத்தின் எல்லா அம்சங் களையும் கவனமாக பரிசீலிக்காமல் அதைப்பற்றி முடிவு கூறமாட்டார்கள். மூடர்களும், கோழைகளும், சிந்திக்கத் தயங்குகிறவர்களும்தான் - குழந்தை பருவத்தில், அறிவு முதிர்ச்சியில்லாத காலத்தில், காரணத்தோடு புரிய முடியாத போது தங்களின் பெற்றோர்களாலும், ஆசிரி யர்களாலும் திணிக்கப்பட்ட மூடக் கொள்கைகளைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்கிறார்கள்.

உலகிலுள்ள 80 கோடி இஸ்லாமியரும் வான மண்டல தூதுவரால் குர்-ஆன் அளிக்கப்பட்டதாக நம்புகிறார்கள்; 34 கோடி இந்துக்களும் தங்கள் கடவுளரில் ஒருவனான சிவனுக்கு ஆறு கைகள் இருப்பதாக நம்புகிறார்கள்; 16 கோடி பவுத்தர்களும் மறுபிறவு உண்டென்று நம்புகின்றனர் 91 கோடி கிறிஸ்துவரும் கடவுள் ஆறே நாட்களில் உலகைப் படைத்தான் என்று நம்புகின்றனர்.

இப்படியெல்லாம் நம்புவதற்கு விஞ்ஞான ரீதியான சான்று எதுவும் இல்லை. அறிவைக் கொண்டு இதுவரையில் காணப்பட்ட உண்மைகளுக்கு இவை நேர் விரோத மானவை என்பதை விஞ்ஞானம் காட்டி விட்டது.

- ஜேம்ஸ் ஹார்வி ஜான்சன்

Read more: http://viduthalai.in/page-7/78880.html#ixzz2zHumGwZ4

தமிழ் ஓவியா said...


நடிகர்கள் - பதில் சொல்லியாக வேண்டும்!


ஒரு நாள் ரஜினி சந்திப்பு! - இன்னொரு நாள் நடிகர் விஜய் சந்திப்பு! ஆக மோடி தேர்தல் நடிகர் ஆகி? இருக்கிறார் என்பதுதானே இந்த நாடகத்தின் பின்னணி. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்! சம்பிரதாய சந்திப்பாம்! சொல்லுகிறார்கள்; படிப்பவர்களின் காதுகளில் பூ சுற்றுகிறார்கள்! நேரடியாகச் சொல்லத் தைரியம் இல்லை - இதில் யாருக்கும் வெட்கம் இல்லை!

தமிழ்நாட்டு மக்கள் ஒன்றும் ஏமாந்த சோணகிரிகள் அல்லர்.

இந்தத் தமிழ்நாட்டு நடிகர்களும் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்துத்துவாவைக் கையில் எடுத்துக் கொண்டு, மதவாதத்தைத் திணித்து மக்கள் மத்தியில் கல வரத்தை உண்டு பண்ணத் திட்டமிட்ட மதவெறியர் களுக்கு ஒரு வகையில் துணை போயிருக்கிறார்கள் இந்த நடிகர்கள் என்பதை மறக்க வேண்டாம்!

இந்தத் தவறுக்குப் பின்னொரு காலத்தில் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலை ஏற்படும்! - சிறுபான்மை மக்கள் மத்தியிலும் மதச்சார்பற்ற எண்ணங்கொண்ட மக்கள் மத்தியிலும் இவர்களுக்குரிய இடம் என்ன? ஏன் இந்த விஷப் பரிட்சை?

Read more: http://viduthalai.in/page-8/78888.html#ixzz2zHvL8ukw

தமிழ் ஓவியா said...

கார்ப்பரேட், மதவாத சக்திகளின் பொது வேட்பாளர் நரேந்திர மோடி: பிரகாஷ் காரத் தாக்கு

பாஜக பொது வேட்பாளர் நரேந்திர மோடி கார்பரேட் நிறுவனங்கள், மதவாத சக்திகளின் பொது வேட்பாளர் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தெரி வித்துள்ளார்.

வாரணாசியில் செய்தியாளர்களிடம் வியாழக் கிழமை அவர் கூறியதாவது:

நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் பொது வேட்பாளரை நிறுத்தலாம் என்று முதலில் ஆலோசிக்கப்பட்டது.

அதற்காக காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத் தினால் மார்க்சிஸ்ட் வேட்பாளரை திரும்பப் பெற்றுக் கொள்ள தயாராக இருந்தோம். ஆனால், கட்சிகளிடம் கருத்தொற்றுமை ஏற்பட வில்லை.

இந்திய வரலாற்றில் முதல்முறையாக கார்ப் பரேட் நிறுவனங்கள் அனைத்தும் மோடியை ஆதரிக்கின்றன. இதற்கு முன்பு காங்கிரஸை ஆதரித்த கார்பரேட் நிறுவனங்கள் இப்போது மோடிக்கு ஆதரவாக மாறியுள்ளன. கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் மதவாத சக்திகளின் பொது வேட்பாளராக மோடி உள்ளார்.

வாரணாசியில் மோடி நிறுத்தப்பட்டிருப் பதன் மூலம் மதத்தின் அடிப்படையில் வாக் காளர்களை ஈர்க்க பாஜக, ஆர்.எஸ்.எஸ். திட்ட மிட்டிருப்பது தெளிவாகிறது.

இந்த நேரத்தில் விவசாயிகள், தொழிலா ளர்கள், இளைஞர்கள், மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து பாசிச, முதலாளித்துவ, மதவாத சக்தியை எதிர்த்துப் போராட முன்வர வேண் டும். வாரணாசியில் மோடியை தோற்கடிக்க வேண்டும் என்றார்.

Read more: http://viduthalai.in/page-8/78884.html#ixzz2zHvjIFHs

Anonymous said...

ஐயா உங்கள் பதிவும் அருமை. ஆனால் பதிவுகளின் மறுமொழியிலும் உங்கள் பதிவுகளே வருகின்றன. ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறா? ஆனா செய்திகளும் சிந்தனைகளும் மிகவும் அருமை!!

http://pudhukaiseelan.blogspot.in/

தமிழ் ஓவியா said...


அட்டைப் படத்தில் பா.ம.க.




திராவிடர் கட்சிகளுடன் இனி கூட்டு இல்லை என்று சொன்ன பா.ம.க. தற்போது அதனை மீறி விட்டதே என்ற கேள்விக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அற்புதமான விளக்கத்தை விண்டுரைத்துள்ளார். (தி இந்து 18.4.2014).

திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டு சேர்வதில்லை என்றுதான் கூறினோம் என்று அந்தர் பல்டி அடித்துள்ளாரே. சர்க்கஸ்காரர்கூட இந்தப் பல்டிக்கு முன் எம்மாத்திரம்?

அவர் கூற்றுப்படி பார்க்கப் போனால் மதிமுக திராவிடக் கட்சியில்லை - அப்படித்தானே? அந்தோ பரிதாபம்! இதற்கெல்லாம் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் எந்தப் பதிலையும் சொல்ல மாட்டார்.

சொல்லிக் கொள்ள எந்த கொள்கையும் இல்லை என்கிற அளவுக்கு அவர்தான் மகா சாதனைப் படைத்து விட்டாரே!

அது சரி.. எந்தத் தேசியக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று பா.ம.க நிறுவனர் சொன்னாரே - அப்படிப் பார்த்தால் பா.ம.க. இப்பொழுது கூட்டுச் சேர்ந்துள்ள பா.ஜ.க. கூட தேசியக் கட்சி இல்லை என்று சத்தியம் செய்தாலும் செய்வார்.

பல்டிகள் என்று ஓரு புத்தகம் எழுதினால் அதன் அட்டைப் படத்தில் இடம் பெறுவது பா.ம.க.வாகத்தான் இருக்கும்!

Read more: http://viduthalai.in/e-paper/78948.html#ixzz2zNxQCPoo

தமிழ் ஓவியா said...


மதிமுக பொதுச் செயலாளர் கொள்கையும் பேசுகிறார்



ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்குக் கொள்கை ஞானோதயம் தூத்துக்குடி தாளமுத்து நகரில் ஏற்பட்டு விட்டது.

என்ன புதிர் என்கிறீர்களா? பாரதீய ஜனதாவின் பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கவில்லை என்று சொன்னாரே பார்க்கலாம்.

அப்படியென்றால் ராமன் கோயில் கட்டுவதை ஆதரிக்கிறாரா? அதைப்பற்றி மூச்சுவிடவில்லையே - ஏன்?

வெளி நாடுகளில் இந்துக்கள் பாதிக்கப்பட் டால் அவர்களுக்கு உதவுவோம் என்று பா.ஜ.க. தேர்தல்அறிக்கையில் கூறப்பட் டுள்ளதே - அதைப்பற்றி மதிமுகவின் நிலைப்பாடு என்ன?

இந்தியாவைச் சேர்ந்த இந்து அல்லாத மற்றவர்கள் பாதிக்கப்பட்டால் பா.ஜ.க. முகத்தைத் திருப்பிக் கொள்ளுமா?

பசுவதை பற்றி பா.ஜ.க. கூறுவதுபற்றி என்ன கருத்து?

பச்சையான இந்துத்துவா தேர்தல் அறிக்கையை முன் வைத்து பா.ஜ.க. இந்தத் தேர்தலைச் சந்திக்க வந்து விட்டது. இதற்கு நடைபாவாடை விரிப்பவர்கள் யாராக இருந்தாலும் இந்தத் தேர்தலில் மட்டுமல்ல; திராவிட இயக்க த்தைக் காட்டிக் கொடுக்கும் இந்தப் பொல்லா நிலைக்குக் காலா காலத் திற்கும் மதிமுகவும், பாமகவும் பதில் சொல்லி யாக வேண்டும்.

Read more: http://viduthalai.in/e-paper/78947.html#ixzz2zNxc6A9I

தமிழ் ஓவியா said...



ராம்தேவ் மீதான புகார் எதிரொலி:
யோகா முகாம்கள் நடத்த தடை

புதுடில்லி, ஏப். 19- யோகா குரு ராம்தேவ் மீதான புகாரின் எதிரொலியாக, யோகா உள்ளிட்ட அரசியல் சார்பற்ற முகாம்களை நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. யோகா குரு ராம்தேவ், வாழும் கலை நிறுவனர் சிறீசிறீரவி சங்கர் ஆகியோர் பயிற்சி முகாம் என்ற பெயரில் பாஜக கட்சிக்கு ஆதரவாக பொது மக்களிடம் பிரச்சாரம் செய்வதாக காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம், யோகா உள்ளிட்ட அரசியல் அல்லாத அமைப்புகள் முகாம்கள் நடத்த தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர் பாக அனைத்து மாநிலத் தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள உத்தரவில், சில அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் தவறுகள் நடக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டாலோ, ஏற்கெனவே அளித்த அனுமதியை தவறாக பயன்படுத்திய அமைப்புகளாக இருந்தாலோ அவர்கள் யோகா போன்ற முகாம்களை நடத்த அனுமதி அளிக்க வேண்டாம். இதுபோன்ற விதிமீறல்கள் நடந்திருந்தால் அதுபற்றியும் ஆணையத் துக்கு தெரியப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.



பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தை ஊழல் பிரதேசம் என்று கூறலாம் : சோனியா

நீமச், ஏப். 19- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சோர் தொகுதியின் தற்போதைய எம்பியும், காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான மீனாட்சி நடராஜனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறு கையில், சமீப காலமாக குஜராத் மாநிலம்தான் வளர்ச் சியின் மாதிரி என்று பெரும்பாலானோர் கூறி வருகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. அம்மாநி லத்தில் அங்கு 40 விழுக்காடு மக்களுக்கு போதுமான தண்ணீர் வசதி செய்து தரப்படவில்லை. மேலும் அம்மாநிலத்தில் உள்ள தலித் இனத்தை சேர்ந்த 27000பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வசதி செய்து தரப்பட்டுள்ளது. இன்னமும் வேலைவாய்ப்புகளில் பழங்குடியினருக்கான காலியிடங்கள் உள்ளன என்று தெரிவித்தார். மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் அவரை மறைமுகமாக தாக்கினார்.

பா.ஜ.க ஆட்சி செய்து வரும் மத்தியப்பிரதேச மாநில ஊழல்களை பட்டியலிட்டு பேசிய சோனியா இங்கு நடைபெற்ற தேர்வுவாரியத்தில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகள் பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப் பில்லை. குடும்பத்தில் ஒருவருக்கு வாய்ப்பளிப்பதாக கூறிவிட்டு தகுதியில்லாதவர்களுக்கு அம்மாநில அரசு வாய்ப்பளித் திருக்கிறது. இம்மாநிலத்தை மத்தியபிரதே சம் என்று கூறுவதை விட ஊழல்பிரதேசம் என்று கூறலாம். அந்த அளவிற்கு அம்மாநிலத்தில் பல ஊழல்கள் நடைபெற்றுள்ளன என்று தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/78953.html#ixzz2zNxoMRvi

தமிழ் ஓவியா said...


சிந்தனா சக்தியற்றவன்


தெரியாததை, இல்லாததை நம்ப வேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால், மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்றவனாக ஆகிவிடுகின்றான்.
(விடுதலை, 2.6.1970)

Read more: http://viduthalai.in/page-2/78937.html#ixzz2zNy4kc00

தமிழ் ஓவியா said...


தூக்கிலிட்டால், அதையும் நாங்கள் தான் எதிர்ப்போம், மோடி

அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி யில், 2002 குஜராத் கலவரத்தில், ஒரு தவறு தன்மீது நிருபிக்கப்பட்டாலும், தன்னை நடுத்தெருவில் வைத்துத் தூக்கிலிடலாம் என்றார் திருவாளர், மனித நேயர் மோடி.

இதைக் கேட்டதும், இங்கே உள்ள சில அல்லக்கைகள், ஆகா, பார், பார், மோடி எவ்வளவு யோக்கியர். எப்படி பேசுகிறார் பாருங்கள் என்கிறார்கள். அவர்களுக்காக வரலாற்றை சற்று ஞாபகப்படுத்துவோம்.

நரோடா பாட்டியா என்கிற ஊர், குஜராத் தலைநகர் காந்திநகரிலிருந்து 24 கி.மீ. தொலைவிலும், அகமதாபாத் திலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் உள்ள ஊர்., அந்த நரோடா பாட்டி யாவில் கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து கலவரம் நடந்தது. அந்த கலவரத்தை முன்னின்று நடத்தியவர் அப்போது பாஜகவின் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த டாக்டர்.மாயா கோட்னானி. இவர் ஒரு பெண்மணி. இவரும், பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த பாபு பஜ்ரங்கியும் இணைந்து ஏறத்தாழ 5000 பாஜக, பஜ்ரங்தள் கலவரக்காரர்கள் துணையோடு, அந்தப் பகுதியில் கலவரத்தை இஸ்லா மியர்களுக்கு எதிராக நடத்தினர். 28.2.2002 அன்று காலை 9 மணிக்கு தொடங்கி, தொடர்ந்து பத்து மணி நேரம் அந்த கலவரம் நடந்தது. 97 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். மசூதிகளையும், முஸ்லீம் மக்கள் வாழும் வீடுகளையும், எரிவாயு சிலிண்டரை வெடிக்கவைத்து, தரை மட்டமாக்கினர். பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர். இத்தனையும், பாஜக பெண் எம்.எல்.ஏ. மருத்துவர் மாயா கோட்னானி முன்னிலையில் நடந்தது. இந்தப் பெண்மணி, கலவரக்காரர்களுக்கு, முஸ்லீம்களை கொல்ல, அரிவாளை தந்தும், துப்பாக்கியால் சுட்டும் கலவரத்தில் ஈடுபட்டதாக, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தக் கலவரம் நடந்தது 28.2.2002-இல். அப்போது அவர் எம்.எல்.ஏ. ஒரே இடத்தில் 97 பேர் கொல்லப்பட்ட சம்பவம் என்பது இந்தியாவிலேயே, நரோடா பாட்டியாவில் தான். அத்தகைய கொடூரமான, காட்டு மிராண்டித்தனமான, ஈனச் செயல் அதுவும் ஒரு பெண்மணி தலை மையில் நடைபெற்றது.

அவரது வழக்கை, மோடி அரசு, வேண்டுமென்றே இழுத்தடித்த நிலை யில்தான், உச்ச நீதிமன்ற ஆணைப்படி, சிறப்பு விசாரணை மன்றம் 2008-இல் அமைக்கப்பட்டு, மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி மற்றும் 60 பேருக்கு மேல் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தால் நடத்தப்பட்டது. 29.8.2012 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. என்ன தீர்ப்பு?

நரோடா பாட்டியாவில் 97 முஸ் லீம்கள் கொல்லப்பட்டதில் மாயா கோட்னானிக்கு தொடர்பு உள்ளது; ஆகவே அவருக்கு 28 ஆண்டு கால இரட்டை ஆயுள் தண்டனையும், பாபு பஜ்ரங்கிக்கு ஆயுள் தண்டனையும், இவர்களோடு சேர்த்து, உடனிருந்த 30 பேருக்கு 14 ஆண்டுகள் முதல் 21 ஆண்டுகள் வரை தண்டனையும் வழங்கப்பட்டது.

மாயா கோட்னானி எம்.எல்.ஏ.ஆக இருந்து கலவரம் நடத்தியது 28.2.2002. அவர் மீது கொடூரமான குற்றச்சாட்டு இருக்கிறது என மோடிக்குத் தெரியும். அது தெரிந்தும் 2007-இல் தனது அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக மாயா கோட்னானியை நியமித்தார் மோடி.

ஆகஸ்டு, 2012-இல் மாயா கோட்னானிக்கு 28 ஆண்டுகள் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. உடனே, மோடி, இப்போது, நாடகம் நடத்துவது போல், அப்போதும், மாயா கோட்னானிக்கு தூக்குத் தண்டனை தரவேண்டும் மனு தாக்கல் செய்ய மோடி அரசு முடிவு செய்தது. ஆனால், அவ்வாறு எந்த மனுவும் தாக்கல் செய்யவில்லை. ஆர்.எஸ்.எஸ். கட்டளைப்படி, மாயா கோட்னானி மீது தூக்குத்தண்டனை கோரும் முடிவை மாற்றிக்கொண்டது.

ஆனால், இப்போது, மோடி சொல்கிறார். தான் குற்றம் செய்திருந்தால், முச்சந்தியில் வைத்து அவரை தூக்கிலிடலாம் என்கிறார்.

கொலையாளியை தெரிந்தே தனது அமைச்சரவையில் சேர்த்தவர்; இரட்டை ஆயுள் தண்டனை தந்த நேரத்திலும் தனக்கு அதில் தார்மீகப் பொறுப்பு இருக்கிறது என்கிற ஓர் எண்ணம் இல்லாதவர், இப்போது தேர்தல் நேரத்தில் இந்த விஷயம் பெரிதாகப் பேசப்படுவதால், தூக்கு தண்டனை ஏற்கத்தயார் என நாடகம் ஆடுகிறார்.

அவ்வாறு, மோடிக்கு இந்த நாட்டிலே தூக்குத்தண்டனை என விதிக்கப்பட்டால், அது ரத்து செய்யப் பட வேண்டும் என போராடுபவர் களும் நாங்களாகத் தான் இருப்போம்.

ஆகவே,மோடி ஜி, பயமில்லாமல் பொய் சொல்லுங்கள்.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/78943.html#ixzz2zNyOM4x6

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம் >>>


திமுக ஆட்சியில் அப்படி
அதிமுக ஆட்சியில் இப்படி

எங்கள் ஊரின் நிலைமை ரேசன் விபரம் திமுக ஆட்சியில் 10 கிலோ கோதுமை, மண்ணெண்ணெய் 50 ரூபாய்க்கு மளிகை பொருள் சமையல் எண்ணை பருப்பு இவைகள் தாராளமாக கிடைத்தது இப்பொழுது கோதுமை 5 கிலோ மண்ணெண்ணெய் 5 லிட்டர் மளிகை பொருள் சுத்தமாக இல்லை. பருப்பு எண்ணெய் முந்தியவர்களுக்கு மட்டும்தான் அதிலும் 2014 ஏப்ரல் மாதம் 2 கிலோ கோதுமை கொடுக்கிறார்கள்.

மக்கள் நல பணியாளர்கள் நிலை என்ன?

இலவச பொருள் மிக்சி கிரைண்டர் மின் அடுப்பு இவைகளை இலவசமாக கொடுப்பதாக சொல்லி விட்டு அதற்கான பணத்தை மின் கட்டணத்தை அதிகரிக்கச் செய்து அதன் மூலமாக மேற்படி பொருள் களுக்கு உண்டான பணத்தை மக்களுக்கு தெரியாமல் வசூலிக்கின்றது இன்றைய ஆட்சி.

டேன்டி (டீ) எஸ்டேட்டில் தற்காலிக தொழிலாளர்களுக்கு கிடைக்காத சலுகை களை தி.மு.க. ஆட்சிதான் செய்தது அதாவது தற்காலிக தொழிலாளர்களுக்கு வாரச் சம்பளத்தை மாற்றி மாதச் சம்பளமாக செய்து அதன் மூலமாக ஆண்டு ஊக்கத் தொகை கிடைக்கச் செய்தது தி.மு.க. ஆட்சி.

- அ.ப. முருகவேல், கொளப்பள்ளி

Read more: http://viduthalai.in/page-2/78945.html#ixzz2zNyX5IIy

தமிழ் ஓவியா said...


பத்மநாபசுவாமி கோயிலில் செல்வங்கள் கடத்தல்


உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

திருவனந்தபுரம், ஏப். 19-திருவ னந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையில் இருந்து மன்னர் குடும்பத்தினரும் சில ஊழியர்களும் செல்வங்களை கடத்திச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள ஏ முதல் எப் வரையி லான 6 ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள செல்வங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செல்வங்களை மதிப்பிட உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை நியமித்தது. இக்குழுவினர் ஏ என்ற ரகசிய அறை தவிர மற்ற அறைகளை திறந்து செல்வங்களை மதிப்பிட்டனர்.

இந்நிலையில், உச்சநீதிமன்றம் சார்பில் கோயில் சொத்து குறித்து முழு விவரங்களை அறிய உதவி செய்வதற்காக கோபாலகிருஷ்ணன் என்பவர் நியமிக்கப் பட்டார். சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரம் வந்த அவர், 2 மாதம் தங்கியிருந்து பத்மநாபபுரம் கோயிலுக்கு சென்று ஆய்வு நடத்தினார். ஊழியர்கள் ராஜ குடும்பத்தினர் உள்பட பலரை சந்தித்து பேசினார். சில தினங்களுக்கு முன் அவர் உச்ச நீதிமன்றத்தில் 550 பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில் மன்னர் குடும்பத் தினர் மற்றும் கோயில் ஊழியர்களுக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கிய குற்றச்சாட்டுகள் வருமாறு: ஹீ பத்மநாபசுவாமி கோயில் ஒரு பொது சொத்தாகும். ஆனால் கோயிலை யும், கோயிலுக்கு சொந்தமான சொத்துக் களையும் தங்களுக்கு சொந்தமான சொத் துக்களாக கருதி மன்னர் குடும்பத்தினர் சில செய்யக்கூடாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஹீ மன்னர் குடும்பத்தில் உள்ள சிலருக்கும் கோயில் ஊழியர்களுக்கும் இடையே மறைமுக தொடர்புகள் உள் ளன. இவர்கள் ரகசிய அறைகளில் இருந்து செல்வங்களை கடத்தியிருக்க லாம் எனவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

* இந்த சந்தேகத்தை உறுதிப்படுத் தும் வகையில் கோயிலுக்குள் வெளிநாட் டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தங்க முலாம் பூசும் கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹீ ரகசிய அறையில் இருந்து தங்க நகைகளை கடத்தி அதற்கு பதிலாக போலி நகைகளை தங்கமுலாம் பூசி ரகசிய அறையில் வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஹீ பல ஆயிரம் கோடி மதிப்புள்ள செல்வங்கள் இருப்பதாக கருதப்படும் பி அறை பல முறை திறக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் உள்ள செல்வங்களை புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த ரகசிய அறைக்கு மேலே ஒரு ரகசிய வழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஹீ ஏற்கனவே கண்டுபிடிக்கப் பட்ட 6 ரகசிய அறைகள் போக மேலும் 2 அறைகள் உள்ளன. இவற்றையும் திறந்து பரிசோதிக்க வேண்டும்.

* கோயில் நட்டத்தில் இயங்கு வது போல் பொய் கணக்கு காட்டி வருகின்றனர். எனவே கோயில் கணக்கு களை தணிக்கை செய்ய முன்னாள் கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் தலைமையில் ஒரு குழுவை அமைக்க வேண்டும்.

* கோயில் விவகாரங்களில் இனி மேல் மன்னர் குடும்பம் தலையிடக் கூடாது.

* கோயில் நிர்வாகத்தை கவனிக்க புதிய குழு ஒன்றை நியமிக்க வேண்டும். ஹீ மன்னர் குடும்பத்திற்கு உள்ள சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்ய வேண்டும்.

*இந்தியா குடியரசு நாடாகி பல வரு டங்கள் ஆகின்றன. ஆனாலும் திருவனந்த புரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக மன்னர் ஆட்சியும் நடப்பது போல் உள்ளது. ஒரு குழுவாக சேர்ந்து கோயிலில் இருந்து செல்வங் களை கடத்தியுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

* இந்த கடத்தலை தடுத்த சில ஊழியர்களுக்கு எதிராக கொலைமுயற்சி சம்பவமும் நடந்துள்ளன. சமீபத்தில் ஒரு ஊழியர் மீது அமிலம் வீசப்பட்டது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இது தவிர சமீபத்தில் கோயில் குளத்தில் சந்தேக மான முறையில் ஒரு ஆண் உடல் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த இரு சம்பவங்கள் குறித்தும் காவல்துறை முறையாக விசாரிக்க வில்லை. ஹீ பத்மநாபசுவாமி கோயில் விவ காரத்தில் கேரள அரசும் மெத்தனப் போக்கை கடைபிடித்துள்ளது.

* கோயில் பாதுகாப்பிற்கு மத்திய காவல் படையை நியமிக்க வேண்டும். இதுதவிர கோயிலில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியரை கோயிலுக்குள் பாலி யல் வன்கொடுமை முயற்சி நடந் துள்ளது. இது போல் பல மோசமான சம் பவங்கள் கோயிலுக்குள் நடந்துள்ளன.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த அறிக்கை மீது வரும் 23ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.

Read more: http://viduthalai.in/page-2/78944.html#ixzz2zNykJ5Aw

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரின் பொன்மொழிகள்

திராவிடச் சமுதாயத்திற்கு மானம், அறிவு, மனிதத் தன்மை என்பவை இல்லாமல் போக - அடியோடு இல்லாமல் போக ஆரியர்கள் செய்த முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்றால் அந்த வெற்றியை அழித்து நாம் மனிதத் தன்மை பெறுவது என்பது இலேசான காரியமல்ல என்றே சொல்லுவோம். இதில் இறங்குவது, மிக்க யோசனை செய்து செய்யவேண்டிய காரியம் என்றும் சொல்லுவோம்.

பார்ப்பனருக்கு ஆயுதம் பஞ்சாங்கமும், தர்ப்பைப் புல்லும்தான். நமக்கு ஆயுதம் நம்முள் ஒற்றுமையும் நமது மான அபிமானமுந்தான்.

நம் இருவர் நிலைமையைப் பற்றிச் சிந்தித்தோமானால் ஒரு பார்ப்பனராவது பஞ்சாங்கம், தர்ப்பைப்புல் தன்மையிலிருந்து ஒரு சிறிதும் தவறி நடந்து கொள்ள மாட்டார்கள்; விட்டுக் கொடுக்க மாட்டார்கள். நம்மில் பெரும்பாலோர், தன்தன் சுயநலத்திற்கு இரண்டையும் விலை கூறி விற்பார்கள்.

Read more: http://viduthalai.in/page-8/78957.html#ixzz2zO1GI1KN

தமிழ் ஓவியா said...


மோடியின் முகவரி இதுதான் இட்லரைக் கடவுளாகக் காட்டும் குஜராத் பாடத் திட்டம்


யூதர்களுக்கு உலகப் போர் என்றாலே ஒரு மறுபிறவி என்று தான் சொல்லவேண்டும். ஹிட்ல ரின் தலைமையில் ஜெர்மன் இருந்த போது அங்கு வாழ்ந்த 87 விழுக்காடு யூதர்கள் கொல்லப் பட்டார்கள், இதில் 50 சதவீதம் ஆயுதங்களின் மூலம் கொல்லப் பட்டனர். மீதமுள்ள 37 விழுக் காடு மக்கள் சிறையில் உணவு இன்றி பட்டினிபோட்டு தொற்று நோய் ஏற்படுத்தும் நோய் கிருமி களை பரப்பி விட்டும், விஷ வாயுக்கள் மூலமாகவும் கொன்று தீர்த்தார் நாஜிக்களின் அதிபர் இட்லர்.

இட்லரின் இந்த கொடூரத் தனத்தை உலகமே இன்றும் வெறுப் போடு பார்த்துக்கொண்டு இருக்கும் போது குஜராத் அரசின் பாடத்திட்டம் இதைத் தேசிய நலனுக்காகச் செய்த ஒன் றாகவும், தன்னுடைய நாட்டைக் காப் பாற்ற சாதாரணமாக நடக்கும் செயல் என்றும் நியாயப்படுத்தியுள்ளது. இட்ல ரின் செயல் தேசியநலன் மற்றும் தான் சார்ந்த சமூகத்தின் நன்மைக்காக செய்யப் பட்டவைகளே! அங்கு நடந்தவை எல் லாம் மனித குலத்திற்கு விரோதமனாவை அல்ல சமூகவியல் 9 ஆம் வகுப்பு குஜ ராத்தி மொழி பாடப்புத்தகம்
குஜராத்தில் 9, மற்றும் 10 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இரண்டாம் உலகப் போர் பற்றிய பாடத்தில் இட்லரின் செயலை மிகவும் சாமர்த்தியமாக நியாயப் படுத்தி குழந்தைகள் மனதில் இட்லரை நாயகனாக மாற்றியுள்ளது ஆளும் பாஜக அரசு

இந்த பாடத்திட்டத்தை விமர்சித்த டைம்ஸ் ஆப் இந்தியா என்ற ஆங்கில இதழின் அகமதாபாத் பதிப்பு நியாமற்ற மனிதாபிமானம் இல்லா ஒரு நிகழ்வை சர்வ சாதாரணமாக அதுவும் மிகவும் நுணுக்கமாக சரிதான் என்று பள்ளி மாணவர்களின் மனதில் திணிப்பது மிகவும் அபாயகரமான ஒன்று என்று எழுதியிருந்தது, இதனை அடுத்து புதிய பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவோம் என்று குஜராத் அரசு உத்திர வாதம் கொடுத்தது. ஆனால் மீண்டும் புதிய பாட்த்திட்டத்தில் மீண்டும் புதிய தகவலை திணித்து, இட்லரை கடவுளாக்கி விட்டார்கள்

2005ஆம் ஆண்டு மார்ச் 14இல் புதிய பாடத் திட்ட குழு அமைக்கும் போது இந்த பகுதியை நீக்காமல் மீண்டும் சேர்க்கப்பட்டது. மேலும் சில தகவல்கள் இட்லர் தெய்வமாக கருதும் படி எழுதப்பட்டது. குஜராத் அரசின் திருத்தப் பட்ட 10 ஆம் வகுப்பு சமூக வியல் பாடத்தில் பக்கம் 11- இல் இப்படி எழுதப்பட்டு இருக் கிறது. இட்லரின் நடவடிக்கை வீரம் விவேகம் மற்றும் ராஜதந்திரம் மிக்க ஒருவரின் நடவடிக்கையைப் போல் உள்ளது, ஜெர்மனியை வளர்ச் சிப்பாதைக்கு கொண்டு செல்ல அவரது ராஜதந்திர குணம் காரணமாக இருந்தது. என்று மேலும் சில வார்த்தைகளைச் சேர்த் துள்ளனர். குஜராத் பள்ளிக் கல்வித் துறையினர் பாசிசத்தை நியாயப்படுத்தி, இட்லரை ஒரு கடவுளாக கருதும் வகையில் வரலாற்றில் எழுதியுள்ளனர். அதாவது, மற்ற மன் னர்கள் தம் நாட்டில் வாழும் வேற்று இனத்து மக்களைப்பற்றி கவலையற்று இருந்ததாகவும் அவர்களால் ஏற்படும் இழப்புகளை கண்டு கொள்ளாமல் இருந்ததாகவும், ஆனால், இட்லர் மட் டுமே அத்தகைய பிற இன மக்களை ஒடுக்கி, தம் இன மக்களின் நலனுக்கு பாடுபட்டது போன்ற தொனியில் குஜராத் பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (ஜிலீமீ ழிமீஷ் ழிமீ கீஷீக்ஷீளீ)

Read more: http://viduthalai.in/page4/78915.html#ixzz2zO37dt93

தமிழ் ஓவியா said...


மதம் பிடிக்க வேண்டாமே! .


அலைபேசியில் குறுஞ்செய்திமூலம் மதத்துக்கு எதிரான கருத்தை வெளி யிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட இணையர்மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டு, விசாரணையின் முடிவில் பாகிஸ் தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கிழக்கு பாகிஸ்தானில் கோஜ்ரா நகரில் ஷப்கத் இம்மானுவேல் என்பவர், அவருடைய மனைவி ஷாகுப்தா கவுசர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் தேதி அன்று இவருடைய அலைபேசி யிலிருந்து இசுலாத்தில் புனிதராகக் கூறப்படும் முகமதுவை விமர்சித்து குறுஞ்செய்தி அனுப்பி, இசுலாமிய மதத்துக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக அவர்மீது புகார் எழுப்பப்பட்டது. மவுல்வி முகம்மத் உசேன் அளித்த புகாரின்பேரில் விசாரணை செய்த காவல்துறையினர் கணவனுடன் அவர் மனைவியையும் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 40முதல் 50 வயதுடைய இருவரும் வறுமையில் உள்ளவர்கள். வழக்கை நடத்தவே வாய்ப்பற்றவர்கள். மேலும், வழக்கில் தொடர்புடைய முக்கிய பொரு ளான அலைபேசியும் முன்னதாகவே தொலைந்து போனதாகவும் தெரிவித் துள்ளனர். தோபா தேக்சிங் நகரில் உள்ள நீதி மன்றம் இவ்வழக்கை விசாரணை செய்து வந்தது. தற்போது நீதிபதி மியான் ஆமிர் ஹபீப் விசாரணை செய்து முடிவில் தீர்ப்பை வழங்கி உள்ளார். தீர்ப்பில் அவ் விருவருக்கும் மரணதண்டனை விதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் தரப்பு வழக் குரைஞர் நதீம் ஹசன் இவ்வழக்கில் மேல்முறையீடு செய்துள்ளதாகக் கூறி உள்ளார்.

இதேபோல், 2009-இல் இதே குஜ்ரா பகுதியில் குர்ரானை இழிவுபடுத்தியதாக ஏற்பட்ட வதந்தியில் ஒரு கும்பல் வன் முறையில் ஈடுபட்டு கிறித்துவர்கள் வாழ்கின்ற அப்பகுதியில் சுமார் 77 வீடுகள் தீக்கிரையாகின. சுமார் ஏழு பேர் அக் கலவரத்தில் உயிரிழந்தனர். அதேபோல் லாகூரில் ஜோசப் காலனியில் தனிப்பட்ட வர்களிடையே, பேச்சுவாக்கில் பேசிய பேச்சுகூட புகாராக பதிவாகி சவான் மாசிக் என்பவர் மரண தண்டனை விதிக்கப்பட்டார். பாகிஸ் தானில் அங்குள்ள சிறுபான் மையினரை தனிப்பட்ட வகையிலான தகராறுகளுக்குக் கூட இந்த சட்டத்தை துணையாகக் கொண்டு மரண தண்டனை விதிக்கப் படும் கொடுமை நிகழ்கிறது.

180 மில்லியன் மக்கட்தொகையில் 97விழுக்காட்டினர் இசுலாமியராக உள் ளனர். நிரூபிக்க முடியாத குற்றச்சாட்டுகள் மூலம்கூட சிறுபான்மையினர் பாதிக்கப் படுகின்றனர்.

Read more: http://viduthalai.in/page4/78916.html#ixzz2zO3L0l9W

தமிழ் ஓவியா said...


பகவத்சிங் நினைவைப் போற்ற நாத்திகர்கள் அணி வகுப்பு


விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் நினைவு நாளில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாத்திகர்கள் குவிந் தனர். 250-க்கும் மேற்பட்ட நாத்திகர்கள் மும்பையில் பகத்சிங் நினைவுநாளில் திரண்டனர். அந்நிகழ்வில், மத சகிப்புத் தன்மை இல்லாமல் இருப்பதைக் கண்டித்து ஒன்றுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். கடந்த ஆகஸ்டில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டவரும், ஆதிக்க சக்திகளை எதிர்த்து வந்தவரு மாகிய டாக்டர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் காவல்துறை உண்மை தகவல்களின்பேரில் எவ்வித நடவ டிக்கையும் எடுக்காமல் உள்ளது.

மும்பை பல்கலைக்கழகத்தின் புறநகர் கலினா வளாகத்தில் நடைபெற்ற நிகழ் வின் அமைப்பாளர் சஞ்சய் சவார்க்கார் கூறும்போது, எல்லோரும் ஒன்று சேர்வதன் நோக்கம் என்னவென்றால், ஒரே சிந்தனையுள்ளவர்கள் ஓர் அமைப்பாக இணைந்து, எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டியதே. அதே போல், நாத்திகராக இருப்பதில் நீதிக்குப் புறம்பாக ஏதுமில்லை என்கிற செய்தியை சமுதாயத்துக்கு தெரிவிப்பதுமாகும். மத சகிப்புத்தன்மை இல்லாத சூழ்நிலை உரு வாகும்போது, பரந்த சிந்தனையாளர்கள் ஒன்று சேர்வது முக்கியமான தேவை யாகும். நான் ஏன் நாத்திகன் என்கிற பகத் சிங் கட்டுரை அனைவரும் அறிந்ததே. அவருடைய நினைவுக்காகவே இந்நிகழ்வு இங்கே நடைபெறுகிறது என்றார்.

எல்&டி இன்போடெக் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியும், தகவல் தொடர்பு தொழில்நுட்ப வல்லுநருமாகிய அச்யுத் கோட்புலே, எழுத்தாளர் ஜே.ஏ.பவார், இந்திய பகுத்தறிவாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் (Federation of Rationalist’s Association of India)
நரேந்திர நாயக் மற்றும் பலர் பங்கேற்று உரை ஆற்றினர்.

நரேந்திர நாயக் பேசும்போது, கடவுளிடம் உங்களுக்கு பயம் உண்டா? என்று என்னிடம் கேட்பார்கள். நான் எப்போதுமே சொல்வேன்: கடவுளின் முகவர்களால்தான் அச்சம் ஏற்படும் என்பேன். அதேபோல் ஏராளமான நாத்திகர்கள் சமூகத்தில் உள்ளனர். அவர்கள் பெருமிதத்துடன் வெளியே காட்டிக்கொள்ள வேண்டும் என்றார்.

எழுத்தாளர் பவார் பேசும்போது மிகுந்த கவலையுடன் டாக்டர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் காவல் துறை போதுமான அக்கறையுடன் முன் னெடுத்துச் செல்லவில்லை. விசாரணையில் வேகம் வேண்டும் என்று குறிப்பிட்டார்.

- (டி.என்.ஏ. ஆங்கில நாளிதழ் 24-3-2014)

Read more: http://viduthalai.in/page5/78917.html#ixzz2zO3fVEZk

தமிழ் ஓவியா said...


புதிய எழுத்தாளர்களை ஏன் தேடுகிறீர்கள்?


நூல்களை பற்றி விவாதிக்க விரும்பு கிறீர்களா? நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள். நாடகங்கள், கட்டுரைகள், நூல்கள் மற்றும் ஒலிவடிவில் உள்ள நூல்கள் என்று பல உள்ளன. அனைத்தையும் நீங்கள் படித்தாக வேண்டும் என்பதில்லை. அமர்ந்து விவாதியுங்கள்.

புதிய எழுத்தாளர்களின் நூல்களைத் தேடியபோது, நூல் விரும்பிகள் அல்லது நண்பர்கள் குழு மூலம் நூல்கள் குறித்த விவாதத்தில் பங்கேற்றபின்னர்தான் விருப் பமான நல்ல நூல்களை தெரிவுசெய்து வாசிக்கவும், தேவையற்றவற்றை ஒதுக்கித் தள்ளவும் முடிந்தது.

பலநேரங்களில், ஓர் எழுத்தாளரின் நூல் தொகுப்பை கால வரிசையாக படித்திட முயற்சி செய்துவந்துள்ளேன். புதிய எழுத் தாளர்களின் நூல்களைப்போலவே பழம் பெரும் எழுத்தாளர்களின் நூல்களையும் படிப்பதில் மகிழ்வதோடு, என்னை வளர்த்துக்கொள்ளவும் முடிந்தது.

நூல் விற்பனையகத்துக்கு செல்லும் போதும், நூலகத்துக்குச் செல்லும்போதும் அங்கு பணிபுரிபவர்கள் எடுத்துக்கூறும் புதிய நூல்களை அதன் அறைகளிலிருந்து எடுத்துக்கொள்வேன். புதிய வரவுகளாக என் கவனத்தை ஈர்க்கும் நூல்களைத் தேர்வு செய்து கொள்வேன். அதேபோல், நூல் விற்பனை நிலையமானாலும், நூலகமானா லும் விற்பனைக்கு என்று உள்ளவற்றை கவனத்தில் கொள்வேன்.

நூல்களின் பட்டியலைப் பெற்று கற்பனைக் காவியங்களையும், அறிவியல், கற்பனை மற்றும் மர்மக் கதைகளை தெரிவு செய்து அதிலும் புதிய எழுத்தாளர்களின் நூல்களைப் பெற முயற்சி செய்வேன்.

சிலர் கூறுவதுபோல், இணையத்தில் உள்ள நூல்களின் குறிப்புகளை, சில பக்கங்களை முதலில் படித்துப்பார்த்து விட்டு பிறகு இணைய தளம்மூலமே பெற்றுக் கொள்வேன்.

பார்னே & நோபிள் இணையதளம் நூல்களின் முன்னோட்ட வாசிப்புக்கு சில பக்கங்களை அளிக்கிறது. அதை பல நேரங்களில் மறந்துவிடுகிறேன்.

சில நேரங்களில் விமர்சனங்களைப் படிப்பதன் மூலமும், கவரும் அட்டைகள் மூலமூம், ஒரு நூலில் மற்ற நூல்குறித்து குறிப்பிடப்படுவதைப் பார்த்தும், பார்லே & நோபிள் நூல்களில் ஒரே நேரத்தில் அல்லது ஒரே தலைப்புகளில் உள்ள ஏராளமான நூல்கள் குறித்தும் நூல்கள் பெறுவதில் என்னை இணைத்துக் கொள்கிறேன். கடந்த வாரம் கூறியதுபோல், நல்ல படங்களிலிருந்தும், சில நேரங்களில் நூல்களைப்பற்றி அறிந்துகொள்வேன். பிஹைண்ட் தி லைன்ஸ் (Behind the Lines) என்கிற படத்தைப் பார்த்தபோது டாக்டர் ரிவர்ஸ், சீக்ஃப்ரெய்ட் சாசூன் குறித்து அறிந்துகொள்ள பட் பார்க்கர் எழுதிய ரீஜெனரேஷன் (Regeneration) என்கிற நூலைப்படிக்க முடிவு செய்தேன். அந் நூலைப் படித்த பின்னர் மீண்டும் அப் படத்தை பார்த்தபோதுதான் அது எப் பேர்ப்பட்ட படம் என்று புரிந்துகொள்ள முடிந்தது.

பலரும் நல்ல வாசிப்பாளர் பட்டியலில் உள்ளனர். விருப்பமான எழுத்தாளரின் அடுத்த நூலுக்காகக் காத்திருக்கும்போது சிறிதே சலிப்பும் ஏற்படும். அப்போது, புதிய எழுத்தாளருக்கான தேவை ஏற்படுகிறது. சில நூல்கள் மூன்று தலைப்புகளில் ஒருங்கே அமைக்கப்பட்டிருக்கும். அதுபோன்ற நூல்களை இடைவெளிவிடாமல் படித்து விடுவேன். நூல் தேடுதலில் முதலில் தேடிய நூலைக்காட்டிலும், அடுத்த நூல் நன்றாக இருப்பின் அந்நூலை எடுத்துக்கொள்வேன். அதன்பிறகும், நூலைத் தேடுவதில் மகிழ்வே அடைவேன். அதுவும் பல நாட்டு நூல்களைத் தேடுவதில் பெரிதும் மகிழ்ந் துள்ளேன்.

நீங்கள் எப்படி? நூலகத்தில் ஒரு நல்ல நூலைக்கண்டால் அதை மற்றவர்களுக்கும் கொடுப்பீர்களா? நீங்கள் படித்த நூல்களைக் காட்டிலும், எல்லோர் பாராட்டையும் பெற்றநூல்களைக்காட்டிலும் உங்களாலும் எழுதமுடியும் என்று முயற்சி செய்துள்ளீர்களா? முயற்சி செய்யுங்கள்.

-டெய்லிகோஸ்.காம் இணையத்தில் சி.எஃப்.கே.

Read more: http://viduthalai.in/page5/78918.html#ixzz2zO3s7v5f

தமிழ் ஓவியா said...


பொன் மொழிகள்


நடைப்பாங்குகள் என்பவை மற்றவர்களுடைய உணர்ச்சிகளை வசியத்தோடு தெரிந்து கொள்வது, அந்த முன்னுணர்வு உங்களுக்கு இருந்தால், உங்களுக்கு நல்ல பாங்குகள் உள்ளதென்று பொருள். நீங்கள் என்ன கருவியைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப்பற்றிய பிரச்சினையில்லை. - எமிலி போஸ்ட்

மற்றவர்கள் தவறு காணக் கூடாது என்று ஒருவன் ஒன்றை நன்றாகச் செய்து முடிக்கும் வரை காத்திருப்பானேயானால், அவன் எதையுமே செய்ய முடியாது. - கார்டினல் நியூமென்

பிரச்சினைகள் என்பது முன்னேற்றத்தின் விலை. தொந்தரவைத் தவிர என்னிடம் எதையும் கொண்டு வராதீர்கள். நல்ல செய்திகள் என்னைப் பலவீனப்படுத்துகின்றன.
- சார்லஸ் எப் கெட்டரிங்

ஒவ்வொருவரும் மற்றவர்களைப்பற்றி என்ன சொல்லுகிறார்கள் என்பது எல்லா மனிதர்களுக்கும் தெரிந்தால், உலகத்தில் நாலு நண்பர்கள்கூட இருக்க மாட்டார்கள்.
- பிளெய்ஸ் பாஸ்கல்

நீண்ட விளக்கங்களுக்கு நான் எதிரி, அவை உண்டாக்குபவனையோ அல்லது கேட்பவனையோ பொதுவாக இருவரையும் ஏமாற்றுகிறது.
- கோத்தி

பேரிடர் என்பது துல்லியமான கண்ணாடி, அதில் உண்மையிலேயே நாமே நம்மைப் பார்த்துத் தெரிந்து கொள்கிறோம். - டாவெநன்ட்

Read more: http://viduthalai.in/page7/78923.html#ixzz2zO4gCtBz

தமிழ் ஓவியா said...


அண்ணா சொன்னார்


டாக்டர் சொன்னால் அதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது

கம்பவுண்டர் சொன்னால் அதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது;

டாக்டர் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கிற மந்திரக்காரன் சொன்னால் அதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது; அதையே ஒரு நோயாளி சொன்னால் ஒரு அர்த்தம் இருக்கிறது - ஒரே விஷயத்திற்கு! சுரமாயிருக்கிறது - என்ன செய்யலாம்!

என்று மந்திரக்காரனைக் கேட்டால், பொன்னியம்மன் கோயிலில் மூன்று நாள்களுக்கு படுத்துக் கொள்ளுங்கள்; எல்லாம் சரியாகிப் போய்விடும் என்று சொல்லுவான். காரணம், பொன்னியம்மன் கோயிலுக்கு அவன் தான் பூசாரி.

- (அண்ணா அவர்களின் காந்தியும் காந்தியமும் பூம்புகார் பதிப்பக நூலில் - பக்கம் 253)

Read more: http://viduthalai.in/page8/78926.html#ixzz2zO51cc35

தமிழ் ஓவியா said...


இப்படிக்கு வாசிப்பது தினமலர்! அய்ந்து மணி நேரம் வெயிலில் வாடிய குழந்தைகள்

ஆலந்தூர் கோர்ட் அருகே, நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு ஜெ. பிரச்சாரம் செய்வதாக, அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் மாலை 5 மணிக்கு தான் வந்தார். மதியம் ஒரு மணி முதல், வேன்களில் அழைத்து வரப்பட்ட பெண்கள், மேடையருகே கொளுத்தும் வெயிலில், கைக்குழந்தைகளுடன் காத்திருந்தார்கள்.

வெயிலின் தாக்கத்தால் பாலுக்காகவும், குடி நீருக்காகவும் கைக்குழந்தைகள் அழுது கொண்டிருந்தன. பெண்கள், கேரள செண்டை மேளத்தையும், கொக்கலிக் கட்டை மனிதர்களையும், ஜெ., புகழ், நடனத்தையும் காட்டி குழந்தைகளை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர்.

வெறுப்படைந்த குழந்தைகள் வீட்டுக்கு செல்ல அடம் பிடித்தன, இருக்கும் இடத்தில் இருந்து திரும்ப முடியாமல் பெண்கள் மிகவும் சிரமப்பட்டனர். வயதானவர்கள், மிகவும் சோர்வடைந்தனர். பிற்பகல் 3 மணி முதல், காவல் துறையினர் கூட்டம் கூட்டமாக, சாலையில் நின்று கொண் டதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Read more: http://viduthalai.in/e-paper/78978.html#ixzz2zTbCOvmk

தமிழ் ஓவியா said...

முதல்வர் வருகையால் சாலைகளுக்கு விமோசனம்

முதல்வர் ஜெயலலிதா, இன்று (20ஆம் தேதி) வடசென்னை தொகுதியில் திருவொற்றியூர் தேரடி, மணலி நெடுஞ்சாலை சந்திப்பு, வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், பெரவள்ளூர் சந்திப்பு ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய் கிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு, வண்ணாரப் பேட்டை முதல் திருவொற்றியூர் வரை பல ஆண்டுகளாக, வாகன ஒட்டிகளை அச்சுறுத்திய பல்லாங்குழிகளாக இருந்த சாலைகளில், தார் கலவை கொட்டி, ஒட்டு வேலை பகல், இரவாக நடக்கிறது.

அதேபோல், எரியாத மின் விளக்குகள் சீரமைக்கப்பட்டு உள்ளன. எம்.பி.எம்., சாலை, மூர்த்திங்கர் சாலை, மணலி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளங்கள் சீர் செய் யப்பட்டன. இதுவரை போக்குவரத்து காவல் துறையினரின் கண்ணுக்கு தெரியாமல் இருந்த, எம்.கே.பி.நகர் மேற்கு நிழற்சாலை உள்ளிட்ட பல சாலைகளில், வேகத்தடைகள் எல்லாம் வாகன ஓட்டி களுக்கு தெரியும் வகையில் வண்ணம் பூசப்பட்டது. சாலை யோரம் குவிந்திருந்த மணற் குவியல் அகற்றப்பட்டது.

(தினமலர் 20.4.2014)

Read more: http://viduthalai.in/e-paper/78978.html#ixzz2zTbKewKu

தமிழ் ஓவியா said...


இப்பொழுதேஆரம்பித்து விட்டனர் மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தான் செல்லட்டும்!

மதவெறி நஞ்சைக் கக்குகிறார் பிஜேபி வேட்பாளர் கூட்டணிக் கட்சிகள் கொட்டாவி விடுகின்றனவா?

தியோகர், ஏப்.20- பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து விமர்சிப்பவர்களுக்கு தேர்தலுக்குப் பிறகு இந்தி யாவில் இடமில்லை. அவர் கள் பாகிஸ்தானுக்குத்தான் செல்ல வேண்டும் என்று அக்கட்சி வேட்பாளர் கிரி ராஜ் சிங் கூறினார். அவரது இப்பேச்சு அரசியல் வட் டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக பிரதமர் வேட் பாளர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். அவருக்கு எதிராக பல்வேறு கட்சிக ளும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

இந்நிலையில், ஜார்க் கண்ட் மாநிலம், தியோகர் பகுதியில் நடைபெற்ற தேர் தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக பீஹார் மாநில மூத்த தலைவர் கிரிராஜ் சிங் பேசும்போது நரேந்திர மோடியை பிரதமராகவிடா மல் தடுப்பவர்கள், பாகிஸ் தானுக்குச் செல்லத் தயாராக இருங்கள். மோடியை விமர் சிப்பவர்களுக்கு வருங் காலத்தில் (தேர்தலுக்குப் பிறகு) இந்தியாவில் இட மில்லை. அவர்கள் வசிக்க பாகிஸ்தானில்தான் இடம் கிடைக்கும் என்றார்.

இக்கூட்டத்தில் பாஜக முன்னாள் தேசியத் தலைவர் நிதின் கட்காரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற் றிருந்தனர். கிரிராஜின் கருத் துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மோடியின் தீவிர ஆதர வாளரான கிரிராஜ் சிங், பீஹாரின் நவாடா தொகு தியில் தற்போது போட்டி யிடுகிறார். இவர், 2005 முதல் 2013 வரை பீஹார் மாநில அமைச்சராக பதவி வகித் துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/78979.html#ixzz2zTbRPbPY

தமிழ் ஓவியா said...


திருவனந்தபுரம் கோயிலில் கொள்ளையோ கொள்ளை!


திருவனந்தபுரம், ஏப்.20- பத்மநாபசுவாமி கோயிலில் இருந்து கிலோ கணக்கில் தங்க நகைகளை மணலில் கலந்து கடத்தப்பட்டதாக வும், தஞ்சாவூரை சேர்ந்த சில நகைக்கடை உரிமை யாளர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் திடுக்கிடும் தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் பத்ம நாபசுவாமி கோயிலில் உள்ள ஏ முதல் எப் வரை யிலான 6 ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி மதிப் புள்ள பொக்கிஷங்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இந்த பொக்கிஷங் களை மதிப்பிட உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை நியமித்தது.

இந்நிலையில், கோயில் சொத்து குறித்து முழு விவரங்களை தெரிவிக்க, கோபால கிருஷ்ணன் என் பவரை உச்ச நீதிமன்றம் நியமித்தது. அவர் கடந்த 2 மாதங்களாக கோயிலில் ஆய்வு நடத்தி, சில தினங் களுக்கு முன் உச்ச நீதி மன்றத்தில் 550 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக் கல் செய்தார்.

அதில், மன்னர் குடும்பத்தினரும் கோயில் ஊழியர்களும் சேர்ந்து கோயில் பொக் கிஷங்களை கடத்தி இருக் கலாம் என பரபரப்பு குற் றச்சாட்டை கூறியுள்ளார். மேலும், கோயிலில் இருந்து கிலோ கணக்கில் தங்க நகைகளை மணலில் கலந்து கடத்தி சென்றுள்ளதாகவும், தஞ்சாவூரை சேர்ந்த சில நகைக்கடை உரிமையாளர் களுக்கு இது கொடுக்கப் பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறிக்கையில் கூறப்பட் டுள்ள விவரம்: பத்மநாப சுவாமி கோயில் நகைகளை பாலிஷ் செய்வதற்காக தஞ் சாவூரை சேர்ந்த சில நகைக்கடைகளுடன் ஒப்பந்தம் செய்திருந்தனர். பல கட்டங்களாக இவர்கள் கோயில் நகைகளை பாலிஷ் செய்யும் பணியில் ஈடுபட் டனர்.

அப்போது கோயிலில் இருந்து கிலோ கணக்கில் நகைகளை மணலில் கலந்து இவர்கள் கடத்திச் சென்றுள் ளனர். பின்னர், இவர்கள் தவறை உணர்ந்தும் பயந் தும் சிறிது நகைகளை உண் டியலில் போட்டுள்ளனர். நகை பாலிஷ் போடும் பணியில் ஈடுபட்டிருந்த ராஜு என்பவருக்கு மட்டும் 3 கிலோ எடையுள்ள தங்க செயின் உள்பட 20 கிலோ தங்கம் கிடைத்துள்ளது.

கோயிலில் இருந்து எத்தனை கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளது என் பதை கண்டுபிடிக்க முடிய வில்லை. இந்த பொக்கிஷம் கடத்தலில் பல முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பு உள்ளது. இது தவிர கோயில் உண்டியலில் ஏராளமான அளவில் வெளிநாட்டு பணம் மற்றும் தங்க நகைகள் கிடைத்துள்ளன.

இவற்றை யும் பலர் சுருட்டியுள்ள னர். ரகசிய அறையில் இருந்து திருவாங்கூர் அரண்மனைக்கு ஒரு சுரங்கப்பாதை கண்டு பிடிக்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதை வழியாகவும் நகைகளை கடத்திச் சென் றிருக்கலாம். பொக்கிஷங் களை மதிப்பிட உச்ச நீதி மன்றம் உத்தரவிட்ட பின் னரும் ஏராளமான அளவில் நகைகள் கடத்தப்பட்டுள்ளன.

திருவிதாங்கூர் மன்ன ராக இருந்த மார்த்தாண்ட வர்மா, கோயில் ஊழியர்கள் பலருக்கு நகைகளை கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஒரு கோயில் ஊழியர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவருக் கும் கிலோ கணக்கில் தங்கம் கிடைத்துள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட் டுள்ளது. கேரள எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன், திருவனந்தபுரத்தில் நேற்று (19.04.2014) அளித்த பேட்டி:கோயிலில் இருந்து நகைகள் கடத்தப்படுவது குறித்து எனக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே ஏராளமான புகார்கள் வந் தன. இது குறித்து அப் போதே கேரள அரசிடம் தெரிவித்தேன். ஆனால், மன்னர் குடும்பத்தினருக்கு பயந்து கேரள அரசு விசா ரணை நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் தினமும் கோயிலுக்கு வந்து விட்டு செல்லும்போது பிரசாதம் கொண்டு செல்லும் பாயசம் வாளியில் நகைகள் கடத்திச் செல்வதாக நான் அப் போதே கூறினேன். அப் போது என்னை கேலி செய்தனர். இப்போது அது உண்மை என தெரிந்து விட்டது. இந்த கடத்தலுக்கு மன்னர் குடும்பத்தினரும், கேரள அரசும்தான் பொறுப் பேற்க வேண்டும். இவ் வாறு அச்சுதானந்தன் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/78977.html#ixzz2zTbbsGMn

தமிழ் ஓவியா said...

பால்ய விவாகமாம்

பா.ஜ.க.வுக்கு கொள்கைப் பரப்புச் செயலாளர் இப்பொழுதெல்லாம் வைகோ அவர்கள்தான்.

மோடியின் திருமணம் பிரச்சினையாகி விட்ட நிலையில் அவர் ஓடிவந்து மோடியைக் காப்பாற்றப் பார்க்கிறார் மோடிக்கு நடந்தது பால்ய விவாகமாம். அப்படியா? அது சட்டப்படி குற்றமாயிற்றே - இப்பொழுது யாரை உள்ளே தள்ளலாம்?

Read more: http://viduthalai.in/e-paper/78973.html#ixzz2zTc3LNQJ

தமிழ் ஓவியா said...


மோடிக்கு மட்டும்தான் ஆதரவு பாஜக.,வுக்கு எதிர்ப்பு மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா ராஜ்தாக்கரே பேட்டி


மும்பை.ஏப்.20- டைம்ஸ் நவ் தனியார்த் தொலைக்காட்சிக்கு மகா ராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே அளித்த பேட்டியில் மோடியை மட் டுமே ஆதரிப்பதாகவும், பாஜக, ராஜ்நாத் சிங்கை ஆதரிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

தொலைக்காட்சியின் செய்தியாளர் அர்னாப் கோஸ் வாமி பாஜகவையும் அதன் தலைவர் ராஜ்நாத்சிங்கையும் எதிர்க்கும் அதேநேரத்தில் மோடியை ஆதரிப்பது ஏன்? என்று தொடர்ச்சியாகக் கேள் விகளை எழுப்பினார்.

அதற் குப் பதிலளித்த ராஜ்தாக்கரே, நான் தெளிவுபடுத்தி உள் ளேன். மோடியை அவரு டைய பணிகளுக்காக ஆதரித்து வருகிறேன். இதனால் நான் பாஜகவை ஆதரிப்பதாகப் பொருளில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் எண்ணமே எனக்கு இல்லை. நாட்டில் நிலையான அரசு அமைய வேண்டும் என்றுமட்டுமே விரும்புகிறேன் என்று மோடியை ஆதரிப்பதற்கான விளக்கங்களைக் கூறினார்.

ஆனால், செய்தியாளர் கோஸ்வாமி தொடர்ச்சியாக மோடிக்கும், தாக்கரேவுக் கும் இடையே வெளிமாநி லங்களிலிருந்து மும்பையில் பணிபுரிவோர்பற்றிய முரண்பாடுகள் குறித்துக் கேட்டபோது, இந்த விவ காரத்தில் நான் மோடியின் கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

குஜராத்தில் வேண்டுமானால் சாதாரண வேலைகளைக்கூட செய்வ தற்கு ஆள் இல்லாமல் இருக் கலாம். ஆகவே, அவர் களுக்கு உத்தரப்பிரதேசத்தி லிருந்தும், பீகாரிலிருந்தும் ஆட்கள் தேவைப்படலாம். ஆனால், வேலை செய்யப் போதுமான ஆள்கள் எங் களிடம் இருக்கிறார்கள்.

பூனாவில் ராஜ்நாத்சிங் பேசும்போது மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா ஆதரவு குறித்து கூறும்போது, பாஜகவுக்கு நாங்கள் கேட் காமல் தாங்களாகவே ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறியுள் ளாரே என்று கேட்டபோது, நான் மோடியைத்தான் ஆதரிக்கிறேன். ராஜ்நாத்தை அல்ல. அவர் சொல்வது பற்றி எனக்குக் கவலை இல்லை என்றார்.

பெயர் குறிப்பிட விரும்பாத நவநிர் மாண் தொண்டர் கூறும் போது, ராஜ் தாக்கரே கூறு வதுபோல் மோடியின் செயல்களையொட்டி மோடியை மட்டுமே ஆதரிக் கிறோம். ஆதரவு என்று வரும்போது, மோடி ஆதரவு நிலையைமட்டுமே வாக்கா ளர்களுக்கும் தெளிவாகவே கூறியுள்ளோம் என்றார்.

இதனிடையே தொடர்ச்சி யான கேள்விகளால் ஆவேச மடைந்த ராஜ்தாக்கரே, இது பேட்டிதானே தவிர, குறுக்கு விசாரணை அல்ல என்று மிரட்டல் தொனியில்கூறி பாதியிலேயே பேட்டியை முடித்துக்கொண்டார்.

- ஹிந்துஸ்தான் டைம்ஸ், 17-4-2014

Read more: http://viduthalai.in/e-paper/78974.html#ixzz2zTcALRZ3

தமிழ் ஓவியா said...


வைகோவின் பரிதாபம் ஈழமும் - பா.ஜ.க.வும்


மோடி பிரதமரானால் அவரைப் பயன்படுத்தி ஈழத்தை சாத்தியமாக்குவார் வைகோ என்கிறார்கள் நண்பர்கள். 2002 இல் அன்றைய துணைப் பிரதமர் அத்வானி அவர்கள் இலங் கையிடம் ராஜீவ் கொலையில் குற்றவாளியாகத் தேடப்படும் பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டார்.

ஆனையிரவுப் போர் என்பது புலிகளின் ஈழப் போரில் பொன் எழுத்துக்களால் பொறித்துக் கொண்டாட வேண்டிய ஒரு நிகழ்வு. வியக்கத்தக்க அளவு வெற்றிகரமாக முன் னேறிய புலிகள் யாழ்ப்பாணத்தை வசப்படுத்தி விடுகின்றனர். யாழ் நகரை வசப்படுத்திய அடுத்த கணம் அவர்கள் யாழ் கோட்டையை முற்றுகையிடுகின்றனர்.

யாழ் கோட்டையில் பதுங்கியிருந்த அல்லது தங்கியிருந்த ஏறத்தாழ 4000 இலங்கை ராணுவ வீரர்களுக்கும் புலிகளிடம் சரணடைவதைத் தவிர வேறு வழி இல்லை என்கிற சூழல். இது நடந்தது 2002 இல்.

இது மட்டும் நடந்திருக்குமானால் ஒருக்கால் ஈழப் போரின் முகம் சற்று மாறியிருக்கக் கூடும். 4000 இலங்கை வீரர்கள் புலிகளிடம் சரணடைந்திருந்தால் அந்த 4000 வீரர்களையும் மீட்டெடுக்க வேறு வழியின்றி இலங்கையும் சற்று இறங்கி வந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கக் கூடும்.

4000 இலங்கை வீரர்களும் சிங்களவர்கள் என்பதால் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டிருக்கும். சிங்கள மக்கள் என்ன செய்தேனும் அவர்களை மீட்டெடுக்க அரசாங்கத்தை நெருக்கி இருப்பார்கள். சர்வதேச நெருக்கடியும் ஏற்பட்டிருக்கும் இலங்கைக்கு.

அன்றைய பிரதமர் வாஜ்பேயி அவர்கள் தலையிட்டு அந்த நெருக்கடியிலிருந்து 4000. வீரர்களையும் மீட்டெடுக்க இலங்கைக்கு உதவினார் என்ற ஒரு செய்தியும் உண்டு.

எனில் ஈழ விஷயத்தில் வெண்ணெய் திரண்டு வந்தபோது தாழியை உடைத்தவர்கள் ஆகிறார்கள் பிஜேபியினர்.

மத்தியப் பிரதேச பி.ஜே.பி. முதல்வர் சிவ ராஜ்சிங் சௌஹான் சாஞ்சியில் கட்டப் பட்டுள்ள புத்தப் பல்கலைக் கழகத்தை துவக்கி வைக்க ராஜபக்ஷேவைத்தான் அழைத்தார். கறுப்புக் கொடி காட்டப் போன வைகோ அவர்களை கைது செய்து திறந்த வெளியில் இரவு பகலாக வைத்திருந்தது பி.ஜே.பி. அரசு. மட்டுமல்ல, இவர்களில் யாரேனும் ரயில் மார்க்கமாக வந்து விடக் கூடும் என பயந்த அவர்கள் அன்றைய தினம் போபால் மற்றும் விதிஷா இடையே எந்த ரயிலும் நிற்க அனுமதிக்க வேண்டாம் என்று ரயில்வே அமைச்சகத்திற்கு விண்ணப்பம் வைக்கிறது. 20.9.2012 அன்று 11 ரயில்கள் அந்த ரயில் நிலையங்களில் நிற்கவில்லை.

