Search This Blog

2.3.10

சாமியார் தொழிலை உடனடியாக அரசு தடை செய்ய வேண்டும்


புழுத்துக் கிளம்பும் சாமியார்கள்!

கடந்த 10 ஆண்டு காலமாக விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு 2000 கோடி ரூபாய் கொள்ளையடித்த சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்ட சேதி ஏடுகளைக் கலக்கிக் கொண்டிருக்கிறது; ஊடகங்களுக்கும் பெரும் தீனியாகவும் கிடைத்துவிட்டது.

இவ்வளவுக்கும் இந்த ஆசாமியின் பூர்வாங்கத்தை அறிந்தால், எவ்வளவு அடிமட்டத்து ஆசாமியும் சாமியார் வேடம் போட்டால் மிகப் பெரிய ஆளாக பெருந் தனவந்தராக, அரசியலில் செல்வாக்கு மிக்கவராக, பெரிய பெரிய மனிதர்களின் தோள்களில் கைபோட்டுப் பேசும் கூட்டாளியாக இமய மலைக்கு மேலே உயரமாக உட்காரலாம் என்பது அறியப்பட்டு விட்டது.

1988 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் சித்ரகூட் என்ற இடத்தில் இருந்து பிழைப்புத் தேடி டெல்லி வந்து, உணவு விடுதியில் எடுபிடியாக, இரவுக் காவலாளியாக இருந்தவர்தான்; இரண்டுமுறை திருட்டு வழக்கிலும், விபச்சார வழக்கிலும் சிக்கி சிறைத் தண்டனையையும் அனுபவித்த இந்தக் கில்லாடி கடைசியில் தொடங்கியதுதான் இந்த சாமியார் தொழில்.

இது ஒன்றுதான் முதலில்லாத தொழில் மக்களை பக்தியின் பெயரால் மதி மயங்க வைத்து, தாம் விரிக்கும் வலையில் விழ வைக்கும் தொழில். அதுவும் பகவான் சாய்பாபாவின் சீடன் என்று சொல்லிக் கொண்டால் கேட்கவும் வேண்டுமா? அடுத்து கோயில் கட்டவேண்டியதுதானே. கோயில் கட்டுவது என்றால் கண்களை மூடிக்கொண்டு பணத்தைக் கொட்டுவார்களே! ஷிவ் முராத் திவிவேதி என்கிறபோது இவர் ஒரு பார்ப்பனர் என்பதும் வெளிச்சமாகிறது. தந்திரங்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டுமா?

இவ்வளவு வேடம் போட்டால் பக்த கோடிகள் பெருகிவிடுவார்களே! அதன்பின் சாமியார் செல்வாக்கு கூடுமே! நமது மந்திரிமார்களுக்கு ஆஸ்தான ஜோதிடர், ஆஸ்தான சாமியார்கள் உண்டல்லவா! ஒரு சந்திரா சாமியார் இந்திய அரசியலில் எவ்வளவு பெரிய வேலைகளையெல்லாம் செய்தார்? ஆயுத வியாபாரியாக எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தார்!

இவற்றையெல்லாம் கண்ணுக்கெதிரே பார்க்கிற ஆசாமிகள், சபாஷ், இதுதான் சரியான தொழில் குறுக்கு வழியில் கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என்று வாயில் எச்சில் ஊறுகிறது.

விமானப் பணிப்பெண்களை உள்பட விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி, ஒரு விபச்சார சாம்ராஜ்யத்தையே அல்லவா நடத்தியிருக்கிறான்?

இவன் பின்னணியில் பிரபல அரசியல்வாதிகள் எல்லாம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வருவார்களா அல்லது அந்த செல்வாக்குப் பெற்ற அரசியல்வாதிகளைப் பயன்படுத்தி இந்தக் குற்றங்களிலிருந்து இந்த சாமியார் வெளியில் வருவாரா என்பதுதான் கேள்விக்குறி.

திருவண்ணாமலைக்கு பிச்சைப் பார்ப்பானாக ஓடி வந்த வெங்கட்ரமணன் இந்த நாட்டில் ரமண ரிஷியாகி, கோடிக்கணக்கில் சேர்த்த சொத்துகளை சகோதரனுக்கு எழுதி வைக்கவில்லையா?

