Search This Blog

3.3.14

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் இரட்டை வேடத்தைப் புரிந்து கொள்வீர்!


சிறுபான்மையினரின் வாக்குகளை பறிக்க முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச்
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் இரட்டை வேடத்தைப் புரிந்து கொள்வீர்!
நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க இஸ்லாமியர்கள், சிறுபான்மையினரின் வாக்குகளை பறிக்க முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் என்ற அமைப்பை உருவாக்கி பிரச்சாரத்தை கட்டவிழ்த்துள்ள - ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் இரட்டை வேடத்தை புரிந்து கொள்ள இளைஞர் சமுதாயம் தவறக் கூடாது என தமிழர் தலைவர்  அறிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் இன்று (3.3.2014) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுப்புது யுக்திகள்

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியும் மத்தியில் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ்., இம்முறை வெளிப்படையாகவே இறங்கி, அதன் கைக்கருவியாக நரேந்திரமோடியை நிறுத்தி, அதற்காகப் பெரும் பண முதலைகள், திமிங்கலங்கள் இவர்களின் நிதியை தாராளமாக, ஏராளமாகச் செலவிட்டு, மோடிபற்றிய புனைவுகளை, இணையம் முதற் கொண்டு வெளியிட்டு, தங்கள் கைவசம் உள்ள ஊடகங்களை சிறப்பாக ஒத்து ஊதச் செய்து பார்ப்பன மனுதர்மத்தை ஆட்சிப் பீடத்தில் ஏற்றிட துடியாய்த் துடிக்கிறார்கள்!

சாம, பேத, தான, தண்டம் என்ற அத்தனை உபாயங்களையும் கையாண்டு வருவதோடு, நாளும் புதுப்புது வித்தைகளையும் உத்திகளையும்  உபாயங்களையும் கையாளத் தவறுவதே இல்லை.

உத்தரப்பிரதேசத்திலும் நாட்டின் இதர மாநிலங்களிலும், ஒடுக்கப்பட்டவர்களின் வாக்கு வங்கியைக் குறி வைத்து, டாக்டர் அம்பேத்கர் படத்தை மாட்டி விழாக் கொண்டாடுதல், கன்ஷிராமுக்கு உ.பி.யில் விழா நடத்தி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை ஏமாற்றி வெற்றி பெற பல வகைகளைக் கையாளுகின்றனர்.

மோடியை பிற்படுத்தப்பட்டவர் முத்திரையுடன் புதிதாக ஒரு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து, OBC என்ற பிற்படுத்தப்பட்டோரின் வாக்கு வங்கியைக் குறி வைக்க, தமிழ்நாட்டில் கூட சில அரசியல் தரகர்களைப் பிடித்துப் பிரச்சாரம் செய்ய வைக்கின்றனர்!

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பதவி தேடிகள் சிலரையும், அதுபோல மாநிலங்களில் அரசியலில் பல முறை தோல்வி கண்டு துவண்ட விரக்தி வீரர்களையும் பிடித்து மோடி பல்லக்கைத் தூக்கி பிரச்சாரப் புழுதியைக் கிளப்ப முயலுகிறார்கள்!

பதவி அரசியலுக்கு சந்தர்ப்பவாதம் தானே சரியான படிக்கட்டு! அதனைப் பற்றியுள்ளவர்களையெல்லாம் பிடித்து மீண்டும் இராமாயண காலத்தை திரும்ப அழைத்து வர முயலுகின்றனர்!

ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டோர்

இஸ்லாமியர்கள், சிறுபான்மையினர் வாக்குகளையும்கூட ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டு  பறித்துவிட புதிய முயற்சியாக முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, அதற்காக 26 மாநிலங்களில் ஆங்காங்கே தேடி, சிலரை அச்சுறுத்தி அல்லது விலைக்கு வாங்கி ஒரு அமைப்பையே உருவாக்கியிருக்கிறார்கள் போலும்! 300 மாவட்டங்களில், 10 லட்சம் இஸ்லாமியர்கள் எங்களிடம் வந்து மோடியைப் பிரதமராக்கத் துடிக்கின்றனர் என்று  துணிந்து ஒரு பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டுள்ளனர்!

முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச்

சிறுபான்மைச் சமுதாய மக்களுக்கும்  கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு சமூக நீதி அடிப்படையில் தேவை என்பதை வெளிப்படையாக எதிர்த்துக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. அணி மறுபுறத்தில் இப்படி  இஸ்லாமியர்களுக்காகவே ஒரு வாக்கு வங்கியை மய்யப்படுத்தி முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் துவக்கி நடத்துவதும், அதன் மூலம் ஏமாந்த அல்லது பயந்த இஸ்லாமியர்கள் கண்ணில் மிளகாய்ப் பொடி தூவிட முயலுவதும் அசல் இரட்டை வேடம் அல்லவா?

இந்த முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச்சின் வேலை என்ன தெரியுமா?
மோடி பிரதமர் மிஷன் - 272+ என்ற ஒரு  தேர்தல் பிரச்சார இயக்கமாம்! டில்லியில் 500 பிரதிநிதிகளை அழைத்து இப்படி ஒரு இயக்கத்தைத் துவக்கியுள்ளனர்.

இஸ்லாமியர்கள் மீது கொடுமையான மனிதநேயமற்ற செயற்பாடுகளை குஜராத்தில் நடத்தி விட்டு,

இப்போது ராஜ்நாத்சிங்குகள் இஸ்லாமியர்களிடம், ஏதாவது தவறு நடந்திருந்தால் அதற்காக நாங்கள் வருத்தம் - மன்னிப்பு - தெரிவிக்கிறோம் என்று நாடகம் ஆடுவது எதைக் காட்டுகிறது?

இந்த மயக்க பிஸ்கட்டுகளை வாங்கி சாப்பிட்டு அவ்வளவு எளிதாக இஸ்லாமிய சகோதரர்கள் ஏமாற மாட்டார்கள் என்றாலும், ஆர்.எஸ்.எஸ்.  - பா.ஜ.க. எப்படி எல்லா கற்களையும் பெயர்த்திடும் பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்பது புரியவில்லையா?

அவர்களுக்குத் தெரியும் ஓநாய் ஒரு போதும் சைவமாகாது என்ற உண்மை!
என்றாலும் இவர்களது இரட்டை வேடத்தை நாடும் நல்லவர்களும் குறிப்பாக இளைஞர் சமுதாயமும் புரிந்து கொள்ளத் தவறக் கூடாது.

நண்பர்கள் யார்? எதிரிகள் யார்?

உண்மையான நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? என்பதை சரியாக அடையாளம் காணா விட்டால் எதிர்காலம்  இருட்டாகி விடும் - எச்சரிக்கை!


 -----------------------கி.வீரமணி தலைவர்,  திராவிடர் கழகம் 3.3.2014  தஞ்சை

13 comments:

தமிழ் ஓவியா said...


தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சோதிடத்தைப் பாடமாக துவக்குவதா?


திராவிடர் மாணவர் கழகத்தினர் தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

ஆர்ப்பாட்ட முடிவில் தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் திருமலை அவர்களை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இராசகிரி கோ. தங்கராசு, பொதுச் செயலாளர்கள் தஞ்சை இரா. செயக்குமார், உரத்தநாடு குணசேகரன், தஞ்சை மாவட்ட தலைவர் சி. அமர்சிங், மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தஞ்சை மாவட்ட செயலாளர் அருணகிரி, தஞ்சை மண்டல தலைவர் வெ. ஜெயராமன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் தளபதிராஜ், தமிழ்ப் பல்கலைக் கழக தமிழ் துறைத் தலைவர் (ஓய்வு) பெரியார் அறக்கட்டளை நிறுவனர் முனைவர் இராமலிங்கம், ஒன்றிய அமைப்பாளர் மூர்த்தி, மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்அழகிரிசாமி, உரத்தநாடு நகர செயலாளர் சாமி. அரசு இளங்கோ ஆகியோர் சந்தித்து தஞ்சை பல்கலைக் கழகத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கும் சோதிட பட்டயப் படிப்பை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இது முக்கிய பிரச்சினையாக ஆக்கப்பட்டு இருக்கிறது. தங்களின் கோரிக்கை மனுவை ஆட்சி மன்றக் குழுவில் வைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு அவர்களது முடிவுப்படி முடிவு செய்யப்படும் என்று துணைவேந்தர் தெரிவித்தார். (மனு விவரம் 4ஆம் பக்கம் காண்க).

தஞ்சை, மார்ச் 3- தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சோதிடத்தைப் பாடமாக வைப்பதைக் கண்டித்து இன்று (3.3.2014) காலை திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கழகத்தின் துணைத் தலை வர் கவிஞர் கலி. பூங் குன்றன் அவர்கள் கண்டன ஆர்ப்பாட்ட உரையை நிகழ்த்தினார்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சோதிடத்தைச் சொல்லிக் கொடுக்கும் பட்டய வகுப்பை நடத்தவிருப்பதாக ஏடு களில் விளம்பரம் வெளி வந்துள்ளது. அறிவியலுக்கு விரோதமான - மூடநம் பிக்கையின் மறுவடிவ மான சோதிடத்தை ஒரு பல்கலைக் கழகத்தில் சொல்லிக் கொடுக்க முடி வெடுப்பது - அபத்தமா னது - கண்டிக்கத்தது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் (51ஏ (எச்) விஞ் ஞான மனப்பான்மை யைப் பரப்ப வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று வலியுறுத்தப்பட் டுள்ளது. இந்திய அரச மைப்புச் சட்டத்திற்கே விரோதமாக ஒரு பல் கலைக் கழகம் சோதிடத் தைக் கற்பிக்க முயற்சிக் கலாமா? என கேட்டு இச் செயலை கண்டித்து தமிழர் தலைவர் கடந்த 27.2.2014 அன்று அறிக்கை விடுத்தார்.

மேலும் இதைக் கண் டித்து 3.3.2014 அன்று திராவிடர் மாணவர் கழகத் தின் சார்பில் தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று (3.3.2014) காலை 11 மணி யளவில் தஞ்சையில் தலைமை தபால் நிலையம் முன்பாக கழகத் தோழர் - தோழியர்கள் மாணவர் அணியினர், இளைஞர் அணியினர் திரளாக பங் கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இந்த ஆர்ப்பாட்டத் துக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் பங்கேற்று, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சோதிடத்தைப் பாடமாக துவக்குவதைக் கண்டித்து ஆர்ப்பாட்ட விளக்கவுரை யாற்றினார்.

முன்னதாக இந்த ஆர்ப் பாட்டத்தில் திராவிடர் மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் தலை மையில் கீழ்க்கண்ட ஒலி முழக்கங்கள் எழுப் பப்பட் டன.

ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம் சோதிடப் பாடமா?

அறிவியல் வளர்ந்த

காலத்திலே பல்கலைக்கழகத்தில்

சோதிடப் பாடமா?

வெட்கம், வெட்கம்

மகா வெட்கம்! சோதிடத்தில் சொல்லப்படும் ராகுவும் கேதுவும் கிரகங்களா?

சோதிடத்தில் சொல்லப்படும் சூரியன் நட்சத்திரமா, கிரகமா?

சொல்லட்டும், சொல்லட்டும்

துணை வேந்தர் சொல்லட்டும்!

சோதிடப் பாடத்தில் கிரகமான பூமிக்கு

இடம் உண்டா? சொல்லட்டும், தமிழ்ப் பல்கலைக்கழகம் சொல்லட்டும்!

விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையென்று,

இந்திய அரசின் சட்டம் சொல்லுகிறது தஞ்சைப் பல்கலைக்கழகமே அரசியல் சட்டத்தை

அவமதிக்காதே!

தஞ்சைப் பல்கலைக் கழகமே வளர்க்காதே, வளர்க்காதே மூடநம்பிக்கைகளை

வளர்க்காதே - வளர்க்காதே!

ரத்து செய், ரத்து செய்

தமிழ்ப் பல்கலைக் கழகமே! ரத்துச் செய், ரத்துச் செய்!

மூடநம்பிக்கையை வளர்க்கும் சோதிடப் பாடத்தை ரத்து செய், ரத்து செய்!

போராடுவோம் போராடுவோம்

வெற்றி கிட்டும்வரை போராடுவோம்! போகாதே - போகாதே!

தமிழ்ப் பல்கலைக் கழகமே கற்காலத்துக்கு, போகாதே!

தற்காலத்துக்கு வந்து விடு, வந்து விடு!

Read more: http://viduthalai.in/e-paper/76301.html#ixzz2uwwWPEMd

தமிழ் ஓவியா said...


ஆரியப் பண்டிகைகள்

ஆரியப் பண்டிகைகளின் அடிப்படைக் காரணமெல்லாம் திராவிடர்களை ஆரியர்கள் அடக்கினது; கொன்றது; இழிவுபடுத்தியதுதான். அதுவும் சாதாரண மக்களைக் கடவுள் அவதாரம் என அழைத்து நமது அரசர்களை அசுரர்_ சூத்திரர் என்று இழிவுபடுத்தி ஏற்படுத்தப் பட்ட பண்டிகைகள்.

- (விடுதலை,18.1.1951

Read more: http://viduthalai.in/page-2/76302.html#ixzz2uwwqi9EB

தமிழ் ஓவியா said...


வி.கே. சிங் ஓர் எச்சரிக்கை!



வயது மோசடியில் சிக்கிய இந்திய இராணுவத்தின் தளபதியாக இருந்த வி.கே. சிங் பி.ஜே.பி.யில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது ஆரோக்கியமான ஒன்றல்ல.

மிக உயர்ந்த பதவியில் இருந்த ஒருவர் ஓய்வுக்குப் பின் குறிப்பிட்ட அரசியல் கட்சியில் சேர்ந்தார் என்றால் கடந்த காலத்தில் பெரிய பொறுப்பில் இருந்தபோது அறிவு நாணயமாக எப்படி நடந்து கொண்டு இருப்பார் என்ற கேள்வி எழத்தான் செய்யும்.

ஜனதா ஆட்சிக் காலத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த அடல்பிஹாரி வாஜ்பேயி அவர்கள் வெளிநாட்டுத் தூதர் அலுவலகங்களில்கூட ஆர்.எஸ்.எஸ். காரர்களைத் தட்டிப் பார்த்து நியமித்ததுண்டு.

பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில் ஆளுநர்கள், பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். காரர்களாகப் பார்த்து நியமிக்கப்பட்டனர். ஆளுநர் மாளிகைகளில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்களும் நடத்தப்பட்டதுண்டு.

இந்திய வரலாற்றுக் கழகம் (Indian Council for Historical Research) முற்றிலும் காவிமயமாக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். மனப்பான்மை கொண்ட 18 பேர் புதிதாக நியமிக்கப்பட்டனர். அவர்களுள் கே.எஸ். லால், பி.பி. லால், பி.பி. சின்ஹா ஆகியோர் பாபர் மசூதி இருந்த இடத்தில் அதற்கு முன் ராமன் கோயில் இருந்தது என்று எழுதியவர்கள்.

பேராசிரியர் சுமித் சர்க்கார் பேராசிரியர் கே.எம். பணிக்கர் உறுப்பினர் செயலாளர் டி.கே.வி. சுப்பிரமணியம் முதலிய புகழ் பெற்ற 12 வரலாற்றுப் பேராசிரியர்கள், ஆய் வாளர்கள் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்திலிருந்து (I.C.H.R.) வெளியேற்றப்பட்டனர். இந்திய சமூக விஞ்ஞான ஆய்வுக் கழகத்தின் தலைவராக (I.C.S.S.R.) பி.ஜே.பி.யின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் (டெல்லி) எம். சோந்தி நியமிக்கப்பட்டார். இப்படியாக ஒருநீண்ட பட்டியலே உண்டு.

இந்தியாவின் கப்பற்படைத் தளபதியாக இருந்த விஷ்ணு பகவத் அவர்களே இராணுவத்தில் நடைபெற் றுள்ள ஊடுருவலை அம்பலப்படுத்தவில்லையா?

பி.ஜே.பி.யின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் உயர் மட்ட இராணுவ தளபதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டு விளக்கம் அளித்த - மிக மோசமான ஆபத்தான நடை முறைகளை உருவாக்கியது வாஜ்பேயி தலைமையிலிருந்த பி.ஜே.பி. ஆட்சி. ஓய்வு பெற்ற 96 இராணுவ அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்க்கப்பட்டனர். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அப்போது அந்த மாவட்டத்தின் காவல்துறைக் கண்காணிப்பாளராக விருந்த (SSP) டி.பி. ராய் என்பவர் பிறகு பிஜேபியில் சேர்ந்தது மட்டுமல்ல, மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆனார். 80 ஆயிரம் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நிர்வாகப் பதவிகளில் (Executive Posts) அமர்த்தப்பட்டனர்.

குஜராத் மாநிலத்தில் கேசுபாய் முதல் அமைச்சராக இருந்தபோது பி.ஜே.பி. ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸில் இருக்கலாம் (2000 ஆண்டு பிப்ரவரியில்) என்று அறிவித்தார். அதற்கு பிரதமர் வாஜ்பேயியும் சரிதான் என்று வக்காலத்தும் வாங்கினாரே!
மாலேகான் குண்டுவெடிப்பில்கூட இராணுவத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் வெடி மருந்து பயன்பட்டதாக செய்தி வரவில்லையா?

அந்தக் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளிகளுள் ஒருவரான சிறீகாந்த் புரோகித் என்பவர் யார்? இராணு வத்தில் புலனாய்வுத் துறையில் பணிபுரிந்தவராயிற்றே. மகாராட்டிர மாநிலம் நாசிக் அருகில் போன்ஸ்லா என்ற இடத்தில் இராணுவக் கல்லூரி ஒன்றை நடத்தி வருகிறார் என்றால், இந்திய இராணுவத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஊடுருவி நிற்கும் ஆபத்தின் எல்லை என்ன என்பது விளங்காமற் போகாது.
முன்னாள் இராணுவத் தளபதியே (வி.கே. சிங்) பி.ஜே.பி.யில் இணைந்தார் என்பதை வைத்து இந்திய இராணுவத்தில் ஊடுருவியுள்ள இந்துத்துவாவாதிகளை வெளியேற்றும் அவசியமான வேலையில் மத்திய அரசு கவனம் செலுத்தட்டும்!

Read more: http://viduthalai.in/page-2/76303.html#ixzz2uwx1ayF7

தமிழ் ஓவியா said...


தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தரிடம் கொடுக்கப்பட்ட கடிதம்

பெறுநர்:
துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்

அன்புடையீர், வணக்கம்.

தஞ்சாவூர் - தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் சார்பில் தி.இந்து (தமிழ்) நாளேட்டில் (24.2.2014). ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தது.

அதில் பட்டயம் (ஓராண்டு) Diploma எனும் தலைப்பின் கீழ் சோதிடவியல் கற்பிக்கப்படுவது பற்றிய தகவல் இடம் பெற்றிருந்தது.

அறிவியலுக்கு எதிரான பாடத்திட்டம் ஒரு பல்கலைக்கழக விளம்பரத்தில் இடம் பெற்றிருந்தது பெரும் வியப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

சோதிடம் என்பது அறிவியல் அல்ல; அது ஒரு போலி (Pseodo Science) விஞ்ஞானமாகும்.

முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்பமை ஏ.பி.ஜே.அப்துல்கலாம் போன்றவர்களே இவ்வாறு தெளிவாகவே கூறியுள்ளனர்.

1975 ஆம் ஆண்டில் 18 நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் உட்பட 186 அறிஞர்கள் கீழ்க்கண்ட கூட்டறிக்கையினை கையொப்பம் இட்டு வெளியிட்டனர்.

அதில் கூறப்பட்டுள்ள கருத்து வருமாறு:

மக்களின் வாழ்க்கைக்கும் கிரகங்களுக்கும் தொடர்பு உண்டு என்றும், கிரகங்கள் மூலம் எதிர்காலத்தைக் கணிக்க முடியும் என்றும் கூறப்படுவதற்கு எந்த விதமான அறிவுப் பூர்வமான ஆதாரமே கிடையாது.

சோதிடம் பொதுமக்களிடையே மூடத்தனத்தை வளர்த்து பகுத்தறிவைப் பாழாக்குகிறது. இந்தச் சோதிடத்தின் ஏமாற்றுக்கு எதிர்காலம் நல்ல பாடம் கற்பிக்கப்போகிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். விஞ்ஞான அறிவு இல்லாத காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கற்பனைகளே இவை என்று அந்த அறிக்கையி

ல் 186 விஞ்ஞானிகள் கையொப்பமிட்டிருந்தனர். (ஆதாரம்: தினமணி 4.9.1975)

மேலும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 51A(h) எனும்பிரிவில் இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் அடிப்படைக் கடமைகள் என்று கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

விஞ்ஞான ரீதியான அணுகுமுறை, மனிதாபிமானம், மற்றும், ஆராய்வு, ஊக்கம், சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்ப்பது காப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று தெளிவாக திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. அரசு உதவியோடு அங்கீகாரத்தோடு நடத்தப்படும் தமிழ்ப்பல்கலைக் கழகம் (தஞ்சாவூர்) இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக சோதிடம் என்ற விஞ்ஞானத்திற்கு எதிரான பாடத்தைப் பயிற்றுவிப்பது சரியல்ல என்று நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள் என்று கருதுகிறோம். அரசமைப்பு சட்டத்தின் ஷரத்தை கட்டிக்காக்க வேண்டும் என்ற முறையிலும், மக்கள் மத்தியிலே மூட நம்பிக்கை எந்த விதத்தில் இடம் பெற்றாலும் அவற்றை அறிவியல் பகுத்தறிவு கண்ணோட்டத்தோடு எடுத்துச் சொல்லி, மக்களை அறிவார்ந்த பாதையில் வழி நடத்திச் செல்ல வேண்டும் என்ற தந்தை பெரியார் அவர்களின் கொள்கையை மூச்சாகக் கொண்டு செயல்படும் திராவிடர் கழகமும், அதன் அணியான திராவிடர் மாணவர் கழகமும் - இன்று தஞ்சாவூரில், ரயில் நிலையம் அருகில் - தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படவுள்ள சோதிடத்தைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, அறவழி முறையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி, அதன் முடிவில் இந்த மனுவை தங்களின் பார்வைக்கும், பரிசீலனைக்கும், அறிவார்ந்த முடிவுக்குமாக தங்களிடம் அளித்துள்ளோம். சோதிடப் பாடத் திட்டத்தை தமிழ்ப் பல்கலைக் கழகப் (தஞ்சாவூர்) பாடத்திட்டத்திலிருந்து அறவே நீக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

(கலி.பூங்குன்றன்) (பிரின்ஸ் என்.ஆர்.எஸ். பெரியார்) (சி.அமர்சிங்)
துணைத் தலைவர் மாநில மாணவரணி செயலாளர் திராவிடர்கழக தலைவர்
திராவிடர் கழகம் திராவிடர் கழகம் தஞ்சாவூர் மாவட்டம்

இணைப்பு:

1) திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் அறிக்கை
(விடுதலை27.2.2014)

2) விடுதலை ஏட்டின் இரண்டு நாள் தலையங்கங்கள் (26.2.2014, 27.2.2014)

3) விடுதலை ஏட்டின் முதல் பக்கக் கட்டுரை (விடுதலை 2.3.2014)

Read more: http://viduthalai.in/page-4/76332.html#ixzz2uwxYtVQ3

தமிழ் ஓவியா said...


வடலூரில் அறிவு இல்லத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

வடலூர் ஜோதி நகரில் 2.3.2014 அன்று காலை 11.15 மணிக்கு திராவிடர் கழக மகளிரணி மண்டலச் செய லாளர் இரமாபிரபா ஜோசப் பின் புதிய இல்லமான அறிவு இல்லத் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரியார் சிலை

அறிவு இல்லத்தின் வளா கத்தில் அமைக்கப்பட்ட தந்தை பெரியார் எழுதுவது போல் உள்ள சிலையினை பலத்த ஒலி முழக்கங்களுக் கிடையே இல்லத்தினர் ரமா பிரபா ஜோசப், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேக ரன் ஆகியோரின் முன்னி லையில் தமிழர் தலைவர் திறந்து வைத்தார்.

இல்லத்திறப்பு

ரமாபிரபா - ஜோசப் அவர்களின் புதிய இல்ல மான அறிவு இல்லத்தினை க.பார்வதி, மோகனா வீர மணி, திருமகள், வெற்றி செல்வி, கு.தங்கமணி ஆகி யோரின் முன்னிலையில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். பின்னர் கழகக் கொடியினை கழகச் செயலவைத் தலை வர் சு.அறிவுக்கரசு ஏற்றி வைத்தார்.

இல்லத்திறப்பு விழா நிகழ்ச்சிக்கு கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திர சேகரன் தலைமை வகித்து ரமா பிரபா ஜோசப் ஆகி யோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா நிகழ் வினையும், கடுமையான உழைப்பால் வாழ்வில் சிறிது சிறிதாக உயர்ந்து பெரி யார் கொள்கையால் வெற்றி பெற்றதையும் எடுத்து கூறி னார். அனைவரையும் வர வேற்று தலைமை செயற் குழு உறுப்பினர் க.பார்வதி உரையாற்றினார்.

தலைமைச் செயற்குழு உறுப்பினர் திருமகள், நெய் வேலி செயராமன், வடலூர் பேரூராட்சி தலைவர் சந் துரு, நகர திமுக செயலாளர் ராமலிங்கம், தாய் தொண்டு நிறுவன மய்ய நிறுவனர் ராசி.ஜெகதீஸ்வரன், மனித உரிமைகள் கழக தலைவர் காமராஜ், கடலூர் தண்ட பாணி, மாவட்ட செயலாளர் தாமோதரன், கவுன்சிலர் தமிழ்செல்வன், கழக பேச் சாளர் இராவணன், மண்டல செயலாளர் இரா.பன்னீர் செல்வம், மண்டல தலைவர் சிவ.வீரமணி, திருச்சி மண் டல செயலாளர் காமராஜ், வடமாவட்டங்களின் அமைப்பு செயலாளர் நெய் வேலி ஞானசேகரன், தே. எடிசன் ராசா, கழகப் பொதுச் செயலாளர் இரா.செயக் குமார், கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, ஏபிஜே மனோரஞ்சிதம் ஆகி யோரது வாழ்த்துரைக்குப் பின்னர் இரமாபிரபா - ஜோசப் இணையருக்கு தமி ழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணி வித்தார். திருமதி மோகனா வீரமணி அவர்கள், கழக நூல்களை வழங்கினார். நிறைவாக தமிழர் தலைவர் உரையாற்றினார்.

ஜோசப் நன்றி கூறினார். சி.மணி வேல், கருணாமூர்த்தி, இந் திரஜித், தருமலிங்கம், சிதம் பரம் செல்வரத்தினம், செல் சேகர், இரா.முத்தையன், ஏ.திருநாவுக்கரசு, க.சேகர், ச.பாஸ்கர், கடலூர் செயக் குமார் (ப.க.)

தமிழர் தலைவர் உரை

தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது:-

மக்களிடம் எளிதாக பழ கக் கூடியவர்கள், அன்புடன், பண்புடன், நடந்து கொள் ளக் கூடியவர்ள் திரா விடர் கழகத்தினர் - இரமா பிரபா அனைவரிடம் பழ கிய காரணத்தால் இங்கே ஏராளமானோர் கட்சியை கடந்து பங்கேற்றுள்ளனர். மகளிரணியில் தீவிர செயல் பாடு மிக்கவர். சீரிய கொள் கையாளர் - ரமாபிரபா ஜோசப்பை பல ஆண்டு களாக தெரியும். ரமாவைக் காட்டிலும் அவர் கணவர் ஜோசப் மிகுந்த பாராட்டுக் குரியவர். இவரின் உழைப் பின் வளர்ச்சியை இந்த இல்லம் காட்டுகிறது. அறிவு இல்லம் கழக தோழர்க ளுக்கு வரவேற்பு இல்ல மாக இருக்கும். அழகு கலை நிலையம் நடத்தினாலும் எல்லோரையும் ஈர்க்கக் கூடிய வகையிலே தொழிலை சிறப்பாக செய்து வருபவர், பெரியார் காண விரும்பிய புரட்சி பெண் வரிசையில் கழக மகளிர் உள்ளனர் என மேலும் பல்வேறு கருத்து களை எடுத்துக் கூறினார்.

வடலூர் முழுவதும் ஏராளமான கழகக் கொடி கள் கட்டப்பட்டு, விளம்பர பதாகைகளும், தமிழர் தலைவர் உருவம் பொறித்த பிளக்ஸ் பேனர்கள் சாலை யில் வைக்கப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்தது.

Read more: http://viduthalai.in/page-4/76326.html#ixzz2uwyAef8A

தமிழ் ஓவியா said...


தலைவிதி
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கையாலாகாதவனுக்குக் கடவுள் துணை; அறிவில்லாதவனுக்கு ஆண்டவன் செயல்; தவறை உணர முடியாதவனுக்குத் தலை விதி.

- (86 ஆம் ஆண்டு பெரியார் பிறந்தநாள் மலர்

Read more: http://viduthalai.in/page-2/76351.html#ixzz2v2xgQcHR

தமிழ் ஓவியா said...


குஜராத் கலவரம் பிஜேபி முதலில் மன்னிப்பு - பிறகு பல்டி!

மும்பை, மார்ச்.4- குஜராத் கலவரம் பாஜக வால் என்று நிரூபிக்கப்பட்டால் மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாக பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் சில நாட்களுக்குமுன்பாக தெரிவித்திருந்தார். தற்போது பாஜக தலைவர் ராஜ்நாத் மன்னிப்பை பாஜக மறுத்துள்ளது. குஜராத் கலவரத்திற்கு பாஜக மன்னிப்புக் கோரத் தேவை இல்லை என்றார். மேலும், பகல்பூர், பிவெண்டி, மீரட் ஆகிய பகுதிகளில் காங்கிரசு மன்னிப்பு கேட் குமா? என்றார்.

பாஜக மாநிலங்களவை உறுப்பினர் முக்தார் அப்பாஸ் நக்வி, குஜராத் மாநிலத்தில் பாஜக நல்ல நிர்வாகத்தை அளித்துள்ளது. இதில் மத சார்பின்மை யைக் காட்டிலும் திறமையான நிர் வாகத்தை மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக பாஜக கருதுகிறது.

பாஜக நல்ல நிர்வாகத் துடன் வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, தேச ஒற்றுமை ஆகிய வற்றை மற்ற எதையும்விட மதிப் புள்ளதாகக் கருதுகிறது. மற்ற கட்சிகள் நல்ல நிர்வாகத்தை பின்னுக்குத் தள்ளி விட்டு மத சார்பின்மை என்கிற பெய ரில் அரசியல் செய்து வருகின்றன.

மதசார்பின்மை என்று கூறிக் கொள்ளும் மற்ற கட்சிகள் மக்களிடையே மத சார்பின்மை என்கிற போதையை ஊட்டிவிட்டு நல்ல நிர்வாகம், வளர்ச் சிப்பணிகள் மக்களை எட்டாமல் செய்துவிட்டன.

பாஜகவுக்கு நல்ல நிர்வாகம், மத சார்பின்மையும் முக்கியமானவையே. மத சார்பின்மை பேசும் மற்ற கட்சிகள் ஆட்சியில் நல்ல நிர்வாகம், வளர்ச்சி என்று எதுவுமே இல்லை. மத சார்பின்மை என்பது எத்தனையோ கொள்கை களில் ஒன்று. அது மட்டுமே கொள்கை அல்ல என்றார். பாஜக மன்னிப்புக் கோர வேண்டிய அவசியமே இல்லை என்ற முக்தார் அப்பாஸ் நக்வி பகல்பூர், பிவெண்டி, மீரட் ஆகிய பகுதி களில் காங்கிரசு கட்சி மன்னிப்பு கோருமா என் றும் கேட்டார்.

பாஜகவை நோக்கி மகாராட்டிரத் திலிருந்து ராம்தாஸ் அத்வாலே, பீகாரி லிருந்து ராம்விலாஸ் பஸ் வான், உத்தரப் பிரதேசத் திலிருந்து உதித் ராஜ் ஆகிய முக்கியத் தாழ்த்தப்பட்டத் தலைவர்கள் மூவரும் எப்படி வரமுடியும்? என்று கேட் டார். காங்கிரசார் தோல்வி பயத்தில் நிதான மிழந்து மோடியைப் பற்றிப் பேசி வருகின்றனர் என்று நக்வி கூறினார். முன்னாள் துணை முதல்வர் கோபிநாத் முண்டே கூறும்போது ஜாதி, மதம் என்கிற குறுகிய பாதை பாஜகவுக்கு இல்லை என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page-2/76356.html#ixzz2v2y3JjUT

தமிழ் ஓவியா said...


கடவுளை மற - மனிதனை நினை! கடவுள்களைக் காப்பாற்ற அரசின் முயற்சிகள்!

சென்னை, மார்ச் 4- சிலைத் திருட்டைத் தடுக்க, தமிழ்நாட்டில் உள்ள 5 லட்சம் சிலைகளையும் படம் எடுக்க வேண்டும் என இந்து அறநிலையத் துறையினருக்கு காவல் துறையினர் அறிவுரை வழங் கியுள்ளனர்.

இது குறித்து பொருளா தார தடுப்புப் பிரிவு ஏடிஜிபி பிரதீப் வி. பிலிப், சிலை தடுப்புப் பிரிவு டி.அய்.ஜி. பொன் மாணிக்கவேல் ஆகி யோர் செய்தியாளர்களுக்கு சென்னையில் அளித்த பேட்டி:

தமிழகத்தில் கோயில் களில் மொத்தம் 28 சிலைகள் திருடு போயுள்ளன. இவற் றில் அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் வரத ராஜ பெருமாள் கோயிலில் திருடு போன விநாயகர் சிலை மட்டும் மீட்கப்பட் டுள்ளது. எஞ்சியுள்ள 27 சிலை களும் வெளிநாடு களில் உள்ள அருங்காட்சி யகங்களிலும், கலைப் பொருள் சேகரிப் போரிடமும் உள்ளன. அவற்றை தற் போது மீட்கும் நடவடிக்கை யில் ஈடுபட்டுள்ளோம். இதற்காக அந்தந்த நாட்டு அரசுகளுக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம்.

முதல் கட்டமாக அமெ ரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு கடிதம் அனுப் பப்பட்டுள்ளது.

இந்த நாடுகளில் இருந்து 3 சிலைகள் மீட்கப்பட வேண்டியுள்ளன.

ஆஸ்திரேலியாவில் உள்ள தேசிய அருங்காட்சி யகத்தில் உள்ள அரியலூர் மாவட்டம் புரந்தான் கிரா மம் பிரகதீஸ்வரர் கோயி லில் திருடப்பட்ட சுமார் 100 கிலோ எடையுள்ள நடராஜர் சிலையையும், நியூ சௌத் வேல்ஸ் நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ள விருத்தாசலம் விருதகிரீஸ் வரர் கோயிலில் திருடப் பட்ட அர்த்தநாரீஸ்வரர் சிலையையும் மீட்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிலைத் திருட்டு கும்பலின் தலைவ ராக செயல்பட்ட சுபாஷ் சந்திர கபூர் மற்றும் அவ ருடைய கூட்டாளிகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அமெரிக் காவில் 3 பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், எதிர் காலத்தில் சிலைத் திருட்டை தடுக்கும் வகையில் தமிழ கத்தில் இந்து சமய அற நிலையத்துறையின் கீழ் இருக்கும் 45 ஆயிரம் கோயில்களில் உள்ள சுமார் 5 லட்சம் சிலைகளின் நிழற் படங்களை எடுக்க வலி யுறுத்தியுள்ளோம்.

இதே போல உலோக சிலைகளின் பின்புறம் கோயில், ஊர், தமிழக அர சுக்குச் சொந்தமானது என எழுத வேண்டுமென அற நிலையத்துறையிடம் தெரி வித்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

(குறிப்பு: சில ஓட்டல் களில் தம்ளர்களில்.. இது இந்த... ஓட்டலில் திருடப் பட்டது என்று எழுதி இருக் கும் அல்லவா - அதுதான் இங்கும் நினைவிற்கு வருகிறது. என்னே கடவுள் சக்தி!)

Read more: http://viduthalai.in/e-paper/76338.html#ixzz2v2yPij1U

தமிழ் ஓவியா said...


மோடிக்கு வாக்களிக்காவிட்டால்... அமைச்சர் ஆசம் கான்!



லக்னோ, மார்ச் 4- குஜராத் மாநிலத்தில் நரேந் திர மோடிக்கு ஓட்டு போட்டால்தான் முஸ்லிம் கள் வாழ முடியும் என்கிற பயங்கரவாத நிலை உரு வாக்கப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச மாநில அமைச்சரும் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் களில் ஒருவருமான ஆசம் கான் சாடியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநி லத்தில் நேற்று நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, இம்மாநிலத்தில் ஒரு ஆண்டில் 150 கல வரங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் குஜராத்தில் 10 ஆண்டுகாலத்தில் ஒரு கல வரமும் கூட நடைபெற வில்லை என்றார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆசம் கான், குஜராத்தில் எப்படி கலவ ரங்கள் வெடிக்கும்? அங்கே இருப்பவர்கள் மோடிக்கு வாக்களிக்காமல் இருந்து விட முடியுமா? அப்படி இருந்தால் அவர்கள் அமி லம் ஊற்றி எரித்துவிட மாட் டார்களா? வேறுவழி யில்லை.. அவர்கள் எங்கே போவார்கள்?

குஜராத்தில் அவர்கள் வாழ வேண்டும் எனில் நரேந்திர மோடிக்கு வாக் களித்தாக வேண்டும் அப் படி ஒரு அச்சுறுத்தலான பயங்கரவாத நிலையை மோடி உருவாக்கி வைத் திருக்கிறார் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/76350.html#ixzz2v2ybXdqj

தமிழ் ஓவியா said...

இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம்: உலகத் தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாகும்!

வலிமையான தீர்மானத்தை கொண்டு வந்தாவது

காங்கிரஸ் தனது கட்சியைக் காப்பாற்றிக்கொள்ள முயலட்டும்!

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் நமக்கு மட்டுமல்ல, உலகத் தமிழர்களுக்கே மிகப்பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. கலைஞர் தலைமையில் 'டெசோ' அமைப்பு கேட்டுக்கொண்டபடி, இப்போதாவது (காலந்தாழ்ந்தாவது) இலங்கைக்கு எதிரான வலிமையான தீர்மானத்தைக் கொண்டு வந்தாவது, தங்களது கட்சியை காங்கிரஸ் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

இலங்கையில் நடைபெற்ற இராஜபக்சே அரசின் இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் இவைகளைக் கண்டித்தும், விசாரணையும், நடவடிக்கையும் தேவை என்பதுபற்றியும், உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் மட்டுமல்லாமல், மனித உரிமை ஆர்வலர்கள், காப்பாளர்கள், அமைப்புகள் வற்புறுத்தி வருகின்றன.

அய்.நா.வின் மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளை அவர்களிடம் நேரிலேயே டெசோவின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேரில் சந்தித்து வற்புறுத்தி மனு கொடுத்தனர்.

உலகம் முழுவதிலும் இத்தகைய வற்புறுத்தலின் குரல் - நீதியின் குரலாக ஓங்கி ஒலித்தது.

இலங்கைப் போர்க் குற்றங்களுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் ஒன்றை அமெரிக்கா கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், அத்தீர்மானம் ஏதோ ஒப்புக்குச் சப்பாணி என்பதுபோல் அமைந்திருப்பது நமக்கு மட்டுமல்லாமல், உலகத் தமிழர்களுக்கே மிகப்பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

விசாரணையை இலங்கை அரசே மீண்டும் விசாரித்து முடிவுகளைக் கூறவேண்டும் என்று அத்தீர்மானம் கூறுகிறது.

இதனால் ஒரு பயனும் ஏற்படாது; சுதந்திரமான விசாரணையும், தொடர் நடவடிக்கையும் தேவை!

குற்றவாளியையே காவல் துறை விசாரணை அதிகாரியாக நியமித்தால், எங்காவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமோ, நீதியோ கிடைக்குமா? ஒருபோதும் கிடைக்காது!

சர்வதேச விசாரணை - சுதந்திரமான வெளிநாட்டு விசாரணைக் குழுவினால் நடத்தப்பட்டு, உலக அரங்கில் இதற்குமுன் போர்க்குற்றம் நிகழ்ந்த பற்பல நாடுகள் தண்டிக்கப்பட்டதுபோல, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் அமையவேண்டும். இனப்படுகொலை என்பது தீர் மானத்தில் வலியுறுத்தப்படவேண்டும்.
உலகின் மனித உரிமையைக் காக்கும் கடமை உணர்வுடைய அனைவரும் இதில் தயவு தாட்சண்யம் பாராமல் ஒருமித்துக் குரல் கொடுக்கவேண்டும்.

இந்தியாவின் மத்திய அரசுக்கு இதுதான் ஒரு கடைசி வாய்ப்பு - ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை மீது ராஜபக்சே அரசுக்குத் துணைபோன நிலைப்பாட்டினால் ஏற்பட்ட கறைகளைத் துடைத்துக் கொள்ள.

தனியாகவே தீர்மானம் கொண்டு வருவதற்கு இந்தியா, ஏற்கெனவே கலைஞர் தலைமையிலான டெசோ கேட்டுக்கொண்டபடி செய்திருக்கவேண்டும்; இப்போதாவது ‘‘Better late than never’’ என்ற பழமொழிக்கேற்ப காலந்தாழ்ந்தாவது, வலிமையான திருத்தத்தைக் கொண்டு வந்தாவது, தங்களது ஆட்சி, கட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவாவது முயற்சிக்கட்டும்!

ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுவதைவிட, இவர்களை (காங்கிரஸ் கட்சி)க் காப்பாற்றிக் கொள்ளவாவது அது ஓரளவு உதவக்கூடும்!

- கி.வீரமணி,
தலைவர்,திராவிடர் கழகம்.

சென்னை
5.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/76399.html#ixzz2v8tXS4bT

தமிழ் ஓவியா said...


ஒப்பற்ற ஆயுதம்


உங்கள் தனிப்பட்ட நலனை அலட்சியம் செய்வது என்கின்ற அந்த ஓர் ஒப்பற்ற ஆயுதம் அணுகுண்டையும் வெடிக்காமல் செய்துவிடும். - (குடிஅரசு, 9.3.1946)

Read more: http://viduthalai.in/page-2/76429.html#ixzz2v8u0Parv

தமிழ் ஓவியா said...


மோடி புளுகு-7


- குடந்தை கருணா

குஜராத்தில் அனைத்து மக்களை யும் உள்ளடக்கிய வளர்ச்சி (INCLUSIVE GROWTH) இருப்பது போலவும், அதன் அனுபவம் மூலம் நாட்டிற்கே அந்த அனுபவத்தை தருவதற்குத் தான் தயாராக இருப்பதாகவும், மோடி விளம்பரம் தருகிறாரே; அது உண்மையா? கடந்த பத்து ஆண்டுகளில், குஜ ராத்தில், நகர்ப்புற மக்கள் தான், அர சின் திட்டங்களால் பயன் அடைந் துள்ளனர். கிராமப்புற மக்கள் வறு மையில் தான் உள்ளனர். அதனால் தான், மனித வளர்ச்சிக் குறியீட்டில், குஜராத் 11 ஆவது நிலையில் பின் தங்கி உள்ளது. 2011 ஆம் கணக் கெடுப்பின்படி, குஜராத் கிராமங் களில், பதினோரு லட்சம் வீடுகளில், ஒன்பது லட்சம் வீடுகளுக்கு இன்ன மும் மின் வசதி இல்லை; கல்வி வசதியிலும், கிராமங்கள் பின்னோக் கியே இருக்கின்றன.

இதில், தலித்துகளும், ஆதிவாசி களுமே, அதிகம் பாதிக்கப்பட்டுள் ளனர். குஜராத்தில் பழங்குடி மக் களில் அய்ந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில், 65 விழுக்காடு குழந் தைகள் எடை குறைந்துள்ளனர்.

இந்திய நாடு முழுமைக்குமான விகிதம் 54.5 விழுக்காடு என்றால், குஜராத்தில் 65 விழுக்காடு. அதே போன்று, பழங்குடி இன குழந்தை கள் இறப்பு விகிதமும் மிக அதிகமாக உள்ள மாநிலம் குஜராத். நூறு நாள் வேலை திட்டத்தில், இந்தியா முழு மைக்கும், 23 சதவிகிதம் தலித்துகள் பயன் அடைகின்றனர் என்றால், குஜ ராத்தில், வெறும் 8 விழுக்காடுதான், தலித்துகள் பங்கேற்க முடிகிறது. அதனால் தான், மோடியின் வெற்றி, நகர்ப்புறங்களில் அதிகமாகவும் கிரா மங்களில் குறைவாகவும் உள்ளது.

குஜராத்தின் முன்னேற்றம் என்பது, எல்லா மக்களுக்குமான முன்னேற் றம் என்பதாக இல்லாத ஒரு விசித்திர வளர்ச்சியாகும். இந்த வளர்ச்சி, கிரா மங்களைச் சென்றடையவில்லை என்பதும், தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களையும் புறக்கணிக்கக் கூடிய வளர்ச்சி என்பதும் தான், அரசின் புள்ளி விவரங்கள் எடுத்துக் காட்டும் உண்மை என்பதை, பிரெஞ்சு நாட்டு ஆராய்ச்சியாளரும், லண்டனில் உள்ள இந்தியக்கழகத்தில், இந்திய அரசியல், சமூகத்துறையின் பேராசி ரியருமான கிறிஸ்டப் ஜாப்ரிலெட் ஆதாரங்களுடன் கட்டுரை வடித்துள்ளார். இந்தியா ஒளிர்கிறது என முந் தைய பாஜக ஆட்சியில் சொல்லப் பட்டதற்கும், தற்போது குஜராத் மிளிர்கிறது என மோடி புளுகுவதற் கும் பெரிய வேறுபாடு இருப்ப தாகத் தெரியவில்லை.

Read more: http://viduthalai.in/page-2/76443.html#ixzz2v8unX2jv

தமிழ் ஓவியா said...


மாணவர்களும் - பேராசிரியர்களும் எழுப்பிய வினாக்களுக்கு தமிழர் தலைவர் பதிலளித்தார்


நிகழ்ச்சியில் கேள்வி நேரம் இருந்தது. அதில் மாணவர்களும், ஆசிரியர் களும் கேள்விகள் எழுப் பினர்.

1. ஜாதி இல்லை என்று பேசினீர்கள். சான்றிதழ்களில் ஏன் ஜாதி கேட்கிறார்கள்? என ஒரு மாணவி கேட்க, அரங்கம் நிறைய கைத் தட் டினார்கள்.

எந்த ஜாதியைக் கூறி கல்வி மறுக்கப்பட்டதோ, அதே ஜாதியை முன் வைத்தே நாம் கல்வி பெறத் தொடங் கினோம். அம்மை நோயை ஒழிக்க, அதே அம்மைக் கிரு மியைப் பயன்படுத்துகிறது மருத்துவ உலகம். குணப் படுத்தும் மருந்தில் கூட, கொஞ்சம் விசம் இருக்கிறது. இடஒதுக்கீடு வேண்டியே சான்றிதழில் ஜாதியின் பயன் பாடு இருக்கிறது. இது எவ் வளவு காலத்திற்கு? எல்லோ ருக்கும் எல்லாமும் கிடைக்கும் வரை! இன்னும் எளிதாய் சொல்வதானால், புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. அதுவரை நாம் மாற்றுப் பாதையில் செல்கிறோம். எவ்வளவு காலம் மாற்றுப் பாதை என்று கேட்டால், பாலம் முடியும் வரை எனத் தமிழர் தலை வர் பதில் கூறியபோது மீண் டும் அரங்கம் அதிர்ந்தது. (முதல் அதிர்வுக்கும், பிந் தையதிற்கும் வித்தியாசம் தெரிந்தது)

2. ஜாதி தமிழ்ச் சொல்லா?

இல்லை! ஆரியம் வந்த பிறகு வந்தது. ஜாதி ஏற்பாடு, மனித ஏற்பாடு என்றால் நாம் கேள்வி கேட்போம். எனவே அது கடவுள் ஏற் பாடு என்று சொல்லிவிட் டார்கள். கடவுள் என்ற பிறகு நாம் கேள்வி கேட்போமா?

3. மதிப்பெண்கள் குறை வாய் இருந்தும், தாழ்த்தப் பட்டவர்களுக்கு ஏன் அதிக சலுகை?

விருந்து நடைபெறு கிறது. பசியால் துடித்து, ஏப்பம் விடுகிறார் ஒருவர். சாப்பாடு முடித்து, செரிமா னம் ஆகாமல் ஏப்பம் விடு கிறார் இன்னொருவர். நாம் யாரைச் சாப்பிட அழைப் பது? குத்துச் சண்டை வீரர் ஒருவருடன் என்னை மோத விடுங்கள். யார் வெல்வார்? நானும், அவரும் சமம் ஆக முடியுமா? நல்ல திடகாத்திர மான ஒருவரும், மாற்றுத் திறனாளியும் சமப் போட்டி யாளர்கள் ஆவார்களா? எனவே சமம் என்பதும், தகுதி, திறமை என்பதும் இங்கு தவ றாகப் பேசப்பட்டு வருகிறது.

Read more: http://viduthalai.in/page-4/76444.html#ixzz2v8vVVnnx