விண்ணப்பித்தது பி.ஜே.பி. ஒத்துழைத்தது காங்கிரஸ் ராஜ பக்ஷேவைக் காப்பாற்றவெனில் இருவரும் எப்போதும் கரம் கோக்கவே செய்வார்கள். 19.09.2012 அன்று பத்திரி கையாளர்களை சந்தித்தபோது ராஜபக்ஷே 2000 இந்து கோயில்களை இடித்து நாசப்படுத்தியவர் என்று கூட கட்காரியிடம் தான் சொல்லிப் பார்த்ததாகவும் ஆனாலும் அவர் இளகவில்லை என்றும் வைகோ சொன்னார்.

இரா. எட்வின்
(நன்றி: காக்கை சிறகினிலே ஏப்ரல் 2014)

Read more: http://viduthalai.in/page-2/78968.html#ixzz2zTcNDRIq

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் பிறந்த மண்ணில் ஜாதி, மத சண்டைக்கு இடம் இல்லை, நரேந்திரமோடி உணர வேண்டும் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி பேச்சு


தருமபுரி, ஏப்.20- தரும புரி தொகுதி ஜனநாயக முற் போக்கு கூட்டணி வேட் பாளர் இரா.தாமரைச்செல் வனை (திமுக) ஆதரித்து மாநிலங்களவை உறுப் பினர் கவிஞர் கனிமொழி பாப்பி ரெட்டிப்பட்டி, பெரிய நத்தம், பொம்மிடி, கடத்தூர், தருமபுரி ஆகிய இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தை மேற் கொண்டு பேசும்போது:-

தலைவர் கலைஞர் அவர்கள் தமது வாழ்நாள் முழுவதையும் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக தன்னை போ ராட்டத்தோடு இணைத்துக் கொண்டு போராடி மக்க ளுக்கு தேவையான திட்டங் களை கொண்டு வந்தார். கொண்டுவரக் காரணமாக இருந்தார்.

2000-ஆம் ஆண்டு ஜெய லலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தபோது கோவை வேளாண் மை கல்லூரி மாணவிகள் 3 பேர் கொளுத்தப்பட்டதும், 17 பேர் காயமடைந்ததும் மறந்து இருக்க மாட்டீர்கள். வலி மிகுந்த சம்பவமாக அது இருந்தது. அவர்களுக்கு ஆறுதல் கூற முடியுமே தவிர. நிதி உதவி செய்யமுடியுமே தவிர அந்த இழப்பை யாரா லும் ஈடுசெய்ய முடியாது. மக்களைப்பற்றி, மாணவர் களைப்பற்றி, மாணவி களைப் பற்றி கவலைப் படாத ஆட்சியாக அதிமுக ஆட்சி இருந்து வருகிறது.

மக்களைப் பற்றி ஜெய லலிதா சந்திக்காமல் மேலே பறந்து கொண்டிருக்கிறார். மண்ணின் மைந்தரான தலை வர் கலைஞர் 91 வயதிலும் சாலை வழியாக வந்து தினம் தினம், மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடமையைப் பற்றி பேசும் ஜெயலலிதா 3 ஆண்டு களில் எந்தக் கடமையை செய்தார்கள்? பெண்கள் தைரியமாக நடமாடமுடிய வில்லை, பெண்கள் திருடர் களுக்கு பயந்து நகையே போட்டுக்கொள்வதில்லை. அதுமட்டுமல்ல தமிழகத் தில் பெண்களுக்கெதிராக கொடுமைகள் தினமும் நடந்து கொண்டிருக்கிறது. தினம் தினம் கொலை, கொள் ளை என்ற சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக் கிறோம். ஆந்திராவுக்கு ஓடிப் போனவர்கள் எல்லாம் திரும்பி வந்து விட்டார்கள் போல் உள்ளது.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு திமுக வை தவிர யாரும் உரிமை கோரமுடியாது. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்க ளுக்காக வாதாடி, போராடி அந்த திட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர் அவர் களும், தளபதி ஸ்டாலின் அவர்களும் தான். துளி அளவும் தொடர்பில்லாத வர்கள் இத்திட்டத்திற்கு சொந்தம் கொண்டாடு கிறார்கள். இந்த திட்டத்தை முறையாக இந்த ஆட்சி பயன்படுத்தி இருந்தால் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டி ருக்காது.

அரசின் பணத்தில் அதிமுக கட்சியினுடைய இரட்டை இலை சின்னத்தை பதித்துள்ளது. அரசு முத்திரை தான் போட வேண்டும். எந்த ஒரு அரசும் இதுபோன்ற செயலில் இறங்கியதாக சரித் திரம் கிடையாது.

கடந்த திமுக ஆட்சியில் 75 ஆயிரம் கோடி முதலீடு தமி ழகத்துக்கு வரப்பெற்றதன் மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகின. இந்த ஆட்சியில் ஒப்பந்தங் கள் போட்டதோடு சரி எந்த தொழிற்சாலையும் வர வில்லை. 10 லட்சம் பட்ட தாரிகள் வேலையின்றி கிடக் கிறார்கள்.

பாமக.,வை சேர்ந்த 2 பேர் மத்திய அமைச்சர்களாக இருந்தபோது தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. தருமபுரியில் திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டத் திற்கு மத்திய அமைச்சராக இருந்த சிலர் சொந்தம் கொண்டாடுகிறார்கள் எதையும் செய்யாமல் பேர் வாங்க நினைக்கிறார்கள். திமுக ஆட்சியில் வன்னியர் சமூகத்தின் உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்ததும் திமுக தான். இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த மக்களுக்கு அவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி செய்ததும் திமுக அரசு தான் என்பதை மறந்து விட் டார்கள்.

தமிழகத்துக்கு திமுக, அதிமுக எதையும் செய்ய வில்லை என்று மோடி பேசி உள்ளார். தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்று மையாக சகோதரர்களாக மனிதர்களாக வாழ்கின்றனர். அதை மோடி குஜராத் மாநில மாக மாற்றிட முயற்சி செய் யக் கூடாது.

பெரியார், அண்ணா, கலைஞர் பிறந்த மண் அந்த மண்ணில் ஜாதி சண்டைக்கு, மதச் சண்டைக்கு இட மில்லை, என்பதை நரேந்திர மோடி உணர வேண்டும் திராவிட இயக்கம் உருவாக் கிய அரசியல் நம்மைக் கைவிடாது இதை மீறி யாரும் மதத்தின் பெயரைச் சொல்லி ஜாதியின் பெயரைச் சொல்லி தமிழகத்திற்குள் ஊடுருவ முடியாது.

அனைத்து துறைகளிலும் தமிழகத்தை காட்டிலும் குஜ ராத் பின் தங்கிய நிலையில் தான் உள்ளது என்றார் கனி மொழி.

Read more: http://viduthalai.in/page-7/78984.html#ixzz2zTdxR3Ul

தமிழ் ஓவியா said...


அய்யோ பாவம் அதிமுக ஏடு!


தேர்தல் பயத்தில் ஜன்னிப் பிடித்து உளற ஆரம்பித்து விட்டது அண்ணா திமுகவின் அதிகாரபூர்வ ஏடான நமது எம்.ஜி.ஆர்.

உதய சூரியன் பொத்தானை அழுத்தினால் வீட்டின் விளக்கு எரியும்; நாட்டைப் பிடித்த இருள் அகலும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சொல்லி விட்டாராம் (17.4.2014).

பொச பொச என்று எகிறிவிட்டது அந்த ஏட்டுக்கு. விவாதம் செய்யலாம் - வீரமணி அவர்கள் சொல்லுவது இந்தந்த வகையில் தவறு என்று தர்க்கம் செய்யலாம். ஆனால் வச்சுக்கிட்டா வஞ்சனை செய்கிறார்கள் - அவர்கள்? சரக்கு அவ் வளவுதான்! பந்தை அடிக்க முடிய வில்லையென்றால் காலைத்தானே அடிப்பார்கள் கையாலாகாதவர்கள்.

வசை மாரி பொழிந்து தள்ளுகிறது ஆனால் அவர்களை அறியாமலேயே ஒன்றை ஒப்புக் கொண்டு விட்டார்கள்.

ஏற்கெனவே உதவாத உதயசூரிய னுக்கு ஓட்டுப் போட்டதற்கான பலனாக கருணாநிதி ஆட்சி இருட்டையும், திருட் டையும், விதைக்கும், மின் தடையைத் தந்து, தமிழகத்தை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது - என்று குறிப்பிட்டுள்ளது (17.4.2014).

விவாதத்துக்காகவே ஒப்புக் கொள் வோம். கலைஞர் ஆட்சியில் இரண்டு மணி நேர மின் வெட்டுக்கே இருட்டும் திருட்டும் என்றால், அம்மையார் ஆட்சி யில் எட்டு மணி நேரம், பத்து மணி நேரம் மின் வெட்டு நடைமுறையில் இருக்கும் இந்தக் காலத்தில் எத்தனை மடங்கு இருட்டும், திருட்டும் எகிறிக் குதிக்கும் - (அதுதானே இப்பொழுது நாட்டின் நிலைமை) பட்டப்பகலிலேயே கழுத்தை அறுத்துக் கொல்லும் புதிய கலாச் சாரத்தை அல்லவா அண்ணா திமுக ஆட்சி வளர்த்து விட்டிருக்கிறது.

ஒன்றை மட்டும் இங்கு சொல்ல வேண்டும். எதையாவது நமது எம்.ஜி.ஆர். ஏடும் கிறுக்குகிறது; அதற்கு வட்டியும் முதலுமாக விடுதலை கொடுத்தால் வாங்கிக் கட்டிக் கொள்வது. அதற்குமேல் எதையும் எழுத முடியாத அளவுக்கு மூச்சுத் திணறுவது,

இப்படியும் ஒரு பிழைப்பா?

Read more: http://viduthalai.in/page-8/79000.html#ixzz2zTf0YPZ7