சந்நியாசிக்கு வாரிசு ஏது என்று நீதி மன்றம் கேட்ட கேள்விக்கு, நான் சந்நியாசம் வாங்க வில்லையே! என்று அந்தர்பல்டி அடிக்கவில்லையா?

லோகக் குரு என்று சொல்லப்பட்ட காஞ்சிபுரத்து ஆசாமி ஒருவர் கொலை வழக்கில் சிக்கவில்லையா? பெண்கள் விஷயத்தில் ஆகட்டும் எவ்வளவு அசிங்கம்!

ஆனாலும் அந்த ஆசாமி பெரிய மனுஷராக பவள விழா கொண்டாடிக் கொண்டு வீதி உலா வந்து கொண்டுதானே இருக்கிறார்?

சாமியார் தொழிலை உடனடியாக அரசு தடை செய்ய வேண்டும். ஒவ்வொரு சாமியாரையும் விசாரணைக்கு உட்படுத்தி குற்றங்களின் அடிப்படையில் கடும் தண்டனையைக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாட்டில் ரமணரிஷிகளும், ஜெயேந்திரர்களும், ஷிவ் முராத் திவிவேதிகளும் நாளும் புழுத்துக் கொண்டு தானிருப்பார்கள், எச்சரிக்கை!


--------------------- “விடுதலை” தலையங்கம் 2-3-2010


11 comments:

சசிகுமார் said...

கரெக்டா சொல்லியிருக்கீங்க ஆனா எவன் காதுல கேட்க்க போகுது நல்ல பதிவு நண்பரே உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சசிகுமார்

Anonymous said...

நல்லா சொன்னிங்க வர வர இவங்க தொல்லை தாங்கல


பெண்கள் சாமியார்கள் ,சீரியல்கள் இரண்டிலும் இருந்து எப்போது வெளிவருவார்களோ தேர்டியாது

Solomon said...

Samiyaarai mattum Ean? Eamatrum arasialvadiyum thadai seyya vendama? Adhu mudiyada kariyam. Makkalai unarachcheyyungal. Makkal muttalkalaha irukkum varai kalla samiyarkalukku kondattam.

Ganesan said...

அப்படியே லேட்டஸ்ட் நித்தியானந்தர் பற்றியும் எழுதி விடுங்கள்.

ஒரு ஆயிரம் பேராவது திருந்துவாங்க.

nusail said...

அப்படியே Bangaru adigalar-Melmaruvathur பற்றியும் எழுதி விடுங்கள்.

மதுரை சரவணன் said...

நல்ல பதிவு இன்னும் அறைந்த மாதிரி சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். அவர்கள் ஆதரவாளர்களையும் சிறையில் அடைக்க வேண்டும். அப்போது தான் இன்னும் பயம் இருக்கும். வாழ்த்துக்கள்.

Thamizhan said...

படித்தவர்கள், பணக்காரர்கள்,பத்திரிக்கையாளர்கள் தான் இந்தக் கும்பலுக்கு உடந்தை.

சங்கர மடம் இந்தியாவின் சுவிஸ் வங்கியாக அனைவருக்கும் பயன் பட்டது.கோடிக்கணக்கில் கணக்கில் இல்லாமல் வந்திற்ங்கிய தங்கம் எங்கே?

ஒவ்வோரு சாமியாரும் உல்லாசமாக வாழும் பண வசதி எப்படி வந்தது ?
அரசின் கண்கள் சாமியார்களின் பக்கம் கட்டாயம் சென்று ஏமாறும் மக்களை விழிப்படையச் செய்ய வேண்டும்.

மசக்கவுண்டன் said...

ஏனுங்க நல்லா லாபம் தர்ற தொளிலையெல்லாம் இப்படி மொடக்குனா நாடு எப்படீங்க முன்னேறும்? கொஞ்சம் யோசிங்க!

ers said...

அடல்ஸ் ஒன்லி
குழந்தைகள் பார்ப்பதை தவிர்க்கவும்...

சாமியாரின் காமக்கதை வீடியோ

தமிழ் ஓவியா said...

தோழர்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி